To search this blog

Tuesday, February 26, 2019

Sri Andal Purappadu @ Kizh Tirupathi 2019


குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல் * மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் * வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய்திறவாய்!
மைத் தடங்கண்ணினாய், நீ உன் மணாளனை * எத்தனை போதும் துயிலெழ வொட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவாற்றகில்லாயால் * தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்.


பக்தி காவியங்களிலே திருப்பாவை ஒரு உயர்ந்த இடத்தைக்கொண்டது.  ஸ்ரீமன் நாராயணனிடத்திலே அபரிமிதமான காதல், மிக அழகான சொல்லாடல், எளிய நடை, ஒரே தடவை படித்தவுடன் புரியக்கூடிய அர்த்தம் எனினும் பல்லாயிரக்கணக்கான வியாக்கியானங்கள்  ~  எல்லாம் கோதைப்பிராட்டியின் திருப்பாவைக்கே உரியன.  இப்பாடலின் எளிய உரை : "நாற்புறமும் குத்து விளக்குகள் எரிய, அழகு, குளிர்ச்சி, மென்மை, நறுமணம், தூய்மை ஆகிய ஐந்து தன்மைகளையுடைய, (பஞ்சசயனம் என்பது அன்னத்தின் தூரிகை, இலவம்பஞ்சு, பூக்கள், கோரைப்புல், மயில் தூரிகை ஆகிய ஐவகை பொருட்களால் செய்யப்பட்ட மெத்தை) தந்தத்தினால் ஆன, மஞ்சனத்தில் கொத்துக் கொத்தாக மலர்ந்துள்ள பூக்களை கூந்தலில் அணிந்துள்ள நப்பின்னை பிராட்டியின் மார்பினில் சாய்ந்து உறங்கும் (நறுமலர்களால் ஆன மாலையை அணிந்த) கண்ணபிரானே! வாய் திறந்து ஒரு வார்த்தையேனும் நீ பேசுவாயாக!



For Sri Vaishnavaites, the  purpose of birth is kainkaryam to Emperuman and his devotees – One needs to do kainkaryam at His abode ~ great it would be, when that happens to be a Divyadesam – the great place sung by Azhwargal.  The beautiful temple of Lord Srinivasa at Thirumala Tirupathi in its present form owes a lot to the works of the greatest Vaishnava Acharya – Sri Ramanujar.  The very thought of Tirumala and chanting the name of Lord of Seven Hills would cleanse our souls.




Thirumala has existed for Centuries and Lord Venkateshwara provides to His devotees - riches, all wealth and all goodness.  Thiruvengadam, the abode of Lord Balaji is the  ‘Thilakam’ the shining glory of the whole Earth.  Lakhs of devotees of all ages, from all over the Country and from other parts of the World throng to the hills, by walk, by vehicles of various hues and wait in the queue for hours to have a glimpse of the Lord.

At the foothills of most divine Thirumala lies Thirupathi – having  the ancient temple of Sri Govindarajar.    This temple was consecrated by our Emperumanar but has existed perhaps even in earlier centuries too.  Moolavar Sri Govindarajar is in  reclining yoga nidra posture, facing east,  keeping right hand under his head and left hand straight over his body. Sridevi and Bhudevi nachimars are in sitting  posture at the foot of Govindaraja.

This temple is remarkable for its style of architecture, the tall and remarkable 7 storied gopuram with 11 kalasas – with sannathis for Sri Govinda Rajar, Sri Kalyana Venkateswarar, Sri Parthasarathi in sitting posture, Sri Choodikudutha nachiyar, Sri Bashyakarar, Sri Pundarikavalli thayar, Kaliyan, Koorathazhwan among others. In front of the temple is our Acaryar Swami Manavala Mamunigal sannathi.  On 22nd Feb 2019, had the fortune of worshipping at this Temple and in the evening there was purappadu of Sri Andal ~ here are some photos of the purappadu and Sri Andal .. .. in describing this, felt that something on Thiruppavai would be relevant and am posting here ‘beautiful explanation of pasuram 19 – Kuthu vilakkeriya’ posted by Sri Desikan Narayanan (popularly Sujatha Desikan)

ஸ்ரீ வைணவர்கள் நலமந்தமில்லாதோர் நாடு பெற அனுதினமும்  அநுஸந்திக்கத் தக்கதும் மிக இனிமையானதுமானது  '   எட்டு எழுத்து திருவஷ்டாக்ஷர மஹா மந்திரம்: ஓம் நமோ நாராயணாய:"  ...  இப்படி எம்பெருமான் பெருமைகளையும், அவனது திருநாமங்களை மேன்மேலும் அநுஸந்திப்பவர்களை உஜ்ஜீவிக்கச் செய்து, நமது பந்தங்களான  ஸம்ஸார இதர பந்தங்களை அறுத்து உய்விக்கும் எம்பெருமான் - மிக உகந்த மணம்மிக்க சிறந்த புஷ்பங்கள் பரிமளிக்கப்பெற்ற விசாலமான சோலைகளாலே சூழப்பட்டதும், எல்லாவுலகங்களுக்கும், திலகம்போன்று விளங்குவதுமான -  திருவேங்கடம் எனும் திருமலையை மனமே! அடைந்திடு என்று நமக்கு அற்புத வழியை காட்டுகிறார் திருமங்கை மன்னன்.  அத்தகைய சிறப்பு வாய்ந்த திருமலையின் அடிவாரத்திலே அமைந்துள்ளது - கீழ் திருப்பதியில் உள்ள, உயர்ந்த கோபுரத்தை கொண்ட திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் திருக்கோவில்.




ஆண்டாள் ஸ்ரீமன்நாராயணனின் திவ்ய மஹிஷியான பூதேவி நாச்சியாரின் அவதாரம். பூதேவி நாச்சியார் இந்நிலவுலகில் கோதா தேவி எனப்படும் ஆண்டாளாக அவதரித்து, எம்பெருமானின் பெருமைகளை எளிய தமிழில் விளக்கி, ஜீவாத்மாக்களை இந்த ஸம்ஸாரத்தின் துயரங்களிலிருந்து விடுவித்து எம்பெருமானுக்கு களையில்லாத கைங்கர்யம் செய்வதாகிற ப்ராப்யத்தை அடைய உபகாரம் செய்தாள்.  திருப்பாவை நம்முடைய லக்ஷ்யமான எம்பெருமானுக்கே கைங்கர்யம் செய்தலுக்குத் தடைகளை விலக்கி அவன் திருவடிகளை அடைவிக்கும். இது ஸகல வேத ஸாரம். திருப்பாவை அறியாதவர் இந்த பூமிக்கு ஒரு சுமையே.

கடந்த வெள்ளியன்று (22.2.2019) கீழ் திருப்பதி கோவிந்தராஜர் சன்னதி தரிசனம் செய்யும் பாக்கியம் கிட்டியது.  அன்று ஆண்டாள் புறப்பாடு கண்டருளினார்.  இங்கே சில புகைப்படங்களும் - திருப்பாவை 'குத்து விளக்கெரிய’  பாசுரத்தின் வியாக்கியானமும் - திரு சுஜாதா தேசிகன் எழுதியதை அப்படியே தந்துள்ளேன்.

**  குத்து விளக்கெரிய**  இந்தப் பாசுரத்தில் ”எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்” என்கிறாள் ஆண்டாள். அது என்ன ‘கில்லாயால்’ ? ’கில்’ என்பது இடைச்சொல் தனித்து அது அர்த்தம் கொடுக்காது.  “ஐயோ” என்பது தனித்து பொருள் கொடுக்காது ஆனால் “நீலமேனி, ஐயோ!” என்று ஒரு சொல்லுடன் சேர்ந்து பொருள் கொடுக்கும். அதே போல அறிவாரோ ? என்பதில் கடைசியில் வரும் ‘ஒ’ என்பது ஐயத்தை உணர்த்தும் இடைச்சொல். அதே போல பல சொற்கள் உள்ளது. இந்தப் பாசுரத்தில் 'கில்' என்பது ஆற்றலை உணர்த்தும் இடைச்சொல் !

ஆழ்வார் பாசுரங்களில் இந்த ‘கில்’ பல இடங்களில் வருகிறது. நம் எல்லோருக்கும் தெரிந்த நம்மாழ்வார் பாசுரம் இது:
“அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா”
’அகல கில்லேன்’ என்பதில் ‘கில்’ வருவதைக் கவனிக்கலாம். இந்தப் பாசுரத்துக்கு அர்த்தம் சொல்லும் போது மிக ஜாக்கிரதையாகச் சொல்ல வேண்டும். ”எந்நேரமும் உன் மார்பை விட்டு அகல மாட்டேன்” என்று பொருந்துவது போல வந்தாலும், அது தவறு. அகல மாட்டேன் என்பது வேறு அகல கில்லேன் என்பது வேறு. மாட்டேன் என்பதில் முடியும் ஆனால் மாட்டேன் என்ற அர்த்தத்தைக் கொடுக்கும். அகல கில்லேன் என்றால் நினைத்தாலும் முடியாது என்று அர்த்தம்.
அகலமாட்டேன் என்பது : unwillingness (not willing)
அகலமுடியவில்லை - willing but not able to (inability)
அகலகில்லேன் - it is not a matter of willingness or ability as it is a disability i.e. impossible
திருமங்கை ஆழ்வார் “பூ ஆர் திரு மா மகள் புல்கிய மார்பா!*” என்கிறார். பெருமாளின் மார்பு எப்போதும் ’திருமார்பு’ தான். ஒரு கண நேரம் கூட பெருமாளின் திருமார்பை விட்டுப் பிரியமாட்டாள் பிராட்டி. பிரம்மச்சாரியாக ஓங்கி உலகளந்த போது கூட பிராட்டி பெருமாளை விட்டுப் பிரியவில்லை. நாம் கூட கண்ணை விட்டு அகலவில்லை மனதை விட்டு அகலவில்லை என்று கூறுவோம். ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர் பற்றி ஒரு சம்பவத்தை பார்க்கலாம்.

ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர் ஆளவந்தாரின் திருக்குமாரர். தேவப்பெருமாளிடம் வரம் பெற்று எம்பெருமானாரைத் திருவரங்கத்திற்கு அழைத்து வந்தவர் இவரே. அவர் அந்திம காலத்தில் ( மரணத்தருவாயில் ) எழுந்தருளியிருந்த போது அவரிடம் உடையவர் சென்று :  “தற்போது தேவரீர் மனதில் ஓடுகின்ற நினைவு எதைப் பற்றியது ?” என்று கேட்க அதற்கு அரையர் “எம்பெருமானுக்கு பற்பல திருநாமங்கள் இருந்தாலும் ‘திரு-வ-ர-ங்-க-ம்’ என்று நாலைந்து எழுத்துக்கள் சேர்ந்திருக்கின்ற அழகு தான் என்னே! என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறினார். இதனால் தான் உடையவர் “பொன்னரங்கம் என்னில் மயலே பெருகுமிராமானுசன்” என்கிறார் அமுதனார். அரையருக்கு மனதில் திருவரங்கம் ‘அகல கில்லேன்’.

ஆளவந்தாரின் இன்னொரு மகனார் சொட்டை நம்பி. ஒருமுறை திருக்கோட்டியூர் நம்பியைக் கடுமையாக பேசிவிட்டார். இதனால் கோபமுற்ற திருக்கோட்டியூர் நம்பி, சொட்டை நம்பியைப் பார்த்து “என் அருகில் இருக்காதே.. தூரப் போ” என்று கூற சொட்டை நம்பியும், கங்கை கொண்ட சோழபுரம் சென்று அரசாங்க வேலை பார்த்து வந்தார். அவருடைய கடைசி காலத்தில் அவர் ஸ்ரீரங்கம் வந்துவிட்டு உடம்பு முடியாமல் படுத்துக்கொண்டு இருக்கிறார். பாதி வாழ்க்கையை அரசாங்க பதவியில் கழித்த இவருக்கு ஸ்ரீவைஷ்ணவம் பற்றி என்ன தெரியும் என்ற நினைப்பில் சில ஸ்ரீவைஷ்ணவர்கள் “தேவரீர் மனதில் என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறீர் ?” என்று கேட்க அதற்குச் சொட்டை நம்பி “அடியேனுக்கு ஆளவந்தார் சம்பந்தம் அதனால் பரமபதத்தில் நிச்சயம் இடம் உண்டு ஆனால் அங்கே சென்றவுடன் பரமபதநாதனை வணங்குவேன், அவர் திருமுகம் நம்பெருமாளின் திருமுகம் மாதிரி குளிந்து இல்லை என்றால், ‘தொப்பென்று கீழே குதித்துவிடுவேன்’ ஆனால் பரமபதம் சென்றால் மீண்டும் இங்கே வர முடியாது என்று வேதம் சொல்லுகிறது. அதை மீற வேண்டியிருக்கிறதே “ என்றாராம். இவருக்கு நம்பெருமாள் திருமுகம் ‘அகல கில்லேன்’




நாச்சியார் திருமொழியில் ஆண்டாள்
மானிடவர்க்கு என்று பேச்சுப் படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே
பாசுர அர்த்தம் - என் உடல் சக்கரமும் சங்கமும் தாங்கிய திருமாலுக்கென்று ஏற்பட்டது. மனிதர்களுக்காக என்கிற வார்த்தை காதில் பட்டாலே என்னால் வாழ முடியாது என்கிறாள். வைகுண்டத்தில் நம்பெருமாள் இல்லை என்றால் குத்திவிடுவேன் என்று சொட்டை நம்பி சொன்னது போல !

