To search this blog

Friday, August 30, 2013

Kannan Purappadu - Sri Jayanthi at Thiruvallikkeni divyadesam

Kannan Purappadu - Sri Jayanthi at Thiruvallikkeni divyadesam 

Sri Jayanthi was celebrated at every home, in the manner of Lord Krishna being born at every home.  We painted the footsteps of little Krishna – exhibiting His walking inside our home,  did Thirumanjanam for the vigraha at home, made Him adorn new  clothes and offered choicest dishes made with love at home. We also offered Him variety of fruits. 

At Thiruvallikkeni divyadesam, after birth in the midnight ~ Sri Jayanthi on 29th Aug 2013, on next day early morning was the purappadu of ‘little Krishna’ – the beautiful little Krishna in Sesha vahanam ~  dancing atop ‘Kalinga’. During this purappadu, devotees offer loads of fresh butter to Lord Krishna. 

Lord Krishna during His purappadu went inside Nagoji rao street, traditionally the place replete with cattle. Here are some photos taken this morning during the purappadu.

பெரியாழ்வார் கண்ணன் பிறந்தது முதல் ஒவ்வொரு பருவத்தையும் கொண்டாடி மகிழ்கிறார். ஓரிடத்தில் "செந்நெல் அரிசி சிறு பருப்புச் செய்த அக்காரம் நறுநெய் பாலால்" என -  செந்நெல்லரிசியும், சிறு பயற்றம்பருப்பும்; காய்ச்சித் திரட்டி நன்றாகச் செய்த அக்காரம் என்கிற கருப்புக்கட்டியும்; மணம் மிக்க நெய்யும்; பால் ஆகிய இவற்றாலேயும் "கன்னலிலட்டுவத்தோடு சீடை காரெள்ளினுண்டை"  எனவும் அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து என்பதாகவும் சிறந்த சிற்றுண்டிகளை பெருமாளுக்கு சமர்ப்பிக்கிறார்.  தவிர பெருமாளுக்கு சிறந்த பழங்கள் பல சமர்ப்பிக்கப்படுகின்றன. இவற்றுள் நாவற்பழமும் சிறப்பிடம் பெறுகிறது. 

ஸ்ரீ ஜயந்தி, கண்ணன் பிறந்த இந்நாளை எல்லா திருகோவில்களிலும், எல்லாரது இல்லங்களிலும் சிறப்புற கொண்டாடினோம்.  யசோதை ஸ்ரீக்ருஷ்ணருடைய  திருப்பாதங்களில் ஒன்பது விரல்களுக்கு நவரத்ன வர்ணத்தையும் மற்றொரு விரலுக்குப் பொன்னிறத்தையும்  இட்டு கண்ணனை கொஞ்சி சீராட்டி வளர்த்தாக பெரியாழ்வார் பாடியுள்ளார்.  அந்த குழந்தை கண்ணன் நம் இல்லங்களுக்கு தவழ்ந்து தளர் நடையிட்டு வரும் அனுபத்தை ரசித்து, இல்லங்களில் கண்ணனின் திருப்பாதங்களை வரைந்து,  பூஜை அறையில், கண்ணபிரானை நீராட்டி, புது ஆடை உடுத்தி, அவருக்கு பலவித பழங்களையும் பக்ஷணங்களையும் படைத்து நாம் சிறப்புற கொண்டாடினோம்.   

திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் இன்று காலை [30.8.13] ஸ்ரீ கிருஷ்ணர் சேஷ வாஹனத்தில் புறப்பாடு கண்டு அருளினார்.  காளிங்க நர்த்தனம் புரியும் அழகான குட்டி கண்ணன் சேஷ வாஹனத்தில் புறப்பாடு எழுந்து அருளி பக்தர்களுக்கு அருள் செய்தார். 

பக்தர்களை உய்விப்பதற்க்காக இவ்வுலகத்தில் அவதரித்து,  வாழ்ந்து, நாம் அறிவு பெற நல்லமுதமாம் 'ஸ்ரீ பகவத் கீதையை' அருளிய கண்ணபிரானின் திருவடிகளை பற்றியவருக்கு, நிர்ஹேதுக  க்ருபை உடையவனான எம்பெருமான் எல்லா நலன்களையும் தானே அளித்து,  நம்மை பாதுகாப்பார்.  "வடமதுரைப் பிறந்த தாதுசேர்தோள் கண்ணனல்லால் இல்லை கண்டீர் சரணே."  :  வடமதுரையிலே அவதவதரித்த,   மாலையணிந்த தோள்களையுடைய கண்ணனைத் தவிர நமக்கு வேறொரு  புகலில்லை. அவன் தாள்களே சரணம்.

எம்பெருமான் திருவடிகளே சரணம்; ஜீயர் திருவடிகளே சரணம். 
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்


Adiyen Srinivasadhasan

at Nagoji rao street




butter that is submitted to Perumal

No comments:

Post a Comment