To search this blog

Sunday, May 18, 2025

Sri Varadhar Thiruther 2025

 

Thiruvallikkeni Sri Varadha Rajar  Thiruther 2025



Thiruther is a grandeur occasion ~ thousands of devotees assemble at Kanchipuram to have a glimpse of Sri Devathi Rajan on thiruther.  

இன்று 17.5.2025  திருக்கச்சி தேவாதிராஜரின் திருத்தேர் வைபவம்.  காஞ்சி மாநகரத்திலே முன்பெல்லாம் திருத்தேர் திரும்புகைக்கு நாட்கள் கூட ஆகுமாம்.  இப்போது இயந்திரங்கள், மனிதர்கள் உதவியுடன் பெருமாள் தேர் புறப்பாடு சில மணி நேரங்களில் முடிந்து விடுகிறது.  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேர் காண வருகை தருகின்றனர்.  காஞ்சியில் தேரன்று பொது விடுமுறை அளிக்கப்படுகின்றது.




 இன்று ஒரு நகைச்சுவையுடன் ஆரம்பிப்போம் (என் அப்பா என் சிறுவயதில்  சொன்னது!)  - கச்சி மூதூர் திரும்பிய இடமெல்லாம் திருக்கோவில்கள், பக்தர்களுக்கு பல இடங்களில் அன்னதானம் நடக்கும்.  ஒரு மழை நாளில் சிலருக்கு சரியாக உணவு கிடைக்காததால் பசி !  -   அவர்கள் திண்ணையில் அமர்ந்திருக்க, அவ்வழி சென்ற ஒரு பக்தன் - கோவில் கோபுரத்தை கண்டு இருகை உயரே தூக்கி "கஞ்சி வரதப்பா'; "கஞ்சி வரதப்பா';  என அகவ, திண்ணையில் இருந்தவன் - (உணவு கஞ்சி) எங்கே வரதப்பா ?  என வினவினான் !! 

'தேரு வருதே'  - திரும்பி படிக்கவும் ..  இது -   மாலைமாற்று அல்லது இருவழியொக்கும் சொல் (Palindrome) - பின்புறமிருந்து படித்தாலும் முன்புறம் படித்ததைப்போலவே பொருள் கொண்ட சொல், தொடர் அல்லது இலக்கம் ஆகும். 

தேர் (திருக்கோவில் உத்சவங்களில் திருத்தேர்) - பண்டைய காலத்தில் இருந்தே மக்களை கவர்ந்து வந்துள்ளது.  மஹாபாரதத்தில் காணப்படும் ‘’ரத, கஜ, துரக, பதாதி’’ என்னும் நால்வகைப் படைகளைக் மிக விவரமாக குறிப்புட்டுள்ளனர்.  பாரதப்போர் தனிலே,  இருதரப்பின் பெரிய மற்றும் அற்புதமான படைகளும்,  தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட யானைகளும், தேர்களும், மின்னலுடன் கலந்த மேகங்களைப் போல, அபரிமிதமாக நின்று கொண்டிருந்த தேர் படையணிகள் நகரங்களைப் போலத் தோற்றமளித்தனவாம். 

 

Today, 17.5.2025   is day 7 of Sri Varadharajar   Brahmothsavam – and it was thiruther.  At Thiruvallikkeni  the grand big  Thiruther [chariot] rolls twice – one for Sri Parthasarathi and again for Sri Thelliya singar ….. one will realise its grandeur that of rolling juggernaut, if one were to stand near as the 8 or 9 feet wheel rotates by.  Thiruther is a grand occasion of togetherness of people.  Today it was siriya thiruther for Sri Varadhar ~ at Kanchi the events are much bigger – have heard till a decade or so ago, it would take days for the thiruther to return and it would be a holiday in Kanchi district on the occasion.  

Chariots are impressive  - On screen,  we have seen many – one got enamoured by the scene of Arjuna wading through the forces in Mahabaratha  - those chariots were quite attractive.  Ratha is not only fleet-footed mode during war, it symbolizes energy and zeal to move forward.  It was on the chariot steered by Lord Krishna, Geethopadesam occurred to Arjuna, the mighty warrior.  The rath itself according to legend was given by Agni.  The battle formation was unconceivably bigger ~ by some accounts an Akshauhini is described as a formation consisting of 21870 chariots, 21870 elephants, 65160 cavalry and more than a lakh of infantry.

In Greek mythology, Chariots were not just a means of transportation; they were symbolic and played a significant role in various myths and legends. Chariots were often associated with deities, notably those connected with the sky, sun, and moon, and were drawn by mythical creatures or powerful animals. 

The word "chariot" comes from the Latin term carrus through French chariot, a loanword from Gaulish karros. In ancient Rome a biga described a chariot requiring two horses, a triga three, and a quadriga four. In ancient Greek religion and mythology, Helios is the god who personifies the Sun.   Helios is often depicted in art with a radiant crown and driving a horse-drawn chariot through the sky. He was a guardian of oaths and also the god of sight.   The Roman Emperor Julian made Helios the central divinity of his short-lived revival of traditional Roman religious practices in the 4th century AD.

 


Phaethon is the son of Helios who, out of a desire to have his parentage confirmed, travels to the Sun god's palace in the east. He is recognised by his father and  he asks for the privilege of driving his father’s  chariot for a single day. Despite Helios' fervent warnings and attempts to dissuade him, counting the numerous dangers he would face in his celestial journey and reminding Phaethon that only he can control the horses, the boy is not dissuaded and does not change his mind. He is then allowed to take the chariot's reins; his ride is disastrous, as he cannot keep a firm grip on the horses. As a result, he drives the chariot too close to the Earth, burning it, and too far from it, freezing it. 

தமிழ் எழுத்தாளர்களில் ஜாம்பவானாகத் திகழ்ந்தவர் கல்கி ஆர்.கிருஷ்ணமூர்த்தி.  மூதறிஞர் ராஜாஜியின் வலது கரமாகவும் திகழ்ந்தார். சோழர்கள் மற்றும் பல்லவர்களின் பொற்கால ஆட்சியை வாசகர்களின் மனத்தில் நிழலாட வைத்த வரலாற்றுப் புதினங்களான "பொன்னியின் செல்வன்', "சிவகாமியின் சபதம்', "பார்த்திபன் கனவு' போன்றவை அவரது சிறந்த பங்களிப்புகளாகும். தலைமுறை கடந்தும் தமிழர்களை இந்த வரலாற்றுப் புதினங்கள் ஈர்த்து வருகின்றன.  சிவகாமியின் சபதம். 12 வருடங்களாகக் கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த பிறகே ஒரு புதினமாக வெளியிடப்பட்டது.  முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இப்புதினத்தில் முதலாம் நரசிம்ம பல்லவன் என்ற இளவரசன் முக்கிய இடம் வகிக்கிறார். 

சிவகாமியின் சபதத்தில் - கச்சி மூதூர் விவரிக்கப்படும் பல இடங்களில் இங்கே ஒன்று :  பரஞ்சோதி, ஏகாம்பரநாதர் கோயில் சந்நிதிக்கு வந்ததும் அந்தத் திவ்விய சந்நிதியின் மகோந்நதமான தோற்றத்திலிருந்தே அதுதான் ஏகாம்பரர் கோயிலாயிருக்க வேண்டுமென்று பரஞ்சோதி ஊகித்து தம்முடைய ஊகம் சரிதானா என்று மாமல்லரை வினவினார். "  கொஞ்சம் ரதத்தை நிறுத்தச் சொல்லுங்கள். காஞ்சியின் இருதய ஸ்தானத்தை நன்றாய்ப் பார்க்கிறேன்" என்றார் பரஞ்சோதி.  கோயிலுக்குள்ளே ஒரு தீப வரிசைக்குப்பின் இன்னொரு தீப வரிசையாக முடிவின்றி ஜொலித்துக் கொண்டிருந்த அலங்கார தீபங்களையும் கோயிலுக்கெதிரே கம்பீரமான தேர் நின்ற நாற்சந்தியையும் தேரடியிலிருந்து நாலாபக்கத்திலும் பிரிந்து சென்ற தேரோடும் வீதிகளையும், குன்றுகளைப் போலப் பலவகைப் புஷ்பங்கள் குவிந்து கிடந்த கடைகளையும், தேங்காயும் கதலியும் மலை மலையாகக் குவிந்து கிடந்த கடைகளையும், அற்புதமான சிற்பத்திறமுடைய தூண்களின் மேலே அமைந்த நூற்றுக்கால் மண்டபங்களையும் பரஞ்சோதி பார்த்துவிட்டு, "ஆஹா! புலிகேசியின் காதலுக்குக் காரணம் இல்லாமற் போகவில்லை!" என்றார்.  

அன்றே காஞ்சி நகரத்து வீதிகளும், திருக்கோவில்களுக்கு, தேர்களும் (மன்னர் தம் தேரும் - திருக்கோவில் திருத்தேர்களும்) சிறப்புற இருந்துள்ளன.   பல்லவர் சிறப்பு -கற்தேர்கள்.  கி.பி. ஏழாம் நூற்றாண்டில் மாமல்லபுரத்திலே தனிப் பெரும் கற்பாறைகளைக் குடைந்தும், புராணச் சிறப்புடன் சிற்பங்களைச் செதுக்கியும், ஒற்றைக் கல் கோயில்களாக்கியும் பல்லவர்கள் தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.  இங்கே சிறப்பு பஞ்ச பாண்டவர் ரதங்கள்.  

There have always been evidences that our ancestors were advanced and lived a sophisticated yet contented life .. .. the slow unearthing of evidence only confirms their superiority ..   

Here are some photos of Sri Varadhar purappadu to thiruther and thiruther purappadu at Thiruvallikkeni.

 
adiyen Srinivasadhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
17.5.2025









1 comment:

  1. Excellent writeup and inputs are very touching.

    Venkat

    ReplyDelete