To search this blog

Wednesday, May 11, 2022

Emperumanar Udayavar sarrumurai purappadu at Kizh Thirupathi 2022

5th May 2022 was a  great day – ‘Chithiraiyil seyya Thiruvathirai’ – the day of our Acarya Empermanaar thiruvavathara thinam.   



இராமானுசர் 1005  இன்று. நமது பாரததேசம் புண்ணியபூமி.  ஸ்ரீவைஷ்ணவர்களான நமக்கு வேதமும், ஆசார்யர்களுமே பிரதானம். அநுதினமும் நாம் அநுஸந்திக்கும் தனியனில் எம்பெருமானையும், ஆழ்வார்களையும்,  எம்பெருமானாரையும், நமது ஓராண்வழி ஆசார்யர்களையும் தொழுது – ஸ்ரீமன் நாராயணனுக்கே அடிபணிபவர்கள் நாம்.  தீமனம் கெடுத்து, ஸ்ரீமன்நாராயணனை தொழும் மனமே தந்து, அறியாதன அறிவித்து, பரமபுருஷனைக் காட்டிக்கொடுக்கும் ஆச்சார்யர் மிக உயர்ந்தவர்.  அவர் நமக்கு உலாவும் பெருமான். ஆச்சார்ய ரத்னஹாரத்தில் நடுநாயகர் ஆன நம்சுவாமி எம்பெருமானார் சாற்றுமுறை!  சித்திரையில் செய்ய திருவாதிரை.   இந்த நல்லுலகமே எதிர்பார்த்துகாத்து இருந்த ~  சீரியநாள் – ஒப்புயர்வற்ற நம்மிராமாநுசமுனியின் ஆயிரத்து ஐந்தாவது பிறந்தநாள் சாற்றுமுறை. .  

For Sri Vaishnavaites, the  purpose of birth is kainkaryam to Emperuman and his devotees – One needs to do kainkaryam at His abode ~ great it would be, when that happens to be a Divyadesam – the great place sung by Azhwargal.  The beautiful  temple of Lord Srinivasa at Thirumala Tirupathi in its present form owes a lot to the works of the greatest Vaishnava Acharya – Sri Ramanujar.  The very thought of Tirumala and chanting the name of Lord of Seven Hills would cleanse our souls.

Thirumala has existed for Centuries and Lord Venkateshwara provides to His devotees - riches, all wealth and all goodness.  Thiruvengadam, the abode of Lord Balaji is the  ‘Thilakam’ the shining glory of the whole Earth.  Lakhs of devotees of all ages, from all over the Country and from other parts of the World throng to the hills, by walk, by vehicles of various hues and wait in the queue for hours to have a glimpse of the Lord. 

At the foothills of most divine Thirumala lies Thirupathi [ for easier identification – Kizh Thirupathi] – where the ancient temple of Sri Govindarajar is famous.  This temple was consecrated by our Emperumanar and is one of the earliest structures around which the tourist city of Tirupathi lies.   



உகந்த மணம்மிக்க சிறந்த புஷ்பங்கள் பரிமளிக்கப்பெற்ற விசாலமான சோலைகளாலே சூழப்பட்டதும், எல்லாவுலகங்களுக்கும், திலகம்போன்று விளங்குவதுமான -  திருவேங்கடம் எனும் திருமலையை மனமே! அடைந்திடு என்று நமக்கு அற்புத வழியை காட்டுகிறார் திருமங்கை மன்னன்.  அத்தகைய சிறப்பு வாய்ந்த திருமலையின் அடிவாரத்திலே அமைந்துள்ளது - கீழ் திருப்பதியில் உள்ள, உயர்ந்த கோபுரத்தை கொண்ட திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் திருக்கோவில். 

ஸ்வாமி  ராமானுஜரின் ஆணையின்பேரில் அனந்தாழ்வார் திருமலையில் சிறந்ததோர் நந்தவனம் அமைத்து அதற்கு ராமானுஜர் நந்தவனம் என்று பெயரிட்டு நாள்தோறும் அங்கு மலர்கள் பறித்து மாலை கட்டித் திருவேங்கடமுடையானுக்குச் சாத்தி வந்தார். மிகவும் மகிழ்ந்த ஸ்ரீராமானுஜர் திருவேங்கடமுடையானைக் கண்டு தரிசித்து அவரது திருவடி தொழுது தமது சீடர்களுடன் சேர்ந்து மங்களா சாஸனம் பண்ண வேண்டும் எனும்  பொருட்டு ஸ்ரீரங்க பெருமாளை வணங்கிவிட்டு திருவேங்கடயாத்திரையை மேற்கொண்டார். முதலில் பெருமாள் கோயிலுக்கு சென்று திருக்கச்சி நம்பிகளை முன்னிட்டுக் கொண்டு பேரருளாளரான தேவாதிராஜனை மங்களாசாஸனம் பண்ணிப் பின்பு திருமலையாத்திரை பற்றிப் பேரருளாளனிடம் கூறினார். அவரும் - ‘சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை’ என அருள - ஸ்ரீராமானுஜரும் சீடர்கள் புடைசூழ யாத்திரை மேற்கொண்டு சில தினங்களில் கீழ்த்திருப்பதி சென்றடைந்தனர்.  திருப்பதியிலேயே விட்டல தேவன் என்னும் அரசனைச் சிஷ்யனாக்கிக் கொண்டு அங்குள்ள மடத்தில்  எழுந்தருளி இருந்தார்.

இராமானுசனை - அவர்தம் ஆசார்யரான திருக்கச்சி நம்பிகள் - 'நம் சேஷத்வத்தை நோக்கும்படிக்கு, சேஷாச்சலத்தேறப் போகவேணும்' என அறுதியிட்டவாறே குஞ்சனகிரிநாதன் அனுமதி உடனே, அஞ்சனகிரிநாதனுக்கு அடிமை செய்ய திருமலை ஏகினார்.   மின்வட்ட சுடராழி வேங்கடவனுக்கு திருவாலவட்ட கைங்கர்யமும், அத்தாணிச் சேவகமும் செய்து கொண்டு எழுந்து அருளி இருந்தார்.

This temple of Sri Govindaraja swami at Kiz Thirupathi  is remarkable for its style of architecture, the tall and remarkable 7 storied gopuram with 11 kalasas – with sannathis for Sri Govinda Rajar, Sri Kalyana Venkateswarar, Sri Parthasarathi in sitting posture, Sri Choodikudutha nachiyar, Sri Bashyakarar, Sri Pundarikavalli thayar, Kaliyan, Koorathazhwan among others. In front of the temple is our Acaryar Swami Manavala Mamunigal sannathi. 

The holy Thirumala offers extreme tranquilty and bliss  - it is a challenge to be there and have darshan of Thiruvengadamudaiyan and more so, to attend thiruveethi purappadu and .. .. to take some photographs of Swami Udayavar of Thirumala Tirupathi.   Emperumanar’s krupa kadaksham flowed to us thus on 5.5.2o22 – after darshan at Thirumala, could have darshan at Kiz Thirupathi too and here are some photos of  Swami Emperumanar here during his purappadu on his sarrumurai day morning.  

~ adiyen Srinivasadhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
11th  May 2022 















1 comment: