To search this blog

Friday, May 14, 2021

Alleviation of pain & suffering ! ~ "வேதனை வெண்புரி நூலனை"

வேதனை:  என்றால் : - வலி, துன்பம், வருத்தம், தவிப்பு, அல்லல், இடர், இடும்பை, இன்னல், துயர், பிடிப்பு என பல பொருள்கள் கொள்ளலாம். 



It is pain and suffering !  Year 2020 and n0w 2021 have been different for the humanity – they have driven mankind into despair – reading and hearing bad news and thinking of difficult times ahead is stressful !  .. .. ‘pain and suffering for the mankind’!

Amid rising cases of Covid-19 and tardy implementation of the lockdown measures in force across TN, the newly elected TN Govt has  resolved to intensify the existing restrictions.  Meantime, the despatch of the first tanker loaded with 4.8 metric tonnes of medical grade oxygen from the Sterlite plant on Thursday morning came as a relief to hospitals in the southern districts which have been seeing a high influx of Covid-19 patients in need of oxygen.  Four IAF aircraft carrying oxygen cylinders from Singapore have also arrived in Chennai.. .. we are hoping for the best .. .. …



இரவுகளில் சரியான தூக்கமில்லை .. காலை எழுந்தவுடன், செய்தித்தாளோ, செய்திகளோ, மறுபடி மறுபடி கொரோனா கொடூரங்களை மிகைப்படுத்துகின்றன.  சென்னை, தமிழ்நாடு, இந்தியா, உலகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உன்\உயர்ந்து கொண்டே போகிறது.  தற்போது நிலவி வரும் கொரோனா தொற்றுநோய் அபாயம் மற்றும் பொருளாதார நெருக்கடி இவற்றோடு சேர்ந்துகொண்ட அரசின் செயல்பாட்டு குறை  பல்வேறு விதமான ஏற்றத்தாழ்வுகளை சிக்கல்களை வெவ்வேறு சமூக- அரசியல், பொருளாதார வடிவங்களில் காணமுடிகிறது. கொரோனா தீவிரமடைந்து கொண்டே செல்வதால்  தினக்கூலி செய்யும் மக்களின் நிலை இன்னும் மோசமடையலாம், அவர்களை இன்னும் வீரியமனதொரு வறுமைக்குள் தள்ளலாம். கோவிட்-19 கொல்லுகிறதோ, இல்லையோ வறுமையும், பசியும், கடனும் அவர்களை கொல்லாமல் கொன்று கொண்டிருக்கிறது.

As children mature, the ego develops to help control the urges of the id. The ego is concerned with reality.  Pain is a distressing feeling often caused by intense or damaging stimuli. Pain is "an unpleasant sensory and emotional experience associated with, or resembling that associated with, actual or potential tissue damage." In medical diagnosis, pain is regarded as a symptom of an underlying condition.

Epicurus in the ancient world, laid stress upon the role of pleasure in directing human life. Nature has placed mankind under the governance of two sovereign masters, pain and pleasure.  In Freudian psychoanalysis, the pleasure principle is the instinctive seeking of pleasure and avoiding of pain to satisfy biological and psychological needs.   Pain and suffering is the legal term for the physical and emotional stress caused from an injury.  Physical pain and suffering is the pain of the plaintiff's actual physical injuries. It includes not just the pain and discomfort that the claimant has endured to date, but also the detrimental effects that he or she is likely suffer in the future as a result of the defendant's negligence. Mental pain and suffering results from the claimant's being physically injured, but it is more a by-product of those bodily injuries. Mental pain and suffering includes things like mental anguish, emotional distress, loss of enjoyment of life, fear, anger, humiliation, anxiety, and shock.  These cannot be quantified yet deserves compensation in jurisprudence.    When filing a lawsuit as a result of an injury, it is common for the victims  to seek money both in compensation for actual money that is lost and for the pain and stress associated with virtually any injury.  

Apart from money damages awarded in trial, money damages are also given informally outside the judicial system in mediations, arbitration  as well as in routine insurance settlements.  Life is full of uncertainties and for those who have unfortunately met with crisis, the sufferings continue and could never be satiated  by monetary compensation.




எம்பெருமான் தாள் பணிந்து அவனையே எப்போதும் நினைப்பவர்க்கு 'வேதனை' என்றால் துயரம் என்று அர்த்தம் வாராது.  ‘வேதனை’ என்பது "வேதம் வல்லவன்"  என்றும், வேதங்களாலே பிரதிபாதிக்கப்படுபவன்"  என்றும் பொருள் உணர்த்தும்  !!  இதோ இங்கே ஸ்வாமி நம்மாழ்வாரின் திருவிருத்தத்தில் இருந்து ஒரு அற்புத பாசுரம்.

வேதனை வெண்புரி நூலனை*  விண்ணோர் பரவநின்ற

நாதனை ஞாலம் விழுங்கும் அநாதனை*, ஞாலந்தத்தும்

பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல்  பள்ளி கொண்டருளும்

சீதனையே  தொழுவார்*,  விண்ணுளாரிலும்  சீரியரே. 

மிகவும் உயர்ந்தவையான  வேதங்கள் வல்லோனும், சுத்தமான வெண்புரி எனும் யஜ்னோபவிதத்தை  உடையவனும், மேலுலகத்தார் துதிக்க அவர்களுக்குத் தலைவனாய் நின்றவனும்,  முன்னொருநாளில் பிரளயகாலத்திலே,  உலகத்தை  விழுங்கி, வயிற்றினுள் வைத்து நோக்கி , அவ்வமயத்தில் நோக்குதற்கு தன்னை தவிர வேறு யாரும் இல்லாதவனும்,  உலகத்தை அளந்த திருவடியை  உடையவனும், திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வானாகிற பாம்பணை படுக்கையின் மேல் யோக நித்திரை கொண்டருளுகிற  குளிர்ந்த தன்மையுடையவனுமான எம்பெருமானையே  இடைவிடாது வணங்கி  அநுபவிக்கப்பெற்றவர் - பரமபதத்திலுள்ளவர்களிலுஞ்  சீரிய சிறப்புடையராவர்.  ஆகையினால் எந்த கடின காலத்திலும், எம்பெருமானையே பிரார்த்தனை செய்து, அவனடிகளையே தொழுது உய்வோமாக !! 

Here are some photos of Sri Parthasarathi Emperuman at Thiruvallikkeni on 4.2.2021 during the special Brahmothsavam pathi ula. Praying our Emperuman for the welfare of the society, total eradication of Covid 19 and people living in peace and good health.

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
14.5.2021.

நன்றி :  ஆழ்வார்களின் நாலாயிர திவ்யப்ரபந்தமும், நமது ஆச்சார்யர்களும், திராவிட வேதா எனும் அற்புத அருட்கிடங்கின் உரையும் 










1 comment: