Of the many kingdoms of Tamil Nadu, Pallavas
ruled Thondaimandalam having Kanchipuram as their capital city. The appreciatory stones describe that King
Simha Vishnu destroyed the last shred of
adversity from the group of the learned. His son Mahendravarman succeeded
him. The paintings in the caves of Trichnopoly,
Sittannavasal, musical inscription at Kudumiyamalai are attributed to
him. It was also era when Pallavas and
Chalukyas warred. Pallavas fought a series of wars in the northern Vengi
region, before Mahendravarma decimated his chief enemies at Pullalur. Tamil literature flourished under his rule,
and he was succeeded by his famous son -
Narasimhavarma I in 630 CE.
Narasimha varma also known as Mamallan (great wrestler) defeated Pulakeshi II and ransacked the Chalukyan capital
city Vatapi (also known as Badami). It
was during his reign, in 640 AD, that the Chinese traveller Hiuen Tsang visited
Kanchipuram ~ and he is ever remembered
for those great works of art at Mahabalipuram (aka
Mamallapuram).
இளவேனிற் காலத்தில்
ஒருநாள் மாலை மகேந்திர தடாகத்தின் கரை வழியாகச் சென்ற இராஜபாட்டையில் பிரயாணிகள் இருவர்
காஞ்சி மாநகரை நோக்கி நடந்து கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் ஆறடி உயரத்துக்குமேல்
வளர்ந்திருந்த ஆஜானுபாகு - என துவங்கும் பிரசித்தி பெற்ற நாவலை படித்து இருப்பீர்கள்
!!
அந்நாவலின்
இருபத்தாறாம் அத்தியாயம் - 'கற்கோயில்கள்' : கடல்மல்லைத் தீவின் தென்பகுதியில்
விஸ்தாரமான வெட்டவெளிப் பிரதேசத்தில் வரிசையாக ஐந்து சிறு குன்றுகள் நின்றன. அவற்றில்
மூன்று குன்றுகளில் நூற்றுக்கணக்கான சிற்பிகள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு
குன்றையும் குடைந்து கோயில் வடிவமாக அமைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு கோயிலில் முன்
மண்டபத்தைத் தூண்கள் வேலையாகிக் கொண்டிருந்தன. இன்னொரு கோயிலில் மேல் விமான வேலை நடந்து
கொண்டிருந்தது. மூன்றாவது குன்றை அப்போதுதான் குடைய ஆரம்பித்திருந்தார்கள். சிற்பிகளும்
பணியாட்களும் தங்குவதற்கான சிறு கொட்டகைகள் நெடுகிலும் காணப்பட்டன.
அமரர் கல்கி எழுதிய - சிவகாமியின் சபதம்- புதினத்தில் இருந்து. 12 வருடங்களாகக் கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த இக்கதை பிறகே
ஒரு புதினமாக வெளியிடப்பட்டது. முதலாம் மகேந்திரவர்ம
பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இப்புதினத்தில்
இளவரசன் முதலாம் நரசிம்ம பல்லவன், முக்கிய இடம் வகிக்கிறார்.
கலைகள் மனித உணர்வுகளையும், படைப்பாற்றலையும் வெளிப்படுத்தும் பல்வேறு
வடிவங்களைக் கொண்டுள்ளன. அவை முக்கியமாக காட்சிக் கலைகள் (ஓவியம், சிற்பம்), நிகழ்த்துக்
கலைகள் (இசை, நடனம், நாடகம்), இலக்கியக் கலைகள் (கவிதை, உரைநடை) மற்றும் பயன்பாட்டுக்
கலைகள் (கைவினை, கட்டிடக்கலை) என வகைப்படுத்தப்படுகின்றன. கலைகள் 64 என வகைப்படுத்தப்பட்டுள்ளன,
மேலும் இவை நுண்கலை, கவின் கலை எனவும் பிரிக்கப்படுகின்றன
Sri Sthalasayana Perumal Thirukovil is at
Thirukkadanmallai ~ in case the name does not ring a bell – it is more famously
known as Mahabalipuram (simply Mamallapuram) known for its great architecture. It
is at this divyadesam our Boothathazhwar was born. The temple is one of the 32 Group
of Monuments at Mahabalipuram that are declared as UN world heritage sites, but
unlike others that are maintained by the Archaeological Survey of India, the
temple is maintained and administered by the Hindu Religious and Endowment
Board of the Government of Tamil Nadu.
During the rule of Mahendravarman I (600 CE –
630 CE), Mahablipuram started to flourish as a centre of art and culture. His
patronage helped the creation of a number of the city’s most iconic landmarks.
This period of artistic excellence was duly continued by his son
Narasimhavarman I (630 CE – 680 CE) and subsequent Pallava kings. Mahabalipuram
was already a thriving sea port on the Bay of Bengal before this time. A
significant amount of coins and other artefacts excavated from this region also
indicate a pre-existing trade relation with the Romans even before it became a
part of the Pallava Empire. Constructed with formidable
finesse by the Great Pallavas in 7th century BC, Mahabalipuram symbolises the
confluence of Indian history, geography and ancient Indian economy. Historical
relevance of Mahabalipuram dates back to the ancient days of Sangam literature
and Bhakti movement that flourished here, eventually contributing to the
development of Dravidian architecture in Tamil Nadu.
அழகான தமிழ் மொழியில் குழந்தைகளுக்கு புரியும்வகையில், மிக எளிய சொற்களைப்
பயன்படுத்தி, குழந்தைகளுக்காகவே பாடல்கள் இயற்றித் தருவதில் பெயர்பெற்றவர் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா. அவர்கள் வா ராஜா
வா திரைப்படத்திற்காக வடித்துத் தந்த பாடல்:
கல்லெல்லாம் சிலை
செஞ்சான் பல்லவ ராஜா..
அந்தக் கதை சொல்ல
வந்தேனே சின்ன ராஜா..
வா.ராஜா வா..
ஒட்டுக்கல்லை சேர்க்காம..
ஒரே கல்லை குடைஞ்செடுத்து
கட்டி வச்சா மண்டபத்தை
பல்லவராஜா
அதைக் கச்சிதமா சொல்ல
வந்தேன் சின்ன ராஜா..
பல்லவ
மன்னவனின் படைப்பில் உருவான மகாபலிபுரத்தின் சிறப்புகளை எவரும் உணரும் வண்ணம் பட்டியலிடுகிறது
இப்பாடல்!
Mahabalipuram architecture, UNESCO World Heritage site, features unique Pallava-era rock-cut and structural monuments. It showcases 40 ancient Hindu structures - including monolithic Rathas (chariots), rock-cut Mandapas (caves), and structural, ocean-side shrines like the Shore Temple. These masterpieces are renowned for intricate carvings and the massive open-air "Descent of the Ganges" relief.
Arjuna's Penance, or the Descent of the Ganges, is a massive 7th-century open-air rock relief in Mamallapuram, carved by the Pallava dynasty. Measuring 29m by 13m, this UNESCO World Heritage Site depicts hundreds of figures, including gods, humans, and animals, celebrating either Arjuna’s penance or Sage Bhagiratha’s quest to bring the Ganges to earth. This is situate exactly behind Sri Sthalasayanathuraiyavar thirukkovil.
Bhagiratha's Penance – is Sage Bhagiratha performing intense austerities to bring the sacred Ganges river down to Earth to cleanse his ancestors' sins. The sculpture features a natural cleft in the granite, which is often interpreted as the river Ganges flowing down, enhanced with carvings of nagas (snake deities). It includes detailed figures of elephants, sages, and devotees, showing high-quality artistry. Arjuna performing penance to receive the Pasupatha Astra (a powerful weapon) from Lord Shiva, is another architectural beauty.
The relief was created to celebrate the victory of Narasimhavarman I over the Chalukya Emperor Pulakesin II. The place, now known as Mamallapuram, was named in honor of the Pallava monarch Narasimhavarman I (630–668 CE), who was conferred the title Mamallan, the "great wrestler" or "great warrior". He was the son of King Mahendravarman I. The architectural creations at Mamallapuram, mostly attributed to Mamallan in the 7th century, adopted stone as the medium for sculpting in situ rock faces, which until this was done with some perishable material like wood or loose stones
கல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவ ராஜா..
பாடல் இடம் பெற்ற படம் - " வா ராஜா வா" - ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் குழந்தை அழ.வள்ளியப்பா அவர்கள் எழுதிய இப்பாடலுக்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் எல்.ஆர். ஈஸ்வரி பாடியிருந்தார். வா ராஜா வா (Vaa Raja Vaa) 1969ல் வெளிவந்த குழந்தைகள் திரைப்படம். மாஸ்டர் பிரபாகர், பேபி சுமதி, சீர்காழி கோவிந்தராஜன், வி. எஸ். இராகவன், கே. டி. சந்தானம், சுருளி ராஜன் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. தெலுங்கில் பாலராஜூ கதா (1970) என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. குன்னக்குடி வைத்தியநாதன் அறிமுகமாக இப்படத்தில் இசையமைத்தார்.
Thirukkadanmallai
is a beautiful divyadesam – Moolavar is in reclining posture [Kidantha kolam in
bhujanga sayanam] - “Sthala Sayana Perumal”; Thayar - “Nilamangai Thayar”- a divyadesam sung by Thirumangai Azhwar and Boothathazhwaar. Chithirai brahmothsavsam is now on and
29.4.2026 was day 6 – Churnabhishekam – here are some photos of Perumal in Mena
pallakku purappadu
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
30.4.2026
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
No comments:
Post a Comment