To search this blog

Monday, January 15, 2024

Happy Makara Sankranthi ! - Happy Pongal 2024 - கிருஷ்ணாவதார பெருமாளின் மஹிமை

Happy Pongal – on the harvest day, every one feels elated and happy.  Today 15.1.2024  is Sankranthi.  



Thai Pongal is the  harvest festival of Tamil Nadu ~ a long four day festival in villages.... Bhogi, Pongal, Kanum Pongal….and more.. Thai Pongal coincides with Makara Sankranthi.  It is also the Uzhavar Thirunal.  The word Pongal means "overflowing" which signifies abundance and prosperity. On the day of Pongal, at the time of sun rise there is a symbolic ritual of boiling fresh milk in a new clay pots and when the milk boils over and bubbles out of the vessel, people shout "Pongalo Pongal!"  The popular belief has stemmed out into the saying - "Thai Pirandhal Vazhi Pirakkum" meaning "the commencement of Thai paves the way for new opportunities".  It is a festival of happiness and prosperity and perfect time for wishing each other that our lives also prosper well.   

Bhogi’ ~ the day before the Pongal day [Makara Sankranthi] is an important day.  14.1.2024   was   Bhogi.  This is the day when the divine wedding of  Sri Andal with the Perumal she idolized and sang in Her prabandhams is performed.  The Divine Andal at Her young age was the very embodiment of the Bakthi, thought of Sriman Narayana, wrote beautiful Hymns and wished marriage with the Greatest of the Souls ~the Paramapurusha.   

திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே நேற்று ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் திருக்கல்யாணதுக்கு தயாரான சுந்தர புருஷனாக புறப்பாடு கண்டருளினார்.  புறப்பாடு முடிந்தவுடன் - 36 கால் மண்டபத்தில் மாலை மாற்றல் வைபவம்.  பின்னர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமானின் திருக்கல்யாண வைபவம்.  இவ்வளவு சிறப்பான சமயத்தில் - கிருஷ்ணாவதார பெருமாளின் மஹிமையை அறிதல் நமக்கு நலம் தரும்.  





இதோ இங்கே கண்ணன் சிறப்பு - ஸ்ரீ உ.வே. ஸ்ரீநிதி அக்காரக்கனி ஸ்வாமியின் வார்த்தைகளில் (அவரது அனுமதியுடன் பகிரப்படுகிறது)

 

கண்ணன் ஒரு யுகத்தையே வடிவமைக்க வல்ல / மாற்ற வல்ல சாமர்த்தியம் படைத்தவன். ஜகதாசார்யனான அவனை யுகாசார்யன் என்பதும் தகும். அவன் ஒரு மிகச் சிறந்த புரட்சியாளன். பாண்டவர்களுக்குத் தலைவனாக இருந்து புரட்சிகளைச் செய்த பெருமைக்குரிய தலைவன் அவன்.  அவனுடைய சொல்லையும் செயலையும் பிரித்துப் பார்க்க முடியாது. எங்ஙனம் உபதேசிக்கிறானோ அங்ஙனமே வாழ்ந்த பெருமைக்குரியவன் அவன்.  

இன்பம் துன்பம் முதலான இரட்டைகளைச் சமமாகப் பார்ப்பதற்குரிய நல்லறிவை அவன் அர்ஜுனனுக்குப் புகட்டுகிறான்.  அவன் சொன்ன விஷயங்களுக்கு அவனே உதாஹரண புருஷனாகத் திகழ்கின்றான். கண்ணனுடைய வாழ்க்கை அவன் உபதேசித்தவைகளின் உரை வடிவம் போன்றதாகும்.  

ஆம். அவனுடைய வாழ்க்கை கீதையின் ஸரளமான & ஸ்பஷ்டமான உரை போன்றதாகும். போர் புரிய மாட்டேன் என்றான் பார்த்தன்.. அதனால் அரண்டும் மிரண்டும் போகாமல் புன்முறுவல் பூத்தபடி நின்றான் பகவான். கோபிகைகளைக் கண்டால் எங்ஙனம் சிரித்திடுவானோ அதைப் போலவே சிரித்தான் அங்கும்.  

அவன் அர்ஜுனனைத் தயார் செய்தான்.. அவன் மென்மையானவன் தான்.. மேலும் உறுதியானவனும் கூட! அவன் உறுதியாக நின்று ஸதர்த்தங்களை உபதேசித்தான்.  

குழலூதும் போது அவன் அதரத்திலிருந்து புறப்படும் இசையில் மென்மையும்; குழல் த்வாரங்களில் அவன் கை விரல்களின் நடனத்தில் உறுதியும் காணலாகுமே.. அதே போலத் தான்.  அவனே மென்மையானவன்..அவனே கடினமானவன். 

ப்ரபந்ந பாரிஜாதாய தோத்ர வேத்ரைக பாணயே l

ஜ்ஞாந முத்³ராய க்ருஷ்ணாய கீ³தாம்ருத து³ஹே நம: ll  

கண்ணன் கல்பத்³ருமத்தோபாதி மென்மையானவன். கூடவே வென்று பகை கெடுக்கும் வேல் பிடித்தவனும் கூட! ஆம். தண்டிப்பவனும் கூட!  வஸுதேவ- தேவகி தம்பதிக்கு கோமல - வபு ..( மென்மையான சிசு ) ஆனந்த தா³தா ( ஆனந்தத்தை அளிப்பவன் )  ஆகிறான்.. கம்ஸ சாணூராதி³களுக்கு மர்த³ந காரீ ( அவர்களை வதம் செய்பவன் )  ஆகிறான்.  

பாண்டவர்களிடத்தில் அவன் காட்டிய அன்பு கௌரவர்களுக்கு ாபமாக அன்றோ முடிந்தது. பாண்டவர்களின் வெற்றியாகிற படகை கௌரவர்களாகிற கொடுஞ்சுழலில் இருந்து மீட்டுக் கரை சேர்த்தான்.  

भीष्म द्रोण तटा जयद्रथ जला गान्धार नीलोत्पला

शल्य ग्राहवती कृपेण वहनी कर्णेन वेलाकुला l

अश्वत्थाम विकर्ण घोर मकरा दुर्योधनावर्तिनी

सोत्तीर्णा खलु पाण्डवै रणनदी कैवर्तक: केशव: ll

 

ஸமர நதி ( போராகிற ; போர்க்களமாகிற நதி ) அதில் பீஷ்ம த்ரோணர்கள் கரைகளாகிறார்கள். ஜயத்ரதனே அதில் நிறைந்திருக்கும் நீர். சகுனி நீலத்தாமரை.. சல்யன் முதலையைப் போன்றவன். க்ருபர் அந்நதியின் ஒழுக்கு போன்றவராகிறார். அங்கு உண்டாகும் சுழல் அல்லது அதில் உண்டாகும் அலை போன்றவனாகிறான் கர்ணன். அஸ்வத்தாமனும் விகர்ணனும் கோர மகரங்களாக திமிங்கலம் போன்றவர்களாக ஆகிறார்கள். துரியோதனன், சகுனியாகிற தாமரை மலரைச் சுற்றி வரும் வண்டு போன்றவனாகிறான். இத்தனை கொடிய நதியில் சிக்கி அல்லலுற்ற பாண்டவர் ஐவரைப் பத்திரமாக; அவர்களின் வெற்றியாகிற படகை கரை சேர்த்த பெருமைக்குரியவன் கண்ணனே ஆவான்.  

பஞ்சவரைப் பல வகைகளாலும் காத்தவன் கீதாசார்யனான கண்ணனே ஆவான். 

கண்ணன் எம்பெருமானின் திருவடி தொழுது உய்வோமாக ! 

Here are some photos of Sri Parthasarathi Emperuman  taken during Bhogi purappadu at Thiruvallikkeni on 14.1.2024

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
15.1.2024  









last pic Credits : Thirumalai Vinjamoor Venkatesh

No comments:

Post a Comment