To search this blog

Tuesday, September 15, 2020

பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் ~ thinking of Emperuman always - 2020

 

விடியல் எப்போது ? - எப்போது பகல் வரும் ?  - எப்போது இருள் விலகும் ?  -  சூரிய உதயத்திலா !! - இல்லை !!   மார்ச் மாதம் 20ம் தேதி முதல் மூடி இருந்த கோவில்கள் செப்ட் 7 முதல் பக்தர்களுக்கு திறந்துள்ளன.  முன்போல எம்பெருமான் மாட வீதிகளில் பவனி காணும் திருவீதி புறப்பாடுகளும் நடந்தால் பக்தர்கள் ஆனந்தப்படுவார்கள். 

                  

of the many glorious days – Brahmothsavam attracts thousands of people and in the grand 10 day uthsavam, Garuda, Yanai vahanam and Thiruther are of special significance.  Thiruther is very majestic and is a great day uniting people. 

  

We are proud of Indian History – that of Great Kings and Emperors – of  Raghu Vamsam and Ikshvahu dynasty to later day Guptas and other dynasties.  In Tamil Nadu, we had Chera, Chozha, Pandiya, Pallava kingdoms.  Ages before Madras was formed, and centuries before British East India came down for trade, villages and beautiful places of Thiruvallikkeni, Thirumylai, Thiruvottiyur, Thiruvanmiyur, Thiruvetteeswaram existed.  The early history of the Region was documented by Nayanmars – Appar, Sundarar, Sambandar and of our Great Azhwars especially Muthal Azhwargal [Poigaiyar, Boothathar, Peyar] and Thirumazhisai azhwar.   

There are undeniable historic evidences as well.  There are many culverts and stone inscriptions in many olden temples of the Region.  At Thiruvallikkeni there is one stone inscription of Danti Varma Pallavan  (779-830)  recording the donation of  Pugalthunai Visaiyaraiyan redeeming  the field and arranging  for the usual quantity of rice offerings every day.   

கொரோனா எனும் தீநுண்மி மனித வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது.  மனிதர்கள் இரவு பகல் பாராமல் வீட்டிலிலேயே இருக்க பழகிக் கொண்டுள்ளனர். அதனால் பல்வேறு மாற்றங்களும், பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன.  உலகமே ஒரு சிறிய கிராமம் - மக்கள் விமானத்தில் பறந்து வெவ்வேறு  நாடுகளுக்கு சென்று வந்த காலம் போய் - வீட்டில் சிறு அறைகளில் முடங்கும் காலம் திடீரென வந்தது விந்தையே !  

நாம் வாழும் வீடு, தெரு, நகரம், மாநிலம், நாடு, கண்டம், நிலப்பரப்பு, நீர்நிலைகள், மஹா சமுத்திரங்கள் எல்லாம் அண்டத்தில் அடங்கும்.  அண்டம் என்பது நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் குறிக்கின்ற ஒரு சொல்லாகும். பூமி, நிலவு, வானம், சூரியன், சூரியனைச் சுற்றி வரும் கோள்கள், விண்மீன்கள், விண்மீன்களுக்கு இடையுள்ள விண் துகள்கள்,   இவற்றை எல்லாம் சூழ்ந்துள்ள வெட்ட வெளி,  கண்ணுக்குத் தெரியாத தொலைவில் உள்ள விண்மீன்களுக்கும் அப்பால் உள்ள விண்மீன் குழுக்கள்  ஆகியன அனைத்தும் அண்டம் என்ற சொல்லில் அடங்கும்.  

மொழி இலக்கணத்தில், காலம் என்பது இறந்த-காலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்று வகைப்படும்.  வாழ்வியலில், காலம்  என்பது  நேர இடைவெளி அல்லது கால இடைவெளியைக் குறிக்கும்.   பொது வழக்கில் சூரிய ஒளி பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் காலப்பகுதி அவ்விடத்தில் பகல்.  கிழக்குத் திசையில் சூரியன் உதிக்கின்ற நேரம் முதல் மேற்கில் மறையும் நேரம் வரையான காலப்பகுதியே பகல்.  ஒரு பகலும், ஓர் இரவும் சேர்ந்தது ஒரு நாள்.   

