To search this blog

Wednesday, February 8, 2012

Thiruvallikkeni Sri Parthasarathi Thai Poosam Purappadu [7th Feb 2012]


7th Feb 2012 is the religiously sanctimonious ‘Thai Poosam’.  In the evening there was Purappadu of Sri Parthasarathi Perumal in ‘Kalinga Narthana’ posture – dancing on the hood of  snake Kalinga, holding its tail on His hand.  Vishwaksenar (Senai Muthalvar) also accompanied him.

This purappadu is Unique as only on this day,  the devotees at Big Street, Triplicane,  have darshan of Sri Parthasarathi in their street.  This is considered to be the day of harvesting paddy.  Upon reaching the pandal erected near the junction of Big Street and Pycrofts Salai (Bharathi Salai),  a bundle of paddy crop is placed before the Emperuman and a small quantity is rendered at the lotus feet of the Lord.  The crops are distributed to devotees who believe that their wealth would prosper further upon receiving the divine blessing. 

Perhaps ages ago,  the places beyond this junction would have been paddy fields and today’s purappadu is symbolic of the ‘rich harvest from the fields’ being placed before the Divine Owner – the Lord Sri Parthasarathi.  Here are some photos taken on the occasion; one can see the paddy crops at the lotus feet of Lord

இன்று [7th Feb 2012] தை பூசம்.  ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் காளிங்க நர்த்தன திருகோலத்தில் அழகாக நர்த்தனமாடும் பாங்குடன் புறப்பாடு கண்டு அருளினார்.  ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாளுடன், சேனை முதல்வரும் எழுந்து அருளினார்.   

திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் எவ்வளோவோ புறப்பாடுகள் உண்டு.  இன்று ஒரு தனி சிறப்பு உள்ளது.  தை பூசம் அன்று மட்டுமே, பெருமாள் கங்கை கொண்டான் மண்டபம் தாண்டி பெரிய தெரு (வீரராகவ முதலி தெரு என்பதே இத்தெருவின் தொன்மையான பெயர்) எழுந்து அருள்கிறார்.  தை பூசம் என்பது 'கதிர் அறுக்கும்' திருநாளாக கொண்டாடப்படுகிறது.   பெரிய தெருவும் பாரதி சாலையும் சந்திக்கும் இடத்தில் அமைக்கப்பட்ட  பந்தலில் ஸ்ரீ பார்த்தசாரதி எழுந்து அருளியவுடன்,  நெல்மணிகள் கொண்ட ஒரு கட்டு பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்பட்டு, பெருமாளின் திருவடிகளில் வைக்கப்பட்டு, பிறகு நெல் கதிர்கள் பக்தர்களுக்கு வழங்கப் பட்டன. 

பல வருடங்களுக்கு முன், இவ்விடம் ஊர் எல்லை ஆகவும், தாண்டிய பகுதிகள் வயல் வரப்புகள் ஆகவும் இருந்து இருக்க வேண்டும்.  இவ்வுத்சவம், பெருமாள் தனக்கு சொந்தமான வயல்களில் அறுக்கப்பட்ட நெற்கதிர்களின் கணக்கு பார்ப்பதாக ஐதீஹம். 

புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே.  பெருமாளின் திருவடிகளில், நெற்கதிர்களை காணலாம். 





அடியேன் - ஸ்ரீனிவாசதாசன். 

No comments:

Post a Comment