To search this blog

Saturday, September 12, 2020

Emperumanar Avani Thiruvathirai celebrations - Temple at Padur, OMR

 இன்று  ஆவணி திருவாதிரை’.  'கண்டவர் சிந்தை கவரும் கடிபொழில் தென்னரங்கன் * தொண்டர் குலவும் இராமானுசன்' - என எழில் வாய்ந்த திருவரங்கத்தில் வாழும் பெரிய பெருமாளுடைய தொண்டர்களால் கொண்டாடப்பட்டவரும், வேதங்களை இப்பூவுலகிலே ஓங்கி வளரச் செய்த பரம உதாரருமான ஸ்ரீ ராமானுஜரின் மாதாந்திர திருநட்சத்திர பெருமை இன்று. 



Glory to num Iramanusan !  ~ today 12.09.2020  is Thiruvathirai nakshathiram in the month of Avani  – we hail the birth star [monthly] of our Great Acarya Swami Ramanujar,  hailed as “Yathi Rajar”   

எம்பெருமானாரை தவிர ஒரு தெய்வத்தையும் வணங்க மாட்டேன்; எந்த மானுடரையை உயர்த்தி கவி பட மாட்டேன், என உடையவரையே தஞ்சமாக கொண்டு அமுதனார் பாடிய இராமானுச நூற்றந்தாதியில் இருந்து ஒரு சிறப்பான பாடல் இங்கே: -  

பேரியல்நெஞ்சே! அடிபணிந்தேன்  உன்னைப் பேய்ப்பிறவிப்*

பூரியரோடுள்ள சுற்றம் புலத்திப்* பொருவருஞ்சீர்

ஆரியன் செம்மை இராமானுசமுனிக்கு  அன்புசெய்யும்

சீரிய பேறுடையார் அடிக்கீழ்   என்னைச் சேர்த்ததற்கே.!!

 




இதோ அமுதனாரின் வரிகளின் அர்த்தம் -  ஸ்ரீ உ.வே. கச்சி  ஸ்வாமிகளின் உரை - நன்றி -திராவிடவேதா  இணையம் .  

மிகவும் கம்பீரமான மனமே! -  உன்னை அடிபணிந்து வ ணங்குகின்றேன்;  ஏன் எனில் ஆஸுரப் பிறப்பையுடையவர்களான (பேய் பிறவி என்கிறார் அமுதனார்), நீசர்களோடு (எனக்கு) இருந்த உறவை, (புலர்த்தி) போக்கடித்து, ஒப்பற்ற குணங்களையுடையவரும் [ஆரியன் என்றால் சிறந்த குணங்களை உடையவர்]-, சிறந்த அநுஷ்டானங்கள்  உடையவரும்,  (ஆச்ரிதரோடு) ருஜூவாகப் பரி மாறுந்தன்மை வாய்ந்தவருமான இராமாநுச முனிக்கு [எம்பெருமானார் திறத்தில்]  பக்தி பண்ணுவதையே  பரம புருஷார்க்தமாகவுடையவர்களான  கூரத்தாழ்வான் போல்வாருடைய திருவடிகளின் கீழே, பரம நீசனாயிருந்த  என்னை கொண்டுசேர்த்த மஹோபகாரத்திற்காகவே உன்னை அடி பணிந்தேன் என்கிறார் நம் அமுதனார்.  எவ்வளவு சிறப்பு வாய்ந்த பக்தி இலக்கியம்.  

Thiruvarangathu Amuthanar in his glorious work  reiterates directing thyself -   O Benevolent Heart!   I  bow for the beneficial direction rendered in severing the wasteful association with men of devilish birth, and placing me at the feet of the most worshipful beloved ones of our peerless lord and sage Ramanuja, worshipped by worthy people like Swami Kurathazhwan. For this grace, I bow to you.  





Here are some photos of Emperumanar at Thiruvallikkeni during mangalasasanam before evening purappadu taken in yester years.

                      All roads have names for easier identification ..... the Streets of Thiruvallikkeni have names such as -  Peyalwar Kovil Street,  South Mada Street, Thulasinga Perumal Street, Car Street all related to the Temple…  OMR is a famous, prominent fast corridor – the winding  Old Mahabalipuram Road (Rajiv Gandhi Salai)  starts near the Kasturiba Nagar Railway station -  the Madhya Kailash temple in Adyar in South Chennai – winds it way till Mahabalipuram – being the earliest route – it carries the name ‘Old Mahabalipuram Road’ – this is State highway-49A. From Madhya Kailash,  it is designated ‘toll road’ and you have toll booth near Thuraipakkam (DB Jain College) as also in other places from where one enters OMR.   

