To search this blog

Tuesday, June 16, 2020

Praying Emperuman Sri Parthasarathi - வழுவின்றி நாரணன்றன் நாமங்கள் 2020


தாய்மொழிப்பற்று அவசியம்.  'தமிழனா இருந்தா இதை பகிரவும்' என பல குழுக்களில் பகிரும் பலருக்கு எந்த அளவு மொழி அறிவும், இலக்கண அறிவும் உள்ளது ?    இன்று காலை, ஒரு நண்பர் -  பொது முடக்கம் சமயத்தில், மிருகங்கள் நாட்டில் நடமாடுவதாகவும், அதிகாலை பல பறவைகள் கத்துவதை கேட்க முடிவதாகவும் எழுதி இருந்தார் !



The objective of World Health Organisation (WHO) was the attainment by all peoples of the highest possible level of health. Health, as defined in the WHO Constitution, is a state of complete physical, mental, and social well-being and not merely the absence of disease or infirmity.  .. ..in reality, what has happened – they have been floundering having accepted the initial Chinese version as it is and later making so many denials !

Globally, more than 7.8 million cases of COVID-19 have now been reported to WHO, and more than 430,000 deaths. It took more than 2 months for the first 100,000 cases to be reported. For the past two weeks, more than 100,000 new cases have been reported almost every single day ! ~ pathetic. Almost 75% of recent cases come from 10 countries, mostly in the Americas and South Asia. However, the World is also witnessing  increasing numbers of cases in Africa, eastern Europe, central Asia and the Middle East. Even in countries that have demonstrated the ability to suppress transmission, countries must stay alert to the possibility of resurgence. Last week, China reported a new cluster of cases in Beijing, after more than 50 days without a case in that city. More than 100 cases have now been confirmed.

While European borders reopened, China is scrambling to control the spread of a fresh outbreak of coronavirus in Beijing, amid fears of a second wave of the infection in the country. Reopening continued in Mexico and Brazil despite cases climbing in the two largest nations in Latin America. And New Zealand, which had eased the curbs, reported its first new cases since May 22.  Chinese diplomats have long had a reputation as well-trained, colourless, and cautious professionals who pursue their missions doggedly without attracting much unfavourable attention. But a new crop of younger diplomats are ditching established norms in favour of aggressively promoting China’s self-serving Covid-19 narrative. It is called  “wolf warrior”  diplomacy – and it is backfiring. Soon before the Covid-19 crisis erupted,  Chinese Foreign Minister Wang Yi, instructed the country’s diplomatic corps to adopt a more assertive approach to defending China’s interests and reputation abroad. The pandemic – the scale of which may have been far smaller were it not for the local Wuhan authorities’  early mistakes  – presented a perfect opportunity to translate this directive into action. China palpably failed and has spread the virus across the globe – should not be punished for this cruel act ?

தங்கள் நாட்டில் உருவான கரோனா தீநுண்மி தொடா்பான விவரங்களை ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்புக்கு தாங்கள் தாமதமாக அளித்ததாக வெளியான தகவலை சீனா மறுத்துள்ளது.   கரோனா தீநுண்மி என்ற அரக்கன் குறித்துத்தான் உலகெங்கும் பேச்சு. ஏன் இந்தச் சோதனை என்று மருண்டு இருண்டு உள்ளது உலகம். எவ்வாறு எதிா்கொள்வது என்பது குறித்துப் பல யோசனைகள், ஒன்றும் புரியாமல் குழப்பமும், பயமும் தான் மிஞ்சியுள்ளன.

கரோனா தீநுண்மி தாக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள  வழி தற்காப்பு. இதைக் கருத்தில் கொண்டுதான் அரசு, ‘விலகி இரு, தனித்திரு, வீட்டிலேயே இரு’ என்று வலியுறுத்தி வருகிறது. அத்தியாவசியத் தேவைகளுக்காக பொது முடக்கம் சிறிது தளா்த்தப்பட்டால், காணாததைக் கண்டதுபோல வெளியில் மக்கள் வந்து சந்தையில் பொருள்களை வாங்கிக் குவிக்கிறாா்கள்.  பொது முடக்கத்தை அமல்படுத்துவதில் நமக்கும்  முக்கியப் பங்கு உண்டு. இது சட்டம் - ஒழுங்கு பிரச்னையால் உருவான பொது முடக்கம் அல்ல; நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கான வழிமுறை. மக்கள் ஒத்துழைப்பு அவசியம். இது மக்கள் நன்மைக்கான கட்டுப்பாடு.

Giving up wrong ways,  worshipping Sriman Narayana without fail, reciting Narayana mantra ie., telling again and again the thousand names of Emperuman – unflinching faith and surrender to the lotus feets of Emperuman – will ensure good health and life to all His devotees – simple prescription of Sri Boothathazhwar. 


For us 20.3.2020  Ekadasi coupled with Thiruvonam did not dawn properly – at Thiruvallikkeni and in most other divyadesams, to the shock and utter  disappointment of all devotees,  there was no purappadu . .. as part of the Govt initiative in fighting dreaded Corona virus, HR&CE  directed that temple would be out of bounds for devotees – regular poojas would continue, but ordinary mortals cannot have His darshan.  So sad !! ~ it has continued for almost 3 months now !!

At Thiruvallikkeni Thavana Uthsavam went off well – not knowing the future, we relished the purappadu and Thirumanjanam in the Thavana Uthsava bungalow. During this Uthsavam at  Thavana Uthsava Bungalow, Perumal  takes rest under the roof made of dhavanam  (Tamil: தவனம்) [Artemisia pallens] – an aromatic herb in genus of small herbs or shrubs, xerophytic in nature.  This herb pervades great aroma and provides coolness.

'பறவைகள் கத்துமா !'   இவ்வாறு கூறுவது மரபு வழு. ஏனெனில், பறவைகளின் குரலுக்கு சரியான தமிழ் சொற்கள் வழக்கத்தில் உள்ளன.  :  ஆந்தை - அலறும்; காகம் கரையும்; கிளி          பேசும்; குயில்        கூவும்; கூகை        குழறும்; கோழி கொக்கரிக்கும்; சேவல் கூவும்; மயில் அகவும்; வண்டு      முரலும் !

தம்பி விரைந்துவா என்று கூப்பிட்டவுடன்,  வீட்டினுள் இருப்பவன் “இதோ வந்துவிட்டேன்” என்று கூறுவது தவறல்ல !   - வந்துவிட்டேன் என இறந்த காலத்தில் குறிப்பிடப்படுவது, இன்னமும் நடக்காத செயல் - எதிர் காலம் (எதிர்காலத்தில் கூறவேண்டியதை விரைவு கருதி இறந்தகாலத்தில் கூறுவது)  தொலைக்காட்சி நாடகங்களில் வேற்று மொழியில் இருந்து மாற்றப்பட்ட நிகழ்ச்சிகளை பார்க்கும்போது பல இலக்கண தவறுகளையும், பொருள் தவறுகளையும், வார்த்தை மாற்றங்களையும் கவனிக்கலாம்.

இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும். வழு என்பது பிழையான அல்லது குற்றமுடைய பேச்சும் எழுத்தும்.  இலக்கண முறையுடன் பேசுவதும் எழுதுவதும் வழாநிலை எனப்படும். வழுவாக இருப்பினும் இலக்கணமுடையதைப் போல ஏற்றுக்கொள்ளும் இடம் வழுவமைதி எனப்படும்.  வழு ஏழு வகைப்படும். அவை திணைவழு, பால்வழு, இடவழு, காலவழு, வினாவழு. விடைவழு, மரபுவழு என்பனவாம்.  . ‘நாய் கத்தும்’ என்று  கூறுவது மரபு வழு. ஏனெனில், நாய் குரைக்கும் என்பதே சரியான, பிழையற்ற ஒலி மரபாகும்.

வழுவு  என்பது வேறு.  இது ஒரு  பெயர்ச்சொல்.   இதனுடைய அர்த்தங்கள் : தவறு; குற்றம்; கேடு; பாவம்; பழிப்புரை.  இதோ இங்கே நம் பூதத்தாழ்வாரின் இரண்டாம் திருவந்தாதியில் இருந்து ஒரு அற்புத பாசுரம் :


பழிபாவம் கையகற்றிப் பல்காலும் நின்னை,
வழிவாழ்வார் வாழ்வராம் மாதோ, - வழுவின்றி
நாரணன்றன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்தும்,
காரணங்கள் தாமுடையார் தாம்.

அபகீர்த்தியையும், பாவங்களையும் புறம் நீக்கி,  எப்போதும்  எம்பெருமானையே நினைந்து  வழிப்பட்டு ஆச்ரயிக்குமவர்களும்,  எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனுடைய  திருநாமங்களை நன்கு உணர்ந்து, குற்றங்கள் இல்லாமலால்,   எப்போதும் குறைவற  அழகாகத் துதிப்பவர்கள் - வாழ்வின் எல்லா நல்லதுகளையும் அடைந்து, மகிழ்ச்சியான வாழ்க்கை  வாழப்பெறுவர்கள்.  நாம் செய்ய வேண்டிய எளிமையான செயல் - ஸ்ரீமந்நாரணனின் நாமங்களை இடை விடமால் ஓதி, அவன் திருவடி தாமரைகளில் சரண் புகுவதே !

On 3rd Mar 2020,  it was day 2 of Thavana Uthsavam of Sri Parthasarathi Emperuman – here are some photos of that purappadu. 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
16.6.2020








No comments:

Post a Comment