To search this blog

Thursday, June 24, 2021

Celebrating - "Sri Sailesa thaya pathram' Thaniyan - ஸ்ரீசைலேசதயாபாத்ரம் " தனியன் திருவவதார வைபவம்

Celebrating Thaniyan - "Sri Sailesa thaya pathram'

- ஸ்ரீசைலேசதயாபாத்ரம் " தனியன்  திருவவதார வைபவம்

 


Today is Masa thirunakshathiram of our Acaryar Swami Manavala Mamunigal -  the most reverred matchless Acharyar of our Srivaishnavaite philosophy, practised by Thennacharya Srivaishnavas.  

Mamunigal the incarnation of Sri Adisesha,  is known as ‘Yathindra Pravanar’ arising out of his irresistible attachment to the lotus feet of Sri Ramanujar known as ‘Yatheendrar’.  He lived for 73 years on this earth performing many Kainkaryams  at Sri Rangam and undertook many pilgrimages to many  Sri Vaishnava Divyadesams spreading knowledge and bakthi culture.   His patent style was to elucidate the pramanams fully   ‘following the words of the Purvarcharyas without deviating a wee bit’.  

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலர் நிம்மதியற்று உள்ளனர்.  கொரோனா தீநுண்மி உலகோரை பயமுறுத்தி உள்ளது.  இந்த கடின காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எழும் !! ஆயிரம் ஆண்டுகள் முன்பு திருமங்கைமன்னன் நமக்கு அருளிய உபதேசம் இந்த கொரோனா காலகட்டத்தில் வெகுவாக பொருந்தும்.  நிலை கேட்ட மாந்தர்களே ! ~ பொருளையும் பிற இன்பத்தையும் தேடி அலையாதீர்.  ஸ்ரீமன் நாரணனே நமக்கு என்றென்றும் அழியாத நிதி. அவன் திருவடி நீழலில் உள்ளோர்க்கு எந்த தீங்கும் நடக்காது என்பது திண்ணம்.

 




இன்று ஆனித் திருமூலம்  - ஸ்ரீ வைணவர்களுக்கு ஒரு சீரிய நாள்.

 

திருக்கோவில்களில் கவனித்து இருப்பீர்.  திவ்யப்ரபந்தம் அநுஸந்திக்கும் முன் தனியனை பாடி துவங்குவர்.  புறப்பாடு வேளைகளில் கவனித்து இருக்கலாம்.  பெருமாளின் ஸ்ரீசடகோபம் மரியாதையை  பெற்றுக்கொண்டவுடன் முதல் தீர்த்தக்காரர்  - தனியனை  ஆரம்பிக்க, அவருடன் மொத்த கோஷ்டியாரும் திவ்யப்ரபந்தத்தை அழகாக இன்னிசையில் சேர்ந்து இசைப்பர்.   தனியன் என்பது பொதுவாக ஆசார்யரைப் பற்றிய புகழ் பாடும்  துதி, அவரது சிஷ்யரால் இயற்றப்படுவது. அந்தந்த நூலின் உரையாசிரியரை, அவர்தம் சிறப்பை அறிமுகப்படுத்துவது எனலாம்.

 

இன்று ஆனித் திருமூலம் - "ஸ்ரீசைலேச தயாபாத்ரம் " தனியன் அவதரித்த நன்னாள். இந்த நன்னாளிலே  பெருமை வாய்ந்த திருவரங்கம் திருக்கோவிலிலே பெரிய பெருமாள் திருமுன்பே    ஆசார்ய சார்வபௌமரான அழகிய மணவாள மாமுனிகள் ஓராண்டு திருவாய்மொழி ஈடு காலக்ஷேபம் சாதித்து பூர்த்தி செய்த நன்னாள்.  அந்த வைபவத்தில் - 'ஆனி மாதம், மூலம் நட்சத்திரம்'  அன்று நம்பெருமாள் சிறுவனாக வந்து, மாமுனிகள் முன்பு  'ஸ்ரீ சைலேச தனியன்' திருவாய் மலர்ந்தருளி -  நமக்கு இந்த அற்புத தனியன் உதித்தது.  எனவே இன்று  ஸ்ரீசைலேச திருவவதார வைபவம்' அதாவது, ஸ்ரீசைலேச மந்த்ரம் பிறந்த நாள் 

நம் பூர்வாசார்யர்கள் வாக்கின் படி  ஸ்ரீரங்கநாயகரான பெரிய பெருமாள் மணவாள மாமுனிகளை ஆச்சாரியனாக பெறதிருவுள்ளம் விரும்பி, அர்ச்சகரிடத்தில் 'நமக்கு மணவாள மாமுனியினிடத்திலே திராவிட வேதமான திவ்யபிரபந்த வ்யாக்யானங்கள் (விளக்க உரை) கேட்க வேணும். ஆகையாலே மாமுனியை கருடமண்டபத்திற்கு அழைத்து வரச் செய்வீர் ' என்று ஆணை பிறப்பித்தார். நம்பெருமாளின் ஆணைப்படி கருட மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்ட மாமுனிகளும்   ஸ்ரீவைஷ்ணவ  கோஷ்டியினருக்கு  பெரியவண்குருகூர் நம்பியான நம்மாழ்வாருடைய திருவாய்மொழி பாசுரங்களின் விளக்க உரையை ஈடு முப்பத்தாறாயிரத்தின் அடிப்படையில் அருளினார்.    கலியுகம் 4534 ம் ஆண்டு பிரமாதீச வருடம் ஆனி மாதம்,   பெளர்ணமி திதி, மூல நட்சத்திரம்   நாள் வரை தொடர்ந்து பத்து மாதங்கள் மாமுனிகள் வ்யாக்யானம் செய்ய மிகவும் உகந்து கேட்டு மகிழ்ந்தார் நம்பெருமாள். 

நாம் உகக்கும் நம்பெருமாள் ஸ்ரீரங்கநாதனாலேயே அருளைப்பெற தனியன் : 

ஸ்ரீசைலேச தயா பாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்

யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம் 

( திருமலையாழ்வாரின் தயைக்கு இலக்கானவரும், ஞான பக்தி முதலான குணங்களை கடலாகவும், யதீந்த்ரரான எம்பெருமானாரிடத்தில் அன்பு மிக்கவராயுமிருக்கிற அழகிய மணவாள மாமுனியை வணங்குகிறேன்.) 

