To search this blog

Monday, November 8, 2021

Swami Manavala Mamunigal 651st Sarrumurai vaibhavam - 2021

Swami Manavala Mamunigal 651st   Sarrumurai 2021 :

அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலம் ***

Sri:

Srimathe Ramanujaya Namaha:

Srimath Varavara Munaye Namaha:



Today is a great day – “Aippaisyil Thirumoolam’ commemorating the birth celebrations of our Great Acarya Swami Manavala Mamunigal.  Mamunigal is fondly known as ‘Yatheendra Pravanar’ arising out of his irresistible attachment to the lotus feet of Sri Ramanujar [Yatheendrar].  Before taking asceticism, Sri Manavala Mamunigal travelled wide and vast to various places and he stayed in Srirangam worshipping Namperumal Srimannathar.  With finer transformation coming in the association  of Uthama Nambi,  Mamunigal grew closer to Namperumal and He started conversing with our Acaryar.   Sri Erumbiappa in his thanian to Yathiraja Vimsati extols Acaryar  thus : 

ய: ஸ்துதிம் யதிபதி ப்ரஸாதி நீம் வ்யாஜஹார யதிராஜவிம்சதிம் |

தம் ப்ரபந்நஜந சாதகாம்புதம் நௌமி ஸௌம்யவரயோகி புங்கவம் ||

ஆசார்யர்களில் சிறந்தவரே உமக்கு வணக்கம்.    மணவாள மாமுனிகளே உமக்கு வணக்கம். யதிராஜரின் திருவுள்ளம் அறிந்தவரே உமக்கு வணக்கம்.   இன்று ஓர் அற்புத நாள் - நமது ஆசார்யர் ஸ்வாமி மணவாளமாமுனிகளின் 651வது  திருவவதார வைபவம்.  சாற்றுமுறை. 

"I offer my homage to Acarya Swami Manavala Mamunigal, who blessed us with this great work of  ‘Yathiraja vimsathi’ with the intention of pleasing the heart of our Udayavar Bashyakar Sri Ramanujar.  He is the one, who showered Prapannars with the nectar of sakala saasthra arthas, just as the rays of moon fully nourish the  Chataka  birds."  The thaniyan inclines that those who recite this work will have blessings of Emperumanar.  ‘Prapanna jana chatakam budam’ would mean Acarya Emperumanar is like the rainbearing cloud which provides lifeline of water for all including skylarks.  Yogi PUngava refers clearly to our Acarya Mamunigal.

"ஐப்பசியில் அடை மழை" என்று சொல்வார்கள்.  பருவம் பார்த்து பெய்வதால் தான் விவசாயம் செழிக்கும் நிலத்தடி நீர்மட்டம் உயரும் ஆறு கிணறு குளம் குட்டைகளில் நீர் வளம் பெருகி நல்ல விவசாயம் செய்ய முடியும்.   மழை .. ..    சென்னையில் ஜீவ நதிகள் இல்லை - முன்னொரு காலத்தில் படகு போக்குவரத்து நடந்த பக்கிங்காம் கால்வாய் இன்று குட்டையாக தேங்கி உள்ளது.  கூவம் நதி மாசுபட்டு அழுக்காக உள்ளது.  ஆயினும் சென்னைவாசிகள் - இரண்டொரு நாட்களாக கொட்டோகொட்டென்று பெய்த மழையால் பயம் கண்டு 2015 ஆண்டு - அடையாறு ஆறு சைதாப்பேட்டை பாலம் மீது ஓடிய நாட்களை நினைவு கூர்ந்தனர்.   ஒவ்வொரு கோடையிலும் தண்ணீருக்காக தவிக்கும் சென்னை மாநகரம் எங்கே வெள்ளக்காடாக மாறிடுமோ என்ற அச்சம் பலர் மனதில் எழுந்தது இந்த மழையால் !

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி  கேள்வி பட்டு உள்ளீர்களா ?  -  வளிமண்டலம் (atmosphere) என்பது ஈர்ப்பு விசையின் கீழூள்ள கோள் ஒன்றையோ அல்லது போதுமான திணிவைக் கொண்ட ஒரு பொருளையோ சுற்றியுள்ள வளிமங்களின் அடுக்கு ஆகும்.   ``கடல் மட்டத்தில் உருவாகும் சுழற்சி, காற்று வீசும் திசையை நோக்கி மழையாக நகர்ந்து செல்லும். இதுதான் காற்றழுத்த தாழ்வுநிலை என்று அழைக்கப்படுகிறது. இந்த சுழற்சி வலுவானதாக மாறும்போது, அதன் அளவைப் பொறுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலம், குறைந்த காற்றழுத்த மண்டலம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. அதுவே, இந்த சுழற்சி கடல்மட்டத்திலிருந்து குறிப்பிட்ட தொலைவுக்கு மேலே உருவானால் அது மேலடுக்கு சுழற்சி என அழைக்கப்படுகிறது. இந்த சுழற்சியானது வளிமண்டலத்தில் கிட்டத்தட்ட ஒரு அலைபோல மேலும் கீழும் ஏற்படும். 