இவ்வுலகில்,  முப்பது நாழிகைக்கு ஒருமுறை இராப்பொழுதும் பகற்பொழுதும் மாறி மாறி வந்தாலும் எம்பெருமானுடைய ஸேவை கிடைக்கப்பெறாத காலத்தைக் காளராத்திரியாகவே ஞானிகள் கருதுவர்கள். ஸூரியன்  உதிப்பதும் , அஸ்தமிப்பதும் அல்ல அளவை !  .. ..   பகவத் ஸேவை வாய்க்குங்காலம் எதுவோ, அதுவே பகல், மற்றது இரவு - என்பதே ஆழ்வார்கள் சித்தாந்தம்.  இதோ இங்கே பூதத்தாழ்வாரின் அற்புத வரிகள்.   

பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன், - கனவில்

மிகக்கண்டேன் மீண்டவனை மெய்யே - மிகக்கண்டேன்

ஊன்திகழும் நேமி ஒளிதிகழும் சேவடியான்,

வான்திகழும் சோதி வடிவு.  

எம்பெருமான் ஸ்ரீமந்நாரணனிடம் தீராத காதல் கொண்ட ஆழ்வாருக்கு, பெருமாளாக காணாத காலம் இரவு; தரிசிக்கும் காலம் பகல்.  பூதத்தாழ்வார் பாடுகிறார் :   இராக்காலம் கலக்காமல் ஒரே பகற் போதாய்ச் செல்லுகிற நல்விடிவைக் கண்டேன், எப்படியெனில்,  ஸ்ரீமந் நாராயணனாகிற என்றும்  அஸ்தமனம் அறியாத ஆதித்யனைக் கண்டேன்,  இன்னமும் கநாவில் நினைக்கும் இனியனைக் காட்டிலும்,  மிகவும் ப்ரத்யக்ஷமாக திருமேனியில் விளங்குகின்ற திருவாழியையுடையவனும்.  பிரகாசம் மிக்கதிருவடிகளையுடையவனுமான அப்பெருமானுடைய  பரமபதத்திலே விளங்குகின்ற  சோதிமயமான வடிவத்தை  நன்று ஸேவிக்கப்பெற்றேன். எம்பெருமானைக் கண்டமையால் விடிந்தது, எங்கும் பேரானந்தமே !  

Till the time of its acquisition by the British in 17th century, Triplicane was a shrotriam village along with adjacent village of Pudupakkam.  Its history remained surrounded by the iconic Sri Parthasarathi swami temple.    

In the latter half of 1749, Madras was finally handed over to the English.  Triplicane, thereafter became the residential  suburb of English merchants who built several garden houses along or near  the south bank of the Cooum, then called as Triplicane river. The modern day Triplicane (the temple) has four arches on each direction.  Sri Parthasarathi visits these arches on some occasions – He passes through the North arch at Nalla thambi St on Masi magam day; Southern arch – during Ekkattuthangal, Kodai Uthsava sarrumurai .. on thiruther (Sri Parthasarathi & Sri Narasimhar on 7th day evening of their respective Brahmothsavams) visit the arch on the Eastern side i.e., on beach road.  

On the day of thiruther, Lord Thelliya Singar remains on the Thiruther  till evening during which time Bakthas can ascend and have darshan.  In the evening occurs the  usual ‘pathi ulavuthal’ and purappadu, after which ‘thotta thirumanjanam’ would take place.  This used to happen in the cool Vasantha Mantapam situate in Venkata Rangam Street – unfortunately, this is no longer there and thirumanjanam takes place in the Andal neeratta mantapam now a days.   

In the evening occurs  ‘pathi ulavuthal’; immediately followed by  purappadu till the eastern entrance in Sunkuwar Street on the Marina beach road. One of the few occasions whence Perumal has purappadu outside the precincts of Mada veethi and Kulakkarai.   Here are some photos of the Thiru ther thirumbukal  purappadu of 2016.  

 

adiyen Srinivasadhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
15.9.2020

1 comment: