To search this blog

Monday, June 1, 2020

Sri Kallazhagar Thirukkovil, Madurai - வளரிளம்பொழில் சூழ் மாலிருஞ்சோலை


"வர்த்திஷ்ணு பாலத்ருமஷண்ட மண்டிதம் வநாசலம்” என்று  புகழப்படும் திவ்யதேசம் எது தெரியுமா ?




Corona – Covid 19 has changed the lives of the people totally and perhaps forever. There is nothing to be scared of, underlined Delhi chief minister Arvind Kejriwal, stressing that the state government is four steps ahead of the coronavirus disease. The CM also emphasised that the country cannot be in a permanent lockdown.  Delhi is witnessing a surge in Covid-19 cases, and in a tiny State, 17386 is very large numbers yet the CM speaks bravado ! On the otherside, the  Delhi government is seeking  Rs. 5,000 crore assistance from the Centre to be able to pay salaries to its employees ! ~ not a paradox, but politics !

A day after the Centre announced lockdown exit plan 'Unlock 1', the Tamil Nadu government today extended the lockdown till June 30. Chief Minister Mr Edappadi K Palaniswami, however, allowed partially opening up of public transport services.Under the new rules from tomorrow, private companies are also allowed to have more employees in their premises. IT companies and IT-enabled services can function with 20% employees, upto a maximum of 40 persons, but Temples will not yet be open !

"வர்த்திஷ்ணு பாலத்ருமஷண்ட மண்டிதம் வநாசலம்”  என்றும் , வநகிரி என்று வடமொழியிற் கூறப்படுவதும்,   இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ்சோலையென்னும் பொறுப்பிடம் மாயனுக்கென்பர்  நல்லோர்” என்றபடி ஆன்றோர் கொண்டாடப்பெற்ற மஹிமையுடையதுமானதொரு திவ்ய தேசம்  பாண்டி நாட்டு " திருமாலிரும் சோலை" எனும் கள்ளழகர் திருக்கோவில். 


வளரிளம்பொழில் சூழ்  மாலிருஞ்சோலை என்பதைக் கூரத்தாழ்வான் ஸூந்தரபாஹு  ஸ்தவத்தில் அப்படியே மொழிபெயர்த்து  அருளியிருக்கின்றார்.   “ஆயிரம் பூம்பொழிலுமுடை மாலிருஞ்சோலையதே” என்றபடி மிகப் பெரிய பல சோலைகளையுடைய மலையாதலால் “மாலிருஞ்சோலைமலை” என்று திருநாமமாயிற்று. மால்-பெருமை; இருமை-பெருமை, இவ்விரண்டும் தொடர்ந்து ஒரு பொருட்பன்மொழியாய் நின்றன.

Most often in Tamil movies, Madurai is depicted as a city of violence – one would find people roaming freely with ‘aruvals’ tucked on the back of the shirt !!  -  the beautiful and religious land of Madurai was   originally a forest known as Kadambavanam.  King Kulasekara Pandya cleared the forest and built a temple around the Lingam.  On the day the city was to be named, Lord Shiva is said to have appeared and drops of nectar from his hair fell on the town. So, the place was named Madurai – mathuram meaning “sweetness” in Tamil. Madurai has a rich historical background in the sense that Lord Shiva himself performed sixty-four wonders called “Thiruvilaiyadals”.

It has a rich history – as early as the 3rd century BC, Megasthanes visited Madurai. Later many people from Rome and Greece visited Madurai and established trade with the Pandya kings. Madurai flourished till 10th century AD when it was captured by Cholas the arch rivals of the Pandyas. The Cholas ruled Madurai from 920 AD till the beginning of the 13th century. In 1223 AD Pandyas regained their kingdom and once again become prosperous. In 1323, the Pandya kingdom including Madurai became a province of the Delhi empire, under the Tughlaks.  There were battles and plunderings by marauding Islamic invaders.  The 1371, the Vijayanagar dynasty of Hampi captured Madurai and Madurai became part of the Vijayanagar empire. After the death of Krishna Deva Raya (King of Vijayanagar empire) in 1530 AD, the Nayaks became independent and ruled the territories under their control. Among Nayaks, Thirumalai Nayakkar  (1623-1659) was very popular. The Raja Gopuram of the Meenakshi Amman Temple, The Pudu Mandapam and The Thirumalai Nayakar’s Palace are living monuments to his artistic fervor.




