To search this blog

Monday, December 21, 2020

Thirumylai Sri Kesava Perumal Pagal Pathu ~ பல்பிறப்பொழித்து நம்மையாட்கொள்வான்

Generally, people get excited about Vaikunda Ekadasi and ‘Paramapada  Vasal’ ~ commonly called ‘Sorga vassal thirappu’.. .. this year Vaikunda Ekadasi falls on 25.12.2020  (10th   day of Margazhi) ~ Pagal pathu uthsavam commenced on 15.12.2020 and today (19.12.2020)  is day 5   ~ from 25.12.20  till 3.1.2021  will be Irapathu .. and on 4th Jan 2021   is Iyarpa Sarrumurai  


Thirumylai Sri Adhi Kesava Perumal & Sri Peyalwar

இன்று (19.12.2020) மார்கழி அவிட்டம் - பகல்பத்து  உத்சவத்திலே 5ம் நாள்.  திருவல்லிக்கேணியில் ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் ஏணிக்கண்ணன் திருக்கோலம்.

At the Bhooloka Vaikundam of Srirangam Divyadesam, it begins from Suklapaksha Ekadasi and celebrated for 23 days whence Namperumal listens to the vedas and Nammazhvar's Thiruvaimozhi as rendered by the Araiyars. The festival is divided into two parts, ten days before Vaikunda Ekadasi known as Pagalpathu  and  10 days from Vaikunda Ekadasi  known as Raapathu.  The adhyayana Uthsavam (the opportunity of chanting 4000 divyaprabandham) infront of Presiding deity and ensemble of Azhwars and Acaryas occurs in all divyadesams and all important Sri Vaishnavaite temples.

Let us fall at the lotus feet of Sriman Narayana singing the verses of Thirumazhisaipiran from his Thiruchandavirutham and that  will ensure all goodness and prosperity.  Today is day 5  of Pagal pathu – and here are some photos of the Uthsava celebrations at Thirumylai Sri Kesava Perumal Thirukovil.  The Lord Madhavar was exceptionally spectacular with a captivating diadem. In the goshti it was Thiruchandavirutham, Thirumalai, Thirupalli yezhuchi, Amalanathipiran and Kanninum siruthambu [muthal ayiram sarrumurai]

வீடுபேறு எனும் மோக்ஷத்தை அளிக்க வல்ல அந்த ஸ்ரீமன் நாரணனின் திருவடிகளையே புகலடைய  அறிவுறுத்தும் திருச்சந்தவிருத்த பாசுரம் இங்கே :  

அத்தனாகி அன்னையாகி   ஆளும்  எம்பிரானுமாய்

ஒத்தொவ்வாத பல்பிறப்பொழித்து  நம்மையாட்கொள்வான்

முத்தனார்  முகுந்தனார்  புகுந்து   நம்முள் மேவினார்

எத்தினால்  இடர்க்கடல் கிடத்தி  ஏழை நெஞ்சமே.

 எம்பெருமான் எத்தகையவன் ... எவ்வளவு உயர்ந்தவன் .. ஈடு இணையில்லாதவன்  எனினும் தன்னடியார்க்கு எளியன், இனியன், அற்புதன் .. ..  மோக்ஷபூமியை அளிக்கவல்லனான முகுந்தன்,  ஸம்ஸார ஸம்பந்தமில்லாதவன்;  ஞானமுடைமையால் ஒத்தும் யோநிபேதத்தால் ஒவ்வாமலுமிருக்கிற பலவகைப்பட்ட பிறவிகளைப்போக்கி, நம்மை அடிமை கொள்வதற்காக அன்னையும் பிதாவும் ஆகி  அடிமைகொள்ளும் ஸ்வாமியாயும், நம்மிடத்திலே புகுந்து ஒரு நீராகப் பொருந்தினவன்  அந்த எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன்.  மதிகெட்ட மனமே !, எதுக்காக துக்கஸாகரத்திலே  அழுந்திக் கிடக்கின்றாய் ?  - அவனையே நினை, அவனையே அடை .. அவன் திருத்தாள்களையே சென்று சேர் - அனைத்து நலன்களும் தானாகவே அமையும்.

 

~ adiyen Srinvasa dhasan [Mamandur Veeravalli Srinivasan Sampathkumar]

19\12\2020 











No comments:

Post a Comment