To search this blog

Sunday, May 15, 2022

Sri Varadhar Uthsavam day 2 - Yali vahanam 2022

Sri Devathi Rajar Brahmothsavam is grandly being conducted at Perumal Kovil (Thirukachi aka Kanchipuram).  Today 14th May 2022 is day 2  of the uthsavam.   Garuda Sevai is the most  important uthsavam and thousands would throng the temple in the early morning for having darshan of Sri Varadharajar.






Thirukachi to Srivaishnavaites, Kanchipuram is one of the seven Mukthi kshetras ie., Mokshapuris. For understanding Kanchi better, besides Pallava history, one needs to study something about Thondaimandalam and its Kings too .. .. ..

நம் முன்னோர் உழவுத் தொழிலை முதன்மையாக கொண்டே இயங்கினர். ஒவ்வொரு சமூகமும் உழவோடு ஏதோவொருவகையில் தொடர்பு கொண்டிருந்தது; அந்த வகையில் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னைப் பகுதிகளை உள்ளடக்கிய தொண்டை மண்டல வேளாளர்கள் பல நூற்றாண்டுகளாக நெல் விளைவித்து வருவதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. இங்கே பாய்வது - பாலாறு தென்னிந்திய விவசாயத்தின் தாய் ஆறாக விளங்கியது.    கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்திலுள்ள நந்தி மலையில் உற்பத்தியாகி  கர்நாடகத்தில் 93 கிமீ தொலைவும், ஆந்திரப்பிரதேசத்தில் 33 கிமீ தொலைவும் தமிழகத்தில் 222 கிமீ தொலைவும் பாய்ந்து சென்னைக்கு தெற்கே 100 கிமீ தொலைவிலுள்ள வாயலூர் என்னுமிடத்தில் வங்காள விரிகுடாவில்  பாலாறு கலக்கிறது. . .. . .. . … … 

1000 வருடங்களுக்கு முன்பு, தமிழகத்தின் வடபகுதி 'தொண்டை மண்டலம்' என்று அழைக்கப்பட்டது. தொண்டை மண்டலத்தில், புழற்கோட்டம், புலியூர்க்கோட்டம், ஈக்காட்டுக் கோட்டம், மணவிற்கோட்டம், வேலூர்க்கோட்டம் என 24 கோட்டங்கள் இருந்துள்ளன. இந்தக் கோட்டங்களுள் புலியூர்க்கோட்டம் நிர்வாக ரீதியாக சிறப்புற்று விளங்கியது. இன்று கோடம்பாக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும் புலியூர்க்கோட்டம்,   மிகப்பெரிய நிர்வாக அமைப்பாக இருந்தது. அன்றைய புலியூர்க்கோட்டத்தின் ஒரு பகுதியான குன்றத்தூர் வளநாட்டில்தான் பெரியபுராணம் பாடிய சேக்கிழார் பெருமான் தோன்றினார்.  




                  திருவல்லிக்கேணியில் ஸ்ரீ வரதராஜருக்கு, கருட சேவை தவிர ஏனைய நாட்களிலே சாயந்தரம் மட்டுமே புறப்பாடு - எனினும் இன்று ஆழ்வார் சாற்றுமுறை புற்ப்பாடு சாயங்காலம் ஆனதால் - இன்று காலை 7 மணிக்கு ஸ்ரீ வரதராஜப்பெருமாள் யாளி வாஹனத்திலே புறப்பாடு கண்டருளினார்.  வீதியில் பூதத்தாழ்வாரின் இரண்டாம் திருவந்தாதி சேவிக்கப்பெற்றது. தம்முடைய ‘மனமொழிமெய்கள் மூன்றும் பகவத் விஷயத்திலேயே ஊன்றினபடியைப் ஆழ்வார் கூறும் பாசுரம் இதோ :

மகிழ்ந்தது சிந்தை திருமாலே, மற்றும்

மகிழ்ந்தது  உன் பாதமே போற்றி, – மகிழ்ந்த

தழலாழி சங்கம்  அவை  பாடியாடும்,

தொழிலாகம் சூழ்ந்து துணிந்து.

லக்ஷ்மீபதியே!  -  எந்தன்  நெஞ்சமானது,  உன்னையே   சிந்தித்து -  அதனாலே  ஆநந்தமுற்றது; நெஞ்சுக்கு அடுத்ததான வாக்கும் உன் திருவடிகளையே துதித்து மகிழ்ந்து  ஆநந்திக்கப்பெற்றது; என்னுடைய தேஹமானது -  எதிரிகளின் மீது நெருப்பை உமிழ்கின்ற திருவாழியையும் ஸ்ரீபாஞ்சஜந்யத்தையும்  மற்றுமுள்ள திவ்யாயுதங்களையும் கொண்டாடிப்பாடிய ஆடுகையாகிற தொழிலான வியாபாரத்திலே  பொருந்தி இதுவே நமக்குக் காரியமென்று துணிவு கொண்டு மகிழ்ந்தது .  ஆக உம்மையே சதா சர்வகாலமும் எண்ணி எண்ணி ஆனந்தம் பெறுகிறோம் என்கிறார் நம் பூதத்தாழ்வார். 

Here are some photos of Sri Varadharajar in Yali  vahanam on day 2 of Uthsavam at Thiruvallikkeni this morning. 

adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli  Srinivasan Sampathkumar
14.5.2022 










No comments:

Post a Comment