To search this blog

Sunday, April 4, 2010

தூசி மாமண்டூர் - அருள் மிகு சுந்தரவல்லி தாயார் சமேத ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள் திருக்கோவில்

புஷ்பேஸு ஜாதி (பூக்களில் சிறந்தது ஜாதி மல்லிகை), புருஷேஷு விஷ்ணு (ஆண்களில் சிறந்தவன் விஷ்ணு), நாரிஷு ரம்பா (பெண்களில் சிறந்தவள் ரம்பை), நகரேஷு காஞ்சி (நகரங்களில் சிறந்தது காஞ்சி) என்று சமஸ்கிருத ஸ்லோகம் கூறுகிறது. ஆயிரம் கோயில்களின் நகரம் எனப்படும் வரலாற்றுச் சிறப்புடைய காஞ்சிபுரம் இந்துக்களின் ஏழு புனிதத் தலங்களில் ஒன்றாகும்.

ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு "பெருமாள் கோவில்" என்றால் காஞ்சிபுரம்தான். அத்திகிரி அருளாளர் ஆன தேவாதி ராஜன் அனைவருக்கும் அரசன். காஞ்சி சம்ப்ரதாயம், கோவில், கோஷ்டி, குடை, பெருமாள் புறப்பாடு, ஸ்ரீ வைஷ்ணவர்கள் என எல்லா நல்ல விஷயங்களுக்கும் தலையாயது.

காஞ்சியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பல கோயில்கள் உள்ளன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் ஆரம்பகால சோழர்களுக்கும், பிறகு கி.பி. 6லிருந்து 8-ஆம் நூற்றாண்டு வரையிலுமான காலத்தில் பல்லவர்களுக்கும் காஞ்சிபுரம் தலைநகரமாய் விளங்கிற்று. தற்போது மாவட்டத் தலைநகராய்த் திகழ்கிறது. இது போர்களை எதிர்கொண்டு, பல வெற்றிகளையும் தோல்விகளையும் சந்தித்த தொன்மையான நகரமாகும். இது சின்னக் காஞ்சிபுரம், பெரிய காஞ்சிபுரம் என இருப்பிரிவுகளைக் கொண்டது. பற்பல அழகிய தொல்சிற்பங்களைத் தாங்கிய பழங்கோயில்கள் பல உள்ள கச்சிமூதூர் பட்டு புடவைகளுக்கு பிரசித்தி பெற்றது.

கர்நாடக மாநிலத்தில் கோலார் மாவட்டத்தில் உற்பத்தியாகி தமிழகத்தில் வயலார் என்ற இடத்தில வங்காள விரிகுடாவில் கலக்கும் பாலாறுக்கு ஏழு துணையாறுகள் உள்ளன; அதில் செய்யாறு முதன்மையானதாகும். இவ்வளவு சிறந்த காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி, திருவத்தூர் எனப்படும் செய்யாறு செல்லும் பாதையில் பயணித்தால் சாலை கிணறு, ஐயங்கார் குளம், பாலாறு தாண்டி தூசி என்ற ஊர் வரும். தூசியை ஒட்டி அமைந்துள்ள சிறு கிராமம்தான் மாமண்டூர்.

 இச்சிற்றூரில் சிறிய சீர் மிக்க அருள்மிகு சுந்தரவல்லிதாயார் சமேத ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள் திருக்கோவில் உள்ளது.


சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு மேல் தொன்மை வாய்ந்த இத்திருக்கோவில் சமீபத்தில் புனருத்தாரணம் செய்வதற்காக பாலாலயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் மிக சிறப்புடன் விளங்கிய இவ்வூரின் வம்சத்தினர் காலபோக்கில் இடம் பெயர்ந்து, பல நகரங்களில் குடியேறி விட்டனர். சிலர் தமது பூர்விகத்தை மறவாமல் ஊருக்கு எப்பொழுதாவது வந்து ஊர் பெருமாளை வணங்கி ஊருக்கும் கோவிலுக்கும் எதாவது செய்ய விழைந்துள்ளனர். இத் திருப்பணியில் ஈடுபடுத்தி கொண்டுள்ள திரு வ.கோவிந்தராஜன் சுவாமி குடும்பத்தினருக்கு எம் நன்றி.


