To search this blog

Sunday, September 12, 2021

Avani Visakham 2021 - கையார் சக்கரத்து என் கருமாணிக்கமே என்றென்று

Today 12.9.2021 is Visakham in the month of Avani – but with Govt policy of week-end (Fri, Sat, Sun) closure of Temples, thirukkovil remains out of bounds for devotees and we cannot have darshan of our Emperuman at any temple in Tamil Nadu ..  pray that this changes sooner and the Best option available for removing this obstacle is -  “pray to Emperuman for once HE decides, none can stop!’ – these are the words of Karimaran Sadagopan himself in Thiruvaimozhi pasuram.


இன்று செப்ட் 12, 2021.  ஆவணி விசாகம்.  ஸ்வாமி நம்மாழ்வாரின் மாச திருநக்ஷத்திரம்.  ஸ்ரீவைஷ்ணவர்களான நமக்கு பேறு - எம்பெருமானிடம் சரணடைந்து, அவனடி சேர்வதே !  - அவ்வாறு அவனை அடைவதற்கு எது தடையாக இருக்கும்,  அதை போக்குவது எப்படி ?

தமிழ் ஒரு அற்புத மொழி.  இன்று சுவாமி நம்மாழ்வார் பாசுரத்திலே 'கைம்மை' என்ற சொல் வருகிறது.  கைம்மை - கணவனை இழந்த மகளிர் நிலைகள் மூவகைத்தாகும். காதலன் இறந்தான் எனக் கேள்வியுற்றஅளவில் உடன் உயிர் நீங்குதல் முதல் நிலையாகும்; கணவரின் ஈமத்தீயிற் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொள்வது இரண்டாம் நிலை யாகும்; மூன்றாம் நிலை கணவன் இறந்த பின்னர்க் கைம்மை நோன்பு மேற்கொண்டு வாழ்தலாகும். இவ்வாறு மணிமேகலைக் காப்பியம் குறிப்பிடுகின்றது.

கைம்மைக்கு  மேலும் சில அர்த்தங்கள் உண்டு.  காதலனைப் பிரிந்திருக்கும் தன்மை ; கணவனை இழந்த நிலைமை ; கைம்பெண் ; சிறுமை ; அறிவின்மை ; பொய்.  இப்பாசுரத்திலே 'கைம்மை' என்பது உண்மைக்கு புறம்பானது !  .. .. பாசுரத்தின் சாரம் - எம்பெருமான் மிக உயர்ந்தவன். அவனைப்பற்றி அவனடி சேர்ந்த பிறகு - அவனது அருளால் பயக்கும் நன்மைகளை யாராலும் தடுக்க இயலாது.  அவனே பரம்பொருள்; அவனே படைத்து காப்பவன்; அவனே எல்லா நன்மையையும் தர வல்லன்.



ஸ்வாமி நம்மாழ்வாரின் பாசுரங்கள் அற்புதமானவை; மிக ஆழ்ந்த கருத்தை கொண்டவை.  தனது திருவாய்மொழி 5ம் பத்திலே  'அவனையடைவதற்குத் தடையாய் இருப்பவற்றை போக்குபவனும் அவனே" என உரைக்கின்றார்.   காரிமாறன் சடகோபன் எம்பெருமானிடத்திலே மிகுந்த பிரேமை கொண்டு, முழுமையாக அவ்வெம்பெருமானையே அடைந்து, இனிமேல் எம்பெருமான் தம்மை விட்டுப் பெயர்ந்துபோக முடியாதென்கிற உறுதியை இப்பாசுரத்திலே உரக்க சொல்கிறார்.: -  



கையார் சக்கரத்து என்  கருமாணிக்கமே என்றென்று,

பொய்யே கைம்மை சொல்லிப்புறமே  புறமேயாடி,

மெய்யே பெற்றொழிந்தேன், விதிவாய்க்கின்று காப்பாரார்,

ஐயோ கண்ணபிரான் அறையோ!  இனிப்போனாலே!! 

எம்பெருமான் மிக சிறப்பானவன்.  திருக்கையில் பொருந்திய திருவாழியாழ்வானை உடையவனும்,  எனக்கு விதேயமான கருமாணிக்கம் போன்றவனுமான பெருமானே!  என்று பலகாலும் பொய்யாகவே கபடவார்த்தையைச் சொல்லி,  அவ்வார்த்தைகளுக்கு  தகுதியில்லாதபடி விஷயாந்தரங்களிலேயே அகப்பட்டிருந்தும்  மெய்யன்பர் பெறும் பவனையே பெற்றுவிட்டேன்;   எம்பெருமான் ஸ்ரீமந்நாரணனின் பரிபூர்ண க்ருபை  பலிக்குமிடத்தில் -  அதைத் தடுக்கவல்லார் யார்?  கண்ணபிரான்- ஸ்ரீக்ருஷ்ணனே!  உன்கிருபை எனக்குப் பலிக்கப் பெற்றபின்பு , என்னைவிட்டு நீ போக விரும்பினாயாகில் தாராளமாகப்போகலாம்;  அதாவது அவ்வாறு எம்பெருமான் கூட பெயர்ந்து போக வல்லவன் அல்லன் என்னுமாறு  தனது பிணைப்பை எடுத்துரைக்கின்றார் சுவாமி நம்மாழ்வார்.   

இதோ இங்கே 2013 வருஷத்திய சுவாமி நம்மாழ்வார் சாற்றுமுறை புறப்பாடு புகைப்படங்கள்.  ஆழ்வாரின் வார்த்தைகளுக்கு இணங்க ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் சங்கு சக்கரங்கள் ஜொலிக்க, அற்புதமான சாற்றுப்படியில்  திருமேனியில் நிறைய திருவாபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு சேவை சாதித்த அற்புத திருக்கோலம்.

As we pray our Emperuman, here are some photos of Swami Nammalwar sarrumurai purappadu of 24.5.2013.

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
12th Sept. 2011.
 

பாசுர விளக்கம் : கச்சி ஸ்வாமி  ஸ்ரீ உ.வே பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார் சுவாமி உரை  - கட்டற்ற சம்பிரதாய களஞ்சியம் திராவிட வேதாவில் இருந்து !!  







1 comment: