To search this blog

Sunday, June 25, 2017

ஞானத்தால் நன்குணர்ந்து ~ Kodai Uthsavam day 2 : 2017

Today  25th June 2017 is day 2 of Kodai Uthsavam at Thiruvallikkeni.  It is hot and humid, may not be that sweltering heat of April, May but Chennai it yet to cool down. 

For us life is riddled with difficulties – one seeks solace in God – Sri Boothath Alwar tells us the simple way of life and reaching heavenly abode, by chanting the various names of Sriman Narayana.


ஞானத்தால் நன்குணர்ந்து நாரணன்றன் நாமங்கள்,
தானத்தால் மற்றவன் பேர் சாற்றினால், - வானத்து
அணியமரர்  ஆக்குவிக்கும் அஃதன்றே, நங்கள்
பணியமரர் கோமான் பரிசு.

எம்பெருமானுக்குப் பல்லாயிரத் திருநாமங்களுண்டு; அவற்றில், திருமேனி முதலியவற்றுக்கு வாசகமான திருநாமங்கள் என்று ஒரு வகுப்பும், விபூதி விஸ்தாரங்களுக்கு வாசகமான திருநாமங்கள் என்று மற்றொரு வகுப்பும் கொள்ளத் தக்கன.  ஸ்ரீவத்ஸவக்ஷா; புண்டரீகாக்ஷ:, பீதாம்பர:, சார்ங்கீ, சக்ரபாணி:-  இத்யாதி திருநாமங்கள் முந்தின வகுப்பைச் சேர்ந்தவை; லோகாத்யக்ஷ:, ஸுராத்யக்ஷ:, ஜகத்பதி : -  இத்யாதி திருநாமங்கள் பிந்தின வகுப்பைச் சேர்ந்தவை.  ஆக இவ்விரு வகுப்புகளையுந் திருவுள்ளம்பற்றி, முதலடியில் “நாரணன்றன் நாமங்கள்” என்றும், இரண்டாமடியில் “மற்றவன் பேர்” என்றும் அருளிச் செய்யப்பட்டுள்ளது. 




ஸ்ரீமந் நாராயணனுடைய  திருநாமங்களையும் மற்றும் அப்பெருமானுடைய (விபூதி விஸ்தாரங்களுக்கு வாசகமான) திருநாமங்களையும் ஞானத்தால்  உள்ளபடியறிந்து, அவன் மேல் (ப்ரேமத்தின் முடிவெல்லையான) ஸ்தானத்திலே நின்று அனுசந்திப்போமேயானால்,  நமக்கு பந்துக்களையும் எப்போதும் கைங்கர்யபரர்களாயுமுள்ள நித்யஸூரிகளுக்குத் தலைவனான எம்பெருமானுடைய தன்மையாவது,  பரமபதத்திற்கு அலங்காரமான நித்யஸூரிகளாக (நம்மை)ச் செய்துவைக்குமதுவேயாம்.

மகா வித்வான்  ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் சுவாமி உரை – நன்றி:  திராவிட வேதா.org

Alwar offers a simple solution ~ understand and know through revelations and chant the various names of Sriman Narayana,  chanting His names and worshipping  His many avatars and archavatars will secure us a place by His side in the comity of Gods in heaven.

Here are some photos taken during today’s purappadu




adiyen Srinivasadhasan

25th June 2017.

No comments:

Post a Comment