To search this blog

Wednesday, February 23, 2022

Sri Parthasarathi Chandra Prabhai Feb 2022

Compared with the billions of other stars in the Universe,  it  is remarkable.  It is infact  a ball of gas (92.1 percent hydrogen and 7.8 percent helium) held together by its own gravity. It is  4,500,000,000 years old!  That's a lot of zeroes. That’s four and a half billion.  Going by what others do, i.e., burning  for about nine or 10 billion years – it can be said tobe halfway through its life. So no worries, it still has about 5,000,000,000—five billion (500 crores !)—years to go.  It is the SUN. 

.. .. then there is the Moon - Moon has enamoured mankind and over the centuries, mankind has been researching more and more on moon.  



திருவல்லிக்கேணி பிரம்மோத்சவத்தில் நான்காம் நாள் காலை சூர்யப்பிரபை.  மாலை சந்திரப்ரபை வாகனங்கள்.   சந்திரன் குளிர்ச்சியானவன்; சந்திரனுக்கு அம்புலி, வெண்மதி,  பிறை,   கலாநிதி,    நிசாகரன், மதி,   சுதாகரன்,  என பெயர்கள் உண்டு. முழுமதி மிகவும் சந்தோஷத்தை தர வல்லது.  நிலவை  நோக்கி  கைநீட்டி, தன் குழந்தையுடன் விளையாட வருமாறு அம்புலியை அழைக்கும் பருவம் - அம்புலிப்பருவம். 





                    சூரியனின் ஒளியைப் "பகலொளி' என்றும், சந்திரனிலிருந்து வரும் ஒளியை "நிலவொளி' என்றும் சங்க பாடல்களில் காட்டப்பட்டுள்ளது.  நாலடியார்  பாடலில்,  "அங்கண் விசும்பின் அகல் நிலாப்பாரிக்கும்/ திங்களும் சான்றோரும் ஒப்பர்மன்'  எனுமிடத்தில்  "இடமகன்ற அழகிய வானின்கண் மிகுதியாக நிலாவினை (ஒளியினை) தோற்றுவிக்கும் சந்திரனும் சான்றோரும் ஒப்பர்' என்பது பொருள்.  

விஷ்ணுசித்தனான பெரியாழ்வார் கண்ணனது ஒவ்வொரு பருவத்தையும் அனுபவித்து பாசுரங்கள் அருளியுள்ளார்.  வளரும் கண்ணனுக்கு யசோதை அம்புலியை  அழைக்கும் ஒரு பாசுரம் இங்கே :

என்சிறுக் குட்டன் எனக்கோர்  இன்னமுது எம்பிரான்

தன்சிறுக் கைகளால் காட்டிக் காட்டி  அழைக்கின்றான்

அஞ்சனவண்ணனோடு ஆடலாட உறுதியேல்

மஞ்சில் மறையாதே மாமதீ மகிழ்ந்தோடிவா.

கோகுலத்தில் தவழ்ந்து வளர்ந்த கண்ணபிரானும்  அவ்வாறே நிலவை அழைக்க - அவனை சீராட்டி யசோதையும் ஏனைய  இடைப்பெண்களும்,  சந்திரனை அழைத்தனர்.   சந்திரன் மேகத்தில் மறைந்து போவது இயல்பாதலால் அப்படி மறைந்து போகதே  என யசோதை வேண்டியதாக, பெரியாழ்வார் தமது பாசுரத்தில் கூறுகிறார். . 

Moon has enamoured mankind for ages – in our literature and in Divyaprabhandnam too, there is mention of moon in many a places.  Moon is characterised as a cool, pleasant one.  During the brahmothsavam at Thiruvallikkeni divyadesam,  on day 4  there is  Surya prabhai purappadu in the morning and in the evening -  Chandra prabhai.   It is Surya prabhai and Chandra prabhai for Ratha Sapthami too.  

Today 23.2.2022   is a glorious day – it is day 4 of Special Brahmothsavam at Thiruvallikkeni and it was grand Surya Prabhai purappadu in the morning  ~  and, in the evening -  the  real cool Chandra Prabhai that of moon. Here are some photos of  Sri Parthasarathi  Emperuman purappadu at Thiruvallikkeni divyadesam  - Chandraprabhai purappadu.

adiyen Srinivasa dhasan [Mamandur Veeravalli Srinivasan Sampathkumar]
23.2.2022. 









1 comment: