To search this blog

Sunday, April 7, 2019

Sri Rama piran purappadu @ Thirukudanthai Sri Ramaswami Temple 2019


The Greatest of Ithihasa purana ‘Sri Ramayanam’  is the undiluted history of the Greatest Person who descended on this Universe, on the banks of river Sarayu, in a prosperous country called ‘Koshala’ – the city of Ayodhya founded by the renowned Manu, ruled the mighty monarchs including Sagara and his sixty thousand sons, Bhagiratha and Dasaratha  in the dynasty of Ikshwaku. 


Celebrating the birth of Sri Rama ~ Sree Rama Navami Uthsavam started on 5.4.2019.  Apr 13 is Sri Rama Navami. .. …the birthday of Lord Sri Rama.  Here are some photos of most beautiful, attractive, blemishless Sri Ramapiran.

ஜகம் புகழும் ஸ்ரீ ராமபிரான் அவதரித்த நல்நாள் ஸ்ரீராம நவமி.  நன்மையளிப்பவனும், இணையற்றவனும்,  தாமரைக்கண்ணனும், பூசிக்கத்  தக்கவனுமாகிய   - இராமபிரானின் அருள் பெறாதவர் - இருந்தும், என்ன செய்தும் என்ன  பயன் என  வினவினாராம் தியாகய்யர்.  ஸ்ரீ ராமபிரான் முடி சூட வந்தபோது, அவரை பார்த்த அயோத்தி மக்கள் :

‘உய்த்தது இவ்வுலகம்’ என்பார்; ‘ஊழி காண் கிற்பாய்’ என்பார்;
‘மைந்த! நீ கோடி எங்கள் வாழ்க்கை நாள் யாவும்’

~  “செய்ய முடியாத தவத்தை செய்து இப்படி ஒரு செம்மலைப் பெற்றெடுத்த தசரத மன்னனுக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறோம்,?”   என புகழ்ந்து மகிழ்ந்தனாராம் அயோத்தி மக்கள்.


குடந்தை என்றழைக்கப்படும் கும்பகோணம், இணையாக ஓடும் இரண்டு ஆறுகளுக்கிடையில் அமைந்துள்ள கண்ணைக் கவரும் இனிமையான நகரமாகும்.  கும்பகோணத்தின் வடபகுதியில் காவிரியும்தென்பகுதியில் அரசலாறும் ஓடுகின்றன. தென்னிந்தியாவை ஆண்ட பண்டைக் கால அரச வம்சங்களானசோழர்கள்பல்லவர்கள்,பாண்டியர்கள்மதுரை  நாயக்கர்கள்தஞ்சாவூர் நாயக்கர்கள் மற்றும் தஞ்சாவூர் மராத்தியர்கள் ஆகியோரது ஆட்சிக் கட்டுப்பாட்டில் கும்பகோணம் இருந்துள்ளது. 7ஆம் நூற்றாண்டில் இடைக்காலச் சோழர்கள் கும்பகோணத்தைத் தம் தலைநகரமாக ஆக்கினர்.   கும்பகோணத்திலும் அதனைச் சுற்றிலும் உள்ள ஏராளமான கோவில்களின் காரணமாக இந்நகரம் கோவில்களின் நகரம் என அழைக்கப்படுகிறது. கும்பகோணம் நகராட்சிக்குட்பட்ட பகுதிக்குள் 188 கோவில்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது.



கும்பகோணத்தில் பெரிய கடைத்தெருவின் தெற்கு கோடியில் அமைந்துள்ளது ஸ்ரீராமஸ்வாமி திருக்கோவில்.  இக்கோவில் கும்பேஸ்வரர் கோவிலுக்கு வெகு அருகிலே உள்ளது. ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்ட இக்கோவில்  பதினாறாம் நூற்றாண்டில் ரகுநாத நாயக்க மன்னரால் நிர்மாணிக்கப்பட்டதாகும்.  மூலவர் ராமபிரான் பட்டாபிஷேகக் கோலத்தில் ஸீதையுடன் ஒரே ஆஸனத்தில் அமர்ந்து கையில் வில் இல்லாமல் காட்சி அளிக்கிறார்.  வலப்புறம் லக்ஷ்மணன்  வில்லை  தாங்கி நிற்க பரதன் வெண்கொற்றக் குடைபிடிக்கஸத்ருக்னன் சாமரம் வீசஆஞ்சனேயர் ஒரு கையில் வீணையும்மற்றொரு கையில் ராமாயண புஸ்தகமும் ஏந்தியவாறு அற்புத தரிசனம் அளிக்கின்றனர்.


The city of KUmbakonam is known for its Temples. Among the Srivaishnava temples at the holy sthalam Thirukudanthai  is Ramaswamy Temple – situate nearer Kumbeswarar Kovil.  The temple built by Nayakkar kings has beautiful architecture and has exquisite paintings.  Moolavar here is Lord Rama and consort Sita seated with Lakshmana holding the bow,  Baratha and Satrugna doing service, with Anjaneya worshipping. 

Uthsavam for the Maryada Purush ~ Emperor of Kosala Kingdom is now at Thirukudanthai too and on 6.4.2019 @ 10.30 pm had the great darshan of Lord Sri Rama with Sita mata and Lakshmana of Sri Ramaswamy Thirukovil on ‘Indra vimanam’ ~ a beautiful vimanam having Hanuman and other monkey kingdom too – here are some photos of the beautiful purappadu on the mada veethis of Thirukudanthai.

~adiyen Srinivasadhasan. (S. Sampathkumar)














No comments:

Post a Comment