To search this blog

Monday, May 1, 2023

Chithirai Ekadasi purappadu 2023 - new Thoda for Sri Parthasarathi Emperuman

A Mumbai jeweller has entered the Guinness Book of World Records for creating a ring with the most number of diamonds set on it, the world record body said. HK Designs and Hari Krishna Exports Pvt. Ltd set the massive record in March with their ring which has a total of 50,907 diamonds set on it. The ring is made entirely out of recycled materials. Recycled gold was mixed with re-purposed diamonds to create the piece. The gold weight of the ring is 460.55 grams and its diamond weight is 130.19 carats. The ring costs over Rs 6.42 crore. 

What is commonly called Jewelry has some synonyms.  

Accessory  - is something added to a machine or to clothing that has a useful or decorative purpose.

Ornament: is  a small, fancy object that is put on something else to make it more attractive

Jewellery – is a decorative objects worn on your clothes or body that are usually made from valuable metals, such as gold and silver, and precious stones: 

அணிகலன்கள்  என்பவை  அழகுக்காக மனிதர்கள்  அணிந்துகொள்ளும் பொருட்கள்.  இவை  நகை, ஆபரணம் போன்ற பெயர்களாலும் குறிப்பிட படுகின்றன.  அணிகலன்கள் பல்வேறு பொருட்களைப் பயன்படுத்திச் செய்யப்படுகின்றன. தொடக்கத்தில் இயற்கையாகக் கிடைக்கும் விதைகளில் துளையிட்டு மெல்லிய கயிறுகளில் கோர்த்து அணிகலன்கள் செய்யப்பட்டன. பின்னர்  பல்வேறு விலையுயர்ந்த பொருட்களைப் பயன்படுத்தி அணிகலன்கள் செய்யப்பட்டன. முத்து, பவளம், வைரம் போன்ற பொருட்களும், பொன், வெள்ளி, பிளாட்டினம் முதலிய விலையுயர்ந்த உலோகங்களும் அணிகலன்கள் செய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. 

 


மிக உயர்ந்த நகைகள் அணிகலன்கள் நாம் வணங்கும் தெய்வங்களுக்கு சமர்பிக்கப்படுகின்றன.  எம்பெருமான் கைகளில் அணிபவை - தோடா, காப்பு, கடகம், வளையல், வங்கி என அழைக்கப்படுகின்றன.  பொன்னாலும் நவமணிகளாலும் (வைரம், மரகதம், மாணிக்கம், புட்பராகம், வைடூரியம், நீலம், கோமெதகம், முத்து, பவளம்) ஆன அணிகலன்களே உகப்பாக சமர்ப்பிக்க படுகின்றன.    

தஞ்சை இராஜராஜீசுவரம் கோவிலின் சுவர்களில் உள்ள கல் வெட்டுகளின் வழியே அக்காலத்தில் பெண்டிரும் ஆண் மக்களும் அணிகலன்கள் பூணுவதில் ஆர்வம் கொண்டிருந்ததை அறிந்து கொள்ள முடிகிறது. கல்வெட்டில் எழுதப்பட்டுள்ள பேரரசர் இராஜ ராஜனின் ஆணையின் சிறப்பு - ஒவ்வொரு அணிகலனின் முழுவிபரமும் உள்ளதே. . நகையின் எடை, அது செய்யப்பட்ட தன்மை, அதில் பொருந்திருக்கும் முத்து,பவளம், வைரம் போன்றவற்றின் விபரம், அதன் மாதிரி ஆகிய எல்லாம் மிகத் துல்லியமாக எழுதப்பட்டிருகின்றன. பேரரசர் இராஜராஜன்,  தெய்வத்திற்கு 16 தங்க வளையல்களை அளித்திருந்தார். அவை ஒவ்வொன்றின் எடை ஐந்து கழஞ்சி ஆறு மஞ்சடி. ஒவ்வொரு வளையலிலும் ஏறத்தாழ 316 முத்துக்கள் கோர்க்கப்பட்டிருந்தன அவற்றின் எடை 155 கல். 

முந்தைய காலத்தில், மக்கள் ஒரு செயலைச் செய்ய உறுதி பூணும்போது அதன் நினைப்பு எப்போதும் தமக்கிருக்க வேண்டும் ஒரு வகை வளையத்தை அணிவார்கள்   கங்கணம் கட்டிக் கொள்ளுதல் என கேள்விப்பட்டு இருப்பீர்.  பவித்ரோத்சவம் போன்ற யாகங்கள் நடக்கும்போது எம்பெருமானுக்கு இத்தகைய காப்பு சாற்றப்படுகிறது.

 


இன்று  திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில்  ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் ஏகாதசி புறப்பாட்டின் போது பக்தர் ஒருவர் புதிதாக சமர்ப்பித்த 'தோடா' என்ற கடகத்தை, வலது திருக்கரம் அபய ஹஸ்தத்தின் கீழே அணிந்து இருப்பதை சேவித்து மகிழலாம். 

 
அடியேன் ஸ்ரீனிவாசதாசன்
மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
1.5.2023 

No comments:

Post a Comment