To search this blog

Sunday, April 11, 2010

ஸ்ரீ உடையவர் உத்சவ ஆரம்பம் - சித்திரையில் செய்ய திருவாதிரையில் சாற்றுமுறை


ஆழ்வார்கள் தாங்கள் அவதரித்த நாட்களிலும் வாழ்வான நாளாம் சித்திரையில் சீரிய திருவாதிரை - சித்திரை ஏழாம் நாள் (ஏப்ரல் 20 )_ அன்று வருகிறது. இன்று சதய நக்ஷதிரதன்று உத்சவம் ஆரம்பித்தது. காலை மணி அளவில் உடையவர் பல்லக்கில் புறப்பாடு கண்டு அருளினார். ௦

தூய்நெறி சேர் யதிகளுக்கு எல்லாம் இறைவனான இராமானுஜர் - இளையாழ்வானாக ஸ்ரீ பெரும்புதூரில் சக வருஷம் 939- (கி பி 1017) பிங்கள வருஷம் அவதரித்தார். இவருக்கு மதூலர் ஆன திருமலை நம்பி இராமானுஜர் என பெயர் சூட்டினார்.


பல்கலையோர் தாம் மன்ன வந்த இராமானுஜர் பாத கமலங்களை வணங்கி நாம் அனைவரும் நலத்துடன் வாழ அவரது திருநாமத்தையும் எம்பெருமான் விழயங்களையும் சொல்வது நமது கடமை. ஸ்ரீ உடையவர் அருளிச்செய்த ஒன்பது கிரந்தங்களில் "ஸ்ரீ பாஷ்யம்" தலையாயது.
அவரது "நித்ய க்ரந்தம்" என்பது பதிபிக்கபடவில்லை. பரமை காந்திகளான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு எம்பெருமானின் திருவராதன கிரமத்தை கூறுகிறேன் என தொடங்கும் "நித்ய கிரந்தம்" எனும் சீரிய நூல் திருவல்லிக்கேணி ஸ்ரீ உடையவர் கைங்கர்ய சபையினரால் , சம்பிரதாய ரத்னம் முனைவர் வி வி ராமானுஜம் சுவாமியை பதிப்பசிரியராய் கொண்டு இன்று திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலில் வெளியிடப்பட்டது.


இன்று காலை புறப்பாட்டில் உடையவர் சேவை சாதித்த அழகு இங்கே :








அடியேன் : ஸ்ரீனிவாச தாசன்.

No comments:

Post a Comment