To search this blog

Thursday, June 20, 2019

Kaliyan Vaibhavam ~ Pattolai - *ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய் * 2019


நாராயணா என்னும் நாமம் நல்ல சுற்றத்தைத் தரும். ஐசுவரியத்தைத் தரும். அடியவர்கள் படும் துயரங்களையெல்லாம் தரைமட்டமாக்கி (நிலந்தரம்), பரமபதத்தைக் கொடுக்கும் (நீள்விசும்பு), அருளோடு கைங்கரியம் என்னும் ஸ்தானத்தையும் கொடுக்கும், வலிமை கொடுக்கும், மற்றெல்லாம் தரும். பெற்ற தாயை விட அதிகமான பரிவைத் தரும். நல்லதே தரும் சொல் ‘நாராயணா என்னும் நாமம்’.


இரவு நேரங்களில் நீங்கள் தூங்குவது எப்படி ? - கனவுகள் உண்டா ?? - கனவு  என்பது ஒருவர் தூங்கும் பொழுது அவரது மனத்தில் எழும் மனப் படிமங்கள், காட்சிகள், ஓசைகள், உணர்வுகள், நிகழ்வுகளைக் குறிக்கிறது. ஒவ்வொரு இரவிலும்  90 நிமிடங்களிலிருந்து இரண்டு மணிநேரம் வரை அல்லது அதற்கும் மேலாக ஒவ்வொரு மனிதனும் கனவு காண்கிறான். கனவுகள் எப்பொழுதுமே நேரடியான அர்த்தங்களை கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஒருவர் கனவு காணும் பொழுது அவரது கண்களின் அசைவுகள் காணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. கனவு, மூளையில் உள்ள நினைவுக்குறிப்புகளை ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தும் செயல்பாட்டின் விளைவாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. .

This is no post on dreams .. .. ..  கனவு பற்றி விவரித்து பிறரிடம் சொல்வது இயல்பு. ஆனால் நம் கலியன் (திருமங்கை மன்னன்) ஒரு வித்தியாச விவரணமளிக்கிறார்.  ஆழ்வார்,  ஏக்கங்கள் நிறைந்த நம் வாழ்வை ஊமை கண்ட கனவு என்கிறார். ஊமை காணும்  கனவை  வேறு யாரிடமும் சொல்லக் கூட முடியாது. இதில் தொனிக்கும் தனிமையும் கழிவிரக்கமும் சொல்லில் வடிக்க முடியாது. ஊமைக்கனவு  வேறு ! ஊமனார் கண்ட கனவு வேறு !!

தெரிவைமார் என்ற சொல்லாடலை கேள்வியுற்றீர்களா ! ~  தெரிவைமார்க்கு ஒரு கட்டளை  எனச் செய்த திருவே!  ~  கம்ப இராமாயணத்தில் அயோத்தியா காண்டம்/சித்திரகூடப் படலத்தில் ஒரு பாசுர வரி.


குதிரை சங்க இலக்கியங்களிலும், மன்னர் காலத்திலும்,  புராணங்களிலும் சிறப்பாக கருதப்பட்டு உள்ளது.  குதிரை, புரவி தவிர ~ மா, பரி, மான், இவுளி, கலிமா - இதனது வேறு பெயர்கள்.   திருமங்கையாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் இளையவர் மற்றும் இறுதியானவர். சோழ நாட்டில் உள்ள திருவாலி-திருநகரி என்னும் ஊருக்கு அருகில் உள்ள திருக்குரையலூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் 'கலியன்'. ஆதியில் இவர் சோழமன்னனுக்கு படைத்தலைவனாக இருந்தார். ஒருமுறை போர்க்களத்தில் இவருடைய வீரத்தைக் கண்ட அரசன் இவருக்கு சோழதேசத்தின் "திருமங்கை" நாட்டின் குறுநில மன்னனாக்கினான். அன்று முதல் இவர் "திருமங்கை மன்னன்" என அழைக்கப்பட்டார்.

Horses domesticated thousands of years ago, have been associated with man in many ways – right from farming to warfare.  In earlier   centuries happened  a flood of treatises on the organization and tactics of cavalry and on the training of cavalry horses and riders.    With its rich history, pageantry and famously strict dress code alongside the horse racing, Royal Ascot is one of British sport's best known and most colourful events, with the Queen at the centre of proceedings.   In 2019, some of the world's top racing figures, equine and human, will once again compete in 30 races staged during the Tuesday to Saturday fixture, all looking for a slice of the prestige and the £7.3m of prize money on offer.  Miles away, another  horse fatality was reported at Santa Anita Park in California this week, marking the 27th death since late December and bringing renewed calls for tougher regulation of the industry. A 2-year-old colt, River Derby, suffered a catastrophic injury during training at the track, the Los Angeles Times reported.   The horse was euthanized at an offsite clinic but the fatality is being treated as an on-track training death by the state’s horse racing regulator, the newspaper added.

For us life is different ! ~ on the night of 20.6.2019, we were attracted to different horses – the golden horse rode by Sri Azhagiya Singar and ‘aadalma’ of Kaliyan – and the Kaliyan vaibhavam that was enacted near Kuthirai vahana mantapam.  On day 8 of Sri Azhagiyasingar Aani Brahmothsavam @ thiruvallikkeni  is ‘Aswa (kuthirai) vahanam’ [in fact two !] – Sri Thelliya Singar has purappadu on golden horse and comes Thirumangai mannan on his ‘aadalma’.

The Lord holds the reins of the golden horse – Azhwar  Kaliyan comes chasing on his ‘adalma’.  Neelan, Kaliyan – known by various other names was a local chieftain’ who used to feed thousands everyday.  He had vowed to feed thousands of persons each day and also needed money to build temples.  Thirumangai mannan’s disciples were  -Neermel nadappan, Nizhalil odhunguvan,Thaloodhuvan,  Tholavazhakkan. Not finding enough resources he and his disciples  had to resort to robbery and Sriman Narayanan in his various Leelas chose to play with him, by getting robbed, making him realize his folly and turning him to his trusted devotee.   Kaliyan understanding the significance became Thirumangai Azhwaar and rendered Periya Thirumozhi;  in Naalayira Divyaprabandham, Thirumangai mannan has contributed  1137 hymns. In the photo of Azhwar on the small  horse, one can see him armed with sword and shield. 

This divine act is recalled and as stated in the ‘sthala puranam of Thiruvallikkeni’ – Perumal and those accompanying Him lose their valuables.  The entire act is read out in a sanctimonious rite called ‘pattolai’ (literally the verses in palm leaves covered with silk) – which is rendered  by Dr M.A. Venkatakrishnan Swami in his inimitable style.  In the Thiruvallikkeni Sthala puranam (so read) , Emperuman and those accompanying him lose their gold, jewelry and valuables.  The ‘Thalayari Thalaivan’ of the place stands before the Perumal with folded hands, pleads forbearance, chases Aalinadan, recovers the ornaments and punishes the mischief monger.  After the enactment of this, Kaliyan learns ‘Ashtakshara mantra’ and in the purappadu the opening of Periya Thirumozhi ‘"வாடினேன் வாடி வருந்தினேன்" ~ is rendered.

திருமாலடியார்களுக்கும் அவர் தமக்கு தொண்டு செய்பவர்களுக்கும், என்றென்றும் சகலவிதமான செல்வங்களும் பெருகும்; தொண்டு செய்பவர்களுக்கு எல்லா நன்மையையும் நடக்கும்.  நாம் செய்ய வேண்டியது எல்லாம் - ஸ்ரீமன் நாராயணன் திருவடிகளில் ஈடுபாடு கொண்டு,அவனது அடியார்களுக்கு எல்லா கைங்கர்யங்களும் செய்ய வேண்டியது மட்டுமே! திருமங்கை மன்னனின் 'பெரிய திருமொழி - முதற்பத்து - முதல் திருமொழியில்' உள்ள இப்பாடல் நம் இல்லங்களில் எப்போதும் ஒலிக்க வேண்டும்.

சேமமே வேண்டித்  தீவினை பெருக்கி*  தெரிவைமார் உருவமே மருவி*
ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய் *  ஒழிந்தன கழிந்த அந்நாள்கள்*
காமனார் தாதை நம்முடை அடிகள்*  தம் அடைந்தார் மனத்து இருப்பார்*
நாமம் நான் உய்ய நான் கண்டுகொண்டேன்*  " நாராயணா என்னும் நாமம்."

புரியாத வாழ்க்கை வாழும் மந்த மதிப்புவி மாந்தர்கள் எல்லாரும், செல்வங்கள் பின் ஓடி, பொருள் ஈட்டும் ஆசையில் வாழ்நாளை வீணடித்து,  துஷ்கருமங்களை அதிகமாகச் செய்து, ஸ்திரீகளுடைய வடிவழகையே பேணி (தெரிவைமார் உருவமே மருவி), வாழ்நாட்களை வீணாக்குகின்றனர்.  அத்தைகைய வாழ்க்கை  ஒரு ஊமை கண்ட கனவைக்காட்டிழும்  வீணாகக் கழிந்து போகின்றன.  மன்மதனுக்குப் பிதாவும் நமக்கு எல்லா அருளும் தர வல்ல எம்பெருமானை அடைந்து இருப்பவர் மனத்தே  இருக்கும் நல்வழி காட்டும் நாமத்தை ~ "ஓம் நமோ நாராயணா" எனும் நாமத்தை கண்டு கொண்டதில் பேரானந்தம் அடைகிறார் நம் ஆழ்வார் திருமங்கை மன்னன்.

Many of us lost their lives, running after gold and money, thinking and being after good looking women, dreaming of things and just as a dumb person would (not) – cannot share the dreams, wasting our lives doing so many misdeeds – Azhwar considers himself so lucky in coming to know that great divine Name ‘Om Namo Narayanaya’ of that Great Lord, the only God who can dispel all our misdeeds and show us the right path. 

Here are some photos of the Kuthirai vahana purappadu. The bigger horse is that of Perumal; Thirumangai mannan also comes in a horse [smaller one]; providing a great treat to the bakthas and bagavathas at Thiruvallikkeni divyadesam.  It was late in the night ~ but the enthusiasm and the crowd will have to be seen to be believed.

Azhwar Emperumanaar Jeeyar Thiruvadigale saranam.

~adiyen dhasan – S. Sampathkumar                                                                   20.06.2019









No comments:

Post a Comment