To search this blog

Tuesday, February 16, 2021

Sri Parthasarathi Perumal pushpa pallakku 2021

மயக்கும் துயர்ப்பிறவி எனும் இம்மானுட பிறவியில் எவ்வளவோ துயரங்கள்.  எல்லா கடின காலங்களிலும் நம்மைக்காத்து நம் இடர் நீக்குவான் எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன் ஒருவனே!.  நமது ஸ்ரீவைணவ சம்ப்ரதாயம் அற்புதமானது.  ஆழ்வார்களின் பாசுரங்களும், மிகவும் ஒழுக்க சீலர்களும் கற்று தெளிந்தவர்களுமான ஆசார்யர்கள் நமக்கு வழிகாட்டி எம்பெருமானிடத்திலே சேர்விப்பர்கள்.  எம்பெருமானிடம் சரணடைந்து, அவன் திருவடி சேர்வதே நமக்கு நன்மை பயக்கும்.


பூக்கள் அழகானவை; அழகானவை; நறுமணம் தர வல்லன !  எம்பெருமானுக்கு பலர் நல்ல மணம் தரும் பூக்களை மாலையாக கோர்த்து சமர்பிக்கின்றனர்.  பெரியாழ்வார் தமது பிரபந்தத்தில் ஆநிரை மேய்க்கும் கண்ணபிரானை பூச்சூட அழைக்கிறார் - கானகமெல்லாம் திரிந்த கரிய திருமேனி வாட திரியும் தேனிலினிய பிரானுக்கு -  செண்பகப்பூ, மல்லிகைப்பூ, பச்சை தமனகம், மரு, தமனகம், செங்கழுநீர்ப்பூ, புன்னைப்பூ, குருக்கத்திப்பூ, இருவாட்சிப்பூ, கருமுகைப்பூ  - என பற்பல மலர்களை ஆயர்கோனுக்கு பட்டர்பிரான் சமர்பிக்கின்றார்.  திருக்கண்ணங்குடி எம்பெருமானை திருமங்கை ஆழ்வார் பாடும்போது : 

குவளை நீள் முளரி குமுதம் ஒண் கழுநீர் கொய்ம் மலர் நெய்தல் ஒண் கழனி

திவளும் மாளிகை சூழ் செழு மணி புரிசை திருக்கண்ணங்குடியுள் நின்றானே ~ என

 

கருநெய்தற்பூக்கள்;  பெரிய தாமரைப் பூக்கள்;  ஆம்பல்; செங்கழுநீர்; நெய்தல்   ஆகிய இவற்றாலே அழகுபெற்ற கழனிகளையுடையதும் பிரகாசிக்கின்ற திருமாளிகைகளாலே சூழப்பட்டதும்,  சிறந்த ரத்னமயமான திருமதிளையுடையதுமான திருக்கண்ணங்குடியுள், நின்ற எம்பெருமான் என புகழ்ந்து பாடுகிறார். 



                  






 

                     









                    









                 பூக்கள் என்றால் நமது நினைவில் வருவன : தாமரை; அல்லி; ரோஜா; மல்லிகை; முல்லை; சாமந்தி; கதம்பம் .. .. போன்றன.தமிழ் இலக்கியத்தில் நாம் காணும் பூக்கள் :  செங்காந்தள்,  ஆம்பல்,  அனிச்சம்,  குவளை,  குறிஞ்சி,  வெட்சி, வடவனம்,  வாகை,   கருவிளை,  குரவம்,  வகுளம்,    வள்ளி,  நெய்தல்,   தளவம்,  ஞாழல் மௌவல்  என பல பல.  மல்லிக்கும் முல்லைக்கும்  வித்தியாசம் காண தெரியாத என் போன்றோர்க்கு எத்துணை முறை தெரிந்தவர்களிடம் கேட்டாலும் புரிவதில்லை.  என்போன்றோர்க்கு - அவை அழகானவை, எம்பெருமானுக்கு சிறப்பானவை !!

 ஸ்ரீமன்நாராயணனுக்கு மணம் தரும் நன்மலர்கள் மட்டுமே சமர்பிக்கப்படுகின்றன. நாற்றம் ~ தமிழை சரியாக அறியாதவர்கள் முகம் சுளிக்கக்கூடும் ! இச்சொல் தற்காலத்தில் கெட்ட வாசனையை குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. உண்மையில்  நாற்றம் என்பது நறுமணத்தைக் குறிக்கும் வார்த்தை.  . 

'முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை

நகைமொக்குள் உள்ளதுஒன்று உண்டு' 

என்ற குறளில் மலரின் நறுமணத்தை, நாற்றம் என்ற சொல்லில்தான் வள்ளுவர் குறிப்பிடுகிறார். மலரப் போகின்ற மொட்டில் இருக்கும் மணம்போல இப்பெண்ணினது நகைமொக்குள் ஒரு குறிப்பு உண்டு என்பது பாடலின் பொருள். நறுமணத்தை குறிக்கும் வேறு சொற்கள், வாடை, நறுநாற்றம், வாசனை.   ஏனைய நறுமலர்களை தவிர, குங்குமப்பூ அரைத்து சாற்றப்படுகிறது.  

Flowers are considered important in our worship.  We offer flowers to our Gods. Blooming flowers are one of the most beautiful things you can see in nature. The production of  volatile chemicals in some flowers also make pleasant smell. It also attracts pollinating insects and spread a positive energy in the surrounding. Sweet fragrant smell is capable of transporting us to other places and times – some entirely unimagined. In some,  Roses are the most popular choice; in others it could be Jasmine.  Each flower has a unique smell. It is because of each flower produce a unique chemical compound.  Crocus sativus, commonly known as saffron crocus, or autumn crocus, is a species of flowering plant of the Crocus genus in the Iridaceae family. It is best known for the spice saffron, which is produced from parts of the flowers. Saffron though not used as a flower is used as a paste anointing Lord.

கழுத்தில் அணியக்கூடிய மலர்களால் ஆன தொகுப்பும், மாலை எனப்படும். மலர்கள் சில நறுமணம் கமழ்பவை. திருமங்கை மன்னன்  : -  * பைந்துழாய் மாலை ஆலியில் கண்டு மகிழ்ந்து போய் * எனுமிடத்தில் 'மாலை' என்பது சர்வேஸ்வரனான எம்பெருமானையே குறிக்கிறது.   கலியன் அருளிச் செய்தது போல :  அருமையான அமிருதம் போன்றவனும், பசுமைதங்கிய திருத்துழாயை  உடையவனுமான, இவ்வுலகோர்களாலே தியானிக்கப்படுபவனுமான   மாலை (ஸர்வேச்வரனை) திருவாலி மற்றும் அனைத்து திவ்யதேசங்களில் சென்று சேவித்து உய்வோமாக*.

In the special brahmothsavam at Thiruvallikkeni,  after 3 days of vidayarri, 15.2.2021 was Pushpa pallakku for Sri Parthasarathi Perumal.  Here are some photos taken during the purappadu

Adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
15.2.2021





















  

1 comment: