To search this blog

Sunday, December 12, 2010

திருவல்லிக்கேணி வேங்கடக்ருஷ்ணன் திவ்ய சேவை : Special darshan of Moolavar Sri Venkata Krishnan at Triplicane

திருவல்லிக்கேணி திவ்ய க்ஷேத்ரத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் குடும்ப சமேதராய் காட்சி அளிக்கிறார்.  மூலவர் அரச கோலத்தில் வலது திருக்கையில் சங்கம்  ஏந்தி, இடது திருக்கரம் "என்னையே சரண் அடை" என காண்பிக்க,  பெரிய மீசையுடன் கம்பீரமாய் அருள்  பாலிக்கிறார்.  இப்படிப்பட்ட மூலவரை வருடத்தில் சில நாட்கள் சேவிக்க இயலாது என்பதும், ஐந்தே நாட்கள் மீசை இல்லாத திருக்கோலத்தில் சேவிக்கலாம் என்பதும் உங்களுக்கு தெரியுமா ? 
ஸ்ரீ வைஷ்ணவ கோவில்களில் வைகுண்ட ஏகாதசி மிகவும் முக்கியமானது. இந்த வருஷம் Dec 17 (வெள்ளி : மார்கஷி 2 )  அன்று வைகுண்ட ஏகாதசி. இது திருவத்யயன உத்சவம் ஆகும்.  பகல் பத்து என பத்து நாட்கள் உத்சவமும், வைகுண்ட ஏகாதசி அன்று முதல் இராப்பத்து என பத்து நாள் உத்சவமும் நடைபெறும். 

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலில் இப்போது பகல் பத்து உத்சவம் விமர்சையாக நடந்து வருகிறது.  தொண்டை மண்டலத்தில் அமைந்துள்ள திவ்ய தேசங்களில் திருகார்த்திகை தீப உத்சவம் முதல் மூலவருக்கு எண்ணெய் காப்பு சேர்க்கிறபடியால், மூலவர் சேவை கிடையாது.    பகல் பத்து ஆறாம் உத்சவத்தன்று (இன்று :  12/10/2010)  உத்சவர்  பார்த்தசாரதி பெருமாள் திரு பரமபத நாதன் திருகோலத்தில் மிக அழகாய் சேவை சாதித்தார்.  இன்று ஆழ்வார்கள் அருளிசெய்த  நாலாயிர திவ்யப்ரபந்தத்தில் "இரண்டாவது ஆயிரமாம் திருமங்கை மன்னனின் திருமொழியில் ஊர் பாசுரமான "விற்பெரு விழாவும் கஞ்சனும் மல்லும்" என்ற பதிகம் சேவிக்கப்படும் போது, மூலவர் சேவை ஆரம்பிக்கிறது. 

இன்று முதல் வைகுண்ட ஏகாதசி வரை, மூலவரை மீசை இல்லாத திருகோலத்தில் தர்சிக்க இயலும்.  பக்தர்கள் அவசியம் அல்லிக்கேணி சென்று வேங்கடக்ருஷ்ணனை சேவித்து எல்லா அருளும் பெற, பிரார்த்திக்கிறேன்.

அடியேன் ஸ்ரீனிவாச தாசன். 

1 comment:

  1. Swamy, Its very Happy to read your postings & its a great pleasure in reading your blog, I feel very proud to give you suggetions & also try to post some informations related to Thiruvallikeni. Thanks for teeling me about your blog. pl visit http://e-darshan.org/Webtv/?page_id=132

    ReplyDelete