To search this blog

Thursday, July 1, 2021

Sri Andal Thirukalyanam - Nachiyar thirumozhi - நம்மை உடையவன் நாராயணன்நம்பி

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார்  பெண்பிள்ளையாய், நந்தவனத்தில், துளசிமலரில் பூமிப்பிராட்டி அம்சமாய் தோன்றிய கோதைப் பிராட்டியின் பக்தி அளவிட முடியாதது. ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த  பிரபந்தங்கள்  'திருப்பாவை & நாச்சியார் திருமொழி". தன் இளமை  தொடங்கியே 'மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்' என உறுதி பூண்ட பிராட்டியின் பக்தி திருப்பாவை, நாச்சியார் திருமொழி நூல்களாக வடிவெடுத்தது. ஆண்டாள் பாடல்கள் அனைத்திலும் ஒருமித்த கருத்து  ஸ்ரீகண்ணனிடம் பக்தியே.  அவரது வார்த்தைகள் இலக்கண நயமும், பக்தி மனமும் கொண்டன.  திருப்பாவை முப்பது பாடல்களும் ‘சங்கத் தமிழ்மாலை’ என்று போற்றப்படுகின்றன.

 


இன்று ஆண்டாள் சிறப்பு பற்றி !  .. .. நமது ஸ்ரீவைஷ்ணவ இல்ல  திருமாளிகைகளில் நடக்கும் திருமணத்தை ஆண்டாள் திருக்கல்யாணம் என்றே சொல்லலாம். கல்யாணத்தில் சீர் பாடல் கட்டத்தில் வாரணமாயிரம் அநுஸந்திப்பது வழக்கம். இப்பாடல்களைக் கேட்கும் புதுமணத் தம்பதிகள் விரைவிலேயே ஞானமும் பக்தியும் நிறைந்த நன்மக்களைப் பெற்று மகிழ்வார்கள்.  முன்பெல்லாம் திருமணத்துக்கு வந்திருக்கும்  அனைத்து  வைதீகர்களும் மணையில் அமர்ந்த்து 'ஆண்டாள் நாச்சியாரின்' - வாரணமாயிரம் பாசுரங்களை இசைப்பர்.  இப்போதைய திருமணங்களில்  வாத்தியார் மற்றும் அவரது உதவி - 'மணமகனும் மணமகளும் தேங்காய் உருட்டி விளையாடும் வைபவத்தில்' சற்று வித்தியாசமான ராகத்தில் 'வாரண  .. .. மாயிரம் ! -  சூழா - வ - லம்   செய்து !  ..  .. .. நாரண நம் பீநடக்கின்னான் இன்னெதிர் .. .. என இசைப்பதை கேட்டு இருக்கலாம் !!



திருப்பாவை ஒரு எளிய நடையில் நமக்கு அளிக்கப்பட உன்னத காவியம்.  ஆண்டாள் திருப்பாவையில் எம்பெருமானை உபாயமாகக் கொண்டாள், அவனுக்குச் செய்யும் தன்னலமற்ற தொண்டே உபேயம் என்று அறிவித்தாள். இந்த நினைவு இருந்தால் எம்பெருமான் தானே பலனைக் கொடுப்பான்.  எம்பெருமான் மீதிருந்த அளவிறந்த காதலாலும் அவன் தன்னை உடனே வந்து கைக்கொள்ளாததாலும் மிகவும் கலக்கத்தை அடைந்தாள்.  ஸ்ரீமன் நாரணனை அடைவதை பற்றி அவர்தம் மிழற்றலே நாச்சியார் திருமொழி பாசுரங்கள்.  “உன்றன்னோடு  உற்றோமேயாவோம்   உனக்கே நாமாட்செய்வோம்“ என்றபடி   நம்மை நோக்குமவனான கண்ணபிரான் தனது செந்தாமரை மலர்போன்ற திருக்கையாலே என்காலைப்பிடித்து அம்மி மிதிப்பிக்கக் கனாக்கண்டேன்  எனும் பாசுரம் - 6ம் திருமொழி 'வாரணமாயிரம்' எனும் பத்து பாசுரங்களில் .. .. . இது அச்மாரோஹணம் எனப்படும் ஒரு முக்கிய நிகழ்ச்சி - அம்மி மிதித்தல் என்கிற நிகழ்வினை.

நமது திருமண முக்கிய நிகழ்வுகளில் 'அம்மி மிதித்தலும் - அருந்ததி பார்த்தலும்' -   அச்மன் என்றால் கல் என்று பொருள். அசைவற்ற ஒரு கல்லின் மீது மணப்பெண்ணை நிற்க வைத்து மணமகன் 'ஆதிஷ்டேமம்.' என்று துவங்கும் மந்திரத்தைச் சொல்வார். "வாழ்க்கை என்பது கரடு முரடாக இருக்கும், சுகம் வரும்போதும் சரி, துக்கம் வரும்போதும் சரி, சோதனைக்குரிய தருணத்திலும் சரி, மனதில் எந்தவித சஞ்சலமும் இன்றி இந்தக் கல் போல ஸ்திரமான, திடமான மன உறுதியை நீ பெற்றிருக்க வேண்டும்" என்று மணமகன், மணப்பெண்ணை நோக்கிச் சொல்வதே இந்த மந்திரத்தின் பொருள்.  அக்காலத்தில் திருமணத்தை அவரவர் இல்லத்திலேயே நடத்தினார்கள். வீடுகளில் பயன்படுத்தக் கூடிய கல்லாக அம்மி இருந்ததால் அதனைப் பயன்படுத்தியிருக்கலாம் அல்லது அச்மன் என்ற வார்த்தை மருவி தமிழில் அம்மி என்று ஆகியிருக்கலாம். ஒரு கருங்கல்லின் மீது நிற்க வைத்து இந்த மந்திரத்தைச் சொல்ல வேண்டும் என்பதே சம்ப்ரதாயம்.

அருந்ததி  வசிஷ்ட மகரிஷியின் பத்னி. அருந்ததி என்ற வார்த்தைக்கு தர்மத்திற்கு விரோதமான காரியத்தை எந்தக் காரணத்தைக் கொண்டும் செய்யாதவள் என்று பொருள். அருந்ததி பார்ப்பது என்கிற நிகழ்வு திருமண நாள் அன்று மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு பின் செய்யப்பட வேண்டிய ஒன்று !   - அம்மி மிதித்துக்கொண்டே அருந்ததி பார்ப்பது சரியல்ல !!  




நாச்சியார் திருமொழி 40 பாடல்களைக் கொண்ட ஒரு அற்புத காவியம் - கோதைப்பிராட்டி  கண்ணனைத் தனது நாயகனாகக் கொண்டு அவனை அடையத் துடிக்கும்  தவிப்பை எடுத்துக் காட்டுகின்றது. இதோ இங்கே ஆண்டாள் நாச்சியார் தமக்கு ஸ்ரீமன் நாராயணனுடன் நடக்கும் அற்புத திருமணத்தை பற்றி கனவு காணும் பாசுரங்களில் ஒன்று :

இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்

நம்மை  உடையவன்  நாராயணன்நம்பி

செம்மையுடைய  திருக்கையால் தாள் பற்றி

அம்மி மிதிக்கக்  கனாக் கண்டேன் தோழீ நான்!! 

ஆண்டாள் கண்ணபிரானோடே இரண்டறக்கலந்தவர்.  இப்பிறவியில் மட்டும் அல்ல, என்றென்றும் அவருக்கே உரித்தானவர்.   இந்த பிறவியிலும் இப்பிறவிக்கும் மேலுள்ள ஏழேழு பிறவிகள் எல்லாவற்றிற்கும் சரண்யனாயிருப்பவனாய் நம்மை உடையவன் ஸகல கல்யாணகுண பரிபூர்ணனான  நாராயணனான கண்ணபிரான்  செவ்விய தனது  திருக்கையினால்  எனது காலைப்பிடித்து அம்மியின்மேல் எடுத்து வைக்க, தனது திருமணம் சிறப்புற நடைபெறுவதை எண்ணி பூரிக்கும் பாசுரம் இது.  

ஸ்ரீ நாலாயிர திவ்யப்ரபந்தம் சந்தை ஆகாதவர்கள் - அடுத்த முறை கல்யாணத்துக்கு செல்லும்போது, மற்ற சத்தங்களை தவிர்த்து, தேங்காய் உருட்டி விளையாடும்போது - 'வாரணமாயிரம்' பாடல்களை கேட்டு இன்புறலாம். 

Kothai piratti indeed succeed in her dreams and married Sriman Narayana.  Sankranthi is  purappadu of newly wed Divya Thampathis - Sri Andal and Sri Parthasarathi grandly occurs  in a special open palanquin [one that has no roof known as kooralam].  Sri Parthasarathi,  is embellished with many dazzling ornaments adorning the Crown [Sigathadai]; Sri Andal in a beautiful sitting posture sitting opposite to Him in the same pallakku.   Here are some photos of the Sankranthi Urgola Uthsava purappadu  many years ago on 15th Jan  2008.

adiyen srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
1st July 2021.











Aani Sadayam - Sri Peyazhwar - தேனமரும் பூமேல் திரு.

Today 29th June 2021 is Aani Sadayam – masa thirunakshathiram of Sri Peyalwar.  At Thiruvallikkeni, we have a separate sannathi (thirukovil) and the street is so named – Peyazhwar Koil theru.  Every thirunakshathiram day, there would be moonram thiruvanthathi goshti at this place. 




Continuing divine old traditions for more than two decades now,  Sri Peyalwar from Sri Adhi Kesava Perumal Devasthanam has been visiting Thiruvallikkeni for mangalasasanam of the Divyadesa perumal. 

Ages ago -  on that beautiful rainy day at Thirukkovalur  idaikazhi – muthal azhwargal (Sri Poigaippiran, Boothathazhwar and Peyalwar)  met.  Sri Poigai Alwar and Bootathalwar, gave us thiruvanthathis  lighting with the Universe and love,  Peyalwar  had darshan of Emperuman in these lights and sang : 

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் * திகழு

மருக்கனணி நிறமுங்கண்டேன்*  செருக்கிளரும்

பொன்னாழி கண்டேன் புரிசங்கங்கைக் கண்டேன்*

என்னாழி வண்ணன்  பாலின்று** 

18th Nov. 2014 was  Ekadasi day.  On all Ekadasis, there will be periya maada veethi purappadu of Sri Parthasarathi Swami at Thiruvallikkeni Divyadesam – it was more special on that day  as Thirumylai Peyalwar had come to Thiruvallikkeni.    Peyalwar who graces the Mylai  Kesava Perumal temple –  visited Thiruvallikkeni in a grand procession.  Sri  Peyalwar had purappadu in a palanquin and nearer Triplicane [at the TP koil Street – Besant Road Junction] – the pallakku was opened enabling devotees have his darshan fully.  From there, Peyalwar  was accorded maryathai with Srisadagopam accompanied by Senai Muthaliyar – after  Chinna mada veethi purappadu entered  the Vahana mandapam, Azhwar came inside  Thirukovil in kaipalagai and did mangalasasanam in every sannathi. . 



In the evening there was grand purappadu on the occasion of Ekadasi with Azhwar and Sri Parthasarathi.  Perumal perhaps was delighted with Sri Peyazhwar accompanying him – dazzled with so many thiruvabaranams (jewels) and unforgettable hair style (kondai) embellished by peacock feather (mayil peeli) – Here is the concluding pasuram of Moondram thiruvanthathi of Sri Peyalwar.

சார்வு நமக்கென்றும் சக்கரத்தான், தண்டுழாய்த்

தார்வாழ் வரைமார்பன் தான் முயங்கும், - காரார்ந்த

வானமரும்  இன்னிமைக்கும் வண்டாமரைநெடுங்கண்,

தேனமரும் பூமேல் திரு. 

எம்பெருமானே பெரிய பிராட்டியாரே நமக்குத் தஞ்சம் என்று  ஆழ்வார் தலைக்கட்டுகிறார்.   எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன் - திருவாழியைக் கையிலே உடையவன்,  குளிர்ந்த திருத்துழாய் மாலை விளங்கப்பெற்ற மலைபோன்ற திருமார்ப யுடையனுமானவன்.  அத்தகைய சிறப்பு வாய்ந்த   எம்பெருமானால்  ஸம்ச்லேஷிக்கப்படுகின்றவளாய்,  மேகங்கள் செறிந்த ஆகாசத்திலே   நிலைத்து நிற்கக் கூடியதான மின்னல்போல  விளங்குகின்றவளாய்,  அழகிய தாமரைப் பூப்போன்ற நீண்ட திருக்கண்களையுடையளாய்,  தேன் நிறைந்த தாமரைப் பூவில் வஸிப்பவளான பெரிய பிராட்டியார் தான் நமக்கு எப்போதும் சரணம், என அறுதியிட்டு உரைக்கின்றார் நமது தமிழ்த்தலைவன் பேயாழ்வார்.

