To search this blog

Tuesday, February 27, 2018

Sri Parthasarathi Thavana Uthsavam day 5 : 2018


ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்

செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே


சில ஆண்டுகள் முன்பு வரை வீடுகளில் எல்லாரும் சேர்ந்து பேசி களித்து இருக்க நிறைய நேரம் இருந்ததாம் ! ~  வீடுகளில் குழந்தைகளை ஓன்றாக அமர வைத்து,  பெற்றோர்களும் தாத்தா பாட்டிகளும் நிறைய நீதிக் கதைகள் சொல்லுவார்கள். இவ்வாறு ஒரு ஆர்வத்தை உண்டாக்கியவுடன் இரவு நேரம் ஆகிவிட்டால் குழந்தைகள் தாமாகவே அவர்களிடம் செல்லுவர். இந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி பல நல்ல பாடல்களையும் ஸ்லோகங்களையும் சொல்லிக் கொடுப்பர்.   ராமாயண மஹாபாரத கிளை கதைகள் ஆர்வத்துடன் கேட்கப்பட்டன.

சுமார் 50 வருடங்கள் முன்பு பல புராண படங்கள் வெளிவந்து மக்களை கவர்ந்து, வசூல் சாதனைகளும் படைத்தன.   லவகுசா 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. புள்ளைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். டி. ராமராவ் நடித்திருந்தார்.  தமிழில் மருதகாசி பாடல்களுக்கு கே. வி. மகாதேவன் இசை அமைக்க, பின்னணி குரல் பாடியவர்கள் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, சீர்காழி கோவிந்தராஜன், கண்டசாலா ஆவர். இப்படத்தின் திரைக் கதையை சமுத்திரள இராகவாச்சாரியார் எழுத, வசனத்தை ஏ. கே. வேலவன் எழுதி இருந்தார்.    ** ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே**  என்ற பாடல் ஒரு அற்புத பாடல் ~ செவி மடுக்கும்போதெல்லாம் இன்பம் தரும்.

26th Feb 2018 ~ Masi Punarvasu - the Thiruavathara thirunaal of Sri Kulasekhara Azhwaar.  I had posted in detail of purappadu at Thiruvallikkeni.  Kulasekara alwar was immersed in his bakthi to Sri Ramapiran.

The day was the concluding day of Thavana Uthsavam at Thiruvallikkeni divyadesam – and here are photos of Sri Parthasarathi ulpurappadu at thavana uthsava bungalow.

Adiyen Srinivasa dhasan.
















No comments:

Post a Comment