To search this blog

Saturday, January 15, 2011

Sri Aandal Neeratta Uthsavam 2011 (9) - ஸ்ரீ ஆண்டாள் நீராட்ட உத்சவம் - 2011 (9)


ஸ்ரீ ஆண்டாள் நீராட்ட உத்சவம் - 2011 (9)

ஜனவரி 14/1/2011 - மார்கழி 30 இன்று நீராட்ட உத்சவம் ஒன்பதாம் நாள் புறப்பாடு காலை 0830 மணியளவில் நடைபெற்றது. சூடிக் குடுத்த நாச்சியார் ஆண்டாள் சிறிய திருத்தேரில் எழுந்து அருளினார்.
திருவல்லிக்கேணி ஆண்டாள் புறப்பாட்டின் திருகோல புகைப் படங்கள் சில இங்கே:

அடியேன் : ஸ்ரீனிவாச தாசன்
மேலும் படங்களுக்கு :



தேர் கலசம்
திருத்தேரில் ஆண்டாள்

புறப்பாடு கண்டு அருளும் ஆண்டாள்

சிறிய திருத்தேர்




Tuesday, January 11, 2011

Sri Andaal Neeratta Uthsavam 2011 - Koodarai vellum Seer Govindha

Dear (s)

Today is a very significant day,  27th day of the tamil month of Margazhi.    This day assumes significance from the pasuram of Chudi Kudutha Nachiyar – Andal.  In the month of Margazhi starting from day one, each day one pasuram of Thiruppavai is recited and today is the 27th verse “Koodarai vellum Seer Govinda”

In this pasuram, Kothai Piratti expresses her great joy over the acquirement of the boons that she and her friends entreated Lord Krishna to grant them.  Now She is in the eternal state of bless having been fully blessed by the Lord and is in a celebratory mood.  This pasuram ascribes the benign supremacy of Lord conquering all His opponents with His anantha kalyana gunams like Souryam, souseelyam, soundharyam.  To celebrate, She calls beating the drum, wearing new clothes describing all the ornate ornaments that are to be worn and eating sweet rice prepared in milk with ghee overflowing.  In the early pasurams of Thiruppavai, it is the Paavai Nonbu – now it is nearing completeion and is the time for sanmanam from the Lord for those who observed the vratham.

It is not only getting the benevolence of God but more of sharing them with all bhakthas ‘koodi irunthu kulirnthu’.  Thiruppavai is also about Govindha Naama Sankeerthanam which reaches its peak in the concluding verses where She ponders ‘kurai ondrum illatha Govinda’.  The myriad meanings of Thiruppavai are detailed in many many discourses of Sri Vaishnavaite Periyavars, especially during this month.  Let us all get the great éclat and glory of all the Worlds by adorning ourselves eating rice food prepared using milk with sumptuous ghee and who eats this ksheerannam will stand ever united and remain cool in heart and joyous by the blessings of the Lord.

I offer my obeisance again and again to Goddess Godhadevi – to her alone – who awakened Lord Krishna and binded him with flower wreaths that were already worn by her.  

Sri Andal thiruvadigale saranam.
Here are some photos taken during the Andan Neeratta Uthsavam at Triplicane. 
Sri Andal
Periyamurai Parthasarathi battar & Ameena Seshadri
                                                                       divyaprabandha goshti

For more photos, please  see : 



கூடாரை வெல்லும் சீர்  கோவிந்தா மற்றும் ஆண்டாள் நீராட்டம் உத்சவம்

சூடிக்குடுத்த சுடர்கொடியாம் ஆண்டாளின் திருவிழா - மார்கழி மாதத்தில் வரும் "நீராட்ட விழா". திருவல்லிக்கேணியில் பத்து நாட்கள் ஸ்ரீ ஆண்டாள் காலை புறப்பாடு கண்டு அருளி பெரிய தேர் முன்பே அமைந்து இருக்கும் நீராட்ட மண்டபத்தில் எழுந்து அருளி திருமஞ்சனம் கண்டு அருள்கிறார்.
  "ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி, நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து"  - என கண்ணனின் புகழ் பாடி நீராடி தொழுதல் நானிலத்திற்கே நல்லது.

திருவல்லிக்கேணி ஸ்ரீ ஆண்டாள் புறப்பாட்டின் போது (8/1/11 & 9/1/11) எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே காணலாம். 

இன்று திருப்பாவையின் 27 ஆவது பாசுரமான 'கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா" என்ற பாசுரம் அனுசந்திக்கப்படுகிறது.  தன்னை அடி பணியாதவர்களைக்கூட வெல்லுகின்ற குணங்களை உடைய கண்ணபிரானை தொழும் இப்பாடலில் 'மூட நெய் பெய்து முழங்கை வடிவார' என சொல்லப்பட்ட படியே திருக்கோவில்களிலும் ஸ்ரீ வைஷ்ணவ இல்லங்களிலும் பாலோடு சோற்றை வேக வைத்துக் குழைத்து அதனோடு இனிப்பும் நெய்யும் சேர்த்து சக்கரை பொங்கல் செய்து, அதை அனைவருடனும் கூடி இருந்து வயிறு குளிர உண்ணுவார்கள்.

அடியேன் - ஸ்ரீனிவாச தாசன்.

Wednesday, January 5, 2011

ஆராய்ச்சியாளர்களுக்கு மாலை, மரியாதைகள் தேவையில்லை. - நோபல் பரிசை வென்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்

மிகைப்படுத்துதல் வரை முறை இல்லாமல் பெருகி உள்ள கால கட்டம் இது. தமிழகத்தில் இரண்டு படங்கள் நடித்தால் முதல் அமைச்சர் கனவும் கொஞ்சம் பிரபலம் அடைந்த உடன் கட்சி ஆரம்பிக்கும் தெளிவும் உள்ளது. சினிமா வெளி வரும் நாளில் மிக பெரிய கட் அவுட்டுகள் வைத்து, பெரிய மாலை போட்டு, பால் அபிஷேகம் செய்வதையும் பார்க்க முடியும்.

அரசியல் கட்சிகளோ பிரம்மாண்டமான மாநாடுகள், ஏராளமான கார்கள் அணிவகுப்பு, தனி மனிதனை பாராட்டி, வாழ்த்தி சுவரொட்டிகள் என கலாச்சாரம் காண்கின்றன. இத்தகைய காலகட்டத்தில், மாலை மரியாதைகள் கூடாது, எப்போதும் கும்பல் சூழ்ந்து புகைப்படங்கள் எடுப்பது எரிச்சலாக உள்ளது என ஒருவர் கூறினால் நம்ப முடியுமா ? - இது உண்மையாகவே நடந்தேறியுள்ளது. கீழே உள்ள தினமலர் செய்தி காண்க :

சென்னை : ""ஆராய்ச்சியாளர்களுக்கு மாலை, மரியாதைகள் தேவையில்லை. ஒரு நாட்டிற்காக மட்டும் இல்லாமல் உலக நன்மைக்காகவே ஆராய்ச்சிகள் செய்யப்படுகின்றன. அறிவியல் ஆராய்ச்சியில் தேசிய உணர்வை புகுத்தக்கூடாது,'' என்று நோபல் பரிசை வென்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் பேசினார்.
சென்னை, காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவியல் காங்கிரசின் 98வது மாநாடு நடந்து வருகிறது. இதில், இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக நேற்று நோபல் பரிசு வென்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், குழந்தைகளுக்கான அறிவியல் மாநாட்டை துவங்கி வைத்து பேசியதாவது: அறிவியல் என்பது நெடுங்கால ஆராய்ச்சிக்கு உட்பட்டது. இந்தியாவில் மட்டும்தான், அதிகமான சம்பிரதாயங்கள் இருப்பதை காண முடிகிறது. இங்கு ஆராய்ச்சியாளர்களையும், சினிமா நட்சத்திரங்களையும் ஒன்றாக பார்க்கும் கலாசாரம் உள்ளது. ஆராய்ச்சியாளர்களுக்கு மாலை, மரியாதை செய்யாவிட்டால் அவர்கள் தவறாக நினைத்துக் கொள்வார்கள் என்று கருதுகின்றனர். உங்களுடைய மாலை, மரியாதைகள் எங்களுக்கு தேவையில்லை. எங்களுக்கு ஆராய்ச்சிதான் முக்கியம்.டார்வின், நியூட்டன் ஆகியோரின் புத்தகங்களை படித்ததன் மூலம் அவர்கள் என்னை கவர்ந்தனர். அதற்காக நான் என்றும் அவர்களை என் முன்மாதிரியாக நினைத்துக் கொள்ளவில்லை. அவர்கள் புத்தகங்களை படித்ததால், அவர்கள் செய்த தவறுகளை அறிந்து கொண்டு, நான் அதை திருத்திக் கொண்டேன்.
மாணவர்கள், உங்களுடைய ஆசிரியர்களை மதியுங்கள். ஏனென்றால், ஆசிரியர்கள் தான் உங்கள் வழிக்கட்டிகள். அவர்களால்தான் உங்களுக்கு சரியான வழி காட்ட முடியும். அறிவியல் என்பது முற்போக்கு சிந்தனை உடையது. அறிவியல் அறிஞராகிய நான் ஒன்றும் கிரிக்கெட் நட்சத்திரமோ அல்லது சினிமா நட்சத்திரமோ இல்லை. என்னிடம் ஆட்டோகிராப் வாங்கி ஒன்றும் ஆகப்போவது இல்லை. இன்டர்நெட் என்பது இந்தியாவில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தி உள்ளது. இது, இந்திய அறிவியலில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்டர்நெட் மேற்கத்திய நாடுகளில் உருவாகி, இந்தியாவில் அதிகமாக பயன்பட்டு வருகிறது. அறிவியல் எந்த நாட்டிலும் உருவாகலாம். யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
உதாரணமாக, காலரா நோயை வங்கதேசத்தில் உள்ள ஒரு அறிவியல் ஆராய்ச்சியாளர் கண்டறிந்தார். ஆனால், இந்த நோய்க்கான தடுப்பு மருந்தை அமெரிக்காவில் உள்ள ஒரு ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்தார். அறிவியலும், ஆராய்ச்சியும் நாடுகளை கடந்து செல்லக்கூடியவை. ஆராய்ச்சி என்பது நாட்டிற்காக செய்யப்படுவது கிடையாது. நான் செய்த ஆராய்ச்சி இந்தியாவிற்காக இல்லை. உலகத்திற்காகவும், உலக நன்மைக்காகவும் செய்தேன். அறிவியல் மற்றும் ஆராய்ச்சியில் தேசிய உணர்வை புகுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் பேசினார்.


Please also read : http://sampspeak.blogspot.com/2011/01/scientists-do-not-require-seek-garlands.html

Sunday, January 2, 2011

Thondaradipodi Aazhwaar Satrumurai : Margazhiyil Kettai : இன்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் சாற்றுமுறை :


The main tenet of Vaishnavism is ‘total surrender’ (saranakathi) to God.  In one of his poems – “OOrilen Kaaniyillai” – this Azhwar has sung :
“  I have no place; no properties; no relatives; none other than you; I know only your Lotus feet in this material world and cannot but cling to your Lotus feet; O Lord of Blue hued sky colour! You  are my  only refuge. I am crying towards you, Oh the Lord of Arangam (Srirangam) only you can clear me of all my sins and do good for me”

-   ~~~      That is one of the pasurams of Thondaradipodi Aazhwar whose birthday mahothsavam was celebrated on Sunday – 2nd Jan 2011 (kettai nakshathiram in the month of Margazhi)

Thondaradipodiar gave us the “Thirumalai” (45 songs) and  Thirupalli Ezhuchi (10) which are sung everyday to wake up the Lord.  He sang about Thiruvarangam  and Paramapatham.

This Azhwar at birth was named Vipra Narayanar and is also known as Bhaktanghri renu .  Thondaradippodi Alvar was born in a small village by name 'Thiru mandaggudi' in Prabhava year, Margazhi month, Krishna chaturthi, Tuesday in Kettai (Jyestha) Nakshatram (star).   This Thirumandangudi is in Chozha nadu near Kumbakonam,  the nearest landmark being Thiruvarooran sugars factory.    There is an ancient temple near the birth place, which I understand is not in great shape.


Here is something about the Azhwar and some photos taken during the purappadu yesterday at Thiruvallikkeni
===========================================================
இன்று மன்னிய சீர் மார்கழியில் கேட்டை திருநக்ஷத்திரம்.   சோழநாட்டில் திருமண்டங்குடி என்ற சிற்றூரில் பராபவ வருடம், மார்கழி மாதம், கேட்டை நட்சத்திரத்தில்  பெருமானின் வைஜயந்தி வனமாலையின் அம்சமாகக் கருதப்படும் தொண்டரடிப்பொடி ஆழ்வார்  அவதரித்த தினம்.  ஆழ்வார் சாற்றுமுறை இன்று :  

தொண்டரடிப்பொடி ஆழ்வார்  
முதல் ஆயிரத்தில் திருமாலை 45 பாசுரங்களும் திருப்பள்ளியெழுச்சி 11-ம் பாடியுள்ளார். எளிய தமிழில் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் பாசுரங்கள் தொண்டரடிப் பொடியுடையவை. இவர் பாடிய  தலங்கள் ~ : திருவரங்கமும்  நாம் பார்க்க முடியாத பரமபதமும். தொண்டரடிப்பொடி என்பது ஒரு வகையான புனைபெயர். வைணவ மரபில் பகவானின் அடியார்களின் திருவடிகளின் தூசுகூட புனிதமானது என்கிற நம்பிக்கையின் அதீத வடிவமாக தொண்டரடிப்பொடி என வைத்துக் கொண்டார். 

இவரது இயற்பெயர் விப்ர நாராயணன்.  திவ்ய பிரபந்தத்தில் பிறிதோர் இடத்தில கூட 'இப் பாத தூளி படுதலால் இவ்வுலகம் பாக்கியம் செய்ததே' என்று வருகிறது. அனுதினமும் காலை எல்லா திவ்ய தேசங்களிலும் எம்பெருமானை பள்ளி எழுப்பும், திருப்பள்ளியெழுச்சி இவரது பாசுரம்.

சூரியன் கிழக்கே தோன்றி விட்டான்; இருள் அகன்றது. காலைப் பொழுது, மலர்களில் தேன் ஒழுகுகிறது. தேவர்கள் வந்து எதிர்திசையை நிரப்புகிறார்கள். அவர்களுடன் யானைகளின் கூட்டமும் வந்துள்ளன. முரசு கடல்அலைபோல அதிர்கிறது. அரங்கனே எழுந்து அருள்வாய் – “அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே”  என திருவரங்கனை துயில் எழுப்புகிறார். தனது திருமாலையில் திருவரங்கனையும், அவனது இடமான திருவரங்கத்தின் பெருமையையும் உரைக்கிறார்.  அங்கே உள்ளதால் காவிரி கங்கையை விட புனிதம் ஆகிறது.
 
கங்கையிற் புனிதம் ஆய காவிரி நடுவுபாட்டுப்
பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கந் தன்னுள்
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்தது ஓர் கிடக்கை கண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்கேன்? ஏழையேன், ஏழையேனே!

ஆழ்வார்  பூலோக வைகுண்டம் என்று  கொண்டாடப் படும் தலத்தில் எம்பெருமானுக்கு  கைங்கரியம்செய்ய ஒரு அழகிய நந்தவனம் அமைத்து அதில் பகவானுக்கு  உகந்த மலர்களை  வளர்த்து, மாலை தொடுத்து அந்த அரங்கனுக்கு  சாற்றி  மகிழ்ந்தார். இவ்வாறு அவர் உலகில் எதையும் காணாமலும், எப்பொருள் மேலும் இச்சைக் கொள்ளாமலும் கைங்கரியமே கண்ணாக  இருந்தவர்.


திருவரங்கனை அனுபவிக்கும் சுகத்தை விட இந்திர லோகம் ஆளும் பதவி கொடுத்தாலும் கூட வேண்டேன் என பாடிய ஆழ்வாரின் புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே :




அடியேன் : ஸ்ரீனிவாச தாசன்

மேலும் படங்களுக்கு :  :  Azhwar Photos click here

சென்ற நூற்றாண்டின்  நடுவில்  பல புராணங்கள் சினிமா படங்களாக எடுக்கப்பட்டன.  12-12- 1938 இல் 14000  அடியில் எடுக்கப்பட்ட புராண படம்  “விப்ர நாராயண" இயக்கம் – ஏ.நாராயணன், வசனம்-சோமயாஜுலு, இசை.எஸ்.என்.ஆர்.நாதன், பாடல்-நாராயணன் வாத்தியார், ஒளி- டி.வி.கிருஷ்ணையா, கலை-அப்பு குட்டி குரூப்-பாலகிருஷ்ண குரூப். எடிட்டிங் – என்.கே. கோபால்.