To search this blog

Saturday, January 6, 2024

Thiruvalllikkeni Raja Mannar Thirukolam 2023 - திரிகர்த்த நாடு சுசர்மன் கதை

பசுக்கள்தாம் செல்வம் என்று நினைத்த மக்கள் வாழ்ந்த நாடு இது. மஹாபாரதத்தில் சுசர்மன் ஆநிரை கவர்ந்து மிக பெரிய போர் செய்து, தர்மர் கூறியதால் வீமனால் விடுவிக்கப்பட்டு பின்னர் யுத்தத்தில் பாண்டவர்களை கொல்வதாக சபதம் ஏற்று மாண்ட கதை அறிவீர் !!



ஆ   -  தமிழ் மொழியின் எழுத்துகளில் இரண்டாவது - இது மொழியின் ஓர் ஒலியையும் அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கக்கூடும்.    ஆ, என்றால் பசு என்றும் பொருள்.  பசு மாட்டிற்கு வேறு பெயர்கள் : கோமாதா, குரம், கபிலை, கூலம், கோமளம், சுரபி, சுரை, தேணு, பத்திரை, சுதை, வற்சலம், வற்சை.   பசுக்கூட்டத்திற்க்கு ஆநிரை என்று பெயர்.   செல்வத்தின் குறியீடாக ஆநிரைகள் கூட்டம் இருந்தது.  அந்த காலத்தில், அவற்றை காப்பது தலையாய கடமை.    நாகரீக வளர்ச்சியில் குடியிருப்புகள் உருவான பின், கால்நடைகள் வளர்ப்பும், விவசாயமும் முக்கிய தொழிலானது. 



சிறந்த மேய்ப்போன் - மாயோன் ஆன கண்ணபிரான்.  அவனே ஆநிரை மேய்த்தான் ! அவனே ஆநிரை காத்தான் !  அவனே நமக்கு கலங்காப் பெருநகரம் காட்டுவான் கண்டீர்!.  அவனே தலை சிறந்த அரசன்.    "கோ' என்னும் சொல் பசுவையும், அரசனையும் குறிக்கும். "கோல்' என்னும் சொல்லடியிலிருந்து கோ, கோன், கோமான் என்னும் சொற்கள் தோன்றின. சங்க காலத்தில் தமிழர் போர் மரபுகள் அறப்போர் முறையைச் சார்ந்ததே ஆகும்.   சூரியன் மறையும் வரை மட்டுமே போர் நடைபெற்றது. பின் முரசறைந்து போரை நிறுத்துவர். எத்துனை நாள் போராயினும் இதுவே வழக்கானது.  ஆநிரை கவர்தல் - ஆநிரை மீட்டல், எயில் காத்தல் - எயில் வளைத்தல் முதலியன போரின் வகைகளாம்.  போர் அறிவிப்பை  உணர மாட்டாதவை பசுக்களாகும். எனவே பசுக்களைப் பாதுகாக்க விரும்பி ஆநிரைக் கவர்தல் நடைபெற்றது.  அவ்வாறு கவர்ந்து திரும்பும்போது அப்பசுக்களுக்கு உணவினை வழங்கி, அவற்றிற்கு ஊறு செய்யாமல் ஓட்டிச் செல்வர்.   

                          On 30.12.2023    day  8  of Irapathu Uthsavam, was   ‘ Raja Mannar ’ Thirukolam……….. it is but natural – Krishna was the King of cowherds and Sri Parthasarathi  in His natural self…as Rajamannar, blessed  His bakthas.  The whip and the crowning glory were of unparalleled beauty – one could also notice the small calf at His lovely feet and the beautiful cow behind Him.   

The easiest way to reach Him, is surrender thyself (Saranagathi) ~ of the infinite kalyanagunas of the Emperuman – there is one of ‘Vathsalyam’ – the exposition of patience and forgiveness……… we make so many mistakes knowingly  and yet our Lord protects and takes us nearer removing us of all the sins….. it is rendered that the cow would like the dirt off the calf revealing it’s extreme love for its progeny.  So also Emperuman accepts us even when we are full of dirt and mistakes.   We need to do nothing but surrender, prostrating at the divine feet of Sriman Narayana. The meek cow represents the devotees who reach to Him, as the Eternal Saviour ~ the Emperor who protected the cows would sure protect us and give us the ultimate salvation.   

Swami Nammalwar in his Thiruvaimozhi (8th decad 1 thiruvaimozhi) prays Emperuman to come and provide darshan to His devotees calling Lord Krishna, the little sweet child, who came to the rich chieftain Nandagopan; having been born to Devaki but gave Yasodha the pleasure of His upbringing.  He, with his claws tore apart the wild Hiranya  ~ He is our eternal SAviour – and sAdagopan prays that He presents Himself in a much more adorable form.   

 



எடுத்த  பேராளன் நந்தகோபன்றன் இன்னுயிர்ச் சிறுவனே! * அசோதைக்கு

அடுத்த  பேரின்பக்  குலவிளங் களிறே! அடியனேன்  பெரியவம்மானே!*

கடுத்த போரவுணன் உடலிருபிளவாக் கையுகிராண்ட  எங்கடலே !*

அடுத்ததோர் உருவாய் இன்று  நீவாராய் எங்ஙனம் தேறுவர் உமரே ?

 

செல்வச்செழிப்பு வாய்ந்த சீமானான நந்தகோபனுடைய இன்னுயிர்ச்  சிறுவனாய் வளர்ந்த கண்ணன், ஒருத்தி மகன் என தேவகிப்பிராட்டி வயிற்றிலே பிறந்து,   யசோதைப்பிராட்டியிடம் அக்குலத்திற்கோர்  இளங்கன்று போன்று  சீரும் சிறப்பையுமாய் வளர்ந்தவன்.  பல களங்களை கண்டு சண்டையிலே தினவு விஞ்சின இரணீயாசுரனுடைய உடலை இரண்டு  துண்டமாகும்படி திருக்கையிலுள்ள நகங்களைக் கொண்டு  பிளந்த கடல் போன்றவனே ! ~  யாம் மிக விரும்புவளவிலே ஒரு வடிவழகைப்  பூண்டு, உந்தன்னை  உபேக்ஷித்து இருப்பவர்களுக்கு வருகை தருவாயாக !  என்போன்றவர்களான (உம்மைச்சேர்ந்த) பக்தர்கள்  உன்னை சர்வரக்ஷகன் என கொண்டாடும்படியாக வாரும் என நம்மாழ்வார் பிரார்திக்கிறார்.  

திரிகர்த்த நாடு (Trigarta Kingdom) பரத கண்டத்தின், தற்கால பஞ்சாப் பகுதியில் அமைந்த பண்டைய நாடு. திரிகர்த்த நாட்டின் தலைநகராக பிரஸ்தலம் எனப்படும் தற்கால முல்தான் நகரம் விளங்கியது.  இந்நாட்டின் புகழ்பெற்ற மன்னர் சுசர்மன்.  விராட பருவத்தில், திரிகர்த்த நாட்டவர்களும், குரு நாட்டவர்களும் விராட நாட்டின் இருபுறங்களில் முற்றுகையிட்டு, பசுக்களைக் கவர்ந்து சென்றனர்.  

மன்னன் விராடனுக்குச் சேவை செய்யப் புகுந்து, அவனது  சிறந்த நகரத்தில் மாறுவேடத்தில் வசித்து வந்த   அளவிலா பராக்கிரமம் கொண்ட உயர் ஆன்ம பாண்டவர்கள், பிறரறியாமல் வாழ்வதாகத் தாங்கள் வாக்குறுதி அளித்திருந்த {அஜ்ஞாதவாச காலத்தை} காலத்தை நிறைவு செய்தார்கள். பகைவீரர்களைக் கொல்பவனான பலம்பொருந்திய மன்னன் விராடன், கீசகன் கொல்லப்பட்ட பிறகு, குந்தியின் மகன்கள் {பாண்டவர்கள்} மீது முழு நம்பிக்கை கொண்டான். பாண்டவர்களின் வனவாச காலத்தின் பதிமூன்றாவது வருட நிறைவில்தான் விராடனின் கால்நடைகளை  சுசர்மன் ஆயிரக்கணக்கில் கைப்பற்றினான்.  

கால்நடைமந்தைகள் அப்படிக் கைப்பற்றப்பட்ட போது, விராடனின் மந்தையாளர்கள்  பெருவேகத்துடன் நகருக்கு வந்து,  மத்ஸ்யர்கள் மன்னனான தங்கள் ஆட்சியாளன் விராடனிடம் முறையிட, மன்னனும்  தேர்களும், யானைகளும், குதிரைகளும், காலாட்படைகளும், கொடிக்கம்பங்களும் நிறைந்த மத்ஸ்ய படையை அணிவகுக்கச் செய்தான். விராடனின் அன்பிற்குரிய தம்பியான சதானீகன்  தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு, பிளக்க இயலாத எஃகால்  செய்யப்பட்ட கவசத்தைத் தரித்தான். சதானீகனுக்கு அடுத்து பிறந்தவனான மதிராக்ஷன்  வலுவான கவசத்தை அணிந்தான். மத்ஸ்யர்கள் மன்னன்  தம்பியான சதானீகனிடம், “பெரும் சக்தி கொண்ட கங்கன், வல்லவன், தந்திரீபாலன் மற்றும் தமக்கிரந்தி (பஞ்ச பாண்டவர்கள்) பெரும் போர் வீரர்கள், அவர்களுக்கு  கொடிகளுடன் கூடிய தேர்களை அளிக்குமாறு ஆணையிட்டான்.  

 விராடன்  தங்கத்தேரில் இருந்த திரிகார்த்த ஆட்சியாளன் சுசர்மனை எதிர்த்தான். மன்னன் விராடன், சுசர்மனை பத்து கணைகளாலும், அவனது நான்கு குதிரைகளில் ஒவ்வொன்றையும் ஐந்து கணைகளாலும் துளைத்தான்.  திரிகர்த்தர்களின் தலைவனான மன்னன் சுசர்மன், தனது சக்தியால் மத்ஸ்யர்களின் முழுப் படையையும் ஒடுக்கி வீழ்த்தியபடி, பெரும் சக்தி கொண்ட விராடனை நோக்கி அவசரமாக விரைந்தான். விராடன் தேரை இழந்திருந்தபோது, அவனை  உயிருடன் சிறைபிடித்து  துன்புறுத்திய சுசர்மன், விராடனைத் தனது தேரில் ஏற்றி, களத்தை விட்டு விரைந்து சென்றான்.  

தர்மரின் ஆணைப்படி களமிறங்கிய பீமன், ஒரு பெருமரத்தை பிடுங்கி, கதாயுதம் போன்ற பெரும் அடிமரம் கொண்ட இந்தப் பலமிக்க மரத்தை கொண்டு  நான் எதிரியை முறிப்பேன்” என்றான்.  நீதிமானான வீரமிக்க மன்னன் யுதிஷ்டிரன், தனது தம்பியிடம் {பீமனிடம்}, “ஓ! பீமா, இத்தகு மூர்க்கமான செயலைச் செய்யாதே. அந்த மரம் அங்கேயே நிற்கட்டும். நீ அந்த மரத்தைக் கொண்டு மனிதசக்திக்கு அப்பாற்பட்ட முறையில் இத்தகு சாதனைகளை அடையக்கூடாது. நீ அப்படிச் செய்தால்,  “இவன் பீமன்” என்று மக்கள் உன்னை அடையாளம் காண்பார்கள். எனவே, மனித ஆயுதங்களான, (கணைகளுடன் கூடிய) வில்லையோ, வேலையோ, வாளையோ, போர்க்கோடரியையோ எடுத்துக் கொண்டு போர் செய் என பணித்தார்.  