Reminiscing those golden days – here are some photos of evening purappadu on 18.11.2014. 

~adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
29.6.2021 












'Ammanai' and other ball games .. .. Sri Azhagiya Singar Mattaiyadi vaibhavam 2021

Day 9 of Brahmothsavam would be hectic ~ morning there is  purappadu in ‘Aaal mael pallakku’ – Porvai kalaithal vaibhavam – pranaya kalagam (mattaiyadi) – thirumanjana kudam, theerthavari – purappadu – evening Pathi ulavuthal – Kannadi pallakku – thirumbukal – dwaja avarohanam, and more.    Today 27th June 2021 would have been day 9 of Sri Azhagiya Singar Aani brahmothsavam.




To describe it very simply, the game of Cricket is a battle between ‘bat and ball’. Bowlers hurl (bowl)  the cricket ball at the batsmen trying to dislodge the wicket or get them out in multiple possible ways, while batters try to hit the ball around for runs !  .. .. …

A cricket ball is a hard, solid ball, that consists of a cork core wound with string then a leather cover stitched on.  Currently, the red Dukes cricket ball is used by England, West Indies and Ireland for Test matches. India tends to prefer the locally-manufactured SG cricket ball while the other Test-playing nations use the Australian-manufactured Kookaburra ball.  They come in different colours – for Test matches it is ‘red cherry’ – while in coloured games, it is White – and then there is the pink ball, which perhaps been the most tested ball in the history of the game — nine years, to be precise. After a pink Kookaburra ball was used in a charity match in 2006, the Marylebone Cricket Club (MCC) — the club recognised as the custodian of the Laws of Cricket — issued a request for manufacturers to develop a ball that could be used for day/night matches.

Today, 27th June 2021 (in the night of IST) South Africans are to play West Indies at St. Georges in T20I no 1178.   At Bristol, a city   in South West England, Womens team are playing ODI.   Bristol  city lies between Gloucestershire to the north and Somerset to the south.  Indian women are playing England women in ODI no. 1198. 

A combined eight wickets from Sophie Ecclestone, Anya Shrubsole, Katherine Brunt, and Kate Cross consigned India to a below-par performance with the bat in the first ODI against England in Bristol. The visitors made just 201 for 8 after losing the toss, with Mithali Raj scoring 72 of those.  The short ball was also employed to good effect. Debutant Shafali Verma,  at 17 years and 150 days old, became the youngest player - male or female - to represent India in all formats of the game, fell to a failed pull while backing away to a Brunt offcutting bouncer. The over, fifth in the innings, had begun with two Verma fours - one lofted over mid-off and the other carved behind point - but ended with India losing their first wicket with just 23 on the board.

After writing a few paras, I remember that this no Cricket post but a post on Perumal purappadu at Thiruvallikkeni – the probable day 9 of Sri Azhagiya Singar brahmothsavam.  Today but for Corona restrictions, we would have had darshan of Sri Azhagiya Singar theerthavari in Aani brahmothsavam. - here is something on Uthsavam when ‘the game of ball throwing’ too is played ! .. that is   –‘mattayadi’.






For Sri Azhagiya singar   ‘ mattaiyadi’ – the ‘pranaya kalaham’ arising out of the celestial bonds between ‘Thayar and Perumal’  with Ubaya Nachimar and Perumal engrossed in wordy duel occurs at the western gate ie., the rear entrance to the temple at Thulasingaperumal koil street. .. ..  Perumal’s entry is denied with thayar slamming the doors and later after the intervention of Swami Nammalwar, Perumal and Ubhayanachimar play exchanging the flower ball – throws and catches being taken by the battars. 

பந்து சங்க கால மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. சங்க கால மகளிர் பந்தாடுவதில் திறன் பெற்றிருந்தனர்.   பல பந்துகளை (அல்லது காய்களை அல்லது பழங்களை) மேலே தூக்கிப் போட்டு எந்தப் பந்தும் கீழே விழாமல் மேலே தட்டி விளையாடுவது சங்க கால மகளிரின் பந்தாட்டம். (Jugglery).

பெருங்கதை என்னும் தமிழ்நூல் கொங்குவேளிர் என்பவரால் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. பிருகத் கதா என்னும் வடமொழி நூலைத் தழுவி இது எழுதப்பட்டது என்பர். இதில் பந்தாட்டப் போட்டி நிகழ்ந்த செய்தி விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆறு பெண்கள் ஒவ்வொருவராக அரங்கில் அடுத்தடுத்துத் தோன்றி விளையாடுகிறார்கள்.  அந்த பந்தானது -   கிடை எனப்படும் வெண்டு, பூலாப்பூ ஆகியவற்றை நடுவில் வைத்து பஞ்சு-நூலால் சுற்றி அதன்மேல் மயில்பீலி, மென்மையான மயிர் ஆகியவற்றை வைத்து மேலும் வரிந்தனராம்.  இந்த பந்துகள் - மயில்பீலியின் கண் போல கண்ணுக்கு அழகாகவும், கைக்கு மிருதுவாகவும், இலேசாகவும் இருந்ததாம். இத்தகைய பந்துகளைச் செய்தோர் அறிவர் எனப்பட்டனர்.  இவை ஒரு கைக்குள்  அடங்கும் அளவு இருந்தனவாம்.   மானனீகை என்பவள் ஓரிடத்தில் நின்றுகொண்டு தன் கைக்கு எட்டிய தூர்ரத்தில் விரலால் வட்டம் போட்டுக்கொண்டு அதற்குள்ளேயே சுழன்று பந்தாடினாளாம். !!  

அம்மானை  என்று மற்றோரு விளையாட்டு உண்டு.  மூன்று பெண்கள் அமர்ந்து அம்மானைக் காயை வீசி விளையாடும் விளையாட்டாகவும்  கவிதை புனையும் அறிவுப்பூர்வமான அமைப்புடையதாக இருந்ததால் இவ்விளையாட்டு இலக்கிய வடிவம் பெற்றது.   மூவர், ஐவரெனக் கூடிப் பாட்டுப் பாடிக்கொண்டு ஆடுவது அம்மானை விளையாட்டு.  முதல் பெண் ஒரு செய்தியைப்  பாட்டாகக்  கூறிவிட்டு,    கற்களை மேலே தூக்கிப் போட்டுப் பிடித்து ‘அம்மானை’ என்று கூறுவாள்.  அது அரசனைப்பற்றியோ , இறைவனைப்பற்றியோ  இருக்கும். அவர்கள் புகழைக் கூறி அவர்கள் அருளை அடையவேண்டும் என்ற எண்ணமே இந்த அம்மானைப் பாட்டின் நோக்கமாகும். இரண்டாவது பெண் ,  முதல் பெண் சொன்ன செய்திக்குப் பொருத்தமாக ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு ‘அம்மானை’ என்று சொல்லிவிட்டு கற்களை  மேலே தூக்கிப் போட்டுப் பிடிப்பாள். மூன்றாவது பெண் அந்த வினாவிற்கு  விடை அளித்து ‘அம்மானை’ என்று சொல்லி கற்களை  மேலே தூக்கிப் போட்டுப் பிடித்துப் பாட்டை முடிப்பாள்.

இவ்வாறு கற்களை சுழற்றி, மேலே தூக்கி போட்டு பிடித்து விளையாடும் சில இனிய விளையாட்டுகள் சில பத்து வருஷங்கள் முன்வரை முழங்கின !  - இன்றைய கணினி - ஆண்ட்ராய்டு லோகத்தில் இவை அனைத்தும் வழக்கொழிந்து விட்டன. 

10.3.2021  ன்று  காலை  புறப்பாடு  "ஆளும் பல்லக்கு " - இந்த பல்லக்கு நான்கு ஆட்கள் தங்கள் தோள்கள்  மீது பல்லக்கை  சுமப்பது போன்றே அமைந்து இருப்பதால் "ஆள் மேல் பல்லக்கு:.  இந்த பல்லக்கில் பெருமாள் நிறைய போர்வைகளை போற்றிக்கொண்டு எழுந்து அருள்கிறார்.   திருமங்கை மன்னனை ஆட்கொண்ட படலத்தில்பெருமாள் ஒரு கணையாழியை [மோதிரத்தை] தொலைப்பதாகவும், அதிகாலை பெருமாள்   நாச்சிமாருக்கு கூட தெரியாமல்  தனது மோதிரத்தை தேடி போர்வையுடன் வந்து,  முன் தினம் கலியன்  வைபவம் நடந்த அதே இடத்தில் நகையை தேடும் வைபவம் "போர்வை களைதல்" என  கொண்டாடப்படுகிறது.

