To search this blog

Tuesday, April 9, 2024

ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி நெற்றிச்சுட்டி

                    நெற்றிச்சுட்டி  என்பது ஓர் அழகு அணிகலன்.  மகளிரும் குழந்தைகளும்   தலையில், நெற்றியின் மேற்புறத்தில் அணியும் அணிகலன்.

எம்பெருமான் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் வடிவழகை எவ்வாறு அனுபவிப்பீர் ?  கேசாதி பாதம், பாதாதி கேசம் சேவிக்கும்போது உங்களை அதிகம் ஈர்ப்பது எது ? எம்பெருமான் காருண்ய திருக்கண்களா ? புஜ வலிமையா ! திருக்கையில் கொண்டுள்ள கோதண்டமா ! அவர் அணிந்துள்ள அணிகலன்களா ! நறுமலர் மாலைகளா !  

பெரியாழ்வார் தமது பாசுரத்தில் கண்ணன் வளரும் பருவத்தில், யசோதா அன்னை நிலவினை நோக்கி அழைக்கும் பாசுரத்தில் " தன்முகத்துச் சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்துபோய்"  என குட்டிக் கண்ணன் தவழும் போது, நெற்றியில் உள்ள சுட்டி வேகமாய் ஆடும்  அழகைப் பாரடா’, என்று கூறுகிறாள்.

 



இன்று திருவல்லிக்கேணி  ஸ்ரீராமநவமி உத்சவத்தில் முதல் நாள் ஸ்ரீ ராமர் நெற்றிச்சுட்டி அழகை சேவியுங்கோள் !!!  

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்
மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்

9.4.2024


Aerial view of Tirupathi city

 

At the foothills of most divine Thirumala lies Thirupathi [ for easier identification – Kizh Thirupathi] – where the ancient temple of Sri Govindarajar is famous.  This temple was consecrated by our Emperumanar and is one of the earliest structures of Tirupathi city.   

 



Aerial view of Tirupathi town taken while descending Thirumala hills by bus sometime back !

Monday, April 8, 2024

Panguni Amavasai 2024 - Bering Sea ! - உவர்க்கும் கருங்கடல் நீருள்ளான் !!

அந்தி நேரம் அமைதி பெற்று விளங்கியது. கோடிக்கரையின் ஓரத்தில் கடல் அலை அடங்கி ஓய்ந்திருந்தது. கட்டு மரங்களும், படகுகளும் கரையை நெருங்கிக் கொண்டிருந்தன. கடலில் இரை தேடச் சென்ற பறவைகள் திரும்பி வந்து கொண்டிருந்தன. கரையில் சிறிது தூரம் வெண்மணல் பரந்திருந்தது.  ~   அமரர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’  கதையில் இருந்து !



Most of the Earth's surface is covered with water -- and most of it is water is not potable. 97 percent of Earth's water is salty sea water which is useless to most land-dwelling plants and animals.  Precipitation supports life on land with salt-free water. 

The ocean, in this light, is like an alien world within our own. Many of its creatures are still unknown to us — both in kind and number. Their behaviors and adaptations remain inexplicable. Even the very contours of this world are still unmapped: We probably know more about the surface of Mars than we know about the ocean floor. Understanding the sea is to understand our planet better, at a fundamental level.   Ocean is not only a source of mystery but also a place of adventure.  

Before we dive into the ocean, there are questions about why Earth has them to begin with. Really: Scientists don’t fully understand how water came to cover two-thirds of the surface of our world.  The problem is simple. When the Earth was forming, it was extremely hot. Any water that was around at the beginning would have boiled away. “So how do you get so much liquid condensing onto the surface of a planet that should be really, really hot?”  a planetary scientist at the University of Glasgow,  has some plausible explanation.    Was it delivered by comets crashing into our world? Or more fantastically, do we only have water due to the extremely circumstantial event of planets like Jupiter wandering toward the sun from the outer solar system? Or was it, somehow, deeply buried within the early Earth? 

The possibilities matter because they can help us understand why there is life on Earth. Without water arriving on Earth, life as we know it would not exist. 

Thiruvallikkeni (Triplicane) is on the shores of Bay of Bengal.  The five major oceans listed by size from largest to smallest are the Pacific, Atlantic, Indian, Southern, and Arctic Ocean. The Pacific Ocean is bounded by the Bering Strait ! – heard of this ?  Located between Alaska and Russia, the Bering Strait is the only marine gateway between the icy Arctic and the Pacific Ocean. At its narrowest point, the strait is only 55 miles wide.  The Bering Strait may be narrow, but it’s teeming with wildlife—beluga whales, bowhead whales, gray whales, walruses, polar bears, ringed and ribbon seals.  Each spring, one of the largest wildlife migrations on Earth passes through this narrow gateway to reach the Arctic’s incredibly nutrient-rich and productive waters.

But as Arctic sea ice continues to melt earlier in the season, more and more ships are beginning to use this narrow gateway. With increasing ship traffic comes more noise and water pollution and a higher risk of ship strikes on whales and damaging oil spills—including spills of toxic and long-lasting heavy fuel oil. The Bering Strait is both a bottleneck and a pathway, home to species superbly adapted to this dynamic environment.  

The Bering Sea is a marginal sea of the Northern Pacific Ocean. It forms, along with the Bering Strait, the divide between the two largest landmasses on Earth: Eurasia and the Americas.  The Bering Sea is named after Vitus Bering, a Danish navigator in Russian service, who, in 1728, was the first European to systematically explore it, sailing from the Pacific Ocean northward to the Arctic Ocean. The Bering Sea is separated from the Gulf of Alaska by the Alaska Peninsula.  The Bering Sea ecosystem includes resources within the jurisdiction of the United States and Russia, as well as international waters in the middle of the sea (known as the "Donut Hole". 

எம்பெருமான் திருப்பாற்கடலில் துயில் கொள்வதுபோல உப்புக்கடலிலும் வாழ்வதுண்டென்று ப்ரஸித்தியுண்டாதலால் “உவர்க்குங் கருங்கடல் நீருள்ளான்“  என பேயாழ்வார் தமது மூன்றாம் திருவந்தாதியில் சாதிக்கிறார். 

பூமிப்பந்தில் 71 சதவீதத்துக்குக் கடல் சூழ்ந்திருக்கிறது. பெருவெடிப்பில் சூரியனில் இருந்து பூமிப்பந்து பிரிந்துவந்தபோது, வளிமண்டலத்தில் இருந்து வந்த நீராவி, பாறைகளில் இருந்து வெளியான தண்ணீர் மூலம்தான் பெருங்கடல்கள் உருவாகின. கடலின் நிறம் நீலம் என்று நாம் நினைக்கிறோம் !   கடல் நீர் சிவப்பு, மஞ்சள், பச்சை ஆகிய வண்ணங்களைச் சூரியஒளியில் இருந்து கிரகித்துக் கொள்கிறது. நிறமாலையில் உள்ள நீல வண்ணத்தை மட்டுமே தண்ணீர் மூலக்கூறுகள் பிரதிபலிக்கின்றன.  

நீலக்கடலின் ஓரத்தில் என நாம் பாடினாலும், செங்கடல், சாக்கடல், கருங்கடல் உலகத்தில் உள்ளன.   செங்கடல் சிவப்பாக இருப்பதற்குக் காரணம், சிவப்பு நிற ஆல்கே எனப்படும் கடல்பாசிகள் அதன் மேல்மட்ட நீரில் அதிகம் இருப்பதே. கருங்கடல் நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்டுள்ள ஒரு கடல்.   அது இருண்ட நிறத்தைக் கொண்டுள்ளது. இந்த கடலை சிறப்பானதாக மாற்றும் பண்புகளில் ஒன்று, அதன் இருண்ட நிறம், சுமார் 100 மீட்டர் தொலைவில் எதையும் பார்க்க இயலாது. இதற்கு இந்த இருண்ட நிறம் இருப்பதற்கான காரணம் கீழே நிறைய தாவரங்கள் மற்றும் கருப்பு மண் உள்ளது.    

இவற்றில் இருந்து விலகி  நாம் பேயாழ்வார் கருங்கடல் நீருள்ளான் எனும் எம்பெருமானுக்கு கைங்கர்யங்கள் செய்வோம் - மூன்றாம் திருவந்தாதி பாசுரம் இங்கே:

அவற்கடிமைப் பட்டேன் அகத்தான் புறத்தான்,

உவர்க்கும் கருங்கடல்  நீருள்ளான், துவர்க்கும்

பவளவாய்ப் பூமகளும் பன்மணிப்  பூணாரம்,

திகழும் திருமார்வன் தான்.

எம்பெருமான் எத்தகையவன் !  உப்புக்கரிக்கின்ற கரிய கடல்நீரிலுமுள்ளவனாய், சிவந்த பவளம் போன்ற வாயையுடையளான பிராட்டியும், பல் வகையான ரத்னங்கள்  சேர்ந்த  திருவாபரணங்களும், ரத்ன  ஹாரங்களும்  விளங்கப்பெற்ற  திருமார்பையுடையனான எம்பிரான் - உள்ளிலும் வெளியிலும் வாசியறக் கலந்திருக்கின்றான்.  அவ்வளவு சிறந்த  எம்பெருமானுக்கு நான் அடிமைப்பட்டேன் என்கிறார் பேயாழ்வார்.  

இன்று பங்குனி மாச அமாவாசை - திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் பெரிய மாடவீதி புறப்பாடு கண்டருளினார்.  புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே :

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
8.4.2024 










Sunday, April 7, 2024

Sound of Music - Divine Flautist Sri Azhagiya Singar Venugopalan thirukolam 2024

The sound of music is most pleasing to ears – of the Histories; the one of Music should sound sweet to ears.  Music histories written in earlier times start with a account of the mythological invention of various instruments. Cain’s descendant, Jubal, is said to be “the father of all such as handle the harp and the organ,”  Mercury is supposed to have devised the lyre when one day he found a dried-out tortoise on the banks of the Nile.  




There perhaps some myth and some history – as in recent times, the invention of musical instruments is no longer attributed to Gods and heroes. But people still clamour to know which instruments were invented first,  and they hope for the neat answers with which amateur writers so  readily supply them — a drum was the earliest or was it the Flute !!  

A flute, like most other wind instruments, produces its tone by means of an air column within a tube, which is set in longitudinal vibration either by human breath or by artificial wind. The families of wind instruments differ in the special way in which the vibrations are brought about. This is particularly complicated in the flute.  The vibrations in a flute are due to little eddies formed at regular intervals when the player blows obliquely across the sharp edge of a mouth-hole. Thus, a sharp-edged mouth-hole is the characteristic  quality of any flute.

The mouth-hole of the vertical flute is formed by the upper opening of the pipe. In the cross flute , or transverse flute , the upper end is stopped and the mouth-hole is cut in the side. In the whistle flute there is also a hole in the side, but not to be blown into; the upper end is stopped except for a small and narrow channel, called the fluey into which the player blows, and which directs his breath  to the sharp edge of the side hole.  (something read in The History of Musical instruments – Curt Sachs)  

The characteristic flute of Western music is the transverse flute held sideways to the right of the player. It was known in ancient Greece and Etruria by the 2nd century BCE and perhaps known in Indian continent since time immemorial.    The bamboo flute, is one of the oldest musical instruments known.   While the oldest flutes currently known were found in Europe, Asia too has a long history with the instrument that has continued into the present day.  Historians have found the bamboo flute has a long history as well, especially China and India. Flutes made history in records and artworks starting in the Zhou dynasty. The oldest written sources reveal the Chinese were using the kuan (a reed instrument) and hsio (or xiao, an end-blown flute, often of bamboo) in the 12th-11th centuries.  The Chinese have a word, zhudi, which literally means "bamboo flute."

Well, not intended to be any piece on Musical instruments, especially Flute, but a post on the divine flautist – Sri Azhagiya Singar Venugopala thirukolam at Thiruvallikkeni on day 2 of Thavana Uthsavam 2024.  





எம்பெருமான் அற்புதன் .. .. அனந்தசயனன், ஆதிபூதன், சாந்தஸ்வரூபி .. எவ்வளவு அழகு ! ~ அதி அற்புதமான ஸ்வபாவலாவண்யமுடைய திருமேனி, மிக அழகான கிரீடம், நறுமணத்தை பரிமளிக்கும் மலர் மாலைகள்; நேர்த்தியாக சாற்றப்பட்ட ரம்மியமான வஸ்திரங்கள் .. அத்தகையோன்  எதற்காக நரசிங்கமாய் திருவவதாரம் பண்ணி சினம் கொண்டான் ?  எம்பெருமான் பொறுத்தல் இல்லாமல் தன் சினத்தை வெளிக்காட்டுவது அவன் தனது பக்தர்களுக்கு சிரமம் ஏற்படும் தருணம்.    எம்பெருமான் ப்ரஹலாதாழ்வான் பக்கலில் வைத்திருந்த வாத்ஸல்யம், அவனுக்கு விரோதியாயிருந்த இரணியனிடத்தில் கொண்டிருந்த சீற்றமானது.  

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் கண்ணபிரான் - அர்ஜுனனுக்கு சாரத்யம் பண்ணின கோலத்தில் அல்லிக்கேணியில் எழுந்து அருளினார்.  தெள்ளியசிங்கன் - பக்தனுக்காக கோபத்தை வெளிப்படுத்திய நாரசிம்ஹன்.   தவன உத்சவத்தில் இரண்டாம் நாள் வேணுகோபாலனாக சேவை சாதிக்கிறார். 

எம்பெருமானிடத்திலே சரணம் புகுந்தவன் எவரையும் அஞ்ச வேண்டியதில்லை.  காருண்ய சீலனான எம்பெருமான்தனது பக்தர்களுக்கு துன்பம் தருபவர்களிடத்தில் சீற்றம் கொள்வான். பயந்தும், கலங்கியும் உள்ள நெஞ்சங்களுக்கு ஸ்ரீமன் நாராயணனே புகலிடம்.  ஸ்ரீபூதத்தாழ்வார் தமது இரண்டாம் திருவந்தாதியில் -  உலகளந்த பெருமானுடைய திருவடிகளையே உகந்து ஆச்ரயித்திருக்கும்படி தமது திருவுள்ளத்திற்கு உரைக்கிறார்.  நாமும் அதையே பின்பற்றுவோமாக !

 

கழலெடுத்து வாய்மடித்துக் கண்சுழன்று, மாற்றார்

அழலெடுத்த சிந்தையராய் அஞ்ச, தழலெடுத்த

போராழி ஏத்தினான் பொன்மலர்ச் சேவடியை

ஓராழி நெஞ்சே உகந்து.

 

பூதத்தாழ்வார்   தமக்கு  உரைக்கிறார் -  ஆழ்ந்த மனமே!  முன்பு எம்பெருமான் த்ரிவிக்ரமாவதாரம் செய்தருளின போது,  தனது  திருவடிகளை உயரத் தூக்கினவனாயும், அவ்வமயம் எதிரிட்ட நமுசி முதலான மாற்றோர்களை  பயாக்னி கொளுந்தின நெஞ்சையுடையவர்களாய் நடுங்கும்படியாக  உதட்டை மடித்துக் கடித்துக் கொண்டு,  பார்க்கிற பார்வையிலேயே அவ்வெதிரிகள் சுருண்டுவிழும்படி, கண்கள் வட்டமிட, நெருப்பையுமிழ்கிற போர் செய்யவல்ல திருவாழியாழ்வானை  தரித்தவனாயுமிருக்கிற எம்பெருமானுடைய, அழகிய மலர்போன்ற திருவடிகளையே, விரும்பி அநுஸந்திப்பாயாக.  

Here are some photos of Sri Azhagiya Singar   ‘Venugopalan ’ thirukolam  – the divine flautist and ulpurappadu inside Thavana uthsava bungalow  today 29.3.2024.  

adiyen Srinivasa dhasan. 
Mamandur veeravalli Srinivasan Sampathkumar