To search this blog

Tuesday, March 14, 2023

Lamba Sarathi completes 60 !!

ஸ்ரீமன் நாரணனே  பரம்பொருள் - நமது வாழ்வின் அர்த்தமே, அவனை பணிந்து, அவனுக்கு பணி செய்து கிடத்தலே!!  எம்பெருமான் இடத்திலே நம்மை ஈடுபடுத்திக்கொண்டோர்க்கு 'சகலமும் அவனே'  -  நம்மை அழைத்து, அரவணைத்து, காத்து, சரியான பாதையிலே எடுத்துச்செல்பவன் அவன் ... அவனது திருப்பாத கமலங்களை அருகே இருந்து அனுபவித்து, அவனுக்கு கைங்கர்யம் பண்ண பற்பல  அரிய வாய்ப்புகள் அவனே நமக்கு தந்து அருள்கிறான்.  

திருமங்கை மன்னன் தம் பெரிய திருமொழியில் மிக நிறைய திவ்யதேசங்களை பாடியுள்ளார்.   திருச்சேறையை சிறப்பிக்கையில் - 'எம்பெருமானைப் பிரிந்து நெடுநாள் தரித்திருப்பினு மிருப்பேன்; பாகவதர்களைப்பிரிந்து ஒரு நொடிப்பொழுதும் தரித்திருக்ககில்லேன்'  என்கிறார்.   . தேர்வீரனான இராவணனுடைய படைவீடான இலங்காபுரியைப் பொடிபடுத்தின பெருவீரனே! என்று சொல்லித் திருச்சேறை யெம்பெருமானுடைய பல பல திருநாமங்களை வாயாரப்பாடும் பெருமையுடையார் எவரோ, அவரை ஒருகாலும் பிரியமாட்டேன்  என உரைக்கின்றார்.  

தேர் ஆளும் வாள் அரக்கன்*  தென் இலங்கை வெம்சமத்துப் பொன்றி வீழ*

போர் ஆளும் சிலைஅதனால்*  பொருகணைகள் போக்குவித்தாய் என்று*  நாளும்

தார் ஆளும் வரை மார்பன்*  தண் சேறை எம் பெருமான் உம்பர் ஆளும்*

பேராளன் பேர் ஓதும் பெரியோரை*  ஒருகாலும் பிரிகிலேனே*.

 

திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில்  சில ஆண்டுகள் முன்பு அத்யாபகராய் அந்வயித்தவர் திருச்சேறை ராமானுஜ ஐயங்கார்.  என் மாதாமஹர் அத்திசோழமங்கலம் இராமானுஜ அய்யங்கார் ஸ்வாமிக்கு ஆப்தர்.  திருவல்லிக்கேணி துளசிங்கபெருமாள் தெரு திருமணி சுவாமி திருமாளிகை வீட்டில் இவரும், ஸ்ரீ உ.வே. காவல்கழனி அனந்தாச்சார்யார் ஸ்வாமியும் அடுத்தடுத்த பகுதியில் ஒரே வீட்டில் குடி இருந்தனர்.

 


இவரது திருக்குமாரர் திருச்சேறை பார்த்தசாரதி ஸ்வாமி  (திருவல்லிக்கேணி வட்டாரத்தில் லம்பா சாரதி என பிரபலம்).  ஹிந்து உயர் நிலை பள்ளியில் படித்தார்.  கடின வேலை செய்ய அஞ்சாதவர்.  திறமையாக அறுசுவை சமையல் செய்ய வல்லவர், புகைப்பட நிபுணர், ஸ்வயம்சேவகர், திரு ராமகோபாலன் ஜி இடத்தில் பற்று கொண்டவர், சமூக சேவகர், அருளிச்செயல், திருமடப்பள்ளி கைங்கர்யங்கள்,  ஸ்ரீபாதம் கைங்கர்யம் பல ஆண்டுகளாக செய்து வருபவர், திருக்குடை எம்பெருமானுக்கு  போடுவதில் வல்லுநர்,  வைதீக வாத்தியார், சமீபத்தில் அமைந்தகரை ஸ்ரீவரதராஜ பெருமாள் திருக்கோவிலில் அர்ச்சக கைங்கர்யமும் செய்து வருகிறார்.




 

Sri Thirucherai Sarathy (fondly Lamba Sarathi to us) – is a very hard working person,  capable cook, professional photographer,  vaidheeha Vadhyar, Swayamsevak, kudaikarar, Sripathamthangi, arulicheyal kainkaryam,  social activist, now does Archaga kainkaryam at Sri Varadharajaperumal thirukkovil at Aminjikarai.   

Lamba Sarathi completed 60 years of age and today is his Sashtiyabdapoorthi.  Wishing my dear friend Sarathi, long life, good health and continued kainkaryam.

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
14.3.2023 

No comments:

Post a Comment