“கயிலையே மயிலை, மயிலையே கயிலை” என்று ஆன்றோரால் போற்றப்படும் திருத்தலம்
திருமயிலை. இன்றைய மயிலாப்பூர் - ‘மயில் ஆர்க்கும் ஊர்’ என்பதில் இருந்து மருவியது. அன்னை மயிலுருவில் சிவ பெருமானைப் பூசித்த
திருத்தலம்; ஞானசம்பந்தப் பெருமான் பதிகம் பாடி பூம்பாவை எனும் பெண்ணை உயிர்ப்பித்த தலம்;
மலிவிழா
வீதி மடநல்லார் மாமயிலைக்
கலிவிழாக்
கண்டான் கபாலீச் சரம்அமர்ந்தான்
பலிவிழாப்
பாடல்செய் பங்குனி யுத்திரநாள்
ஒலிவிழாக்
காணாதே போதியோ பூம்பாவாய்.
திருஞானசம்பந்தர்திருமுறை : இரண்டாம்-திருமுறை
பூம்பாவாய்! இளம் பெண்கள் வாழும் விழாக்கள் நிறைந்த வீதிகளைக் கொண்ட
பெரிய மயிலையில் எழுச்சியை விளைவிக்கும் திருவிழாக்களைக் கண்டு அங்குள்ள கபாலீச்சரம்
என்னும் கோயிலில் அமர்ந்தானது பலி அளிக்கும் விழாவாகப் பங்குனி உத்தரநாளில் நிகழும்
ஆரவாரமான விழாவைக் காணாது செல்வது முறையோ?.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கபாலீச்சரம் அருகே அமைந்துள்ளது - திருவெள்ளீச்வரம். இந்த சிவன் கோவில் மயிலாப்பூரில் உள்ள சப்த சிவத்தலங்களில் ஒன்றாகும். கிபி 10ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டது இந்த திருக்கோவில் - அருள்மிகு காமாட்சி சமேத வெள்ளீஸ்வரர் ஆலயம். நாளை முதல் இந்த திருக்கோவில் சிறப்பு உத்சவம் துவங்குகிறது. அனைவரும் சென்று சிவபெருமானை வணங்கி அருள்பெறுக!
1.6.2025
No comments:
Post a Comment