To search this blog

Tuesday, December 29, 2020

Irapathu uthsavam day 5 (2020) : பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்

Irapathu uthsavam day 5 (2020) -  @ Thiruvallikkeni Divyadesam

 

ஆழ்வார்களின் பாசுரங்களில் பைந்தமிழ் அற்புதமாக சொல்லப்பட்டுள்ளது.  இன்று திருவாய்மொழி பொலிக,பொலிக, பொலிக பாசுரம்.  பொலிதல் என்ற , வினைச்சொல்லுக்கு:  -  செழித்தல், பெருகுதல், மிகுதல், விளங்குதல், சிறத்தல், மங்கலமாதல், நீடு வாழ்தல், நிகழ்தல், புணர்தல் என பற்பல பொருட்களை உணரலாம்.  உழிதரல்  என்றால் திரிதல், சஞ்சரித்தல், இடமிடமாக நகர்தல் என பொருள்.



Today (29.12.2020) is day 5 of Irapathu uthsavam at Thiruvallikkeni and on this day  Sri Parthasarathi Perumal adorns Pandian Kondai and Sengol ; it would be muthukondai for Swami Nammazhvar .. .. still there is no veethi purappadu and only restricted hours of darshan inside the temple – so only elite few could have darshan of this great sevai.   

Swami Nammalwar’s deep rooted devotion gets revealed in his ornate description of the great Kalayana gunas of Emperuman.  In decad 5 – Thiruvaimozhi 8 – he laments to have only Emperuman as the focus and nothing else.  Here are a couple of great expressions in describing the greatness of Lord :

உலப்பிலானே  எல்லாவுலகும் உடைய ஒரு  மூர்த்தி

 


உலப்பிலானே  : குணவிபூதிகளினுடைய கணனைக்கு   (பரிமாணம் – dimension) முடிவில்லாமல் இருக்குமவனே! என்றபடி. மூர்த்தி  :  என்று திவ்யமங்கள விக்ரஹத்துக்கும் பெயர், ஐச்வர்யத்துக்கும் பெயர்; வடிவழகைக் காட்டி. எல்லாப் பிராணிகளையும் ஈடுபடுத்திக்கொள்ள வல்லவனே! என்றும், ஸகல லோகங்களுக்கும் நிர்வாஹகனான ஸர்வேச்வரனே! என்றும் பொருள்படும். 

எம்பெருமானின் திருவடியை அடைந்தோர்க்கு  எவ்வித இடர்பாடும் இல்லை; எல்லாமே நலமே என அறுதியிட்டு உரைக்கின்றார் ஸ்வாமி  நம்மாழ்வார்.   நம்மாழ்வார் கூறுகிறார் :  "இனிமேல் நரகம் என்பதே இருக்காது.  யார் நரகத்துக்கு போவார்கள். எம்பெருமான் ஸ்ரீமன் நாரணனே  இந்த பூமியில் வந்து பிறந்து நமக்கு அருள் செய்த பின், யார் நரகம் போகப் போகிறார்கள்? எமனுக்கு என்ன வேலை? கலி புருஷனும் வேலை இல்லாமல் திண்டாடப் போகிறான்" என்கிறார்.

 


பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்

நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை

கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்

மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.

 

கடல் போன்ற நிறத்தையுடைய நாராயணனுடைய அடியார்கள் பூமியின்மேலே கூட்டம் கூட்டமாகப் புகுந்து இசையோடு பாடி ஆடிச் சஞ்சரிக்கக் கண்டோம்; ஆதலால், உயிரைப் பற்றியுள்ள வலிய பாபங்கள் அழிந்தன, எல்லாரையும் வருத்துகின்ற நரகலோகமும் கட்டு அழிந்துபோயிற்று, யமனுக்கு இந்த உலகத்தில் ஒரு வேலையும் இல்லை. இவற்றிற்கெல்லாம் காரணமான கலிகால தோஷமும் கெடும். நீங்களே பார்த்துக்கொள்ளுங்கோள்; பொலிக! பொலிக!! பொலிக!!!’ என்கிறார் நம்மாழ்வார்.

 


Ordinary mortals like us, by following the guidelines of Azhwar and Acharyars, we too can desire of the Lord and in the streets of Triplicane, Lord in all His benevolence and glory came around to bless us all.  Reminiscing the good olden days and praying for a bright future, here are some photos of Irapathu day 5 that occurred on 2.1.2018. The first photo is Sri Parthasarathi adorning Rathnangi and the Pandiyan kondai recently submitted by Challani Jewellers (this pic credit Kudai Raju swami in his FB) 

Azhwar Emperumanar Jeeyar Thiruvaidgale Saranam 

adiyen Srinivasa dhasan –  Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
29.12.2020  



1 comment:

  1. புதிய பாண்டியன் கொண்டையுடன் ரத்நாங்கி சேவை அற்புதமான சேவை

    ReplyDelete