To search this blog

Thursday, May 13, 2021

மாருதம் ! மலையமாருதம் !! சண்டமாருதம் !!! ~ 'மனசா எதுலோ' தியாகராஜ கீர்த்தனை

மாருதம் என்ற சொல்லின் பொருள் அறிவீரோ ?  - மாருதம் என்ற , பெயர்ச்சொல்லுக்கு  - காற்று, வாயு என பொருள்.   ஒருவன் மிகவும் விரைவாகச் சென்றான் என்பதை ‘வாயு வேகம் மனோ வேகமாகச்’ சென்றான் என்று கூறுவது வழக்கம்.  காற்று (wind) என்பது வளிமங்கள் பெருமளவில் ஓரிடத்தில் இருந்து இன்னோரிடத்துக்கு நகரும் நிலையைக் குறிக்கும். புவியைப் பொறுத்தவரை, வளிமண்டலத்தில் வளிமம் பெருமளவில் நகரும்போது காற்று எனப்படுகிறது.
Wind is the flow of gases on a large scale. On the surface of the Earth, wind consists of the bulk movement of air. Winds are commonly classified by their spatial scale, their speed, the types of forces that cause them, the regions in which they occur, and their effect. The strongest observed winds on a planet in the Solar System occur on Neptune and Saturn. Winds have various aspects: velocity (wind speed); the density of the gas involved; energy content or wind energy. The wind is also a critical means of transportation for seeds, insects, and birds, which can travel on wind currents for thousands of miles. In meteorology, winds are often referred to according to their strength, and the direction from which the wind is blowing.  In coastal areas the sea breeze/land breeze cycle can define local winds; in areas that have variable terrain, mountain and valley breezes can dominate local winds.

காற்றைச் சிறப்பித்து  கர்நாடக இசையில் மலையமாருதம் எனும் ராகம் உள்ளது.   மலையமாருதம் என்பது, உயர்ந்த இடத்தில் இருந்து வீசும் மூலிகை வாசம் கலந்த காற்று ! மூலிகை வாசம் கலந்த காற்று உடலுக்கு எத்தகைய சுகமும், ஆரோக்கியமும், நோய் தீர்க்கும் வலிமையும் உடையதோ அது போன்று மலையமாருதம் ராகம் மனச்சுமை தீர்த்து சுகமளிக்கும் என்பதாகும்.    சண்டமாருதமும் வடமொழித் தொடர்தான்.  தென்றல் காற்றினை வடமொழியில் மந்த மாருதம் என்கிறார்கள். நறுமணக்காற்றினை ‘சுகந்த மாருதம்’ என்பார்கள். சண்டமாருதம் என்பது பெருங்காற்று. பிரசண்ட மாருதம் என்பது பலத்த காற்று. சூறாவளி, பெருஞ்சூறாவளி என்று பொருள்கொள்ளலாம்.

மனசா எதுலோ  என்ற தியாகராஜரின் கீர்த்தனை பற்றி சில வரிகள் இங்கே :

manasA eTulOrtunE nA manavini cEkonavE

anupallavi

dinakara kula bhUSaNi dInuDavai bhajana cEsi

dinamu gaDupu manina nIvu vinavadEla guNavihIna

caraNam

kalilO rAjasa tAmasa guNamula galavAri celimi

galasi melasi tiruguchu mari kAlamu gaDapaka nE

sulabhamugA kaDatEranu sUcanalanu teliya jEyu

ilanu tyAgarAja mATa vinavadEla guNavihIna

________________________________________________________________

Meaning:  O unworthy mind! How long can I put up with you, if you do not listen to my counsel? Follow my advice. Spend your time in singing the glory of Shree Rama ,the jewel of the human race, with humility and devotion. In this Kaliyuga, instead of wasting time associating with men of sloth and lethargy and those who are engaged in worldly activities all the time, you should adopt the pleasant way of devotion and redeem yourself. You do not appear disposed to heed to the counsel of Tyagaraja.

எம்பெருமான் எத்தகையன் !  - அளப்பரிய சக்தியுடையவன்.  எம்பெருமானுடைய ஒப்புயர்வற்ற சக்தி விசேஷத்தை வெளிப்படுத்துகின்ற போது   ஆழ்வார் -  ஆலிலையில் பள்ளிகொண்ட எம்பெருமான் தன  சிறிய வாயினாலே பெரியவுலகங்களை எல்லாம் எளிதில் விழுங்கியதை நினைத்து பிரமிக்கின்றார்.  அவரது அபூர்வ சக்தியை பொய்கையாழ்வார் தமது முதல் திருவந்தாதி பாசுரத்தில் :

 

மண்ணும் மலையும் மறிகடலும் மாருதமும்,

விண்ணும் விழுங்கியது மெய்யென்பர், - எண்ணில்

அலகளவு கண்டசீ ராழியாய்க்கு, அன்றிவ்

உலகளவும்   உண்டோவுன் வாய்?

என வினவுகிறார் ? 

இம்மண்ணுலகான பூமியும் குலபர்வதங்களான  மலைகளையும் அலையெறிகிற  பெரிய கடல்களையும்,  பெருங்காற்றும், ஆகாசமும் ஆகிய இவற்றையெல்லாம் விழுங்கி  உனது திருவயிற்றின் ஒரு மூலையிலே அடங்கும்படி  அமுது செய்ததை வைதிகர்கள் ஸத்யமாகச் சொல்லுவர்கள் இதனை ஆராயுமளவில் அளவிடுதற்கு உறுப்பான எண்ணிக்கைகளை யெல்லாம் தாண்டி  எண்ணிறந்த  கல்யாண குணங்களுக்குக் கடல் போன்றவனான உன்னுடைய வாயானது அன்று இவற்றை யெல்லாம் விழுங்கின அக்காலத்திலே - இந்த ஜகத்தளவு விசாலமாகவும் இருந்திருக்க வேண்டும் அல்லவா என்று வினவுகிறார் தமது பாசுரத்தில் பொய்கைப்பிரான்.  

You may listen to ‘Manasa Ethulo’ song from Thyagayya film released in 1946, directed, produced and music  by Chitoor V Nagaiah : Manasa ethulo :  


Here are some photos of our glorious Emperuman Sri Parthasarathi taken during Ekadasi purappadu on 3rd April 2016 when this globe was a different place to live. 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
13.5.2021.

Ps:  1) மாருதம்  என்ற பெயரில்  இலங்கை, வவுனியாவிலிருந்து 2000ம் ஆண்டுகளில்  ஒரு கலை, இலக்கிய மாத இதழ்  வெளிவந்தது. 

2) “தென்றலே என்னைத் தொடு”  திரைபடத்தில்   இளையராஜா இசையில் .யேசுதாஸ், உமா ரமணன் பாடிய கண்மணி நீ வரக் காத்திருந்தேன்  பாடல் மலைய மாருதத்தில் இருந்தது.

3) ஒரு ஓடை நதியாகிறது...படத்தில் இளையராஜா  இசையில் தீபன் சக்ரவர்த்தியும் உமா ரமணனும் பாடிய ” தென்றல் என்னை முத்தமிட்டது...” பாடலும் மலயமருதம் ராகத்தில் அமைக்கப்பெற்றது.  No comments:

Post a Comment