மதுரையின் மணிமகுடமாகக் கொண்டாடப்படுகின்ற சித்திரைத் திருவிழாவின் அற்புதமான நிகழ்வு, வைகை  ஆற்றில் அழகர் இறங்கும் வைபவம்! இதைக் கண்டு களிப்பதற்காக பக்தர்கள் பல லட்சம்பேர் மதுரையெங்கும் கூடுவர். தீர்த்தவாரி, சாபவிமோசனம், தசாவதாரம், பூப்பல்லக்கு உள்ளிட்ட விழாக்களில் கலந்து கொள்வதற்காக அழகர்மலை அருள்மிகு சுந்தரராஜபெருமாள் கள்ளழகராக மதுரையை நோக்கிப் பவனி வருகிறார்.   மலையில் தொடங்கி வண்டியூர் வரையிலும் 30 கி.மீ. தூரத்துக்குப் பயணத் திருவிழாவாக அழகர் திருவிழா நடைபெறுகிறது.  பெருமாளை ஏளப்பண்ணிக்கொண்டு  வரும் ஸ்ரீபாதம்தாங்கிகள் மற்றும் உடன் வருவோர் இளைப்பாற வழியெங்கும் மண்டகப்படி மண்டபங்கள் உண்டு.  மன்னர் காலத்தில் வழியெங்கும் ஆங்காங்கே கல்மண்டபத் திருக்கண்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவை காலப்போக்கில் வணிகர்களால் பெருக்கப்பட்டுவிட்டது. தற்போது மொத்தம் 445 மண்டபங்கள் அழகருக்காக அமைக்கப்படுகின்றன.   கள்ளழகர், மீனாட்சி திருக்கல்யாணத்திற்க்காக வருவதாய்  வைகையாற்றில் இறங்கி வண்டியூர் சென்று , தன் மலைக்குத் திரும்புவதாய் சொல்லப்படும் ஐதீகத்திற்கு புராண ஆதாரம் ஒன்றும் இல்லை.  திருமலை நாயக்கர் அல்லது வேறு மன்னர் ஆட்சி காலத்தில் சைவ வைணவ ஒற்றுமைக்காக ஏற்பட்டிருக்கலாம்.




மதுரை மாநகரத்தின் நடுவே அழகுற மிளிர்வது திரு கூடல் அழகர் திருக்கோவில்.   முற்கால பாண்டியர்கள் குல பரம்பரையாக வழிபட்டும் திருப்பணிகள் செய்தும் வந்த தொன்மையை கொண்டது. பெரியாழ்வாரால் 'ஸ்ரீமந்நாரணனின் பரத்துவம்' -    எம்பெருமான் ஸ்ரீமன் நாரணனே பரம்பொருள் என நிர்ணயம் செய்த தலமாகவும், திருப்பல்லாண்டு விளைந்த திருத்தலமாகவும் விளங்குகிறது. 

மதுரை நகரத்தில் இருந்து சுமார் 20  கி.மீ. தொலைவில் உள்ள அழகர் மலையில் அமைந்துள்ள ஒரு அற்புத திருக்கோவில் திருமாலிருஞ்சோலை எனும் திவ்யதேசம்.  அழகர் மையல், விருஷபாத்ரி, சோலை மலை என வழங்கப்படும் இந்த ரம்மியமான இடம் ஒரு வனப்பிரதேசமாக இருந்தது.  பெரியாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் இந்த பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளனர்.  இங்குள்ள அற்புத மண்டபங்கள்,   மற்றும் இசைத் தூண்கள் பிரமிக்க வைக்கும்.  இங்குள்ள மஹாமண்டபம்  'பொன் மேவிய சுந்தர பாண்டியன் கொறடு' என பெயர் பெற்றுள்ளது.




இங்கே மூலவர் நின்ற திருக்கோலத்தில் பஞ்ச திவ்விய ஆயுதங்களுடன் கள்ளழகராக காட்சி அளிக்கிறார்.  உத்சவர் அழகே உருவான சுந்தரபாஹூ, சுந்தரராஜர்.  தாயார் கல்யாண சுந்தரவல்லி தாயார்.  தாயார் சன்னதி பெரிய அழகான தனி சன்னதி.  திருக்கோவில் மதிலை ஒட்டி நூபுர கங்கைக்கு செல்லும் பாதை உள்ளது.  அழகர் மலைமீது எழுந்தருளி திருமஞ்சனம் கண்டருளுகிறார். நம்மாழ்வார் இவ்வெம்பெருமானை பாடிய பாசுரங்களில் ஒன்று :

கிளரொளியிளமை கெடுவதன்முன்னம்,
வளரொளிமாயோன் மருவியகோயில்,
வளரிளம்பொழில்சூழ் மாலிருஞ்சோலை,
தளர்விலராகில் சார்வது  சதிரே.





மேன்மேலுங் கொழுந்து விட்டுக் கிளர்கின்ற ஞானவொளியையுடைய இளம்பிராயம் அழிவதற்குள்ளே மாந்தர்கள் மனமுணர்ந்து  குன்றாத தேஜஸ்ஸையுடையனான எம்பெருமான் நித்ய வாசம்  செய்கின்ற ஆலயமாய், வளர்கின்ற இளஞ்சோலைகளால் சூழப்பட்டதான  திருமாலிருஞ்சோலை மலையை   தளர்ச்சியில்லாதவராகி அடைவதுதான் ஸ்பரூபாநரூபம் எனவே அந்த எம்பெருமானை சென்று சேவித்து எல்லா நலன்களையும் அடைவீர்கள் என அருளுகிறார் ஸ்வாமி நம்மாழ்வார்.  பிற்கால இலக்கியங்களான, 'அழகர் கலம்பகம்', 'அழகர் அந்தாதி', 'அழகர் கிள்ளை விடுதூது', 'சோலைமலைக் குறவஞ்சி' ஆகிய நூல்கள் அழகர் கோயிலின் சிறப்பைப் போற்றுகின்றன.

பாண்டிய மன்னர்கள், விஜயநகர மன்னர்கள், மதுரை நாயக்க மன்னர்கள் ஆகியோர் இக்கோவில்  திருப்பணிகளை செய்துள்ளனர்.  கொரோனா  ஊரடங்கு காரணமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏப்ரல் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற இருந்த சித்திரை திருவிழாவும், தேரோட்டமும், உலகப் புகழ்பெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும்  ரத்து செய்யப்பட்டன.

Every year for the Chithirai Thiruvizha lakhs of people would assemble at Madurai. There will be sea of humanity along all the roads that lead to the  Vaigai riverbed as the Lord attired in enrapturing silk, mounted on a golden horse in a galloping posture would  the river amidst chanting of hymns.  It is procession of Lord Kallazhagar,  the presiding deity of Alagarkoil, which is in the northeast direction of Madurai. The Lord Sundararaja Perumal adorns pancha ayuthas. This is a very important divyadesam sung by Perialwar, Andal, Thirumangai, Bhoothathalwar, Peyalwar and Nammalwar. The temple is situated in a picturesque locale. The hill nearby resembles the shape of a cow, and hence the name Vrishabhadri. The Noopura Ganga theertham is the Silambaar river. It is believed to have emanated from the anklet of Vishnu. Before proceeding to Vaigai, the Lord is adorned with a thulsi garland from Sri Villiputhur Andal koil.

After the sordid episode of losing his eyes, KoorathAzhwan reached the town of Thirumalirumcholai (Kallalagar koil) Swami gave us gift of   5 granthas called ‘panchasthavams’  of which  Sri Sundara bAhu Sthavam (132 Slokas) is on Azhagar of Tirumalirum Solai.

Here are some photos of the Uthsavar and the Kallazhagar temple.  Before entering the temple, one could not miss the 18 steps popularly known as ‘18mpadi Karuppanna swami’ the local guardian worshipped by people.

adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
31.5.2020.









No comments:

Post a Comment