ஸ்ரீவைஷ்ணவ திருக்கோவிலிற்கு சென்றால் திருத்துழாய், தீர்த்தம் ப்ரசாதங்களுடன், ஸ்ரீசடகோபமும் கிடைத்தல் மிக சிறப்பானது.  சுவாமி மணவாள மாமுனிகளின்"திருவடிநிலைகள்" (திருப்பாதுகைகள்) இன்றும், ஸ்ரீரங்கத்தில் தெற்கு உத்திரவீதியில் உள்ள, மணவாள மாமுனிகளின் மடத்தில் இன்றுவரை உள்ளது.   மாமுனிகள் திருவடிகளின் பெயர் -  “பொன்னடியாம் செங்கமலம்” அவரது பொன்னடி சார்த்திக்கொள்ளுதல் நமக்கு சிறப்பு. 

இன்றளவும் அனைத்து தென்னாசார்ய திவ்யதேசங்களிலும், திருக்கோவில்களில், மடங்களிலும், இல்லங்களிலும் திவ்யப்ரபந்தம் - ஸ்ரீ சைலேச தயா பாத்திரம் தனியன் சொல்லியே சேவிக்கப்பெறுகின்றது. நமக்கு 'ஸ்ரீசைலேச' தனியன் கிடைத்த இந்த சிறப்பான நாளை ஸ்ரீவைணவர்களான நாம் அனைவரும் கொண்டாடி மகிழ்வோம். 

At Thiruvallikkeni and other divyadesams, 10 day Thiruvavathara Uthsavam of our Acharyar is being celebrated grandly with sarrumurai culminating on ‘Aippaisyil Thirumoolam’ -  27th Oct 2014 was the ninth day of the Uthsavam.   In the morning it was siriya Thiruther for our Acharyar and in the evening it was fragrant ‘Pushpa Pallakku’- the palanquin made up of  flowers.’ Favourite memories are triggered by our sense of smell ~ flowers are admired for their beauty,  exquisite shapes, spectrum of colours and more so for their fragrance.  Here are some photos of the grand pushpa pallakku purappadu of Swami Manavala mamunigal

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் !

'ஆச்சாரியன் திருவடிகளே சரணம்'

'மணவாள மாமுனிகளே இன்னும் ஒரு நூற்றாண்டிரும் '. 

 
~adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
24th June 2021 











Wednesday, June 23, 2021

‘Aani Anusham ~ Sri Natha Munigal Sarrumurai’ – 2021

 

‘Aani Anusham ~ Sri Natha Munigal Sarrumurai’ – 2021

-at avathara sthalam

 

இன்று 23.6.2021 ஆனி அனுஷம்  ~ நம் ஆசார்யர் சுவாமி நாதமுனிகள் சாற்றுமுறை. ஸ்வாமி நம்மாழ்வாரின் அருள்பெற்றவரும் , நானிலத்தில் குருவரையை நாட்டியவருமான ஸ்வாமி நாதமுனிகளின் திருநக்ஷத்ரம்.. 

நம: அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராஸயே ..

நாதாய முனயே அகாத பகவத் பக்தி ஸிந்தவே . 

“சிந்திக்க முடியாத, அற்புதமான, எம்பெருமானுடைய நிர்ஹேதுக க்ருபையினால் கடல் போல ஞானம், பக்தி, வைராக்யத்தைப் பெற்ற நாதமுனிகளை வணங்குகிறேன்” - ஆளவந்தார் ஸ்ரீமந்நாதமுனிகளின் உண்மையான செல்வமான ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் பெருமையை வணங்குகிறார். ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின், அடிப்படையே குருபரம்பரை தான். நம் ஒவ்வொரு செயலும் மங்களம் பெறச் செய்வது, ஆசார்ய ஸம்பந்தம் மட்டுமே. ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யபரம்பரை ஸ்ரீமந்நாராயணனிடமிருந்து தொடங்குகிறது. பிராட்டியார், சேனை முதலியார், ஸ்வாமி நம்மாழ்வார் என்னும் வரிசையில் நாதமுனிகள்.   



கொரோனா கொடுமையில் மக்கள் கோடை கொடுமையை மறந்து விட்டனர் என தோன்றுகிறது.  இந்த வருஷம் வெயில் அதிகம் போன்ற விமர்சனங்கள் அதிகமில்லை.  ஒவ்வொரு கோடைக் காலத்திலும் நீர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறோம். ஓராண்டில் ஆறு மாதங்களுக்கும் மேலாக, தமிழகத்தின் பல மாவட்டங்கள் வறட்சியையே சந்திக்கின்றன. தமிழக நிலப்பரப்பின் பெரும்பான்மைப் பகுதி வானம் பார்த்த பூமியாகவே உள்ளது. நம் முன்னோர்கள், தங்கள் நீர் மேலாண்மைத் திறன் மூலமாக, தமிழ்நாட்டைச் செழிப்பாகவே வைத்திருந்தனர்.  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ' 'ஏரிக்கரை பஸ் ஸ்டாப்''  என்று  கேள்விப்படலாம்.  'அந்த இடத்தில் ஏரி எங்கே இருக்கிறது' என அங்குள்ளோருக்கு கூட தெரியாது !!   இப்படி குளக்கரை ஸ்டாப்பிங், குளத்தூர் பஸ் ஸ்டாண்டு, ஆத்தூர் மார்க்கெட், ஏரிக்கரை  என்ற பெயர் உள்ள இடங்களில் பெயருக்கு காரணங்கள் காணாமல் போய்  அவ்விடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் வந்திருக்கலாம். நீர் ஆதாரங்களை,  ஆதாரம் இல்லாமல் அழிப்பது அதிகாரத்தில் இருப்பவர்களின் சிரமம் இல்லாத அழிச்சாட்டியமாக இருக்கிறது.   70 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த பல ஏரிகள் இப்போது இல்லை. நகரம் வளர வளர அதற்கு ஏற்ப நீர் நிலையும் வளர வேண்டும் என்பதுதான் நேர்மையான விகிதம். ஆனால், தற்போது சென்னையில் இருக்கும் ஏரிகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.  

