வானத்தில் இருந்து பெய்யும் மழை நீர் பூமியின் உள்ளே செல்லும். பல காதங்கள் ஓடும் ஆற்று நீர் வழியெங்கும் மக்களுக்கு நன்மைகள் பயந்து, விருப்பத்துடன் கடலில் சென்று கலக்கும். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இயற்கையின் படைப்பில் எல்லாம் இறைவனை நோக்கியே பயணித்துக் கொண்டிருக்கின்றன'. எத்தனையோ மக்கள் பிறக்கிறார்கள், வளர்கிறார்கள், மடிகிறார்கள். யக்ஷன் தர்மபுத்திரனிடம் எது அதிசயம் என கேட்க - ' தினந்தோறும் மக்கள் “மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்” என இறப்பதை பார்த்தாலும் மனிதர்கள், தனக்கு ஒன்றுமே நேராது என நம்புவதே என்றான்.
வாழ்க்கை பாதையில் பலர் பல விதமான இடர்பாடுகளை சந்திக்கின்றனர். ஏன் ? ஏன் சிலருக்கு சோகங்களே அதிகமாக வருகின்றன ! இவற்றையெல்லாம் மாற்ற இயலுமா ?
ஸ்ரீவைணவம் ஒரு எளிய மார்க்கம். நம் சித்தாந்தம் போதிப்பது, எம்பெருமானையே நினைத்து, அவனை சேர்வதற்கு அவன் திருவடிகளையே போற்றுவோம். அவனுக்கு கைங்கர்யங்கள் செய்வது மட்டுமே நமக்கு விதிக்கப்பட்ட தலையாய கடமை. தியானம் செய்தற்குரிய பொருளை தியானம் செய்கிறவன் தம் மனதிலே நிறுத்தி , உள்ளத்துக் கொள்ளும் தெய்வம் எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன் மட்டுமே - .திருமாலே வேதத்தின் வித்தாக, வேத முதல்வனாகக் கொள்ள வேண்டும்.
When hard times come the natural human reaction is to resist and query - “Why me?” “Why now?” “Why this?”. For everyone, be it learned, matured or otherwise - hard times are frustrating — even excruciating. The stoic philosophers had a unique approach to life’s challenges. The Stoics embraced difficulty !! Two thousand years ago, writing in his own personal journal which would become known as Meditations, Emperor Marcus Aurelius said : “A blazing fire makes flame and brightness out of everything that is thrown into it.” Another Stoic, Epictetus, who as a crippled slave faced adversity after adversity, echoed the same: “Do not seek for things to happen the way you want them to; rather, wish that what happens happen the way it happens: then you will be happy.”
Friedrich Nietzsche was a 19th-century German philosopher whose work had a profound impact on modern philosophy, especially existentialism and postmodernism. Nietzsche is most famous for his criticisms of morality and Christianity. The concept of “amor fati,” was elucidated by Friedrich Nietzsche. Translated as “love of fate” or “love of one’s fate,” it encourages us to embrace everything that happens in our lives, both good and bad, and see it as an essential part of our personal journey.
Nietzsche said that amor fati is the “formula for greatness in a human being.” He believed that life is full of challenges, setbacks, and triumphs, all of which shape who we are. By adopting amor fati, we learn to accept and even love these experiences, regardless of their nature. Instead of resisting or lamenting our circumstances, we can view them as opportunities for growth and self-discovery. To incorporate amor fati into your daily life, start by acknowledging the events you cannot change and finding value in them. Practice gratitude for both your successes and struggles. When faced with adversity, ask yourself what you can learn from the situation and how it can help you grow. This mindset shift leads to more resilience, positivity, and ultimately, a more fulfilling life. As Nietzsche wrote: ”Not merely bear what is necessary, still less conceal it…but love it.” Embrace amor fati, and let it guide you toward a richer, more meaningful life. Easy words, difficult concept to practice !!!
நம் சனாதன தர்மத்தின் அடிப்படை ஞாதி கர்மா !! கர்மாவின் அடிப்படையில் தான் பிறப்பு, இறப்பு, சுகம், துக்கம் ஆகியவை தீமானிக்கப்படுகிறது. ஸ்ரீவைணவர்களின் இலட்சியம் ஸ்ரீவைகுண்டத்தில் பகவானோடு சேர்ந்தும் அங்குள்ளவர்களோடு கலந்தும் அனுபவிக்கிற ஆனந்தமே ! நாம் சென்று அடைய வேண்டிய இடம் எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் உறையுமிடம் - பரமபதமேயாகும் இதை எப்படி அடையலாம் எம்பெருமானின் அரும்பெரும் குணங்களை அனுபவிப்பதில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு இவ்வுலகின்பால் ஈர்ப்பு என்பது இல்லாமல் போகும். தமிழ் வேதமாம் திருவாய்மொழியைத் தந்த மாறன் சடகோபன் நம்மாழ்வாரின் அமுத மொழி. யாராக இருந்தாலும் இந்த உலகத்தில் இருக்கும் உயிர்கள் எல்லாம் இறைவனின் திருவடி நிழலை அடைவது திண்ணம்; அது உறுதி என்கிறார். ஏதோ ஒரு பிறவியில் இறைவனின் திருவருளுக்குப் பாத்திரமாகி வைகுந்தம் புகுவது மண்ணவர் விதி. திருநாட்டுக்குப் புறப்படுகிற ஸ்ரீவைஷ்ணவர்களைக் கண்ட உகப்பின் மிகுதியினால் அங்குள்ள நித்யஸூரிகள் வரவேற்பனர் என்கிறார் ஸ்வாமி நம்மாழ்வார் தமது திருவாய்மொழி பாசுரத்தில்:
வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுத என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே
நித்யஸூரிகள் இவர்களைக் கண்டு ‘இப்படி பரமபதத்திலே வருவதே இதென்ன பாக்யம்! இதென்ன பாக்யம்!!’ என்று வியந்து மகிழ்ந்தனரென்கிறதிப்பாட்டில். “வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே” என்ற ஈற்றடியை “மன்னவர் வைகுந்தம் புகுவது விதியே” என்று அந்வயித்துக்கொள்வது பாங்கு. ஸம்ஸாரிகள் பரமபதத்தே வந்து சேரும்படியாக நாம் பாக்யம் பண்ணினோமே! என்று சொல்லி வியந்தனராயிற்று.
எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் திருவடி நிழல் புகுந்த ஸ்ரீவைணவர்களின் வாழ்க்கை நியதி சுலபமானது. எம்பெருமான் பொன்னடிகளை பற்றுங்கோள்; சிந்தையாலும் சொல்லலும் அவன் புகழையே பாடுங்கள், அர்ச்சாவதார திருமேனி அமைந்துள்ள திருக்கோவில்களில் ஏதேனும் கைங்கர்யம் செய்யுங்கள். அவனடி புகழ் பாடி, அவனையே நினைந்து, அவனையே உபாயம் என பற்றுவர்க்கு எந்த குறையும் இராது. நடப்பது எல்லாம் நாராயணன் செயல் எனும் தெளிவடைந்தோரிற்கு எதிர்படும் துன்பங்கள், குறைந்த காலத்தில் அகலும் சாதாரண விஷயங்களாக புரியும்.
திருவல்லிக்கேணி சித்திரை ப்ரஹ்மோத்சவத்தில் மூன்றாம்
நாள் [25.4.2024 ] கருட சேவை முடிந்து
எழுந்தருளியஅஞ்சன வண்ணன் ஆயர்கோலக் கொழுந்து, எம்மையாளுடை எம்பெருமான் ஸ்ரீபார்த்தசாரதி
பெருமாள் ஏகாந்த சேவை - படங்கள் சில இங்கே:
-
எம்பெருமான் திருவடிகளே சரணம்.
adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
11.8.2024
No comments:
Post a Comment