பழைய மஹாபலிபுரம் சாலை என்பது அடையாறு மத்திய கைலாசத்தில் தொடங்கி மாமல்லபுரத்தை இணைக்கிறது.  சுங்க சாலையாக அமைந்துள்ள இச்சாலையில் பழமை வாய்ந்த சில ஊர்களும் அமைந்துள்ளன.  திருப்போரூர் கந்தசாமி கோயில் அமைந்துள்ளது.  மகேந்திர பல்லவரும் மாமல்ல நரசிம்மரும் இத்துறைமுகப்பட்டினத்தை அற்புதச் சிற்பவேலைகளின் மூலம் ஒரு சொப்பனபுரியாகச் செய்த காலத்திற்குப் பிறகு சில நூற்றாண்டுகள் கடந்து விட்டன.  பல்லவர்கள் காலத்தில் மஹாபலிபுரம் மாட மாளிகைகள், துறைமுகம், வர்த்தகம் என சிறப்புற அமைந்து இருந்தது.   வீதிகளிலெல்லாம் ஏற்றுமதி இறக்குமதிப் பண்டங்கள் மலை மலையாகக் குவிந்திருந்த காலத்தில் நடந்த கதை 'பொன்னியின் செல்வன்'.   

பல்லவர்கள் காலத்தில்  மாமல்லபுரம் சில புதிய சிறப்புக்களையும் அடைந்திருந்தது.  முக்கியமாக கடற்கரையோரத்தில்  அழகிய கற்கோயில்கல் மற்றும் சிறப்பான சிற்பக்கலையை பறை சாற்றும்  குன்றுகளைக் குடைந்தெடுத்த கோவில்கள்.    நகரத்தின் நடுவே மூவுலகும் அளந்த பெருமாள் சயனித்திருக்கும் விண்ணகரக் கோயில் - திருமங்கைமன்னனால்  பாடப்பெற்ற ஸ்தலசயனப்பெருமாள் திருக்கோவில், இத்தலத்திற்கு பெருமை கூட்டும் நூற்றாண்டுகள் பழைய ஸ்ரீவைணவ திவ்யதேசம்.

மாமல்லபுரத்து வீதிகளின் வழியாக மன்னர்கள்  இரட்டைக் குதிரைகள் பூட்டிய அழகிய விமான ரததிலும், போர்வீரர்கள் அழகிய பூண்களை  கொண்ட குதிரைகளின் மீதும் பிரயாணம் செய்தனராம்.   வீராதி வீரனும் சுந்தர சோழரின் மூத்த குமாரனுமான ஆதித்த கரிகாலன் பல தடவை விஜயம் செய்து இருக்கிறான்.  மாமல்லபுரத்தை  நோக்கி செல்லும் இந்த பழைய சாலை, ஒரு காலத்தில் ராஜபாட்டையாய் இருந்து இருக்கலாம். 

A couple of decades ago, ECR [East Coast Road] cornered all importance – but the OMR regained its glory with IT companies growing up making it IT corridor and the real estate picking up by leaps.   While the originating point near Madhya Kailash / Kasturba Railway MRTS is all new – there are many old places dotting along – Tharamani, Kandanchavadi, Thuraipakkam, Karapakkam, Sozhinga Nallur, Semmencherry, Padur, Kelambakkam, Thiruporur and more.

After Siruseri, the place falls under Kanchipuram Dist – of the many places, lies Padur, nearer Thiruporur – that has seen incremental rise in industrial expansion, big flats and villas and fast paced development in residential spaces.  This place is also known as Kazhipattur.  This is not on the land development or malls or high rise buildings in OMR but of a temple in Padur nearer Hindustan College of Engineering. 


There is a small beautiful temple of Sri Rukmani Sathya Bama sametha Sri Krishnar.  The moolavar is beautiful Krishna Pramathma with Rukmini and Sathya Bama on either sides.  There is a very beautiful vigraham of our Emperumanar Udayavar and small vigrahamas for His Acaryas including Thirukachi nambigal. Understand that there existed a bajanai madam since 250 years or so.  A few years ago, the place was renovated and idols were made replicating the Thanjavur art painting of the moolavar as we have darshan now. The idol of Sri Ramanujar is majestic and exquisite.

Next time, you are on this route, stop and have darshan at this temple seeking blessings of Lord Krishna and Udayavar.  The present Archagar Kesava Ramanuja dhasan is doing Phd in Srivaishnavism and can be reached @ 90032 70773.


உய்ய ஒரே வழி, உடையவர் திருவடி.  நம் ஆசார்யர்  ஸ்ரீ ராமானுசரின்

புகழ் பாடும் இராமானுச நூற்றந்தாதியினை  கற்று, பாடி  அனுபவிப்போம்.

 

adiyen Srinivasa dhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
12.9.2020






 

1 comment:

  1. Very nice about padur Rukmani Bhama samedha krishnar koil.அடியேன் சில மாதங்களுக்கு முன்பு ஒரு திருவாதிரை நன்னாளில் இந்த உடையவர் திருமஞ்சனம் ஸேவிக்கும் பாக்கியம் பெற்றேன்.மிக சிறப்பாக நடைபெற்றது
    .

    ReplyDelete