To search this blog

Wednesday, September 23, 2020

Purattasi Thirumoolam ~ Swami Manavala Maamunigal : "ஒருநாயகமாய் ஓடவுலகுடன் ஆண்டவர்' .. ..

சரித்திரம் படித்தோர் இராஜ்யங்கள்  எப்படி மன்னர்கள் கையில் மாறி மாறி இருந்துள்ளன என்பதை அறிவர்.  பேரரசுகள் சிதைந்ததும் பெருமன்னர்கள் மண்டியிட்டதும் கால வரலாறு.   உலகங்கட்கெல்லாம்  ஓரரசாக வீற்றிருந்து வாழ்ந்தவர்களுங்கூட நாளடைவிலே சரிந்து சாம்ராஜ்யம் மண்ணோடானது, காலத்தின் கட்டாயம். ஸ்ரீவைணவம் ஒரு எளிய நெறி.  நாம் வேறு ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. நித்ய ஸ்ரீமானான எம்பெருமானைப் பணிவதே பாங்கு என்கிறார் ஸ்வாமி நம்மாழ்வார் தமது திருவாய்மொழி தனிலே :  (4ம் பத்து - முதல் திருவாய்மொழி) :  "ஒருநாயகமாய் ஓடவுலகுடன்  ஆண்டவர்' .. .. 

இன்று (24.9.2020)   புரட்டாசி திருமூலம் - சரியாக ஒரு மாதத்தில் (ஐப்பசி திருமூலம்) நம் ஆசார்யன் ஸ்வாமி மணவாள மாமுனிகள் சாற்றுமுறை வைபவம். ஸ்ரீ வைஷ்ணவம் எனும்  ஆலமரம் தழைக்க   தோன்றினவர்  நம் ஆச்சார்யன் ஸ்வாமி  மணவாள மாமுனிகள் அவரது திருவவதாரத்தால் இந்த ஐப்பசி மாசம் சிறப்புற்றது.  பூர்வாசார்யர்கள்  பரம்பரையில் நாம் கொண்டாடுவது நம் ஸ்வாமி  மணவாள மாமுனிகள். ஆதிசேஷனுடைய அவதாரமாகவும்பகவத் இராமானுசரின் அவதாரமாகவும் அவதரித்தவர் மாமுனிகள்.    




Hailed as Periya Jeeyar, Mamunigal who  established our Thennacharya Sampradhayam believed and practised the tenet of following the words of early Acharyars as they are [munnor mozhintha murai thappamal kettu].   At Thiruvallikkeni and other divyadesams, 10 day Thiruvavathara Uthsavam of our Acharyar is   celebrated grandly.    

ஸ்ரீவரவரமுனி என்று கொண்டாடப்படும் நம் ஆசார்யர்  பாழ்பட்டு கிடந்த  ஸ்ரீரங்கம்   கோயில் நிர்வாகத்தை ஏற்று  இராமானுஜர்  காலம்  போன்ற நிர்வாகத்தை ஏற்படுத்தியவர். தன்  ஆச்சாரியர் திருவாய் மொழி பிள்ளை  ஆணையின்  பேரில் ஆழ்வார் திருநகரியில் ஸ்ரீராமானுஜர் விக்ரகத்தை  நிறுவி இராமானுஜர் பற்றிய இருபது பாக்கள் கொண்ட யதிராஜ விம்சதி இயற்றியதனால் யதீந்த்ர ப்ரவணர் என போற்றப்பட்டவர்.

மாமுனிகள் தம் விசாலமான ஸத் ஸம்ப்ரதாயப் புலமையை எல்லார்க்கும் பயன்படும்படி அனைத்து சாஸ்த்ரங்களையும் சேர்த்து மிகச் சுருக்கமாக வழங்கினார், மாமுனிகளின் ஔதார்யத்தையும் மஹாவித்வத்தையும் அவரது வாழ்க்கையும், அவரது நூல்களும்,  அவர்தம் ஏற்படுத்திய நெறிமுறைகளும், தெள்ளத்தெளிவாக விளக்குகின்றன.   அவரது  ஸம்ஸ்க்ருத க்ரந்தங்கள்:  யதிராஜ விம்சதி –   எனும் இருபது ச்லோகங்கள் கொண்ட இந்த ஸ்தோத்ரத்தை எம்பெருமானார் விஷயமாக ;   தேவராஜ மங்களம் – அழகான மங்களாசாஸன க்ரந்தம் ஆன இதில் மாமுனிகள் காஞ்சி தேவப்பெருமாளுக்கு மங்களாசாஸனம் செய்கிறார்.   

தமிழ் ப்ரபந்தங்கள்:  உபதேச ரத்தின மாலை – பிள்ளை லோகாசார்யர் மாஹாத்ம்யமும் ஸ்ரீவசன பூஷண மாஹாத்ம்யமும் காட்ட என்றே முக்யமாக எழுந்த இக்ரந்தத்தில் மாமுனிகள் மிக ஆச்சர்யமாக ஆழ்வார்கள்/ஆசார்யர்கள் அவதரித்த நாள்கள்/மாதங்கள்/ஸ்தலங்கள் இவற்றை விவரித்து, எம்பெருமானார்க்கு ஸம்ப்ரதாயத்திலுள்ள விசேஷஸ்தானமும், வ்யாக்யானங்கள் எல்லா அருளிச்செயல்களுக்கும் அமையவேண்டும். இவ்வழி நடப்பவர்கள் எம்பெருமானாருக்குப் பிரியமாக இருப்பர் என தளைகட்டியுள்ளார்.   ஆர்த்தி ப்ரபந்தம் – மாமுனிகளின் எம்பெருமானார் பக்கலுள்ள பரமபக்தியின் தூய வெளிப்பாடு இது. அவரின் சரம காலத்தில் எழுதப்பட்டது.  ஜீயர் படி திருவாராதனம் – எளிய முறையில் பகவதாராதனம் செய்யும் முறையை மாமுனிகள் இதில் காட்டியருளுகிறார்.




 திருவாய்மொழி நூற்றந்தாதி –  தேன் போன்று இனிமையானது.   ஸ்வாமி  நம்மாழ்வாரின் திராவிட வேத சாகரமான திருவாய்மொழி.  100 பதிகங்கள் கொண்டது.  இதில் உள்ள ஒவ்வொரு பதிகத்துக்கும் ஒரு வெண்பா என 100 வெண்பாக்கள் மணவாள மாமுனிகள் திருவாய்மொழி  நூற்றந்தாதியில் நமக்கு அருளிச்செய்துள்ளார். ஆழ்வாரின் ஒவ்வொரு பதினோரு பாசுரமான ஒரு திருவாய்மொழிக்கு அப்பாசுரங்கள் அனைத்தையும் ஒரே வெண்பாவில் அதாவது பதினைந்து சொற்களில் மாமுனிகள் ஆக்கிவைத்தது உலக இலக்கிய அதிசயம்.ஒவ்வொரு பதிகத்திலுமுள்ள தொடக்கச் சொல்லை அப்பதிக வெண்பாவின் முதற்சொல்லாகவும், பதிகத்தின் இறுதிப் பாடலிலுள்ள இறுதிச் சொல்லை வெண்பாவின் ஈற்றுச் சொல்லாகவும் அமைத்து வெண்பா வரும்படி அமைத்து நூற்றந்தாதி,  நம்மாழ்வாரின் புகழைப் பாடுகிறது. 

முதலில் கண்ட - "ஒருநாயகமாய் ஓடவுலகுடன்  ஆண்டவர்' .. ..பதிகத்திற்கான திருவாய்மொழி நூற்றந்தாதி பாசுரம் இங்கே :

ஒரு  நாயகமாய் உலகுக்கு, வானோர்

இருநாட்டில் ஏறியுய்க்கும் இன்பம் – திரமாகா,

மன்னுயிர்ப்  போகந்தீது   மாலடிமையே  இனிதாம்,

பன்னியிவை மாறனுரைப் பால். 

இவ்வுலக இன்பங்களும் ,  அதே போல், சுவர்க்க இன்பங்களும் (வானோர் இரு நாட்டில் ஏறி உய்க்கும் இன்பம்) ஸ்திரமாகா -நிலைத்திருப்பவை  அல்ல.  ஸ்திரமாக என்றென்றும் நிலைத்திருப்பவை,  மன்னு  இருக்ககூடிய ஆத்மாவை அனுபவிக்கும் உயிர் போகம் தான். எம்பெருமான் ஸ்ரீமன்நாரணனுக்கு  அடிமை செய்வதே (மாலடிமையே) இனிமையானது என  இவைகளை (இவை) விளக்கி மாறன் நம்மாழ்வார் உரைப்பது இந்த திருவாய்மொழி. 

As we reminisce and celebrate the birth of our Acaryar Swami Manavala Mamunigal on this Thirumoolam day, here are some photos of his thiruther purappadu on 3.11.2016.

 

Aadiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
24.09.2020.







No comments:

Post a Comment