கண்ணகி சிலம்பை உடைத்த போது பாண்டிய மன்னன் தன் தவற்றை உணர்ந்து உடனே மாண்டான். தன் கணவனை இழந்த கோப்பெருந்தேவி கற்புடைய மகளிர்க்கு இது அழகில்லை என்று தன் கணவனின் காலடியில் அவளும் வீழ்ந்து, உயிர் துறந்தனள். ஆனால் ஸ்ரீராமாயணத்தில் அசோகவனத்தில் ராவணன் ஸ்ரீராமருடைய தலையை வெட்டி அதைச் சீதையிடம் காண்பிக்கச் சீதா பிராட்டிக்கு உயிர் போகவில்லை. ஏன் என்றால் நான் இருக்கிறேன் என்றால் ஸ்ரீராமர் இருக்கிறார் என்று பொருள், ஸ்ரீராமர் இருப்பதால் தான் தான் இருக்கிறேன் - ‘அகல கில்லேன்’. இது தான் ஸ்ரீவைஷ்ணவத்தின் தத்துவம்.

ஸ்ரீரங்கத்தில் பெருமாள் மார்பில் பிராட்டியின் பதக்கமும், தாயார் மார்பில் பெருமாளின் பதக்கமும் என்றும் இருக்கும். இது தான் ஆண்டாள் சொல்லும் ‘தத்துவம் அன்று’ என்ற தத்துவம். தத்துவம் என்ற சொல்லுக்கு ‘அழியாத விஷயம்’ என்று பொருள். அதுவே உண்மை. நப்பின்னையைப் பார்த்து ஆண்டாள் “எம்பெருமானைப் பிரியாமல் எப்போதும் அவனுக்கு ஜீவர்களுக்காகப் பரிந்து பேசும் உன்நக்குள்ள நீர்மையை விடலாமோ ? இது தத்துவம் அன்று என்கிறாள். யுத்த காண்டத்தில் “வானரே! பாவம் செய்தவர்களாக இருந்தாலும், புண்யம் செய்தவர்களாக இருந்தாலும், கொல்லத் தகுந்தவராக இருந்தாலும், குணவானாய் இருந்தாலும் அவன் விஷயத்தில் கருணை காட்ட வேண்டும் .தப்பு செய்யாதவன் ஒருவனுமில்லையே!” என்பது சீதா பிராட்டியின் வாக்கு. இதுவே பிராட்டியின் தத்துவம்.

திருப்பாவையில் ஆண்டாள் பெருமாளை “புண்ணியன்” என்று கொண்டாடுகிறாள், நாச்சியார் திருமொழியில் பெருமாளே ”தத்துவன்” என்கிறாள்.
என் தத்துவனை வரக் கூகிற்றியாகில்; தலை அல்லால் கைம்மாறு இலேனே.
குயிலே என் தத்துவன் வருகிறான் என்று கூவு, உன்னைத் தலையில் வைத்துக் கொண்டாடுகிறேன் என்கிறாள்.
விசிஷ்டம் என்றால் சேர்ந்து இருப்பது/பிரியாமல் இருப்பது என்று பொருள். நம் சரீரத்தில் ( உடலில் ) பரமாத்மாவும், ஜீவாத்மாவும் சேர்ந்தே ”உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்” என்று ஆழ்வார் சொல்லுவது போலச் சேர்ந்தே இருக்கிறார்கள். ஜீவாத்மா இந்த உடலிலிருந்து கிளம்பும் போது பரமாத்மாவும் கூடவே கிளம்புகிறான் - ஆண்டாள் “உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது” என்பது  ‘அகல கில்லேன்’ தத்துவம் !

Exceptional ! ~ the part in this colour entirely reproduced from the FB post of Mr Desikan Narayanan (Sujatha Desikan) ~ happy in reading it again and again and posting here with his kind permission.


~ adiyen Srinivasadhasan (S. Sampathkumar)





No comments:

Post a Comment