To search this blog

Tuesday, March 21, 2023

Panguni Amavasai 2023 - Póntos Áxeinos ! நீலக்கடலின் ஓரத்தில் !!

Ever heard of the name -   Póntos Áxeinos – it is a Sea -  a Flashpoint, for long has been a theatre  of competition between Russia and the West, a dynamic supercharged by the Ukraine war. 

Most of the Earth's surface is covered with water -- and most of it is water is not potable. 97 percent of Earth's water is salty sea water which is useless to most land-dwelling plants and animals.  Precipitation supports life on land with salt-free water. 




எம்பெருமான் திருப்பாற்கடலில் துயில் கொள்வதுபோல உப்புக்கடலிலும் வாழ்வதுண்டென்று ப்ரஸித்தியுண்டாதலால் “உவர்க்குங் கருங்கடல் நீருள்ளான்“  என பேயாழ்வார் தமது மூன்றாம் திருவந்தாதியில் சாதிக்கிறார். 

The principal Greek name Póntos Áxeinos is stated to be  a rendering of the Iranian word *axšaina- ("dark coloured"). If you had to rank the spots around the globe where the militaries of the United States and Russia could physically run into each other, the Black Sea would probably be near the top of the list. The giant body of water on Europe’s southeastern flank has long been a theatre of international competition between the United States and its European allies on one side and Russia and its sphere of influence on the other, a dynamic that has been supercharged by Russia’s invasion of Ukraine.  

The Black Sea is a marginal mediterranean sea of the Atlantic Ocean lying between Europe and Asia, east of the Balkans, south of the East European Plain, west of the Caucasus, and north of Anatolia. It is bounded by Bulgaria, Georgia, Romania, Russia, Turkey, and Ukraine. The Black Sea is supplied by major rivers, principally the Danube, Dnieper, and Don. Consequently, while six countries have a coastline on the sea, its drainage basin includes parts of 24 countries in Europe.!!   The Black Sea ultimately drains into the Mediterranean Sea, via the Turkish Straits and the Aegean Sea. The Bosporus strait connects it to the small Sea of Marmara which in turn is connected to the Aegean Sea via the strait of the Dardanelles. To the north, the Black Sea is connected to the Sea of Azov by the Kerch Strait.  

A deal allowing the safe Black Sea export of Ukrainian grain was renewed on Saturday for at least 60 days - half the intended period - after Russia warned any further extension beyond mid-May would depend on the removal of some Western sanctions.  The pact was brokered with Russia and Ukraine by the United Nations and Turkey in July and renewed for a further 120 days in November. The aim was to combat a global food crisis that was fueled in part by Russia’s Feb. 24, 2022, invasion of Ukraine and Black Sea blockade.  

The United Nations and Turkey said on Saturday that the deal had been extended, but did not specify for how long. Ukraine said it had been extended for 120 days. But Russia’s cooperation is needed and Moscow only agreed to renew the pact for 60 days.  “The Black Sea Grain Initiative, alongside the Memorandum of Understanding on promoting Russian food products and fertilizers to the world markets, are critical for global food security, especially for developing countries,” U.N. spokesman   said in a statement. Russia and Ukraine are key global suppliers of food commodities and Russia is also a top exporter of fertilizer.  

பூமிப் பந்தில் 71 சதவீதத்துக்குக் கடல் சூழ்ந்திருக்கிறது. பெருவெடிப்பில் சூரியனில் இருந்து பூமிப் பந்து பிரிந்துவந்தபோது, வளிமண்டலத்தில் இருந்து வந்த நீராவி, பாறைகளில் இருந்து வெளியான தண்ணீர் மூலம்தான் பெருங்கடல்கள் உருவாகின. கடலின் நிறம் நீலம் என்று நாம் நினைக்கிறோம் !   கடல் நீர் சிவப்பு, மஞ்சள், பச்சை ஆகிய வண்ணங்களைச் சூரியஒளியில் இருந்து கிரகித்துக் கொள்கிறது. நிறமாலையில் உள்ள நீல வண்ணத்தை மட்டுமே தண்ணீர் மூலக்கூறுகள் பிரதிபலிக்கின்றன.  

நீலக்கடலின் ஓரத்தில் என நாம் பாடினாலும், செங்கடல், சாக்கடல், கருங்கடல் உலகத்தில் உள்ளன.   செங்கடல் சிவப்பாக இருப்பதற்குக் காரணம், சிவப்பு நிற ஆல்கே எனப்படும் கடல்பாசிகள் அதன் மேல்மட்ட நீரில் அதிகம் இருப்பதே. கருங்கடல் நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்டுள்ள ஒரு கடல்.   அது இருண்ட நிறத்தைக் கொண்டுள்ளது. இந்த கடலை சிறப்பானதாக மாற்றும் பண்புகளில் ஒன்று, அதன் இருண்ட நிறம், சுமார் 100 மீட்டர் தொலைவில் எதையும் பார்க்க இயலாது. இதற்கு இந்த இருண்ட நிறம் இருப்பதற்கான காரணம் கீழே நிறைய தாவரங்கள் மற்றும் கருப்பு மண் உள்ளது.    





இவற்றில் இருந்து விலகி  நாம் பேயாழ்வார் கருங்கடல் நீருள்ளான் எனும் எம்பெருமானுக்கு கைங்கர்யங்கள் செய்வோம் - மூன்றாம் திருவந்தாதி பாசுரம் இங்கே:

அவற்கடிமைப் பட்டேன் அகத்தான் புறத்தான்,

உவர்க்கும் கருங்கடல்  நீருள்ளான், துவர்க்கும்

பவளவாய்ப் பூமகளும் பன்மணிப்  பூணாரம்,

திகழும் திருமார்வன் தான்.

எம்பெருமான் எத்தகையவன் !  உப்புக்கரிக்கின்ற கரிய கடல்நீரிலுமுள்ளவனாய், சிவந்த பவளம் போன்ற வாயையுடையளான பிராட்டியும், பல் வகையான ரத்னங்கள்  சேர்ந்த  திருவாபரணங்களும், ரத்ன  ஹாரங்களும்  விளங்கப்பெற்ற  திருமார்பையுடையனான எம்பிரான் - உள்ளிலும் வெளியிலும் வாசியறக் கலந்திருக்கின்றான்.  அவ்வளவு சிறந்த  எம்பெருமானுக்கு நான் அடிமைப்பட்டேன் என்கிறார் பேயாழ்வார்.  

இன்று பங்குனி மாச அமாவாசை - திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் பெரிய மாடவீதி புறப்பாடு கண்டருளினார்.  புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே :

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
21.3.2023  










No comments:

Post a Comment