To search this blog

Saturday, July 22, 2017

திருவல்லிக்கேணி திருவாடிப்பூர உத்சவம் : Sri Andal Thiruvadipura Uthsvam 6 : 2017

இன்று [22.7.2017]  திருவாடிப்பூர  உத்சவத்தில் ஆறாம் நாள்.  திருவல்லிக்கேணியில் திருவாடிப்பூர உத்சவம் பத்து நாட்கள் விமர்சையாக நடைபெறுகிறது.  புதன் (26.7.2017)  அன்று திருவாடிப்பூர சாற்றுமுறை.



பெரியாழ்வார் ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயீ திருக்கோவிலில் நந்தவன பணி ஆற்றும் போது ஆண்டாள் கிடைக்கப் பெற்றார். கோதை என்றால் தமிழில் மாலைவடமொழியில் வாக்கை கொடுப்பவள் என்று பொருள். ஆண்டாள் பாடல்கள் -  பைந்தமிழுக்கும் பக்திஇலக்கணத்துக்கும் உயர்ந்த சான்றாய் திகழ்வன !  அவரது திருப்பாவையின் யாப்பு  மிகக்கடினமான இலக்கண கோப்பு  வாய்ந்தது.  திருப்பாவை முப்பது பாடல்கள் - சங்க தமிழ்மாலை என போற்றப்படுகின்றன.

 
ஆண்டாள் இயற்றிய நாச்சியார் திருமொழியில் வரும் வரிகள் இவை:

தொழுதுமுப்போதும் உன் அடி வணங்கித் தூமலர்தூய்த்தொழுதேத்துகின்றேன்பழுதின்றிப் பாற்கடல் வண்ணனுக்கே பணிசெய்து வாழ** -  :
   காலைசாயம்உச்சி என மூன்று காலங்களிலும் பெருமாளின் திருபாத கமலங்களிலேநல்ல மனமுள்ள மலர்களை தூவிபெருமாளையே  ஆச்ரயித்துஅவனடிகளையே
தொழும்  ஆண்டாளின் பக்தி பிரமிக்க வைப்பது  அல்லவா !  பூமியைச் சூழ்ந்த  கடல் போன்ற திருநிறத்தையுடைய  கண்ணபிரானுக்கு  பணி செய்து வாழ்தலே,  நமக்கு  எல்லா நற்பயன்களையும் தரும்.







Today  is the 6th day of Andal Thiruvadipura Uthsavam and at Thiruvallikkeni, Sri Andal had chinna mada veethi purappadu.  Here are some photos of the occasion.

அடியேன் : ஸ்ரீனிவாச தாசன்
22nd July 2017



No comments:

Post a Comment