Thiruvallikkeni Aani Thiruvonam purappadu 2025 –
ஆழி - எனும் சொல் பல்பொருள் ஒரு மொழி
Sunday, June 15, 2025 was day 1 of
Tamil month of Aani – masapirappu. It
was Thiruvonam too. Heralding
masapravesam and Thiruvona nakshathiram, Sri Parthasarathi Emperuman had siriya
mada veethi purappadu.
ஆழி - எனும் சொல் பல்பொருள் ஒரு மொழி ஆகும். இதற்கு : கடல்; கடற்கரை; அரசனின் ஆணைச் சக்கரம் ; மோதிரம்; சக்கரம்; வட்டம்; கட்டளை என பல அர்த்தங்கள் உண்டு. ஆழி என்பதற்கு ’பரந்து விரிந்த’ ’அளவிடமுடியாத’ என்பது முதன்மை பொருள். இதனாலேயே கடலுக்கு ஆழி எனப் பெயர் வந்தது. திருவாரூரில் உள்ள திருத்தேர் அளவில் பெரியதும், புராணம், வரலாற்று பெருமை மிக்கதுவாகும். பண்டைக்காலத்தில் திருவாரூர் தியாகேசப் பெருமான் தேருக்கு எழுந்தருளும்போது பொன்பூ, வெள்ளிப்பூக்களை வாரி இறைப்பதாகக் கூறுவர். பொன்பரப்பிய திருவீதி என்று ஒரு வீதிக்கு உள்ள பெயரை வைத்து இதனை உணரலாம். அடிக்கோராயிரம் பொன் சின்னங்கள் கூற அளிப்பார் என்று திருவாரூர்க் கோவையும், உய்யும்படி பசும்பொன் ஓராயிரம் உகந்து பெய்யும் தியாகப்பெருமானே என்று திருவாரூர் உலாவும் இதன் சிறப்பைக் கூறுகின்றன. பெரிய தேரை இழுக்க 12,000 தேவைப்பட்டனர் என குறிப்புகள் உள்ளன.
ஆளும்
பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான்றன்னை,
தோளுமோர்
நான்குடைத் தூமணி வண்ணனெம்மான் தன்னை
தாளும்
தடக்கையும் கூப்பிப் பணியும் அவர்க்கண்டீர்,
நாளும்
பிறப்பிடை தோறு எம்மையாளுடை நாதரே.
ஆள்கின்ற பரம புருஷனாகவும்
ஸ்ரீகிருஷ்ணனாகவும் திருவாழியாழ்வானையுடைய உபகாரகனாயும், ஒப்பற்ற
நான்கு புஜங்களையுடையவனாயும் பரிசுத்தமான நீலமணி போன்ற நிறத்தை உடையவனாயுமிருக்கின்ற
எம்பெருமானை, தாளும் தடக்கையும் கூப்பி வணங்குகின்றவர்கள் - எல்லா ஜென்மங்களிலும்,
தினந்தோறும் எங்களை ஆட்கொள்ளும் அடிகளாவர் என திருமாலடியார் தம் சிறப்பை உரைக்கின்றார்
நம்மாழ்வார்.
திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே
பார்த்தனுக்கு சாரதியாக பணி புரிந்த பகவான் ஸ்ரீகிருஷ்ணன் - ஸ்ரீபார்த்தசாரதியாக எழுந்தருளி
சேவை சாதிக்கின்றார். இதோ இங்கே நம் ஸ்ரீபார்த்தசாரதி பெருமாளின் அற்புத திருக்கோலம்
- ஆனி திருவோணம் புறப்பாடு 15.6.2025 அன்று
எடுக்கப்பட்ட சில படங்கள்
adiyen Srinivasa dhasan
Mamandur Veervalli Srinivasan Sampathkumar
18/6/2025
No comments:
Post a Comment