To search this blog

Wednesday, January 3, 2018

திருவேங்கடத்தெம்பெருமானே! : Thiruvallikkeni - Iraapathu Uthsavam 6 : 03012018

Thiruvallikkeni - Iraapathu Uthsavam 6 : 03012018  
திருவல்லிக்கேணி இராப்பத்து  உத்சவம் 6  ~  திருவேங்கடத்தெம்பெருமானே!


செடிபோலே செழித்த பாபங்களைத் தீர்க்கும் மருந்தானவன்திருவேங்கடவன்



 బ్రహ్మ   కడిగిన   పాదము|        **  బ్రహ్మము తానెని   పాదము||
Brahma Kadigina Padamu, Brahmamu tane ni Padamu
Tiruvenkatagiri Tiramani chuupina paramapadamu ni padamu

Annamayya singing on the glory of the  divine feet of the Lord of Seven Hills. This is the foot that was washed by Brahma, the creator of the world; it the same foot of Sriman Narayana who measured the earth and the sky with this foot. Mahabali was pressed into ‘Patala’ and Indra was offered protection by this foot. It cleansed Ahalya of her sin and tamed Kalinga, the snake. This foot reveals to us  that Tirumala alone is eternal. 

                                       அத்யயன உத்சவம் அனைத்து ஸ்ரீ வைஷ்ணவ திருக்கோவில்களிலும் சிறப்புற நடந்து வருகிறது. இன்று திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் இராப்பத்து உத்சவத்தில் ஆறாம் நாள். ஸ்ரீபார்த்தசாரதி, நம்மாழ்வாருடன் பெரிய மாட வீதி புறப்பாடு  கண்டு அருளினார்.  ஸ்ரீபார்த்தசாரதி, சங்குசக்ரதாரியாய் திருவேங்கடமுடையான்  திருக்கோலத்தில்   அதி அற்புதமாக சேவை சாதித்தார்





Today on day 6 of Irapathu uthsavam at Thiruvallikkeni, Sri Parthasarathi Swami blessed devotees  in  ‘Thiru Venkadam Udaiyan” Thirukkolam.  Even to those who are used to having darshan of Lord Parthasarathi,  He appeared more of the Lord of Seven Hills in tune with the sarrumurai pasuram of Thiruvaimozhi 6th canto ‘Ulagam Unda Thiruvaaya’ pasuram. Swami Nammalwar graced ‘muthu kondai’


வண்ணமருள்கொள் அணிமேக வண்ணா! மாய அம்மானே!

எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே இமையோர் அதிபதியே!

தெண்ணல் அருவி மணிபொன்  முத்தலைக்கும்   திருவேங்கடத்தானே!

அண்ணலே!    உன் அடிசேர   அடியேற்கு   ஆவாவென்னாயே.

அருளே வடிவெடுத்த வண்ணமாய், அழகிய மேகம்போன்ற நிறத்தையுடையவனே!, ஆச்சரிய குணங்களையுடைய ஸ்வாமியே!  நெஞ்சுக்குள்ளே புகுந்து ரஸிக்கும் அமிருதமானவனே!;   இமையவர் அதிபதியான தேவாதிதேவனே!  தெளிந்தழகிய அருவிகள்  மணிகளையும் பொன்களையும் முத்துக்களையும் கொழிக்குமிடமான  திருவேங்கடத்துறை எம்பெருமானே, அண்ணலே  உன் திருவடி தாமரைகளில் வந்து சேரும்படியான ஞாலத்தை அளித்து,  என்பாள் ஐயோ வென்றிரங்கியருள வேணும் என திருமலையில் நின்றிருக்கும் திருப்பதி பெருமாளை நம்மாழ்வார் வேண்டுகிறார்.

The Lord of Celestials resting at Thiruvengadam (Sri Venkatachala Hill of Thirumala) most beautiful cloud-hued natural grace, the sweet nectar wonder Lord; the Saviour at Thirumala where rivulets wash gems, pearls and Gold ~ to that Lord, Nammalwar seeks refuge and requests His lotus feet as the eternal worship.






Blessed are we to have this wonderful darshan of Sri Parthasarathi, the charioteer as the Lord of Seven Hills ~ everything is so natural to Him and here are some photos of today’s purappadu  of Perumal with Nammalwar.

Adiyen Srinivasa dhasan.
3rd Jan 2018

Biblio : ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை (Courtesy : www.dravidaveda.org)


No comments:

Post a Comment