To search this blog

Monday, November 5, 2018

Swami Manavala Mamunigal 4 ~ purappadu with Sri Varadha Rajar 2018


பூர்வாசார்யர்கள் தாமிட்ட உரைகளை மாற்றாமல், அதன்படியே பொருள் உரைத்து, நமக்கு நல்வழி காட்டியவர் நம் சுவாமி மணவாள மாமுனிகள்.  ஸ்ரீவைணவர்கள் ஆகிய நாம் யாரிடத்தில் சரண் அடைகிறோம் ? - அனைத்துலகுமுண்டுமிழ்ந்த  பேராழியான் திருத்தாமரைகளிலே !    அவனது பெருமை -  ‘அவன் உபாயமாகுமிடத்து வேறொரு உபாயத்தையும் எதிர்பாராமல் தானே பூர்ணோபாயமாயிருந்துகொண்டு காரியம் தலைக் கட்டவல்லவனாகும் பெருமை'' என்று பட்டர் அருளிச்செய்வராம்.


Mamunigal is fondly known as ‘Yatheendra Pravanar’ arising out of his irresistible attachment to the lotus feet of Sri Ramanujar [Yatheendrar].  Before taking asceticism, Sri Manavala Mamunigal travelled wide and vast to various places and he stayed in Srirangam worshipping Namperumal Srimannathar.  With transformation of Uthama Nambi, Mamunigal grew closer to Namperumal and He started conversing with our Acaryar.   


The Jeeyar who established our Thennacharya Sampradhayam believed and practised the tenet of following the words of early Acharyars as they are [munnor mozhintha murai thappamal kettu]. Mamunigal’s commentaries are characterised by great clearness and completeness of exposition.  He had 8 famous disciples known as Ashtadig Gajas who were to take over the mantle and spread Sampradhayam for posterity.


We are enjoying the Thiruvavathara uthsavam of Swami Manavala Mamunigal and at Thiruvallikkeni on day 4 – it was Thiruppavai, Perumal thirumozhi inside and Nanmukan thiruvanthathi in the periya mada veethi.  Today being Hastham nakshathiram, Mamunigal had purappadu with Sri Varadharajar.


ஆரே  அறிவார் அனைத்துலகும்  உண்டுமிழ்ந்த,
பேராழியான் தன் பெருமையை,- கார் செறிந்த
கண்டத்தான் எண் கண்ணான் காணான், அவன் வைத்த
பண்டைத்தானத்தின் பதி.

ஈரேழு  உலகங்களையும்,  (பிரளய காலத்தில்) உண்டு  (பிறகு) உமிழ்ந்த  பேராழியான் (சிறப்பு  வாய்ந்த திருச்சக்கரமான திருவாழிதனை) தனது கரங்களில் ஏந்திய எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் பெருமையை அறிபவர் ஆரே ! என கேள்வி எழுப்பிய திருமழிப்பிரான், தனது நான்முகன்  திருவந்தாதியிலே தானே பதிலையும் அளிக்கிறார்.  .. அவ்வளவு சிறப்பு வாய்ந்த எம்பெருமானின் மகிமைகளை முழுமையாய் அறியக் கூடியவர் யார்? (ஒருவருமில்லை).  அவ்வெம்பெருமான்  முன்பே ஸாதித்து வைத்த பரமபதமார்க்கமென்னத் தகுந்த சரமச்லோகத்தை, நீலகண்டனான சிவனும், நான்கு முகங்களை உடையவனும் கூட காண்கின்றிலர் .. .. அவர்களே   அறியமாட்டாதபோது மற்றபேர்கள் அறியமாட்டார்களென்பது சொல்ல வேணுமோ? .. .. நமக்கு எளிய உபாயம் அவனது திருவடிகளை பற்றி இருப்பதே ! ~  திருமழிசைப்பிரான் தனது நான்முகன் திருவந்தாதியில்.



Thirumazhisaipiran in his Nanmukhan thiruvanthathi asks thyself - Who can understand the glories of the Lord holding discuss (Chakram) – the Lord who swallowed the earth at the time of deluge and remade the entire Universe ?  - He answers stating that the darkthroated Shiva and the one with 4 heads and 8 eyes, Brahma  too do not know the path to the ancestral home of Vaikunta.  Only Sriman Narayana is capable of granting this and it is for us to lay at His Golden feet and do kainkaryam unto him.

Here are some photos taken during today’s evening purappadu at Thiruvallikkeni divaydesam.

~  அடியேன் ஸ்ரீனிவாச தாசன் (மாமண்டூர் ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்)
5th Nov. 2018







No comments:

Post a Comment