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அத்துடன் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஸ்ரீ வைஷ்ணவம் எனும்  ஆலமரம் தழைக்க இராமானுஜரின் மறு அவதாரமாக தோன்றினவர்  நம் ஆச்சார்யன் ஸ்வாமி  மணவாள மாமுனிகள் ~ அவரது திருவவதாரத்தால் இந்த ஐப்பசி மாசம் சிறப்புற்றது.  மாமுனிகள் மழைச்சாமி - நம் ஆசார்யன் உத்சவத்தில் நல்ல மழை பெய்து நாட்டையே வளப்படுத்தும். 

Corona has severely affected the way people live .. .. the continuous lockdown  caused difficulties – now shops, malls,  cinema shooting, public transportation – all opened but still restrictions prevail for Temples and devotees – darshan is  allowed but not thiruveethi  purappadus. 








Today (8th Nov 2021) would have been far different.  At Thiruvallikkeni, the day would start with Mamunigal mangalasasanam at all sannathies and .. ..    the greatest darshan one would dream -  the divine blessing of  ‘Kaithala Sevai’ ~ [Lord Parthasarathi and consorts being carried in the hands of the battars] – then the beautiful white umbrellas – 20 of them from 14 jon to 24 jon would open up -  spotless white parasols – the divine kudaigal  for the grand sarrumurai purappadu of Acaryar with Sri Parthasarathi Perumal,  commemorating the birth of divine Acharyar Swami Manavala Mamunigal.  

ஸ்ரீ வைஷ்ணவத்தின் சொர்க்க பூமியான  பூலோக வைகுண்டத்தில் நிகழ்ந்த முகம்மதியர் படையெடுப்பால் பல்லாயிரக்கணக்கானோர் கோயிலையும்,  நம்பெருமாளையும் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு இன்னுயிர் ஈந்தனர்.   வெள்ளநீர் பரந்து பாயும் விரிபொழிலரங்கம் எனும் புகழ்ச்சி பெற்ற திருவரங்கத்து மதில்களும்,  வீதிகளும் அங்கு வாழ்ந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் துயரங்களை கண் நோக்கிய  - பதினான்காம் நூற்றாண்டின் ஆரம்பம் மிக மோசமாக தொடங்கியது. டெல்லியை ஆண்டு வந்த சுல்தான்கள், பெரும் செல்வசெழிப்போடு வாழ்ந்து வந்த தமிழகத்தை சூறையாட படை எடுத்த காலம் அது.  சுமார் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக கோயிலும், கோயில் நிர்வாகமும் ஸ்தம்பித்த வரலாறும் ஸ்ரீ வைஷ்ணவத்தின் ஏடுகளில் ஓர் இருண்ட காலமாகும்.  இதனால் பாழ்பட்டு இருந்த இக்காலத்தில் பழைய பெருமைகளை மீண்டும் ஒளிர,   ஸ்ரீவைஷ்ணவம் என்னும் ஆலமரம் தழைக்க ராமானுஜரின் மறு அவதாரமாக தோன்றினார் ஸ்ரீ மணவாள மாமுனிகள்.

ஸ்ரீவைஷ்ணவ ஆசாரிய குருபரம்பரையில் ஓர் உன்னத இடத்தை - ஆசார்யர்கள் எனும் ரத்னா ஹாரத்தில் எம்பெருமானுக்கு ஓர் பாலமாய் திகழ்பவர் நம்  ஸ்வாமி மணவாள மாமுனிகள் (காலம் 1370 - 1443 முதல் ). ஐப்பசி மூலத்தில் ஆழ்வார் திருநகரியில் திருநாவீறுடையபிரான் தாசருக்கு திருக்குமாரராய் அவதரித்தவர் ஸ்ரீ மணவாள மாமுனிகள். இயற்பெயர் ஸ்ரீ அழகிய மணவாளன் ( அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்)

Mamunigal is fondly known as ‘Yatheendra Pravanar’ arising out of his irresistible attachment to the lotus feet of Sri Ramanujar [Yatheendrar].  Sri  Manavala Mamunigal is the incarnation of Adisesha.  He was born in Sikkil Kidaram in AD 1370.  At birth he was known as ‘Azhagiya Manavala Perumal Nayanaar’.  Later he was hailed in very many names such as ‘Yatheendra Pravanar’, Ramyajamathru, Saumyajamatru, Visada-Vak-Sikhamani,  Varayogi, Varavaramuni and more…..  

His parents were   Thigazhakidanthan Thirunaveerudayapiran Thatharannan,  a disciple of Sri Pillailokacarya, and Sriranga nachiyar..  He became a sishya of Tiruvaimozhippillai.   Manavala mamuni's devotion to Nammalvar, Ramanuja and to his own Acharya grew as he studied the Alwar's hymns and rahasya arthangal at Alwar Thirunagari.  He lived for 73 years on this earth performing many Kainkaryams  at Sri Rangam and undertook many pilgrimages to many  Sri Vaishnava Divyadesams spreading knowledge and bakthi culture.   His patent style was to elucidate the pramanams fully   ‘following the words of the Purvarcharyas without deviating a wee bit’.   He filled  his vyakhyana granthas with the words of purvAcharyas.  As followers of Mamunigals, duty thus is cast on us to understand the significance of preserving, maintaining, supporting and following the rituals and customs associated with all our traditional Temples.   

For a Srivaishnavaite, Kainkaryam is essential; Selfless and unconditional “kainkaryam i.e., service to Lord” cleanses the soul of the performer. One must adore and be attached to their Acharyan and only the direction of Acharyar will lift us from all earthly evils – and for Us fallen at the feet called ‘Ponnadiyam Sengamalam’ – Swami Manavala Mamunigal will direct us and take us to salvation.  Those of us who try and uphold the ideals of our religion and its cultural heritage, will sure be benfitted as it then becomes the responsibility of Acharya to take care of Sishya's Atma guna poorthi.   

Of the many works, ‘Upadesa Rathinamalai’ is one which all of us should know and recite regularly.  There are 73 paasurams + thanian given  by Kovil Kanthadai  annan and another one rendered by Erumbiappa. His another magnum opus is -Thiruvaimozhi Noorranthathi, which presents essence of Nammazhvar’s Thiruvaimozhi in hundred sweet verses of poetry, with each verse capturing the essence of a decad (a decad comprises approximately ten songs). The literary structure of this work is worth an independent study in its own right. Mamunigal has set this in Venpa style, a metrical prosody comprising four lines; in every song he conveys the essence (tatparya) of a decad of Thiruvaimozhi, in every verse he extols Nammalwar by his various names and yet has striven to  keep the Anthathi style of  composition, thereby beginning each verse with the same word the previous verse ended with. A real classic !  

 

In the few years that he lived on this earth, Sri Varavara Muni physically ensured renovation of numerous temples, reorganised rituals and set up ways of worship and ensured continuance of traditions  through  his eight famous disciples known as Ashtadiggajas (elephants of the eight directions).  Sri Vanamamalai Mutt at Nanguneri was established by Mamunigal through his first disciple Sri Ponnadikkal Jeeyar in 1410.   

 

நம் பூர்வாசார்யர்கள் வாக்கின் படி  ஸ்ரீரங்கநாயகரான பெரிய பெருமாள் மணவாள மாமுனிகளை ஆச்சாரியனாக பெறதிருவுள்ளம் விரும்பி, அர்ச்சகரிடத்தில் 'நமக்கு மணவாள மாமுனியினிடத்திலே திராவிட வேதமான திவ்யபிரபந்த வ்யாக்யானங்கள் (விளக்க உரை) கேட்க வேணும். ஆகையாலே மாமுனியை கருடமண்டபத்திற்கு அழைத்து வரச் செய்வீர் ' என்று ஆணை பிறப்பித்தார். நம்பெருமாளின் ஆணைப்படி கருட மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்ட மாமுனிகளும்   ஸ்ரீவைஷ்ணவ  கோஷ்டியினருக்கு  பெரியவண்குருகூர் நம்பியான நம்மாழ்வாருடைய திருவாய்மொழி பாசுரங்களின் விளக்க உரையை ஈடு முப்பத்தாறாயிரத்தின் அடிப்படையில் அருளினார்.    கலியுகம் 4534 ம் ஆண்டு பிரமாதீச வருடம் ஆனி மாதம்,   பெளர்ணமி திதி, மூல நட்சத்திரம்   நாள் வரை தொடர்ந்து பத்து மாதங்கள் மாமுனிகள் வ்யாக்யானம் செய்ய மிகவும் உகந்து கேட்டு மகிழ்ந்தார் நம்பெருமாள். 

நாம் உகக்கும் நம்பெருமாள் ஸ்ரீரங்கநாதனாலேயே அருளைப்பெற தனியன் : 

ஸ்ரீசைலேச தயா பாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்

யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம் 

( திருமலையாழ்வாரின் தயைக்கு இலக்கானவரும், ஞான பக்தி முதலான குணங்களை கடலாகவும், யதீந்த்ரரான எம்பெருமானாரிடத்தில் அன்பு மிக்கவராயுமிருக்கிற அழகிய மணவாள மாமுனியை வணங்குகிறேன்.) 

ஸ்ரீவைஷ்ணவ திருக்கோவிலிற்கு சென்றால் திருத்துழாய், தீர்த்தம் ப்ரசாதங்களுடன், ஸ்ரீசடகோபமும் கிடைத்தல் மிக சிறப்பானது.  சுவாமி மணவாள மாமுனிகளின்"திருவடிநிலைகள்" (திருப்பாதுகைகள்) இன்றும், ஸ்ரீரங்கத்தில் தெற்கு உத்திரவீதியில் உள்ள, மணவாள மாமுனிகளின் மடத்தில் இன்றுவரை உள்ளது.   மாமுனிகள் திருவடிகளின் பெயர் -  “பொன்னடியாம் செங்கமலம்” அவரது பொன்னடி சார்த்திக்கொள்ளுதல் நமக்கு சிறப்பு. 

அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ

சடகோபன் தண்தமிழ் நூல் வாழ – கடல் சூழ்ந்த

மன்னுலகம் வாழ – மணவாள மாமுனியே

இன்னுமொரு நூற்றாண்டிரும்

பகவத் பாகவத அடியார்கள் வாழ! திருவரங்கப் பெருநகர் வாழ! நம்மாழ்வாரின் குளிர்ந்த ப்ரபந்தங்கள் வாழ! கடல் சூழ்ந்த, பொருந்தியிருக்கும் இவ்வுலகம் வாழ! மணவாள மாமுனிகளே! தேவரீர் எங்களுடன் எப்பொழுதும் இருந்து க்ருபை பண்ண வேண்டும்.   பகவத் ராமானுஜரின் திவ்ய ஆணையானது (ஸித்தாந்தமும் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயக் கொள்கைகளும்) சிறந்த முறையில் எந்தத் தடையுமின்றி எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் வளரட்டும்! நன்றாக வளரட்டும்!!.

இப்படிப்பட்ட கீர்த்திமிகு ரம்ய(அழகிய) ஜாமாதர(மணவாள) முனி(மாமுனிகள்)கள் திருவடிகளுக்கு பல்லாண்டு, பல்லாண்டு  பாடுவோம். 

At Thiruvallikkeni Divyaesam  WE miss the purappadu of our Acaryar  Manavala Mamunigal  with Sri Parthasarathi  - reminiscing the past, here are some photos of 2015 !  - yes, Nov 2015 saw very heavy rains but on that great day, rain relented and there was  purappadu .. .. the kudai purappadus are of 2014 !!

 
adiyen Srinivasa dhasan.    
Mamandur Veervalli Srinivasan Sampathkumar]
- on a rainy day of Nov – 8th, 2021. 

















Thursday, November 4, 2021

Mamunigal Uthsavam - Thiruvallikkeni Deepavali (no) purappadu 2021

 

Deepavali, the festival,  is all about happiness ~  last year  amidst Corona fears too, it was not muted, but was celebrated grandly.  This year (2021) rains have not dampened the spirit  .. .. but bitter truth – schools have reopened !; theatres are allowed in full (expecting bonanza for the tinseldom); everything else is normal – but to us – the most expected darshan – the thiruveethi purappadu – NO !! !! and there is so much restriction on crackers and the way Deepavali is celebrated !


Today being 6th day of Swami Manavala Mamunigal Uthsavam, there would have been a grand purappadu of Acaryar with Sri Parthasarathi emperuman, a purappadu that would extend beyond 5 hours – people happily bursting 100s of 10000 walas, wearing choicest new clothes and having darshan of Emperuman at Thiruvallikkeni and every other divyadesam and other sthalams. .. .. ..

சந்தோஷத்தை தரும் பண்டிகைகளில் மிக சிறப்பு வாய்ந்தது *தீபாவளி திருநாள்*.  பண்டிகைகளின் நோக்கமே, நாம் சிறப்புற கொண்டாடி, மற்றவர்களையும் மகிழ்விப்பதுதானே ! 

The most enlightening are the Ithihasa puranas of Sri Ramayanam and Mahabaratham.  In general, we have conceptualized Deepavali to be slaying of Narakasura by Krishna and many would ask a Q – where did Sree Rama celebrate Deepavali (stating that there was no Deepavali at His time).  One may not have   read all 24,000 verses in the epic poem about Lord Rama’s return to Ayodhya. Indeed Deepavali is celebrated in Ayodhya and many other places commemorating His  homecoming -     Values of good conduct – ‘dharma’ – taking the right path and ensuring that good triumphs over evil. Values of hope, optimism, of forgiveness – of the new beginnings and clean slates represented by the Hindu New Year as people wear new clothes and say prayers for the year ahead. ..  

In recent times, closer to the festival, some so called environmentalists surface – you hear words of pollution, smog, poor quality of air and more .. .. now they say that air quality has deteriorated with the rise of pollutants in the atmosphere. Some actors and some Cricketers would campaign for a green Deepavali saying that animals are scared (but they can be killed in another festival !!)   .. .. accepting the referral period to be Oct to Jan – they would not include the New Year or the other celebration !!  

In Dec 2019, at the International Criminal Court in the Hague, Vanuatu’s ambassador to the European Union made a radical suggestion: make the destruction of the environment a crime. Vanuatu is a small island state in the South Pacific, a nation severely threatened by rising sea levels. Climate change is an imminent and existential crisis in the country, yet the actions that have caused rising temperatures – such as burning fossil fuels – have almost entirely taken place elsewhere, to serve other nations, with the blessing of state governments.  Small island states like Vanuatu have long tried to persuade large powerful nations to voluntarily reduce their emissions, but change has been slow  

Instead of taking measures to prevent ecocide, Richer Nations heavily using luxury vehicles, airconditioners, refrigerants and what not and adding to pollution would cry hoarse on poorer Nations, their resources, cattle and the like – asking them to contribute less towards pollution.  Leaders talking about ecocide would attend the Conference flying in Private jets – and some recipients of awards too would settle nothing less than private jets, but would speak on environment pollution.

வளி மாசடைதல் (Air pollution) என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட வேதிப்பொருட்கள், துகள் பொருட்கள், உயிரியற் பொருட்கள் போன்றவை வளிமண்டலத்தில் கலந்து காற்றை மாசுபடுத்துதலை இது குறிக்கிறது.   இயற்கை இனிமையானது !  .. .. மனித குலத்துக்கு உண்மையிலேயே இயற்கையை காப்பதில் அக்கறை உள்ளதா !  தீபாவளி போன்ற பண்டிகள் நாட்களில் கூக்குரலிடும் பலர் - தங்கள் வாழ்வில் இயற்கையை மாசுபடுத்தும், வாகனங்கள், குளிர் சாதனங்கள், காற்றுப் பதனி போன்றவை குறைவாக உபயோகிப்பார்களா !!

Modern Science tells us that, We live at the bottom of an invisible ocean called the atmosphere, a layer of gases surrounding our planet. Nitrogen and oxygen account for 99 percent of the gases in dry air, with argon, carbon dioxide, helium, neon, and other gases making up minute portions. Water vapor and dust are also part of Earth’s atmosphere. Other planets and moons have very different atmospheres, and some have no atmospheres at all.  

இந்த அகண்ட பிரபஞ்சத்தில் நாம் ஒரு மிகச்சிறிய துணு - நாம் புரிந்துகொண்டதை விட பல விஷயங்கள் உள்ளன.  நாம் புரிந்துகொள்ளாததால் அவை தவறான கோட்பாடு ஆகிவிடாது.  மெய்ஞ்ஞானம் என்ற பெயரில் தேடல் நல்லது; ஆனால் நாம் அறியாதவற்றை கேலி செய்தல் அறிவீனம்.  ஞானம் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பது உண்மையின் தரிசனமா? ஏதோ   கொஞ்சம் புத்தகங்கள் வாசித்து   விட்டால் பழங்கால வாழ்க்கையே தவறு, நாம் மட்டுமே அறிவியல் நவீனத்தில் மெய்ப்பொருள் அறிந்தவர்கள் என கொள்ளலாமா !!    நாம் அறிந்ததாக நினைக்கும் சொற்ப ஞானத்தை வைத்துக் கொண்டு எல்லாம் தெரிந்த மேதாவிகள் போல் பேசுகிறோம்,   நம்மை விட கொஞ்சம் குறைவாக தெரிந்தவர்களை ஏளனம் செய்கிறோம்.  

நவீனம், நாகரிகம் என்ற பெயரில் பண்டைய ஒழுக்க முறைகளை உதாசீனப்படுத்தி வருகிறோம்.   "வாழ்க்கையோடு, கால சூழ்நிலையோடு  அனுசரித்துப் போக வேண்டும் " என்று எல்லாவற்றையும் நம் விருப்பத்துக்கு வளைத்துக் கொள்கிறோம். அழுக்கான உடம்பு. வியர்வை சுரந்து கொண்டே இருக்கும் உடல், பொய் ஞானம்,  பொல்லாத ஒழுக்கம் உள்ள  மனிதகுலம்  "கடவுள் இல்லை' என்று சொல்வது எவ்வளவு அபத்தம்.  

Deepavali, the festival,  is all about happiness .. .. the way to celebrate is a simple routine.  The purpose of the festival is to be happy and  make others happy by sharing – sweets, food, crackers and more – simply spread the happiness.   Deepavali brings cheers and happiness.  Right from our childhood days, we have enjoyed this festival.  The expectation would start a month or so, earlier.  Those days, getting the new cloth in time stitched from Tailor was a task – then a week or so earlier, father would come home with a bagful of crackers.  More than bursting them, taking them out of bags, placing them on the verandah and seeing them gave so much of happiness.  Deepavali Eve would provide opportunity for some testing ! ~ night would be full of expectations.  In the morning, would have pureficatory  oil bath (Ganga snanam), wear new clothes, pray to God, pay obeisance to elders at home – rush out with ‘oothuvathi’ and bagful of crackers.  Lakshmi vedis, kuruvi vedis and bijili gave us unbounded happiness.  Those days taught us of having little, remaining contented and happy and above all sharing whatever we had with near and dear. 



Pattasu, crowds, everything else is surreal  - to us is always it is the supreme Sriman Narayana, worthy of worship who outshines all brightness.   Swami Nammazhwar starts Thiruvirutham divyaprabandham stating: 

பொய் நின்ற ஞானமும்  பொல்லா ஒழுக்கும்  அழுக்குடம்பும்,

இந்நின்ற நீர்மை இனியாமுறாமை, உயிரளிப்பான்

எந்நின்றயோனியுமாய்ப் பிறந்தாயிமையோர் தலைவா

மெய்நின்று கேட்டருளாய்,  அடியேன்செய்யும் விண்ணப்பமே.  

Though one bestowed with great knowledge and more importantly the chosen one by Emperuman, Nammalwar  expresses his humility stating that we possess knowledge which is of no good, we possess no discipline, we are born in womb and are dirty -  and for protecting souls like us, the greatest Lord of Celestials takes birth to guide us and lead us to salvation.  Azhwar prays to Lord seeking His attention and beseeching grant that one may not be born again in state of faulty knowledge, wicked actions and filth-ridden body.  The posterity knows that Azhwar was granted all wishes and was taken along by Perumal – for us the path is certain and easy – follow what Azhwar did and surrender to the Lotus feet of Emperuman. 

Deepavali pervades happiness – every festival is intended to permeate happiness to mankind whose immense benefit rests in falling at the feet of Sriman Narayana.   

At Thiruvallikkeni divyadesam, Deepavali would be double bonanza with Sri Parthasarathi Perumal purappadu and Swami Manavala Mamunigal uthsavam. This year, Mamunigal uthsavam  is happening inside the temple  alas, at a time when everything else is open – there is no purappadu. 

In yesteryears, the grand purappadu would commence around 7 pm and last till 11.30 pm.  As Emperuman Sri Parthasarathi purappadu occurs,   thousands of crackers would be  burst, rockets, flower pots and many other items light the sky – one would see  the skyline with hued colours .. .. ..  there would be  crackers this time too (in the restricted hours !), but sadly we miss thiruveethi ula  of Emperuman.  

Fall at the feet of all Sri Vaishnavas, especially those doing kainkaryam  and pray our Emperuman to give the intellect of mind in being humble and never criticize or speak ill of those involved in every type of kainkaryam.   The photos here are of Deepavali celebrations of yesteryears.

Azhwar Emperumanar Jeeyar thiruvadigale saranam

 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
4th Nov. 2021 (Deepavali day)











Wednesday, November 3, 2021

Wishing all a very Happy and Prosperous Deepavali 2021

 

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை

நாடி இனிய சொலின்

 

                  பொருளால் பிறர்க்கு நன்மை பயக்கும் சொற்களை மனத்தான் ஆராய்ந்து இனியவாக ஒருவன் சொல்லுமப்போது, பாவங்கள் / தீயவைகளை தேய்ந்து அறம் வளரும், எல்லா நன்மையையும் பயக்கும்.

 

உலகோர்க்கு நல்வெளிச்சம் தரும் தீபாவளி திருநாளில் - கொரோனா போன்ற அனைத்து கொடியவைகளின் தாக்கங்களில் இருந்தும் உலகம் மீண்டு, தழை நல்ல இன்பம் தழைக்க நம் ஸ்ரீபார்த்தசாரதி, முதலாழ்வார்கள், இராமானுஜர்,  ஸ்வாமி மணவாளமாமுனிகள் ஆகிய - ஆழ்வார்,  எம்பெருமானார், ஜீயர்  திருவடிகளில் பிரார்த்திப்போம்.

 


*இனிய தீபாளி 2021 வாழ்த்துக்கள்*.

 

அடியேன் ஸ்ரீனிவாச தாசன் [மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்]

3.11.2021

Monday, November 1, 2021

Lord Srinivasa Temple at Sripuranthan needs to be built ! - kainkaryam of a determined individual !!

அக்டோபர் 18 ஐப்பசி பிறந்தது .. .. அடிக்கடி மழை பெய்கிறது.. .. சீதோஷ்ணம் மிதமாக உள்ளது - மொத்தத்தில் ஒரு சந்தோஷ சூழ்நிலை.  ஸ்ரீ வைஷ்ணவம் எனும்  ஆலமரம் தழைக்க இராமானுஜரின் மறு அவதாரமாக தோன்றினவர்  நம் ஆச்சார்யன் ஸ்வாமி  மணவாள மாமுனிகள் ~ அவரது திருவவதாரத்தால் இந்த ஐப்பசி மாசம் சிறப்புற்றது.    நம் ஆசார்யன் உத்சவத்தில் நல்ல மழை பெய்து நாட்டையே வளப்படுத்தும்.

ஆக்கையின் வழி உழல்வேன் என்ற பாசுரம் காதில் ஒலித்தது.  இதோ இங்கே ஒரு கிராம கோவிலிலே நம் ஆசார்யன் ஸ்வாமி இராமானுஜரும் நம் பொய்யில்லாத மணவாள மாமுனிகளும் !!



Recently went on a pilgrimage covering 5 beautiful Temples – darshan at these places was soul-satisfying and made me feel very happy !  .. .. every morning in various social media, I write about my trips !; my observations !; my photos !; my feelings! My learnings ! – and more of ME  !!  - and as I post on social media, I receive more than my share from others too .. a friend of mine had been sending some posts calling for participation in kainkaryam and today suddenly felt that one should be appreciating people like him more and partaking in the various activities that he has been undertaking ..

How many villages do we visit, do we go to lesser known temples, or for that matter Temples which in the past hogged all glory, but now is uncared for ! – would we put up couple of bricks or lit an oil-lamp in thousands of such temples – thoughts, guilt and more haunt me !

ஆக்கை   பெயர்ச்சொல்லை அதிகம் கேள்வியுற்று இருக்க மாட்டீர்கள் !  (அருகிவரும் வழக்கு) - பொருள் :  உடம்பு.   யாக்கை என்பது உடலும் உயிரும் கட்டிக்கொண்டு இருக்கும் நிலைமை. எலும்பு, தசை, நரம்பு முதலான நிலப் பொருள்களும், குருதி போன்ற நீர்ப்ப் பொருளும், சூடு போன்ற நீப்பொருளும், மூச்சோட்டமாகிய காற்றுப் பொருளும், உயிரோட்டமாகிய ஆகாயப் பொருளும் என ஐம்பூதப் பொருளும் ஒன்றோடொன்று கட்டிக்கொண்டு இயங்குவதை யாக்கை என்பது தமிழ்நெறி.

We are in the state of extreme Bliss !  - the adjective ‘blissful’ would mean -  Extremely happy; full of joy; experiencing, indicating, causing, or characterized by bliss.  .. .. it is the month of Aippaisi and it heralds  rains in Tamil Nadu .. .. it is a time of bountiful goodness – Srivaishnavaites are extremely blissful as alongside Deepavali festival comes sarrumurai of Muthal Azhwargal (Thiruvonam, Avittam & sadayam)  and Thirumoolam marks the birth celebrations of our Matchless AcaryaSwami Manavala Mamunigal.  From today 30.10.2021  starts the glorious 10 day celebrations – Deepavali is on day 6 of the Uthsavam 4.11.2021; Annakkoda uthsavam, the next day and Sarrumurai celebrations (Aippaisi Thirumulam) on Monday, 8.11.2021.

Devotees may bleed in their heart to see Emperuman Lord Srinivasa in such a position in a remote village !

For a Srivaishnavaite, Kainkaryam is essential; Selfless and unconditional “kainkaryam i.e., service to Lord” cleanses the soul of the performer. One must adore and be attached to their Acharyan and only the direction of Acharyar will lift us from all earthly evils. 

ஸ்வாமி நம்மாழ்வாரின் பாசுரத்திலே "ஆக்கையின் வழி உழல்வேன் " - நீ ஒன்றை நினைத்துத் தந்தாய்; நான் சரீரத்தின் வழியே போந்தேன். ‘தெப்பத்தை நூக்கிச் சென்று பெருமாளைச் சேவிக்கலாயிருக்க, ‘சரீரம் பாங்கன்று’ என்று நீரின் வழியே சென்று கடலிலே புகுவாரைப் போலே, இதர விஷயப் பிராவண்யத்துக்கு உறுப்பாக்கிக் கேட்டினை விளைத்துக்கொண்டேன்,’ என்கிறார் என்பர் எம்பார்.

முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில்வண்ணனே,

அந்நாள் நீ தந்த ஆக்கையின்வழி உழல்வேன்,

வெம்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப்பாய்ந்து

எந்நாள் யான் உன்னை இனிவந்து கூடுவனே? 

‘முந்நீர்’ எனப்படும் கடலால் சூழப்பட்ட இந்த உலகத்தைப் படைத்தவனே, எங்களுடைய முகில்வண்ணனே! நான் எப்போதோ செய்த வினைகளுக்காக, நீ எனக்கு இந்த உடலைக் கொடுத்து விட்டாய். அது என்னை எந்தப் பக்கம் இழுத்துச் செல்கிறதோ அந்தப் பக்கம் நான் சென்று சிரமப்படுகிறேன். பிறவி என்கிற இந்தத் துன்பம் எப்போது தீரும்? என்னுடைய வினைகள் வேரோடு அழிவதுஎன்றைக்கு? யான் உன் பாதத்தில் சேரும் நாள் எப்போது வரும்?  - என வினவுகிறார் நம்மாழ்வார்.  ஆனால் நாமோ, யார் பெரியன், எனது செல்வம் என்ன, செருக்கு என்ன, மூளை என்ன, அறிவு என்ன என சிந்தையில் வழுக்கி வாழ்கிறோம்.

Have read a book  called ‘Ego is the Enemy’ – wherein there is compelling argument on why ego hurts us, and also shares some practical suggestions about how we can manage our ego.  Most of us would admit having been a victim of ego in the past.  Perhaps we have also observed others (close friends, relatives  and colleagues) who have made poor decisions, or have generally been unhappy, because of their ego. So this thought strongly resonates with me.  Pride and Ego – think about their incredible power. But gone wrong, what might they have cost and lost you?  Many a times,  we have allowed inflated ego’s and pride that has simply “gone too far” becoming  destructive forces! – killing energies, countless relationships, opportunities and initiatives of greater value. All that we have allowed stubbornness  to over-rule common sense.  Being stubborn on principle is welcome but not overreliance on self !!  



Life at Thiruvallikkeni offers chance to mingle with scores of people who are selflessly doing kainkaryam to Emperuman in various forms [be it Arulicheyal, Sreepadham, or many many forms in direct service to Emperuman and more to those serving Him] and various other community service, social service and more.  This person is less than 40, works in an IT company,  married, has kids and has every other distraction that all of us have !  .. .. have been watching his transformation – at the time of doing Sreepadham kainkaryam, he was into various activities like cleaning the tank, helping others – now he has been transforming various things and touching the lives of people. He conducts Ramanuja yatras too !


This gentleman Srikanth Pakshimannar is really doing exceptionally appreciable kainkaryam, visiting various villages, spreading noble thoughts, and bakthi cult and taking care of temples hitherto standing uncared for.  In doing kainkaryam purposefully and in a structured manner, he has created a trust - Sri Ramanujarya Divyagnya Seva Trust- in case you felt moved by the ruins and present looks of this temple – We may join Srikanth in renovating this temple, brick by brick and putting up first a shelter for Emperuman.

Srikkanth and others in kainkaryam during Deepavali purappadu earlier  !


Chola dynasty ruled our land well and  for long. The heartland of the Cholas was the fertile valley of the Kaveri River.  The Cholas left a lasting legacy. Their patronage of Tamil literature and their zeal in the building of temples has resulted in some great works of Tamil literature and architecture. The Chola kings were avid builders and envisioned the temples in their kingdoms not only as places of worship but also as centres of economic activity. The Chola period is also remarkable for its sculptures and bronzes.  One such temple exists in Sripuranthan too.

Away from the complex cities is Sripuranthan, a dusty village in the Ariyalur district of Tamil Nadu.  It is around 250 kms away from Chennai.  There will be muddy path winding across parched lands, scraggy cattle, suddenly enthused village elders, frolicking children – old Temple – all signs of any village scene of South India.  ~ and this village was in global news –  the Lord of Cosmic Dance (Nataraja)  from this village travelled thousands of kilometers smuggled from out his pedestal to the National Gallery of Art Canberra, Australia – by unscrupulous idol dealer Subhash Kapoor,  reportedly bought by NGA for Rs.31 crore in 2008.  Subhash Kapoor is not alone nor or idols from Temple ..... in that maze of network some missing Gods have landed up in foreign lands at private collections and art galleries. Fortunately, this Nataraja idol  was recovered from Australia. 

Sadly there are more sordid stories – there is another temple of Lord Srinivasa, Venkateswarar – Moolavar idol in standing posture – temple not even in a dilapidated condition, sort of non-existent; Uthsavar idols perhaps stolen languishing elsewhere. Our friend is now on a project to construct a small temple a la shelter / roof over Emperuman idol.   Seeing the Moolavar, the temple perhaps has antiquity of few centuries, the least !!


  


His communiqué says it would required around 300 blocks + 30 sacks of cement + one truck load of Msand; wall flooring and plastering work with 5 day 3 men labour – electrical wiring and all put together less than 1 lakh! – sounds incredibly simple and more importantly participation in kainkaryam at a lesser known place.  Here are details of the trust : -

Sri Ramanujarya Divyagnya Seva Trust

SBI, Wallajah Road Branch, Triplicane, Chennai 600005.

Account No.36898050995

IFSC code sbin0016556

Here is a video of the temple in its present form : https://youtu.be/JYYbkfnU1pk

 


Elders say that we do not own, but are custodians of wealth bestowed by Emperuman – perhaps if few of us could contribute little and channelize them through Sri Pakshimannar Srikanth, sooner there would be a Temple – not only here we can support glorious kainkaryabarargal like Srikanth engaged in preserving our rich heritage and culture.  One gets more astonished and over-awed to know that since past few years, he has been running a small Ashram at Thirumandangudi (Thondaradipodi azhwar avathara sthalam) a facility where yatrikas can stay and providing daily breakfast to around 30 school children and offering Prasad daily at Mamunigal thiruvarasu at Thiruvarangam. 

Pranams to all those involved in kainkaryam in every form and appreciations to my friend Pakshimannar Srikanth, who now lives in Peyalwar Koil Street, Thiruvallikkeni and fanning out to many places for kainkaryam

 

adiyen Srinivasadhasan
Mamandur Srinivasan Sampathkumar
1st Nov 2021.

நேர் சம்பந்தமில்லாத பின்குறிப்பு :  யாக்கை (yaakkai) என்பது 2017ம் ஆண்டு வெளிவந்த   தமிழ் திரைப்படம் ஆகும். இதில் கதாநாயகனாக கிருஷ்ணாவும், கதாநாயகியாக சுவாதி ரெட்டியும் நடித்து  இருந்தனர்.  யுவன் சங்கர் ராஜாவின் இசை