செங்கல்பட்டு  மாவட்டத்தில் காவிரி, தாமிரபரணி, வைகை ஆறுகளைப் போல் ஜீவ ஆறுகள் எதுவும் இல்லை. எல்லாமே மழை நீர் வடிகால் ஆறுகள். மலையில் இருந்து புறப்படுபவை அல்ல. அதனால் இங்கே ஏரிகள் அதிகம் உருவாக்கப்பட்டன. வீரநாராயணர் (வீராணம்) ஏரி, மதுராந்தகம் ஏரி, பூண்டி ஏரி, புழல் ஏரி, சோழவரம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, வியாசர்பாடி ஏரி, பொன்னேரி போன்ற பெரிய ஏரிகள் என்று சென்னையைச் சுற்றி உள்ளன. அது தவிர ஒவ்வொரு ஊருக்கும் ஒன்றிரண்டு சிறிய ஏரிகள் இருக்கும். செங்கல்பட்டுக்கு ஏரி மாவட்டம் என்று ஒரு பெயரும் உண்டு.  

பொன்னியின் செல்வன் படித்தவர்களுக்கு வந்திய தேவனையும் அவனது குதிரை மெல்ல நடந்து சென்ற கடல் போன்ற வீராணம் ஏரியையும் நன்கு தெரியும்.   தமிழகத்தில் வாழ்ந்து வரும் 50வயதுக்கு மேற்பட்டோருக்கு வீராணம் ஏரி, அதனை சுற்றிய ஊழல், பெரிய பெரிய பைப்புகள், ஒரு காலத்தில் அதனுள் குடித்தனம் நடத்திய ஏழைகள் என பல நினைவுகள் மலரும்.  வாணர் குல மாவீரன் வல்லவரையன் வந்தியத்தேவன் சோழப் பேரரசின் கீழ் "வல்லவரையர் நாடு" என்ற சொல்லப்பட்ட பிரம்மதேசத்தை சுற்றியிருந்த சிறுநாட்டு மன்னர் ஆவார். முதலாம் இராஜராஜன் மற்றும் முதலாம் இராஜேந்திரனின் படைகளின் மாதண்ட நாயக்கராக இருந்தவர். முதலாம் இராஜராஜனின் தமக்கையான குந்தவை பிராட்டியின் கணவரும் ஆவார்.  வந்தியத்தேவனின் கதாபாத்திரமே பொன்னியின் செல்வன் கதையின் கதாநாயகனாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. முதற் பாகத்தில் இருந்து இறுதிப்பாகம் வரை வந்தியத்தேவனை சுற்றியே கதை நகர்வதைக் காணலாம்.  அவரது குதிரை வீராணம் ஆற்றின் கரையில் பதினெட்டாம் பெருக்கு அன்று மக்களிடையே நடந்து போவது உங்களில் பலருக்கு ஞாபகம் வரலாம் !   

                             Chennaites would well remember this project that ran into many a political troubles ~  first conceived in mid 1970s,  the Veeranam project, was to deliver water to the parched metropolis of Chennai.  The pipes at some point were lying ungainly at many places, providing housing for some .. .. years later water was not to  flow from the parched Veeranam tank, 235 km away from the city, but instead the Chennai Metropolitan Water Supply and Sewerage Board (Metrowater)  dug out  a network of 45 deep borewells north of the tank.  

The reference pops up often.  A couple of years ago the then Chief Minister Edappadi K. Palaniswami announced that corruption and other criminal cases pending against around 10 former DMK Ministers will be tried by a special court the State government had set up. Addressing an event marking the 47th foundation day of the AIADMK in Veerapandi town, Mr. Palanisami claimed that scam in execution of the Veeranam project was still lingering in the minds of the people,  a controversy that has awakened from a two-decade long slumber.  The brainchild of a former Tamil Nadu chief minister, C.N. Annadurai, implementation tried during Karunanidhi reign, MGR had it scrapped in 1976, citing corruption and technical non-viability.  

At Chennai, in summer we start worrying about the drinking water as the storage capacity in the tanks that supply water to the metropolis run dry.  In the  sweltering heat – residents are worried about water shortage.  Every street we see water tankers and people running after them with colour colour plastic pots.  Though there are four reservoirs of Poondi, Cholavaram, Redhills and Chembarakkam as lifelines for drinking water needs of Chennaites, there is another important water source that supplements daily water supply to the city and that is more than two hundreds of kilo meters away……  The lake spoken in Ponnyin selvan is  about is 235 km away from Chennai, yet becoming its lifeline, supplying roughly 50 to 180 million litres of water to the city every day.  The lake owes its existence to Chozha  prince Rajaditya  who in  the 10th   century  assigned his men the task of excavating this tank, to collect the surplus waters of the Kollidam River.  

                             In the 1830s,  Arthur Cotton, the engineer who later harnessed the waters of the Krishna and Godavari, studied the tank in detail. He noted that there was no serious defect in the tank (this, 900 years after it was constructed).  The Veeranam lake derived its name from the nearby place ‘Veera Narayana puram’ which is of great significance to Srivaishnavaites.  




வீராணம் ஏரி தமிழ்நாட்டின், கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோயில் முதல் தொடங்கி சேத்தியாதோப்பு அருகில் உள்ள பூதங்குடி கிராமத்தில் முடிவடைந்து இதனுடைய உதிரி நீரானது சேத்தியாதோப்பில் செல்லும் வெள்ளாற்றில் கலக்கின்றது.   இது கி. பி. 907 முதல் 953 வரை சோழர்கள் காலத்தில் வெட்டிய ஏரியாகும். இந்த ஏரி இராஜாதித்ய சோழன் என்னும் இளவரசரால் வெட்டப்பட்டது. இராஜாதித்ய சோழன் தந்தையான முதலாம் பராந்தக சோழனின் இயற்பெயர் வீரநாரயணன் ஆகும். இப்பெயரே வீரநாரயணன் ஏரி என அழைக்கப்பட்டது, கால போக்கில் இப்பெயர் வீராணம் ஏரி என அழைக்கப்பட்டது. .இந்த ஏரி 15 கி.மீ நீளமும், 5 கி.மீ அகலமும் கொண்ட மிகப்பெரிய ஏரி ஆகும்.  இதன் கொள்ளளவு 1445 மில்லியன் கன அடி ஆகும்.   வீராணம் ஏரிக்கு அரியலூர், பெரம்பலூர் பகுதியில் பருவமழை காலத்தில் தண்ணீர் வரும். அதோடு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் இருந்து வடவாறு வழியாக வந்து சேருகிறது.  இந்த ஏரியில் இருந்து குழாய் மூலம் சென்னைக்கு குடிநீர் அனுப்பப்படுகிறது. வீராணம் ஏரிக்கு அரியலூர், பெரம்பலூர் பகுதியில் பருவமழை காலத்தில் தண்ணீர் வரும். அதோடு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் இருந்து வடவாறு வழியாக வந்து சேருகிறது.  

