To search this blog

Tuesday, November 19, 2019

Thirumylai Sri Peyazhwar Pushpa Pallakku 2019


ஐப்பசி மாதம் ‘சதயம்’ திருநட்சத்திரத்தில் பேயாழ்வார் திருமயிலையில் அவதரித்தார்.  ஒரு காலத்தில் திருவல்லிக்கேணி பிருந்தாரண்யம் என துளசிகாடாக இருந்ததைப் போலவே, திருமயிலை புதர்கள் மண்டி, மரங்கள் அடர்ந்து காடாக இருந்திருக்கிறது.  சிறப்பு வாய்ந்த இந்தத்தலத்தில் திருமாதவப் பெருமாள் திருக்கோயில் அருகில் உள்ள ஒரு குளத்தில் (கிணற்றில்)அதிசயமான செவ்வல்லி மலரிலே மஹாவிஷ்ணுவின் ஐம்படைகளில் ஒன்றாகிய நாந்தகம் எனும் வாளின் அம்சமாக பேயாழ்வார் அவதரித்தார்.  இவர்  அயோநிஜர்.  இந்த அவதாரஸ்தலம் - இன்று அருண்டேல் தெரு என அழைக்கப்படும் வீதியில் உள்ளது.


Sri Adhi Kesava Perumal Devasthanam better known as ‘Kesava Perumal Kovil’ is near Mylai Kapaleeswarar Temple and the Chithirai kulam belongs to this Temple.   Now the Peyalwar who graces this beautiful Thennacharya  temple – annually visits Thiruvallikkeni in a grand procession.  Here, Sri Peyalwar thiruvavathara uthsavam culminating in ‘Aippaisi Sadayam’ was grandly celebrated for 10 days.

17th Nov 2019 was Vidayarri Sarrumurai and in the evening there was    the fragrant ‘pushpa pallakku’ (palanquin made of flowers).  Flowers are fragrant and are naturally attractive – the pushpa pallakku – with many strands of jasmine pervading  is unique as it is a treat to mind, eyes and ears.

பூக்கள் அழகானவை; பூக்கள் மணமிக்கவை; எம்பெருமானுக்கு உகந்து சமர்பிக்கப்படுபவை. திருக்கண்ணங்குடி எம்பெருமானை திருமங்கை ஆழ்வார் பாடும்போது : 
குவளை நீள் முளரி குமுதம் ஒண் கழுநீர் கொய்ம் மலர் நெய்தல் ஒண் கழனி
திவளும் மாளிகை சூழ் செழு மணி புரிசை திருக்கண்ணங்குடியுள் நின்றானே ~ என
கருநெய்தற்பூக்கள்;  பெரிய தாமரைப் பூக்கள்;  ஆம்பல்; செங்கழுநீர்; நெய்தல்   ஆகிய இவற்றாலே அழகுபெற்ற கழனிகளையுடையதும் பிரகாசிக்கின்ற திருமாளிகைகளாலே சூழப்பட்டதும்,  சிறந்த ரத்னமயமான திருமதிளையுடையதுமான திருக்கண்ணங்குடியுள், நின்ற எம்பெருமான் என புகழ்ந்து பாடுகிறார். 

தாமரை, அல்லி, ரோஜா, சாமந்தி, மல்லிகை, முல்லை, போன்ற மலர்கள் நமக்கு பரிச்சயமானவை.  இன்னமும் எவ்வளவு எவ்வளவோ உள்ளன !  :  செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்,  குறிஞ்சி, வெட்சி,  வாகை,  வகுளம், செம்பருத்தி,ஞாழல், மௌவல், கொன்றை, வில்வம்,  தும்பை, குருங்கத்தி, வேங்கை என அந்த வரிசை நீளும் !!



சாலையோர மரங்களிலும் மலர்ந்து சிரிக்கும் மரமல்லிக்குத்தான் 'மெளவல்' என்று பெயர் . இந்தப் பூவிற்கு 'வஞ்சகம்' என்றொரு பெயரும் இருக்கிறது. இப்பூக்கள் இரவு நேரத்தில் பூக்கும். மிகுந்த வாசனை உடையவை. உதிரும் பூக்களை, குறிஞ்சி நில மகளிர் குவித்து விளையாடியதாய் சங்கப் பாடல்களில் குறிப்புகள் உண்டு. பூவின் காம்பை சிறிது கிள்ளி எறிந்து விட்டு வாயில் வைத்து ஊதினால் குட்டி நாதஸ்வரம் போல் இசை வரும். பன்னீர்ப்பூக்கள் என்ற பெயரும் இதற்கு உண்டு. குருக்கத்தி என்னும் மலருக்கு  மாதவி எனும்  பேரும் உள்ளது. குருக்கத்தி  ஒரு மலர்க்கொடி.  இது நீண்ட கூரிய, கரும் பச்சை இலைகளையும், கொத்தான மணமுள்ள மலர்களையும் உடைய என்றும் பசுமையான நீண்ட கொடியினம்.  மௌவல் எனச் சங்ககாலத்தில் வழங்கப்பட்ட மலரை இக்காலத்தில் மரமல்லி (மரமல்லிகை), பன்னீர்ப் பூ எனவும் வழங்குகின்றனர். இப்பூவைக் கொண்டு மாலைகளும், மலர் அலங்காரங்களும் செய்யப்படுகின்றன. எம்பெருமான் ஸ்ரீமந்நாராணனுக்கு நறுமணம் வாய்ந்த மலர்கள் மட்டுமே சமர்பிக்கப் பெறுகின்றன.

மன்றில் மாம்பொழில் நுழைதந்து மல்லிகை மௌவலின் போதலர்த்தி
தென்றல் மாமணம் கமழ்தர வரு திருவெள்ளறை நின்றானே !

தென்றல் காற்றானது, மாந்தோப்புகளிலே  காய்ந்து குலுங்கும் மரங்களுக்கும் மாம்பழங்களும் இடையே நுழைந்து,  மல்லிகைப் பூக்களையும் முல்லைப் பூக்களையும் மலரச்செய்தும், மிக்க பரிமளம் வீச வந்துலாவப் பெற்ற திருவெள்ளறை திவ்யதேசத்திலே நின்றருளும் பெருமானே! என பிரார்த்திக்கிறார்.


At Thirumayilai it was such a fragrant Pushpa pallakku for Sri Peyalwar and the purappadu wound through Chithiraikulam and mada veethis. Here are some photos taken during the purappadu

adiyen  Srinivasa dhasan [Mamandur Veeravalli Srinivasan Sampathkumar]
17th Nov. 2019.









No comments:

Post a Comment