To search this blog

Saturday, October 2, 2021

Malai Nadu - Thiruvanvandoor divyadesam - : வைகல் திருவண்வண்டூர் வைகும் இராமனுக்கு !!

அன்னம் விடு தூது -  அஃறிணைப் பொருட்களைத் தூது செல்ல ஏவுவது போல அமையும் இலக்கியம் தூது இலக்கியம் எனப்படுகிறது. தலைவன் தலைவியரிடையே பிரிவு ஏற்படும்போது ஒருவர் தனது பிரிவுத்துயரை மற்றவருக்கு அறிவிக்கும்படி அஃறிணைப் பொருட்களைத் தூது அனுப்பும் உத்தி நற்றிணை போன்ற சங்கப் பாடல்களிலும், பின்னர் வந்த இலக்கியங்களிலும் கூடக் காணப்பட்டவை.   தூது செல்ல ஏவப்படுகின்றவையும் பலவாறாக இருக்கின்றனன் - :  அன்னம், கிளி, மான், வண்டு போன்ற உயிரினங்கள் மட்டுமன்றி, காற்று, முகில், தமிழ் என்பனவும் தூது இலக்கியங்களிலே தூது செல்ல ஏவப்படுகின்றன. 




வைகல்  பூங்கழிவாய் :   பூங்கழி  ~  என்ன ஒரு அழகான சொல்லாடல் !  .. .. கழி  என்பது கடலையடுத்த உப்புநீர்ப் பரப்பு  ( Back-water, shallow sea-waters, salt river, marsh)  அது கூட எம்பெருமானிடத்தே சேர்ந்துகொள்ளும்போது 'பூங்கழி' ஆயிற்று.  தமிழ் இலக்கணத்திலே  இது பண்புத்தொகை.. .. அதாவது  பண்புப்பெயரைச் சேர்ந்து (தொகுத்து) வரும் பெயர்ச்சொல். பண்பு பெயர்கள் நிறத்தை, வடிவத்தை, சுவையை, குணத்தை, எண்ணிக்கையை என சார்ந்து வரும்.  இங்கே மணமாய் இனிமையாய் குறிப்பிட  பூங்கழியென்று சொல்லப்பட்டது.   

The Pamba River is the longest river in Kerala after Periyar and Bharathappuzha, and the longest river in the erstwhile former princely state of Travancore.  Devotees to Sabarimala temple dedicated to Lord Ayyappa take bath at an important point, cross the river to reach the beautiful temple in the hills.  The river is also known as 'Dakshina Bhageerathi'.   

                          Pandanadu (also known as Pandavar Nadu) is in Chengannur taluk in Alappuzha district, in Kerala.   Pandanad was formed by the Pandavas, hence the name Pandava Nadu. Pandanad had many temples that claim origins from the Pandava.   In literature – nayaki in love would speak to birds (and what not !) to convey her love to the Chieftain .. .. here Swami Nammalwar in his Parankusanayaki bavam speaks to birds of various hues to convey her unconditional love for that eternal Lord .. .. :  O Flocking egrets picking worms in my flowery marshes!  Go unto  My Lord having shiny lips akin to those of fresh fruits, He who has discus (Sri Chakra) in hand, residing in the flowery  prosperous Tiruvan-vandur, the flourishing land where  paddy grows tall.  Go tell him with folded hands my tale of love.  





Thiruvanvandoor ~ figures in 11 pasurams of Swami Nammazhvaar in his Thiruvaimozhi  (6th decad – first thiruvaimozhi).   It is one of the five ancient shrines in the Chengannur area of Kerala, connected with Mahabharata, where the five Pandavas built one temple each; Thrichittaru  Maha Vishnu Temple by Yudhishthira, Puliyur Mahavishnu Temple by Bheema, Aranmula Parthasarathy Temple by Arjuna, Thiruvanvandoor Mahavishnu Temple by Nakula and Thrikodithanam Mahavishnu Temple by Sahadeva. The temple is open from 4 am to 11:00 am and 5 pm to 8 pm and is administered by Travancore Devaswom Board of the Government of Kerala.  

                            Thiruvanvandoor is a village in Chengannur Taluk in Alappuzha district, in Kerala.  Addressed ‘Vaigal thiruvanvandur’ – it  lies in  Pandanad-  the region of Pandanad and neighboring villages have many Hindu temples Vanavathukkara that bear historic and architectural value.  There is alsothe temple of  Sree Gosalakrishna  nearer to the ancient temple Thiruvanvandoor Mahashetram build by pandava (nakula).  A major event is the annual Gajamela festival  -   it is a 51-day annual festival in connection with the anniversary of idol installation at Sree Gosalakrishna Temple at Thiruvanvandoor that culminated with    ceremonial procession followed by Gajamela.   The procession is very grand with the accompaniments of caparisoned elephants, floats depicting Puranic themes, Mayuranrithom, Krishnanattom, Karakom, Nadaswarom, Panchavadyam, Pancharimelom, etc,  held from Thrichittattu Maha Vishnu Temple at Chengannur to the Gosalakrishna Temple in the afternoon.  

Here is a video of the celebrations as seen on you tube : Gajamela Thiruvanvandoor 

The divyadesam in Malainadu is “Thiruvanvandoor” glorified by Swami Nammalwar.  The famous Pamba river is near the temple and hence the name of the deity is Paambanaiappan.  The temple is built in Kerala style architecture.  The temple has a two storeyed gopuram or a gateway tower, with the upper storey having wooden trails covering the Kottupura (a hall of drum beating during festivals).  The  Dwajasthambam is located axial to the temple tower leading to the central sanctum and there is a Deepastamba, which is the light post. Chuttuambalam is the outer pavilion within the temple walls. Between the entrance of Nallambalam to the sanctum, there is a raised square platform called Namaskara Mandapa which has a pyramidal roof.  

                 இந்த அற்புத திவ்யதேசத்தை நம்மாழ்வார் - தலைவி குருகுகளை தூது செல்லுமாறு மிழற்றும்போது பாடியுள்ளார்.

வைகல்  பூங்கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்,

செய்கொள் செந்நெலுயர் திருவண்வண்டூருறையும்,

கைகொள் சக்கரத் தென்கனிவாய்  பெருமானைக்கண்டு,

கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே.

சதா சர்வகாலமும், பூங்கழி எனப்பட்ட அழகிய நீர்நிலத்திலே இரை தேடி  வந்துண்ணும்  கொக்கின் கூட்டங்களே!; கழனி நிரம்பிய செந்நெற்பயிர்கள் ஓங்கி வளர்ந்திருக்கப்பெற்ற -  "திருவண்வண்டூர்" எனும் இந்த தளத்திலே   நித்யவாஸம் பண்ணுபவனும்,  திருக்கையிலே திருவாழியாழ்வானைக் கொண்டவனும், சிவந்த மதுரமான கனியை போன்ற  திருவந்ரத்தையுடையவனுமான,  ஸ்ரீமன் நாராயணன் எம்பெருமானைக் கண்டு, கைகள் கூப்பி  - இங்ஙனே பிரிந்திருக்கும் பாவமுடையளான என்னுடைய ஆவலைச் சொல்லுங்கோள் என்கிறார் ஆழ்வார்.

பெரிய ஜீயர் எனும் பிரசித்தி பெற்ற நம் சுவாமி மணவாள மாமுனிகளின்  திருவாய்மொழி நூற்றந்தாதி  அற்புதமான ப்ரபந்தம். இது பல கட்டுப்பாடுகளைக் கொண்டு அருளப்பட்டது.  திருவாய்மொழியின் ஒவ்வொரு பதிகத்தின் அர்த்தம் ஈடு வ்யாக்யானத்தில் ஒரே பாசுரத்தில் அதுவும் அந்தாதி தொடையில்,  ஸ்வாமி நம்மாழ்வாரின் திருநாமமும் பெருமைகளையும் விளக்கி அருளிய கிரந்தம்.  திருவாய்மொழி நூற்றந்தாதியின் 51வது பாசுரம். :  

வைகல் திருவண்வண்டூர் வைகும் இராமனுக்கு என்

செய்கைதனைப் புள் இனங்காள்! செப்பும் என – கை கழிந்த

காதலுடன் தூது விடும் காரி மாறன் கழலே

மேதினியீர்! நீர் வணங்குமின் !!   

உலகத்தீர்களே! மிகவும் அன்புடன் “பறவைக் கூட்டங்களே! திருவண்வண்டூரில் நித்ய வாஸம் செய்தருளும் சக்ரவர்த்தித் திருமகனுக்கு என் நிலைமையை எடுத்துச் சொல்லுங்கோள்” என்று பறவைகளைத் தூது விடும் ஆழ்வாருடைய திருவடிகளை வணங்குங்கள், என்கிறார் நம் பொய்யிலாத மாமுனிகள்.

Understand that Gajamela occurs in May every year – unlikely that it was conducted this year due to Corona.  Here are some photos collated from web and some taken during our visit in Dec 2018 when we stayed in Thiruvalla and had darshan at  Thiruvalla, Thiruvaranvilai (Aramula), Vaigal Thiruvanvandur, Kuttanattu Thirupuliyur, Thiruchengunur Thiruchitraru, & Thirukadithanam.

 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
2nd Oct  2021.  



















2 comments:

  1. Nice photos. சிறந்த இலக்கிய விளக்கங்கள். Vert nice writing.

    ReplyDelete