அடியேனும் மாமண்டூரை பூர்விகமாக கொண்டவன் ! அடியேன் உடைய தாத்தா வீரவல்லி திருநாராயண ஐயங்கார் - தந்தை ஸ்ரீனிவாசன், பெரியப்பா ரங்கநாதன், சித்தப்பா பார்த்தசாரதி. சமீபத்தில் சில தடவைகள் இத் திருக்கோவிலுக்கு சென்று பெருமாளை தர்சிக்கும் பாக்கியம் கிடைத்தது. கோவில் உடைய வாயிற்கோபுரம் சற்று சிதிலமாக இருந்தது.  மதில் சுவர்களும் மற்ற சுவர்களும் பராமரிக்க பட வேண்டிய சூழ்நிலை. கோவில் பட்டர்,  பெருமாளுக்கு அழகாக வஸ்த்ரம் சாற்றி பெருமாள் மிளிர்ந்தார்.அருள் பாலிக்கும் சுந்தரவல்லி தாயார் சமேத ஸ்ரீ லக்ஷ்மிநாராயண பெருமாள் திருக்கோவில் கூடிய விரைவில் வேலைகள் நடந்து பரிமளிக்கும் என்பது மிக்க சந்தோஷத்தை தர வல்லது. இத் திருப்பணியில் நாமும் ஈடு படுத்திக்கொள்ள இது ஒரு அறிய வாய்ப்பு.திருக்கோவில் திருப்பணியில் பங்கு கொண்டு தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் பெருமாள் தாயாரின் அனுக்ருஹம் பெற்று எல்லா நலமும் பெறலாம். திருக்கோவிலில் திருமஞ்சனம் முடிந்து பாலாலயம்  25/03/2010 அன்று நடை பெற்றது. திருக்கோவில் பணிகளுக்கு சுமார் ரூ மூன்றரை லட்சம் மதிப்பிடப்பட்டுள்ளது. கூடிய விரைவில் ஒரு டிரஸ்ட் மற்றும் கமிட்டி ஏற்பாடு செய்யபடப்படும்.

திருப்பணியில் பங்கு கொள்ள விழைவோர் திரு வ கோவிந்த ராஜன், 1C பிரசாந்தி அபார்ட்மென்ட், 30 தேரடி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை - 600 005 ; P :  94439 85189; 97916 51721; 97890 38252 ; E : govind_59@ rediffmail.com தொடர்பு கொள்ளவும்.


அடியேன் ஸ்ரீனிவாச தாசன்- மாமண்டூர் வீரவல்லி சம்பத்குமார்.

3 comments:

 1. Please contact us. Some facts in your article are not correct.

  mkbadri@hotmail.com

  ReplyDelete
 2. This work has been initiated by Mr.Narasimhan of Mylapore and not as mentioned in your article and all other like minded are supporting him in this cause.

  It is Mr.Narasimhan who had apprached HR & CE and has given an undertaking that he will complete this work individually and no Trust or Committee will be formed.

  In the above context request you to kindly contact us before uploading any article in this regard.

  Reg

  Badri

  mkbadri@hotmail.com

  ReplyDelete
 3. Dear Badri

  I too hail from Dhoosi Mamandur and had posted the article on hearing that renovation work is on and that some like minded person might see it on the net and would come to do something for the temple. It is only with this intention and nothing else.

  I met Mr Govindarajan, who is a Bank Officer who is interested in doing something for our temple and is willing to work for this cause.
  I have been to Mamandur and to the temple on very few occasions and am interested in knowing you / Mr Narasimhan. If you can please provide more facts of the temple and about the thirupani, will put them in my blog. Otherwise, the article speaks more about Kanchi,the location of the village and has photos of the temple. Not sure, whether you are mentioning of any factual inaccuracies here.
  Have sent a mail to you providing my contact details and would be too happy to talk to you to know more about the activities initiated

  Regards - S Sampathkumar

  ReplyDelete