தற்போது வீராணம் ஏரியை மராமத்து பணிக்காக அங்குள்ள தண்ணீர் அனைத்தும் வெளியேற்றப்பட்டது. கடந்த 2 மாதமாக பராமரிப்பு பணி நடைபெற்று வந்தது. இதனால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதும் நிறுத்தப்பட்டது.  மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம்.   

நாதமுனிகளும், யாமுனாச்சார்யராகிய ஆளவந்தாரும் பிறந்த திருத்தலம், ‘காட்டு மன்னார் கோவில்’. வீரநாராயணபுரம் என சோழர்கள் காலத்திலும் தற்கால வீராணம் ஏரி உள்ள இடத்தில்  உள்ள கோவில் சுவாமி நாதமுனிகள்  அவதார திருத்தலம்.   ஸ்ரீமந்நாதமுனிகள், இத்திவ்ய தேசத்தில், ஈச்வர பட்டருக்கு திருக்குமாரராக அவதரித்தார். இவருக்கு ஸ்ரீரங்கநாதமுனி, நாதப்ரஹ்மர் என்று திருநாமங்கள் உண்டு. இவர் அஷ்டாங்க யோகம் மற்றும் தேவகானத்தில் வல்லவராக இருந்தார். முதன்முதலில் அரையர் சேவையை இவர்  தொடங்கி வைத்தார். அது இன்றளவும் திருவரங்கம், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவில்லிபுத்தூர், மேல்கோட் திருநாராயணபுரம்  மற்றும் சில திவ்ய தேசங்களில் நடந்துவருகிறது.  

நாதமுனிகள்  தமது தந்தை மற்றும் குமாரருடன் (ஈச்வர முனி) -  வடமதுரை, விருந்தாவனம்,  கோகுலம், கோவர்தனகிரி, த்வாரகை, பதரிகாஸ்ரமம், நைமிசாரண்யம் மற்றும் பல திவ்யதேசங்களை மங்களாசாஸனம் பண்ணுவதற்காக சென்றார். அப்பொழுது யமுனை நதிக்கரையில் கோவர்தனபுரம் என்ற கிராமத்தில் இருந்துகொண்டு எம்பெருமானுக்கு (யமுனைத் துறைவனுக்கு) கைங்கர்யம் செய்து வந்தார். ஓரு நாள் எம்பெருமான் இவர் கனவில் வந்து திரும்பவும் காட்டு மன்னார் கோவிலுக்கே எழுந்தருளுமாறு கட்டளையிட, நாதமுனிகளும் திரும்ப பல திவ்யக்ஷேத்திரங்களை சேவித்துக்கொண்டு திரும்பினார்.  

ஒரு சமயம் சில வைணவர்கள் இவரது குடில் முன்பே ''ஆராவமுதே!  அடியேன் உடலம் நின்பால் அன்பாயே' எனும் திருவாய்மொழி பாசுரத்தை சேவித்ததை கேட்டுண்டு - அதன் முடிவில் -  ஓராயிரத்துள் இப்பத்தும் என்று வருவதால், அப்பாசுரங்களை தேடி அலைந்தார்.  ஆழ்வார் திருநகரியில் மதுரகவி ஆழ்வார் சிஷ்யரான பராங்குச தாசரை சந்தித்தார்.  அவரிடம் கண்ணிநுண்சிறுத்தாம்பு  பாசுரங்களை கற்று, அவற்றை  12000 முறை திருப்புளியாழ்வார் ((நம்மாழ்வார் வாழ்ந்த புளிய மரம்) முன்பு அனுசந்தித்து, தமது  அஷ்டாங்க யோக  பலத்தால்  நம்மாழ்வாரைத் தியானித்து  நாலாயிர திவ்யப் ப்ரபந்தம் மற்றும் அதனுடைய சகல அர்த்த விஷேசங்களையும்  - சடகோபனிடத்தில் இருந்து பெற்றுக் கொண்டார்.  நம்மாழ்வார் நாதமுனிகளுக்கு அருளியதையே உபதேசரத்தினமலையில், மணவாளமாமுனிகள் “அருள் பெற்ற நாதமுனி” என்று அருளிச்செய்தார். இவ்வாறாக நாம் அநுஸந்திக்கும் 'நாலாயிர திவ்யப்ரபந்தம்' - ஸ்ரீமந் நாதமுனிகளாலேயே நமக்கு கிடைக்கப்பெற்றது.  

நாதமுனிகள் முயற்சியால் தான் நமக்கு இந்த ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ (அருளிச்செயல்) கிடைத்தது. ஸ்தோத்ரரத்னத்தில் ஆளவந்தார் முதல் மூன்று ஸ்லோகத்தில் நாதமுனிகளுடைய பெருமைகளையே கூறுகிறார். “அச்சுதன் மீது அளவில்லாத, உண்மையான அன்பும் அறிவும் உடையவரை, ஸம்ஸாரத்திலிருந்து அனைவரையும் காப்பற்ற வந்தவரை, முழுமையான பக்தியும் உடையவரை, யோகிகளுகெல்லாம் தலைவருமான நாதமுனிகளை வணங்குகிறேன்” என்று ஆளவந்தார்  கூறுகிறார். 

                       In Sri Vaishnava Satsampradhayam, great emphasis is on ‘Guru Parampara’ that starts from Sriman Narayana Himself, down to Sri Nathamunigal who has to be remembered ever for what he gave us – *Sri Naalayira Divyaprabandham*.  Sri Nadhamunigal was born in  Anusha nakshatra of ‘Ani’ month at Sri Veeranarayanapuram.   Sri Nathamuni went on a long pilgrimage that took him to holy places  like Mathura, Vrindhavan, and other holy places including Puri.  Back home, upon hearing some Srivaishnavaites reciting Thiruvaimozhi pasuram (that had sort of become extinct ) ‘Aaravamuthe’ and curious to know the rendering in full  ~ he followed its trail that led him to KUmbakonam; Lord Aravamudhan directed him to ThiruKurugoor; with the divine blessings, collated Sri NalayiraDivyaprabandham and thence onwards these hymns are continually sung in  Divyadesams and other Sri Vaishnavaite temples,  Dravida  Veda. 




