To search this blog

Friday, September 14, 2012

Uriyadi Thiruvizha - Punnai Kilai vahana purappadu at Thiruvallikkeni


Having celebrated the birthday of Lord Krishna on 23rd day of Avani – 8th day of September 2012 – we have more to celebrate.  Lord Krishna was born in every house of His devotees; He adorned new clothes offered by us; took with grace – the offerings of Sweets and Fruits  made by us.

After birth in the midnight, next day [9th Sept 2012] early morning was purappadu of ‘little Krishna’ – the beautiful vigraha dancing atop ‘Kalinga’. During this purappadu, devotees offer fresh butter to Lord Krishna. 

In the evening, there is the grand purappadu of Sri Parthasarathi, as ‘Krishna with flute’ in beautiful sitting posture on ‘Punnai tree’ [Pinnakilai vahanam].   On this occasion, ‘uriyadi’ – the game of hitting the hanging object with hidden gifts inside,  with sticks  is played, specially by Yadavas, the cowherds, the clan of Lord Kirishna Himself.  The game is very fierce as the clubbing with a stick is made most tough with  others fiercely throwing  water on the player.  The water twirled out of cone shaped pitchers would flow like a whip and can cause some pain too, when struck.  This is a traditional game.  One Uriyadi in the mandapam in front of the Main gopuram of the temple and other one in Singarachari Street, near Nagoji Street is performed. 



Here are some photos of the purappadu.  One can have darshan of  Lord Krishna at the feet of Lord Parthasarathi, sitting on Punnai kilai vahanam. 

கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் அழைத்த பக்தர்கள் இல்லங்களில்  எல்லாம் பிறந்து, அவர்கள் அணிவித்த புத்தாடை உடுத்தி, நம் இல்லங்களிலே தள்ளித் தளர்நடையிட்டு, நாம் அவருக்கு சமர்ப்பித்த "செந்நெல் அரிசி சிறு பருப்புச் செய்த அக்காரம் நறுநெய் பால்"; "கன்னலிலட்டுவத்தோடு சீடை காரெள்ளினுண்டை" ' "அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்த சிற்றுண்டிகள்";  "நாவற்பழம்  முதலான எல்லா பழங்கள்ஆகிய எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டார்நாமும் ஆனந்தித்தோம்.

இப்படியாக நள்ளிரவிலே பிறந்த கண்ணபிரான், மறுநாள் [9th Sept 2012]  காலை - பால கண்ணனாக 'காளிங்க நர்த்தனாய்" திருகோலம் பூண்ட கண்ணன் - சேஷ வாஹனத்தில் புறப்பாடு கண்டு அருளினார். இப்புறப்பாட்டின் போது பக்தர்கள், கண்ணனுக்கு வெண்ணை சமர்ப்பிக்கின்றனர்.  மாலை ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் புன்னை கிளை வாஹனத்தில் எழுந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்புல்லாங்குழல் ஊதும் மிக அழகிய திருக்கோலத்தில் 'ஆயர்பாடியில் ஆயர்களோடு குரவை கோத்த மாமாயன்' - புன்னை கிளை வாஹனத்தில், கூடவே கண்ணனும் எழுந்து அருள புறப்பாடு கண்டு அருளினார்திருவல்லிக்கேணியில் உள்ள யாதவர்கள் இந்நாளில் உறியடி திருவிழாவினை சிறப்பாக கொண்டாடுவர்.   சில இடங்களில் 'உரியடி' என்று எழுதப்பட்டாலும் 'உறியடி' என்பதே சரிதமிழில், உரி என்கிற வினை சொல்லுக்கு, 'தோலை நீக்கு' அல்லது ஒரு முகத்தல் கு' என்றே பொருள் படும்உறி என்ற பெயர்ச்சொல் பண்டங்கள், தயிர் போன்றவை வைக்கும் பொருட்டு தொங்க விடும் உறி - எனவே இது உறியடி.  

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் பெரியாழ்வார் திருமொழியில் உறி பற்றி வருகிறது. - முதற்பத்து முதல்திருமொழி - வண்ணமாடங்கள் (பாடல் 4).  உறியை முற்றத்து உருட்டி நின்றாடுவார்*.  அடுத்த பாசுரத்தில் " கொண்டதாளுறி கோலக்கொடுமழு" என்றும் வருகிறது.   இந்த உறியடி விளையாட்டில் உயரமான கம்புகள் இடையே கிணற்றில் இருக்கும் கப்பி போன்ற அமைப்பின் வழியாக தேங்காய்க்குள் பரிசு பொருள்கள் அடங்கிய உறி ஒன்று தொங்க விடப்படுகிறது. இளைஞர்கள் தங்கள் கையில் உள்ள கொம்பின் மூலம் அந்த உறியை அடித்து சாய்த்துவதுதான் போட்டி. பெரிய ட்ரம்களில் தண்ணீர் வைத்து உருளிகள் மூலம் வாகாய் சுழற்றி வேகமாய் உறியடி அடிக்க வருவோர் மீது பலர் அடிப்பார். இது சாட்டை அடி போன்று விழும்.

சில வருடங்கள் முன்பு கோவில் வாசலில் உள்ள மண்டபத்திலும், நாகோஜி தெரு முன்பும் - தவிர பிற இடங்களிலும் உறியடி விமர்சையாக நடக்கும். தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் பல காரணங்களால் இப்போது அவ்வளவு சிறப்பாக இல்லாமல் சற்று வேகம் குறைந்தது. சமீப ஆண்டுகளில் சிங்கராச்சாரி / நாகோஜி தெருவில் நன்றாக நடக்கிறது. இந்த ஆண்டு கோவில் வாசலில் நடக்கும் உறியடியே நிறைய மணித்துளிகள் ஆனது.






புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :
அடியேன் ஸ்ரீனிவாச தாசன்.

No comments:

Post a Comment