 ப்ரஹ்மோத்சவத்திலே  9ம் நாள் ஆள் மேல் பல்லக்கு - பெருமாள் போர்வை களைதல் வைபவம் - இந்த வருடம் அசம்பாவிதம் காரணமாக பெரிய மாட வீதி புறப்பட்டு இல்லை. குளக்கரை புறப்பாட்டிற்கு பிறகு போர்வை களைதல் வைபவம் தென்னண்டை மாட வீதியில் கோவில் கோபுரம் / அத்தங்கி திருமாளிகை முன்பே நடந்தேறியது.  பின்னர் தெற்கு மாட வீதி புறப்பாடு கண்டருளி  மேற்கு கோபுர வாசலில் மட்டையடி வைபவமும், பிறகு பூப்பந்து விளையாடுதலும் விமர்சையாக நடைபெற்றன.

திருக்கோவிலை சென்றடைந்ததும்  'மட்டையடி' எனப்படும் ப்ரணய கலஹம்'  -  பிணக்கு - ஊடலில்  பெருமாள் எழுந்து அருளும் போது, உபய நாச்சிமார்  திருக்கதவை சாற்றி விட, பெருமாள் மறுபடி திரும்ப  திரும்ப ஏளும் வைபவமும்,  சுவாமி நம்மாழ்வார் வந்து பிணக்கை தீர்த்து வைப்பதும் நடைபெறுகிறது.    ப்ரணய கலஹ ஊடலை திருக்கோவில் கைங்கர்யபர பட்டர் சுலோகம் அதன் அர்த்தத்துடன் படிக்கும் வைபவம் கோவில் வாசலில் நடக்கிறது.

கணையாழி மோதிரம் காணாமல் போனதே மெய்யானால், விடியப் பத்து நாழிகைக்குப் புறப்பட்டருளி, மின்னிடை மடவார் சேரியெலாம் புகுந்து யதா மனோரதம் அனுபவித்து அவ்வனுபவத்தாலே உண்டாயிருக்கிற அடையாளங்கள் எல்லாம் திருமேனியிலே தோற்றா நிற்கச் செய்தேயும் என  நாச்சியார்  வினவ, பெருமாள்  அலங்கார வார்த்தைகளால் மறுமொழி அருளிச் செய்யும் பிரபாவம் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.  பிறகுபெருமாளும் நாச்சிமாரும் பூப்பந்து எறிந்து விளையாடுகின்றனர்.   இதன் பிறகு தீர்த்தவாரி, சக்கரத்தாழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகின்றது     இதோ இங்கே ஸ்வாமி நம்மாழ்வாரின் அற்புத பாசுரம் - நாயிகா பாவத்தில் :   

மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு  நானதஞ்சுவன்,

மன்னுடை இலங்கை   அரண்காய்ந்த மாயவனே!

உன்னுடைய சுண்டாயம் நானறிவன்   இனியது கொண்டு செய்வதென்,

என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ! 

சங்கப் பாடல்களில் தலைவன், தலைவி  ஊடலும், விளையாட்டும் பிரசித்தம்.  கிருஷ்ணாவதாரத்தில் கண்ணபிரானோடு பரிமாறிய கோபியர் இங்ஙனே பிரணய ரோஷத்தாலே ஊடல் செய்ததுண்டு. அவர்களுடைய பாவனை உறவே   ஆழ்வாருக்கும்  ஆகி   முற்றியிருக்கின்றது.  கோபியர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஜீவன்கள். இறைவன் என்னை ஆட்கொள்ள மாட்டானா? என் துக்கம் எல்லாம் போகும் வண்ணம் என்னுடன் புணர மாட்டானா?  மாயவனே, உனது சுண்டாயம் (விளையாட்டு) நான் அறிவேன். நீ கிளம்ப ஆயத்தப் படுமுன், என் விளையாட்டுச் சாமான்களை (கழல்- அம்மானை ஆடும் காய்) மறக்காமல் வைத்து விட்டுப் போ, நம்பீ!" என்கிறார்.

Here are some photos of day 9 of Sri Azhagiya Singar  special  brahmothsavam ‘mattayadi’ vaibhavam on 10.3.2021. 

adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
27th June 2021.