Thiruvallikkeni
Karthigai Masapravesam purappadu 2019
நம் ஆசார்யன் சுவாமி மணவாள
மாமுனிகள் உத்சவம் இனிதே நடந்து முடிந்தது ~ பொய்கையார் பூதத்தார் சற்றுமுறைகளும் கூட
! ~ இன்று 17.11.2019 கார்த்திகை மாதப் பிறப்பு. திருவல்லிக்கேணி
திவ்ய தேசத்தில் முக்கிய உத்சவங்கள் தவிர பல நாட்களிலும் பெருமாள்
புறப்பாடு உண்டு. பஞ்சபர்வம் எனும் : மாசப்பிறப்பு, பௌர்ணமி, அமாவாசை, மற்றும் ஏகாதசி (2) நாட்களில்
ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் புறப்பாடு கண்டு அருள்கிறார். இன்று ஸ்ரீ பார்த்தசாரதி
எம்பெருமான் சிறிய மாட வீதி புறப்பாடு கண்டு அருளினார்.
After the beautiful 10
day uthsavam of our Acaryar Swami Manavala Mamunigal occurred Poigai Azhwar
sarrumurai, on which day was Mamunigal vidayarri sarrumurai – as also Pillai
Logachar sarrumurai. On Tues 5.11, it was kadanmallai Boothathazhwar
sarrumurai. On 7.11 it was Thamizh thalaivan Sri Peyalwar. Today, Sunday Nov. 17, 2019 - the
month of Karthigai is born and hence mada veethi purappadu for masapravesam.
எம்பெருமானான ஸ்ரீமன்
நாராயணனுக்கு பூ மாலைகளும், பொன் மாலைகளும் கூட - அருந்தமிழ் சொல்மாலையும் அழகு சேர்க்கின்றன
- எனவேதான் ஒவ்வொரு புறப்பாட்டின் போதும் - பெருமாள் முன்பே திவ்யப்ரபந்தம் சேவிக்கப்பெறுகிறது.
இன்றைய கோஷ்டியில் தமிழ் தலைவனாம் பேயாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதி
சேவிக்கப்பெற்றது.
உய்த்துணர்வென்னும் ஒளிகொள் விளக்கேற்றி,
வைத்தவனை நாடி
வலைப்படுத்தேன், - மெத்தெனவே
நின்றானிருந்தான்
கிடந்தானென்னெஞ்சத்து,
பொன்றாமை மாயன்
புகுந்து !
மனத்தினாலும் அறிவினாலும்
உய்ந்து உணர்ந்த விவேக உணர்ச்சி எனும் மாசற்ற தீபத்தை ஏற்றி, ஸ்ரீமன் நாராயனான எம்பெருமானை
தனது இதயத்திலே வலைப்படுத்தி தனதாக்கிக்கொண்டால், அவ்வெம்பெருமான் குறை ஒன்றுமில்லாமல்
ஹ்ருதயத்திலே குடி புகுந்து, அமைதியாக, முதலில் நின்று, சற்று பிறகு, வீற்றிருந்து
அதன் பிறகு அங்கேயே பள்ளிகொண்டருளினான் ~ என்கிறார் தமிழ் தலைவன் பேயாழ்வார்.
அடியேன் ஸ்ரீனிவாச தாசன்
(ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்)
17th Nov.
2019
No comments:
Post a Comment