கையில் கதாயுதத்துடன் களமிறங்கிய வீர தீர போரில் படைகளை சின்னாபின்னம் செய்து, நெருங்க  சுசர்மன் தேரிழந்து ஓடினார்.  அவன்  ஓடுவதைக் கண்ட பீமன், “நில்! ஓ இளவரசே! இப்படி நீ ஓடுவது உனக்குத் தகாது! இந்த உனது பராக்கிரமத்தைக் கொண்டு, மந்தையை நீ எப்படிப் பலவந்தமாகக் கைப்பற்ற முடியும்? உனது தொண்டர்களையெல்லாம் கைவிட்டு, எதிரிகள் மத்தியில் நீ தாழ்வடையலாமா?” என்று கேட்டான்.  பீமன், கோபத்தில் சுசர்மனின் தலைமுடியைப் பிடித்துத் தூக்கி, கீழே எறிந்து தரையில் மோதச் செய்தான்.   துன்பப்பட்ட திரிகார்த்த மன்னன்  உணர்வற்றுப் போனான். தேரை இழந்த திரிகார்த்தர்களின் மன்னன் சுசர்மன் பிடிப்பட்டதும், மொத்த திரிகார்த்தப்படையும் பீதியடைந்து எல்லாத் திக்குகளிலும் ஓடின.   

 சுசர்மனை வீழ்த்தி, பசுக்களையும், அனைத்து வகைச் செல்வங்களையும் மீட்டு, விராடனின் துயரை அகற்றி, விராடனின் முன்பு சுசர்மனை நிற்க வைத்தனர்.  யுதிஷ்டிரன்  இம மன்னன் விராடனின் அடிமையாகிவிட்டான்” என இயம்பி, சுசர்மனை நோக்கித்   “நீ விடுதலையடைந்தாய். சுதந்திர மனிதனாக நீ செல்லலாம். இனியும் இவ்வழியில் செயல்படாதே” என்று  புத்திமதி கூறி விடுதலை செய்வித்தான்.  

திரு.கிசாரி மோஹன் கங்குலி  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மஹாபாரதம் தமிழாக்கம்... விராட பர்வம் பகுதி 32 -  திரு செ.அருட்செல்வப்பேரரசன் அவர்களின் சிறப்பான நடையில் இருந்து ! 

இம்மன்னனது படையான சம்சப்தகர்கள், குருக்ஷேத்திர  போரில் அருச்சுனனை கொல்வோம் அல்லது அருச்சுனனால் கொல்லப்படுவோம் என வீர சபதமிட்டு போரிட்டனர். அபிமன்யுவின் மரணத்திற்கு காரணமான ஜெயத்திரதனை சூரியன் மறைவதற்குள் பழி வாங்க துடித்த அருச்சுனை ஜெயத்திரதன் பக்கம் நெருங்காதவாறு, சம்சப்தகர்கள் அருச்சுனனை போருக்கு அழைத்து, போர்க்களத்திற்கு வெகு தொலைவிற்கு அழைத்துச் சென்று போரிட்டனர். சூரியன் மறைவதற்கு சிறிது நேரம் இருக்கும் போது, வீரமுடன் போரிட்ட அனைத்து சம்சப்தகர்களை அருச்சுனன் கொன்றழித்தான். பின்னர் கண்ணனது உதவியுடன் சயத்திரானது தலையும் உதிர பண்ணினது பிறிதொரு சம்பவம்.  

Here are some photos of day 8 purappadu Sri Parthasarathi Emperumanar in Rajamannar thirukolam on 30.12.2023  

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
30.12.2023 












No comments:

Post a Comment