Nathamunigal was also a great Bhakti Yogi and practiced the Yoga of eight accessories ( ashtAnga yoga); he authored the  treatise “Yoga Rahasya”.  He was also an exponent of divine music  who initiated the ‘singing of divyaprabandham ~ now known as ‘Arayar Sevai’. Without this great Acharyar’s efforts in retrieving aruliCheyal,  theVaishnava World would not have got the rich possessions that we have today.  Alavanthar in his SthothraRathnam sings the glories of Nathamunigal in the first 3 slogas. 

                            Acharyar Nathamunigal codified the treasure of the most divine ‘Nalayira Divya Prabandham’. He also revived the Adhyayana Utsavam instituted by Thirumangai Azhwar.  After him, the Guru paramparai mantle passed on to Uyyakondar, Manakkal nimbi and  thence to Yamunacharyar @ Aalavandhar, the grandson of NathaMunigal.  



Salutations to Naatha muni who had the single minded devotion to the Lord and who is the treasure of both Gnaana and Vairaaghya.  On his sarrumurai day, at  Thiruvallikkeni Sri Nathamunigal will have  purappadu with Sri Parthasarathi.  This year there is no purappadu due to Corona  Here are some photos taken during 2019 – the earlier photos are of Kattumannar kovil (avathara sthalam) taken a few years ago !

 

~adiyen Srinivasadhasan. [Mamandur Veeravalli Srinivasan Sampathkumar]
23rd June 2021







  

Tuesday, June 22, 2021

*துஷ்ட நிக்ரஹ - சிஷ்ட பரிபாலனம்* ~ praying Sri Azhagiya Singar

 

*துஷ்ட நிக்ரஹம்*  -  *சிஷ்ட பரிபாலனம்*  :  துஷ்ட நிக்ரஹம் என்பது ஒவ்வொரு காலத்திலும், நல்லவர்களுக்கு,  சூழலுக்கு கேடு விளைவிப்பவர்களை அழிப்பது... சிஷ்ட பரிபாலனம் என்பது தர்ம நெறியோடு வாழ்பவர்களை ஊக்குவித்து நலம் சூழ வைப்பது.... இவை இரண்டையும் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் மட்டுமே செய்யவல்லன். 



Scientists estimate that about 80 percent of an individual’s height is determined by the DNA sequence variants they have inherited, but which genes these variants are in and what they do to affect height are only partially understood. Some rare gene mutations have dramatic effects on height - for example, variants in the FGFR3 gene cause achondroplasia, a rare condition.

Achondroplasia is a form of short-limbed dwarfism. The word achondroplasia literally means "without cartilage formation." Cartilage is a tough but flexible tissue that makes up much of the skeleton during early development. However, in achondroplasia the problem is not in forming cartilage but in converting it to bone (a process called ossification), particularly in the long bones of the arms and legs.  People with dwarfism have short stature. This means that their height is under 4' 10" as an adult. They are usually of normal intelligence. Dwarfism most often does happen in families where both parents are of average height. More than 300 different conditions can cause dwarfism. Achondroplasia is the most common type of dwarfism. Achondroplasia is a genetic condition that affects about 1 in 15,000 to 1 in 40,000 people. It makes one’s arms and legs short in comparison to your head and trunk.  

The early humans hunted in African savannahs, which caused them to become tall and slender after leaving forest-like habitats.  Researchers were surprised by the findings of the study, which looked at hundreds of fossils spanning four million years. They found that the stature and bulk of our ancient ancestors did not change consistently over the course of history. Around 1.5 million years ago, human-like hominins grew 10cm taller without gaining any extra weight. "Men living during the early Middle Ages (the ninth to 11th centuries) were several centimeters taller than men who lived hundreds of years later, on the eve of the Industrial Revolution," said a professor of economics at Ohio State University and the author of a new study that looks at changes in average heights during the last millennium. "Height is an indicator of overall health and economic well-being, and learning that people were so well-off 1,000 to 1,200 years ago was surprising," he said.



பாரதப்போர்தனிலே பார்த்தனுக்கு சாரதியாக குருக்ஷேத்திரத்திலே எம்பெருமான் கண்ணன் உரைத்த பகவத் கீதையில்  : "பரித்ராணாய ஸாதூநாம் விநாசாய ச துஷ்க்ருதாம், தர்மஸம்ஸ்தாப நார்த்தாய ஸம்பவாமி யுகேயுகே."  என்று உரைத்தது -  தம்மிடம் அன்பு கொண்ட  சிஷ்டர்களை ரக்ஷிப்பதற்கும் துஷ்டர்களை சிக்ஷிப்பதற்கும் அறநெறியை நிலை நாட்டுவதற்கும் அடிக்கடி அவதாரங்கள் செய்து போருவேன் என்றருளிச்செய்தது.  வேண்டித்தேவர் இரக்க வந்து பிறந்து - என  தேவர்கள் பிரார்த்திப்பவர்களாதலால் துஷ்டர்களை சிக்ஷிப்பதற்காக வந்து பிறந்தமை. 

ஸ்ரீமந் நாராயணனே ஸர்வஸமாகரயணீயன் -அவ்வெம்பெருமான்  ஜகத்ரக்ஷணம் பண்ணுகிறபடி ஒரு காலத்திலே   குள்ள வடிவைக் கொண்டான் - உடனே த்ரிவிக்ரமாவதாரத்தில் தன்னடிக் கீழ்ப்பட்ட உலகங்களையே , மற்றொரு கால் பிரளயங் கொள்ளாதபடி  உட்கொண்டான்.   அவ்வெம்பெருமானே பிறிதோர் சமயத்திலே இரணியனின் மார்வத்தை தனது உகிரால் நரசிங்கமாய் பிளந்து பக்தனை காத்து அருளினானன்றோ !  



இதையே பூதத்தாழ்வார்  தமது இரண்டாம் திருவந்தாதி 18ம் பாசுரத்தில் :

கொண்டதுலகம் குறளுருவாய்க் கோளரியாய்,

ஒண்டிறலோன் மார்வத் துகிர்வைத்தது - உண்டதுவும்

தான்கடந்த ஏழுலகே தாமரைக்கண் மாலொருநாள்,

வான்கடந்தான் செய்த வழக்கு.  ~ என்றருளிச் செய்தார்.  

குறள் உருவாய் - வாமநரூபியாய் மாவலியிடஞ் சென்று யாசித்து  பூமி முதலிய லோகங்களை தனதாக்கிக்  கொண்டதும்,  மிடுக்கையுடைய நரசிங்கமாகி  மஹா பலசாலியான இரணியனுடைய மார்பிலே தனது நகங்களையழுத்திக் கீண்டொழித்ததும்  ஒருகாலத்திலே தான் அளந்து கொண்ட  எல்லாவுலகங்களையும்  பிரளயங் கொள்ளாதபடி  திருவயிற்றிலே வைத்துக் கொண்டதும்  ஆகிய இச்செயல்கள் அனைத்தும் ஆகாசத்தையளவிட்டாலும் அளவிடவொண்ணாதபடியுள்ள பெருமையையுடையவனும் செந்தாமரைக் கண்ணனுமாகிய எம்பெருமான் ஸ்ரீமந்நாரணன்  செய்தருளின அற்புதமான செயல்களாம்.. .. .. 

Falling at the feet of Emperuman, praying for His darshan and regular purappadus,  here are some photos of Thiruvallikkeni Sri Azhagiya Singa Perumal taken during purattasi sani purappadu on 10.10.2015.

 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
22.6.2021












Monday, June 21, 2021

Sri Periyazhwar Sarrumurai 2021 - நல்லானியில் சோதி நாள் (Garuda Seavai )

பெரியாழ்வார் சாற்றுமுறை -  நல்லானியில் சோதி நாள் : 21.6.2021

 

அறுசுவை உணவை விரும்பாதோர் உண்டோ ?    ஆனால் நல்ல உணவை விரும்பி உண்பதை மட்டுமே போக்கியமாக கொண்ட   வீணர்களை தம்முடன் வர வேண்டாம் எனப் பாடிய பெரியாழ்வாரின் திருவவதார மஹோத்சவம் இன்று. !!

தமிழ் இலக்கணத்தில் 'உசாத்துணை' என்பது ஒரு கருத்தை விளக்க அல்லது விவரிக்க துணை நிற்கும் தரவு.  நமக்கு சிறந்த  'உசாத்துணை'  யாது ?

 


We write – write daily ! – on social media, blogs, magazines and more .. .. when one writes an article, one would use or cite someone else's words or ideas – making a reference to them. Academic writing relies on more than just the ideas and experience of one author. It also uses the ideas and research of other sources: books, journal articles, websites, and so forth. These other sources may be used to support the author's ideas, or the author may be discussing, analysing, or critiquing other sources. Referencing is used to tell the reader where ideas from other sources have been used in an assignment.   So when such references are made, one must  include detailed information on all sources consulted, both within one’s  text (intext citations) and at the end of the  work (reference list or bibliography).

நம் பொய்யிலாத மணவாள மாமுனிகள் தம் உபதேசரத்தினமாலையிலே 'பொங்கும் பரிவாலே வில்லிபுத்தூர் பட்டர்பிரான் பெற்றான்  "பெரியாழ்வார் எனும் பெயர்" என்கிறார்.  அது என்ன பொங்கும் பரிவு ? என கேட்க தோன்றுகிறதா ? 

ஸ்ரீவைணவனுக்கு திருமண் காப்பு அடையாளமாக (உண்மையில் இது நமக்கு ரக்ஷை) இருப்பதை போல; ஸ்ரீமன் நாராயணனை தொழும் அனைத்து அடியார்களும் ஏனையோரும் அறிந்தது  **' திருப்பல்லாண்டு '**



பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு * பலகோடி நூறாயிரம்

மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் சேவடி செவ்வி திருக்காப்பு

 

 இந்த அரிய பொக்கிஷத்தை நமக்கு அளித்தவர் தென்பாண்டி நாட்டிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரிலே ஆணி மாசம் சுக்லபக்ஷம், ஏகாதசி கூடின ஸ்வாதி நக்ஷத்திரத்தில் கருடாம்சராய், அந்தணர் குலமான வேயர் குலத்தில்முகுந்தபட்டர் என்பவருக்கும்  பதுமவல்லி நாச்சியாருக்கும்  புத்திரராக அவதரித்தவர் விஷ்ணு சித்தர். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆனிமாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில்  வேயர்குலம் என அழைக்கப்பட்ட வம்சத்தில் இவர் கருடனின் அம்சம் என்று வணங்கப்படுகிறவர்.

 

Corona has shaken people and changed the lives of the people. It has taken the normal juice out of people – though lot many Covidiots are out there on the streets, people generally fear everything now – and at this juncture, would someone come out and readily do some physical help for others ? – if you think ‘No’ – do read on.

 

Mumbai's Dharavi, which once emerged as a COVID19 hotspot of the city during the initial months of the pandemic,  witnessed a sharp decline in the number of average daily cases.  Recently press reports gladly reported that  Asia's largest slum has not reported a single case ! Last year, when Corona was at its peak,      In one of Mumbai's Red Zones, the dense, congested Nehru Nagar Basti, Rashtriya Swayam Sevak (RSS) made a big difference.  The appreciations came from its strongest critic Barkha Dutt, who posted a video acclaiming its activities   that takes to the Q  : "What motivates these people to get out of their comfort zones and do something to help someone they don’t even know? Would we ever do the same?"

It is ‘Compassion’. Compassion is not about leniency.  Compassion motivates people to go out of their way to help the physical, mental, or emotional pains of another and themselves. Compassion is often regarded as having sensitivity, an emotional aspect to suffering, though when based on cerebral notions such as fairness, justice, and interdependence, it may be considered rational in nature and its application understood as an activity also based on sound judgment.  Compassion literally means “to suffer together.”  

 

பரிவு  என்பது அடுத்தவரின் சோகத்தினை போக்க எடுக்கும் நடவடிக்கை ஆகும். பிறரின் துயரினை புரிந்து கொண்டு, அதனை போக்க தன்னாலான செயல்களை செய்வதும் அடுத்தவர்க்கு பரிந்துரைப்பதும் பரிவு எனக்கொள்ளலாம்.  நம் மாமுனிகள் வாக்கில்  ' பொங்கும் பரிவாலே வில்லிபுத்தூர் பட்டர்பிரான்'  பெற்றான் "பெரியாழ்வார்" என்னும் பெயர்! 


ஸ்ரீவில்லிபுத்தூரில்  வடபத்திரசாயி என பள்ளிகொண்ட கோலத்தில்  இருக்கும் வடபெருங்கோயிலுடையான் கோயிலுக்கு தெற்கே நந்தவனம் அமைத்து தினம் பகவானுக்கு பூமாலை  சாற்றி கைங்கர்யம் செய்து வந்தார் விஷ்ணு சித்தர்.   வல்லப தேவன்  என்ற அரசன் மதுரையைத் தலைநகராகக் கொண்ட பாண்டியநாட்டை ஆட்சி புரிந்து வந்தான். ஒரு நாள் இரவு அவன் நகர்வலம் வரும்போது ஒரு வீட்டுத் திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு அந்தணனது  வார்த்தைகளால் சிந்தனை கிளரப்பெற்று  'மறுமையில் பேரின்பம் பெறுவதற்கு என்ன வழி?' என்று வினவினான்.  விஷ்ணுசித்தர் '‘ஸ்ரீமந்நாராயணனே  பரம்பொருள்; பிரபஞ்ச காரணமான பரமாத்மா; அவனடி சரணே சகலத்தையும்  அடையும் உபாயம்’ என்று பரத்துவத்தைப் பாண்டியன் சபையில் நிலைநாட்டினார்.  அப்போது கம்பத்தில் கட்டப்பட்டிருந்த பொற்கிழி தானாக அவர் முன்னே தாழ வளைந்தது. வல்லப தேவன் மகிழ்ந்து 'பட்டர்பிரான்' என்ற பட்டம் சூட்டி யானைமேல் ஏற்றி நகர்வலம் வரச்செய்தான்.   அதைக் கண்டுகளிக்க  எம்பெருமான் ஸ்ரீமன்நாரணனே பிராட்டியுடன் கருடன் மேல் ஏறி  வந்து தரிசனம் தந்தாராம். ஆழ்வார் யானையின் கழுத்தில்  உள்ள மணிகளைத்  தாளமாகக் கொண்டுபரவசத்தில் திருப்பல்லாண்டைப் பாடினார் என்பது குருபரம்பரைக் கதை. 

பொங்கும் பரிவு என்றவுடனே பால் ஞாபகம் வரலாம்.  பாலில் நீர், கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட் போன்ற தாதுப் பொருள்கள் உள்ளன. பாலைக் கொதிக்க வைக்கும்போது தனது கொதிநிலையான 100 °C அடையும் போது நீர், கொதித்து நீராவியாக மாறுகிறது. அதேநேரத்தில் கொழுப்பு, புரதம் போன்றவை தனியாகப் பிரிந்து பாலின் மேல்புறத்தில் ஆடையாகப் படர்கின்றன.  நீராவி மேல் நோக்கி ஆவியாகச் செல்கிறது.  அந்த நீராவியை மேலே செல்லவிடாமல் பாலில் படர்ந்துள்ள பாலாடை தடுக்கிறது. அப்போது அந்த ஆடையைத் தள்ளிக்கொண்டு நீராவி மேலெழும்பி வருவதைத்தான் பால் பொங்குகிறது என்கிறோம். 

பரிவு என்பது ஒத்துணர்ச்சி, அஃதாவது பிறருடைய துன்பத்தில் கலந்து அவர்களுடன் அனுதாபப்படுதலும் அவர்கள் இன்பத்தில் கலந்து மகிழ்தலுமாம்.  பெற்ற தாய்  தனது குழந்தைகள் மீதும், பசு தன்  கன்றின் மீதும் பரிவு காட்டும்.  எம்பெருமானுக்கு நன்றாக காய்ச்சிய பாலை சமர்ப்பிப்பது நம் சம்ப்ரதாயம்.  அப்படி அவருக்கு திருவமுது செய்விக்கும் போது  அதிக சூடான பால் எம்பெருமானுக்கு தீங்கு தருமோ ! என கவலைப்படுவது பொங்கும் பரிவு !! பெருமாளுக்கு நாவல் பழம் சமர்ப்பித்தால் அதன் குளிர்ச்சி அவருக்கு கேடு விளைவிக்குமோ என நினைத்தவர் நம் ஆசார்யர்.

 




ஸ்ரீவைகுண்ட ஸபரிவாரனாய் கருட வாஹனத்திலே எம்பெருமானே எழுந்தருளி எதிரே ஸேவைஸாதிக்க, ஆழ்வார்  இந்நிலத்திலே எம்பெருமானுக்கு  யாராலே என்ன தீங்கு விளைந்துவிடக்கூடுமோ என்று அதிசங்கைப்பட்டு ‘ஒரு அமங்களமும் நேரிடாதபடி மங்களமே உண்டாயிருக்கவேணும்’ என்று பல்லாண்டு; பல கோடி பல்லாண்டு என வேண்டினவர்.    எப்படிப்பட்ட எதிரிகளையும் ஒரு விரல் நுனியாலே வென்றொழிக்கவல்ல தேஹவலிவு கொண்டவனும்  மல்லர்களை  புறந் தள்ளினவனுமான  புஜபல பராக்கிரமசாலியை கண்டு – மீண்டும்,  மீண்டும் மங்களாசாஸநம் பண்ணின பரிவாளர் நம் பெரியாழ்வார்.   சேஷபூதனுக்குத் திருவடியே உத்தேச்யம் என்பதைக் காட்டவே சேவடி செவ்வி திருக்காப்பு என்றார்.

 


பெரியாழ்வார் இயற்றியவை "திருப்பல்லாண்டும்  பெரியாழ்வார் திருமொழியும்". 

 

கோதிலவாம் ஆழ்வார்கள் கூறு கலைக்கெல்லாம்

ஆதி திருப்பல்லாண்டு ஆனதுவும்  வேதத்துக்கு

ஓம் என்னும் அது போல் உள்ளத்துக்கெல்லாம் சுருக்காய்த்

தான் மங்களம் ஆதலால்* ~~~~

 

                                  'ஸ்ரீ நாலாயிர திவ்யப்ரபந்தத்தில்' உள்ள எல்லா பாடல்களுக்கும் ஓம் என்ற பிரணவம் போலே மற்றயவை யாவற்றுக்கும் சுருக்கமாகவும் மங்களாசாசனமாகவும் திகழ்கிறது  "திருப்பல்லாண்டு" என நம் ஆசார்யன் மணவாளமாமுனிகள் உபதேசரத்தினமாலையில் அருளிச் செய்துள்ளார்.  ஸ்ரீநாலாயிர திவ்யப்பிரபந்தம் எப்போது சேவிக்கப்பெற்றாலும், திருப்பல்லாண்டுடன் துவங்குவது ஸ்ரீவைஷ்ணவ மரபு.  திருப்பல்லாண்டு மொத்தம் 12  பாசுரங்கள் ; பெரியாழ்வார் திருமொழி  461 பாசுரங்கள்*. 

மன்னன் வல்லப தேவனின் மனக்கிடக்கையான பரம்பொருள் யார்  என்பதை 'ஸ்ரீமன் நாராயணன்' ஒருவனே என்று ஓதி பொற்கிழி அறுத்த விஷ்ணுசித்தன் எனும் பெரியாழ்வார் மதுரை மாநகரத்திலே சங்குகள் முழங்க பட்டத்து யானை மீது பவனி வர,  எம்பெருமானே அருள் தர காட்சி தர  அவ்வெம்பெருமானுக்கு எவ்வித கண்ணேறும் படக்கூடாது என திருப்பல்லாண்டு பாடினவர் நம் ஆழ்வார்.  தம்மோடு சேர்ந்து எம்பெருமானுக்கு கைங்கர்யங்கள் செய்து அவன் புகழ் பாட மானுடத்தை அழைக்கின்ற போதிலும்,  வெறுமனே வயிறு வளர்க்கும் வம்பர்களை விலக்கித் தள்ளினாராயிற்று. முற்காலத்தில் அடிமை யோலை யெழுதும்போது ‘‘மண்ணுக்கும் மணத்துக்கும் உரியேனாகக் கடவேன்’’ என்றெழுதுவது வழக்கமாம்.  மண் கொள்ளுகையாவது இறைவனின் தொண்டில் ஈடுபடுவது; மணம் கொள்ளுகையாவது அந்த கைங்கர்யத்தில் முழு மன நிறைவோடு ஈடுபடுவது.  இதோ இங்கே பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டு பாசுரம் :

 

வாழாட்பட்டு  நின்றீருள்ளீரேல் வந்து மண்ணும் மணமும்கொண்மின்

கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்

ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ்  இலங்கை

பாழாளாகப் படைபொருதானுக்குப் பல்லாண்டு கூறுதமே

 

நமக்கு  உஜ்ஜீவிப்பதற்கு  உறுப்பான எம்பெருமானுடைய  அடிமைத் தொழிலில் ஈடுபட்டு   நிலைத்து நின்றவர்கள் அனைவருமே வந்து எங்களோடு சேர்ந்து கொள்ளுங்கள். எம்பெருமானுடைய உத்ஸவார்த்தமான திருமுளைத் திருநாளுக்குப் புழுதி மண் சுமவுங்கள்; மணமும் கொள்மின் என அத்தகைய உத்சவ விசேஷங்களுக்கு  அபிமானிகளாகவும் இருங்கள்;  கேவலம் உண்ணும்  சோற்றுக்காகப் பிறரிடத்தில்) அடிமைப்பட்டிருப்பவர்களை எங்களுடைய கோஷ்டியிலே அங்கீகரிக்க மாட்டோம்.  நாங்கள் சிறப்பானவர்கள்.  ஏழு தலைமுறையாக   ஒருவகைக் குற்றமும் இல்லாதவர்கள்    எங்கள் தொழில்தாம் என்ன எனில்,  கொடிய அசுரர்கள் வசித்த இலங்கை தீவின்  பாதுகாவலர்களாக இருந்த ஆண் புலிகள் யாவரும் அணைத்து இராவணாதிகளும், வேரோடே அழிந்து போம்படி, வாநர சேனையைக் கொண்டு போர் செய்த பெருமாளுக்கு மகிழ்ச்சியுடன் பல்லாண்டு பாடுகிறவர்களாய் இருக்கின்றோம்

 

உசா என்றால் ஆராய்ச்சி.  உசாத்துணை என்றால் ஆராய்ச்சிக்கு துணை நின்றவைகள் (References) என்று பொருள்.  உசாத்துணை, உசாவுதுணை என்னும் இரண்டும் ஒன்றே!. நாம் எழுதும்போது செய்த ஒரு ஆராய்ச்சிக்குத் துணைபுரிந்த அடிப்படை ஏது நூல்கள் அங்கே உசாத்துணையாகக் குறிப்பிடப்படும்.   உசாத்­துணையிடல் தொடர்பாக விரிவாக நோக்க முதல், மேற்கோள் காட்டல் (Citation) உசாத்துணை (Reference) மற்றும் நூற்பட்டியல் (Bibliography) ஆகியன பற்றி அறிந்து கொள்வோம். மேற்கோள் காட்டல், என்பதனை ஆங்கிலத்தில் Citation என்றழைப்பர். Reference எனும் போது அது உசாத்துணை எனவும் Bibliography என்பது நூல் விபரப்பட்டியல் அல்லது நூற்றொகை என்றும் அழைக்கப்படுகின்றன.  உசாத்துணையிடலில் ஓர் ஒழுங்குமுறையினை பின்பற்றும் பொருட்டு பல்வேறு அமைப்புக்கள் உசாத்துணையிடலில் சில நியமங்களை உருவாக்கி பின்பற்றி வருகின்றன. அதாவது, பிறரது சிந்தனைகள், அபிப்பிராயங்கள், கருமங்கள் ஆகியவற்றை குறிப்பிட்டதொரு வழியில் எவ்வாறு ஒப்புக்கொள்வது என்பதற்கான ஒழுங்கு விதிமுறைகளை ஏற்படுத்தி உள்ளனர். 

படிப்பதற்கு பல நூல்கள் இருக்கலாம்; செல்வதற்கு பற்பல பாதைகள் தெரியலாம்.  ஸ்ரீவைணவனான  நமக்கு உற்ற துணை ஆசார்யர்கள்; வழிகாட்டும் நெறி திவ்யப்ரபந்தமும், ஆசார்யர்கள் அருள் உரைகளும் -    அவர்களை துணையாக பற்றி எம்பெருமானை அடைந்து இன்புறுவோமாக !  

Let us prostrate at the feet of the Alwar and pray that we are bonded with Emperuman ever. Generally ‘Swathi nakshathiram in the tamil month of Aani’ signifying the  birth day of Periyazhwaar  would fall on day 2 of the Brahmothsavam.  Today would have been day 3 of Sri Azhagiya Singar Aani Brahmothsavam – but for Corona, there would have been classic purappadu of Sri Azhagiya Singar on Garuda Sevai and Sri Periyazhvar on yanai vahanam.  Unfortunate that we could not have darshan of such a wonderful sevai.   Let us pray Emperuman that by that time, Corona is contained and the grand uthsavams does take place.  

Azhwar Emperumanar Jeeyar Thiruvadigale Saranam

 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
21.6.2021. 
 
Photos of earlier years taken by me.
உசாத்துணை :  reference web & - http://www.vidivelli.lk/article/6977