To search this blog

Thursday, May 5, 2022

Garuda darsanam 2022

இரண்டு கரங்கள் - நான்கு கரங்களும் உண்டு. அருள் ததும்பும் முகம், கவலைக்குறியே இல்லாதவர், தனது இரண்டு இறக்கைகளை விரித்து மண்டலமிட்டு வானத்தில் பறப்பவர், சிறகுகளை விட உடல் பருத்திருக்கும், பறவைகளுக்கு ராஜாவான பட்சிராஜன், கருடன் எப்போதும் பறக்கும் போது இறக்கை அசைக்காமல் பறப்பவர். ஆகாயத்தில் அழகாய் கருடன் வட்டமிடுவது  கண்கொள்ளா காட்சி !

நன்மை செய்தவர்களுக்குக் கிடைக்கும் சுகங்கள், தீமை செய்தவர்களுக்கு அவர்களுடைய பாவங்களுக்கு ஏற்றபடி 28 வகையான நரகங்களில் கொடுக்கப்படும் கொடுமையான தண்டனைகள் பற்றியும் விளக்கிச் சொல்வது கருட புராணம்.   தர்மமே செய்யாத லோபிகளுக்கு `வைதரணி’ நரகம். வைதரணி என்ற நதியில் கொடிய ஜந்துக்களும், பிசாசுகளும் வாழும். இங்கே பாவிகள் விழுந்து துன்பப்படுவார்கள்.  

விஷ்ணுப்பிரியன், விஹகேஸ்வரன், வைநதேயன், சுபர்ணன், புள்ளரசன், பட்சிராஜன், பெரிய திருவடி எனப் பல திருநாமங்களைக் கொண்ட கருட பகவானின்  *“கருட தரிசனம் சத்ரு விநாசம்”* 
 
இங்கே நாம் காண்பது - புனித திருமலை திருப்பதி செல்லும் வழியில் கருட பகவான். 
 
அடியேன் ஸ்ரீனிவாச தாசன் - மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
5.5.2022

No comments:

Post a Comment