To search this blog

Sunday, August 12, 2018

Adi Amavasai ~ Sri Andal Thiruvadipura Uthsavam 8 #Thiruvallikkeni - 2018


For Srivaishnavaites, the month of  Aadi assumes special significance for on this month was born the female saintess Azhwar Andal.   Godadevi  was born at Srivilliputhur  in the Tamil month Adi, with the birth-star Pooram, which is celebrated as ‘Thiruvadippuram’. 

Her exceptional bakthi literature is imbued with high Tamil grammar poetry intensely aimed at the feet of Sri Ranganathar – here is a verse from Godapiratti’s Nachiyar thirumozhi . . .. .. Andal sings that on thinking about the Lord who rules over the vast Universe surrounded by sea and extends to those lands in Heaven – the Lord of Ocean and the sky – she becomes leaner – to the extent that the bangles and other ornaments worn by her come off on their own – such was her affection and attachment to Sriman Narayana.


கழலுறுதல் என ஒரு அழகான தமிழ் வார்த்தை ~ அது வேறு ஒரு மனக்கவலையால் மெலிவுறுதலால் - தாம் அணிந்திருக்கும் வளையல்களும் கைகளிலே நில்லாது,   கழன்று,  அவள் உடல் மெலிவைப் பிறருக்குப் பறைசாற்றும் வகையில் உருப்பெறும் 'கழலலுற்றன' என்பதுவாம்.
நமது ஸ்ரீவைணவத்தின் அடிப்படையே  எம்பெருமானுக்கு அடியனாய் அவன் மீது மட்டுமே மையல் கொண்டு, அவனது திருவடி தாளினிகளையே பற்றி, அவனுக்கு  இட்டவழக்காக கிடப்பதும், அவனுக்கு ஊழியம் செய்து களிப்புறுவதும், அவன் அடியார்க்கு அடியார்க்கு அடியாராகி சேவை செய்வதுமே !   அத்தகைய இலக்கணத்தின் தலைசிறந்த உதாரணமாக கோதை என்று பெயர் பெற்ற ஆண்டாள் விளங்குகிறாள்.  உனக்கே நாம் ஆட்செய்வோம் என்று கண்ணணின் கழலினையே நண்ணும்  மனமுடையவளின் தெய்வீகத்தையும், அவள் அருளிய பகவத் விஷய ஞானத்தையும், அவளின் பக்தியையும், கோதை பிராட்டியின் சங்க தமிழ் மாலையும் நாம் தினமும் அனுசந்தித்து வியர்க்கிறோம். சிறு குழந்தையான ஆண்டாளின் பக்தி அபரிமிதமானது.

இதோ அவரது அற்புத வரிகள் - நாச்சியார் திருமொழியில் - எம்பெருமான் உடைய விச்லேஷம் நெடுகச் செல்லவே அதனாலே உடல் ஈர்க்குப் போலே மெலிந்து கை வளைகள் எல்லாம் கழன்று ஒழிந்தமையும் இவ்வளவிலும் வந்து முகம் காட்டாத எம்பெருமானை கடிந்து உரைத்த வார்த்தைகளில் சில :

பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்
அங்காதுஞ் சோராமே ஆள்கின்ற எம்பெருமான்

ஆண்டாள் பாடின எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் எத்தகையவன் ? ~ பொங்கும் அலைகள் சூழ்ந்த நிலமும் , விண் உலகமும் அங்கு  ஒரு குறைவுமின்றி தளர்வின்றி ஆள்கின்ற எம்பெருமான் -  செங்கோலை உடைய திருவரங்கச் செல்வனார்  - அவனை நினைத்துறுகிய ஆண்டாள் தம் பக்தி நம்மை மேலும் பக்தி நிலையை அடைய இட்டுச்செல்கிறது.





11th Aug was Adi Amavasai and day 8 of Thiruvadipura Uthsavam – on this glorious day – it should have been a grand purappadu of Andal with Sri Parthasarathi perumal – but with jeyashtibishekam complete and pavithrothsavam not having taken place, there was chinna mada veethi purappadu of Sri Andal when rain clouds were present. In the purappadu it was ‘periya thirumadal’ of Kaliyan.  Perumal waited in His mantapam for the purappadu completion – thence there was ‘exchange of garlands’ – ‘unjal’ – and rendering of Thiruvaimozhi decad 8 with Andal seated next to Perumal – a glorious darshan to behold.

Here are some photos of the purappadu (also couple of photos of yesteryears when there was purappadu of Andal with Sri Parthasarathi on Adi amavasai)

~adiyen Srinivasa dhasan.



No comments:

Post a Comment