To search this blog

Friday, February 18, 2011

Malai Nadu Tirupathi ~ Thiruvanparisaram divyadesam


ஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேசங்கள் -  108  திருப்பதிகள் :::  
திருவண்பரிசாரம் திவ்யதேசம்

Dear (s)

For a Srivaishnavaite visiting temples and worshipping Lord Mahavishnu in his various forms and avatars is of greatest significance.  The temples on which our Azhwaars have sung in Naalayira Divya Prabandham are collectively known as “108 Divyadesams”.

Of the 12 Azhwars, Madhurakavi azhwaar sang only about “Nammazhwaar” – of the 108 – one can worship in 106 divyadesams and 105 are inside India.  13 of these are known as ‘malainadu or sera nadu divyadesams.  In general, most are of the thinking that all these are in various parts in Kerala.  All these are managed by malayalese pothis and the way of worship is far different than what we do in Chola and Thondai nattu thirupathis.  Many are known by their local names than the names associated in Naalayira divya prabandham.

One such divya desam is “Thiruvanparisaram” – many guidebooks describe the route to this divyadesam from Thiruvananthapuram, the capital of Kerala.  This in fact is very much in Tamilnadu and lies much closer to Nagercoil.  People regularly visit Kanyakumari for Vivekananda rock and for seeing sun rise and sun set.  You can very easily go to this divyadesam and have darshan of the Lord.  As one travels from Tirunelveli to Kanyakumari – you pass through “Nankuneri aka Vanamamalai – Thirusirivaramangai” – the headquarters of Thennacharya sampradhayam, Thirukurungudi and then traverse the western ghats.  One would find hundreds of Windmills (Wind electricity generators of various makes and sizes) and after Panagudy, Muppandal – you can find Thirupathisaram.  This is around 3 kms closer to Nagercoil and easily accessible. The famous Sthanumalayan temple of Suseendram is also nearer from here (around 7 km)

Thirupathisaram is Thiruvanparisaram – the divyadesam.  There is a huge tank in front of the temple.  The temple is in Kerala style of architecture.  Though it has a big door, a smaller door only was found open at the time of our visit.

The imposing moolavar in sitting posture [Veetru irundha thirukkolam] is Thirukuralappan.  Lord has Lakshmi on his chest and hence known as ‘Thiruvaazh Maarbhan”.  There is  a sannadhi for Nammazhwaar and a Ramar sannadhi inside which Kulasekara azhwar is also there.

Nammazhwaar has sung about this Lord in Thiruvaimozhi {8-3-7 (3475)}.  Udaya Nangai, mother of Swami Nammazhwaar hailed from this place and it is believed that Udaya Nangai underwent 41 days penance before the Lord here and conceived Nammazhwaar. The idol of the chief deity is 9 feet tall and made specially of Katusarkara Yogam (Mustard and Jaggery paste).  There will be no thirumanjanam for the moolavar for this reason.  There are paintings on the walls inside.

Early day renovations were believed to have been carried out by King Kulasekara and Thirumalai Naicker.  Though within Tamilnadu, this temple is not under the control of HR & CE and is being maintained through Devaswom board which does take care of the temple well.


adiyen Srinivasa dhasan.

***************                    ******************                          ***********
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்ய பெற்ற   108 திவ்யதேசங்களில் 13 திவ்யதேசங்கள் மலை நாட்டு திருப்பதிகள் - இவை கேரளா மாநிலத்தில் இருப்பதாக நம்மில் பலரும் நினைத்துள்ளோம். திருவண்பரிசாரம் எனப்படும் திவ்யதேசம் மலை நாட்டு திருப்பதிகளில் ஒன்று.  சுவாமி நம்மாழ்வார் தமது திருவாய்மொழியில் : எட்டாம் பத்து மூன்றாம் திருவாய் மொழி :

வருவார் செல்வார் வண்பரிசாரத்து  இருந்த * என்
திருவாழ்மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வது என் ? *
உருவார் சக்கரம் சங்கு சுமந்து இங்கு உம்மோடு *
ஒரு பாடு உழல்வான் ஓரடியானும் உளன் என்றே *  -
                                                                                         என பாடப்பெற்ற பெருமாளை சேவித்து இருக்கிறீர்களா !! - பலர் கன்னியாகுமரி சென்று இருப்பீர்.  

திருவண்பரிசாரம் எனும் இத்திவ்யதேசம் மலைநாட்டு திருப்பதி ஆக அறியபட்டாலும் நம் தமிழகத்திலேயே உள்ளது.  திருநெல்வேலியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் மார்கத்தில் - முப்பந்தல் எனும் இடத்தில உள்ள நூற்று கணக்கான  விசை காற்றாடிகளை [wind electricity generators] கடந்து செல்லும் வழியில்  நாகர்கோவிலுக்கு மிக அருகாமையில் இந்த திவ்ய தேசம் உள்ளது.

கோவில் வாசலில் பெரிய குளம் ஒன்று உள்ளது.  தொண்டை மண்டல கோவில்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு உள்ளது இந்த கோவில். கோவில் முகப்பு கேரள பாணியில் உள்ளது. சில கோவில்களில் பெரிய கதவு முழுமையாக திறக்கப்படுவதில்லை. கதவுக்குள் உள்ள சிறிய கதவு தான் திறந்து இருக்கும்.  கோவில் மலையாள போத்திகளால் நிர்வகிக்கப்படுகிறது.  நாங்கள் சென்ற சமயம் அவர் அழகாக திருவாய்மொழி பாடலை உச்சரித்து சேவை பண்ணி வைத்தார்.  

மூலவர் :  சுமார் ஒன்பது அடி உயரமுள்ள மூலவர் கடு சக்கரை எனும் கடுகு மற்றும் வெல்லத்தில் செய்யப்பட்ட மூலவர் என்பதால் திருமஞ்சனம் கிடையாதாம்.  அமர்ந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கும் "திருக்குறளப்பன்" - ஸ்ரீ லக்ஷ்மி பகவானின் திருமார்பில் நித்ய வாசம் செய்வதால் 'திருவாழ் மார்வன்" என திருநாமமாம்.  தாயார் : கமலவல்லி நாச்சியார். பெருமாள் மார்பில் வாசம் செய்வதால் தாயாருக்கு தனி சன்னதி இல்லை. சுவாமி நம்மாழ்வாருக்கு சன்னதி உள்ளது. இராமர் சன்னதியில் குலசேகர ஆழ்வாரும் எழுந்து அருளி உள்ளார்.

திருக்குளம்

 
 கோவில் வாசல்
 சன்னதி வாசல் 

விமானம்
திருவண்பரிசாரம் - திருப்பதிசாரம் என இங்கே அழைக்கப்படுகிறது.  இது நாகர்கோவிலில் இருந்து சுமார் 5 கி மீ தொலைவில் உள்ளது. சுசீந்தரம் இங்கிருந்து செல்ல முடியும்.  நம்மாழ்வாரின் தாயார் உடயநங்கை அவதரித்த தலம் இது. இங்கே உடைய நங்கை வ்ரதம் இருந்து, வைகாசி விசாகத்தில் நம்மாழ்வார் அவதரித்து திருக்குருகூர் புளியமரத்தில் யோகத்தில் அமர்ந்தார்.

இந்த கோவில்  HR & CE  வசம் இல்லை. தேவஸ்வோம் போர்டு நிர்வாகத்தில் உள்ளது. நன்றாக பராமரிக்கப்படுகிறது. 

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்.

1 comment: