To search this blog

Thursday, May 26, 2011

A song in “Naaladiyar” on Friendship and Patience.





நமது  செம்மையான  தமிழ்  மொழியில்  பற்பல  சிறந்த  கருத்துக்கள் அழகான  பாடல்கள்  மூலமும்  அறிவுரைகள்  மூலமும்  வழங்கப் பெற்று   வந்துள்ளன. நாலடியார்   என்னும்  திரட்டு   பல  சமண முனிவர்களின்  பாடல்களின்  திரட்டு  என  கருதப்படுகிறது.  அதில்  நட்பு  (friendship)  மற்றும்  பொறையுடைமை   (patience)  பற்றிய இச்செய்யுள்  என்னை கவர்ந்தது .

“வேற்றுமையின்றி  கலந்திருவர்  நட்டக்கால் *
தேற்றா வொழுக்கம்  ஒருவன்  கண்  உண்டாயின்
ஆற்றுந்  துணையும்  பொறுக்க, பொறா னாயின் 
தூற்றாதே தூர  விடல்  “

இருவர்  சேர்ந்து  இருக்கும்போது  ஒருவருடைய  நடத்தையில்  பிடிக்காத விஷயம்  நடந்தால் ,அதை  பொருட்படுத்தாது  நடத்தல் வேண்டும். அப்படி அது  எல்லை  மீறினால்,  அந்த   நட்பை விக்கிக்  கொள்ளலே தவிர   நண்பனது  குணங்களை (அல்லது  குணமின்மையை] தூற்றுதல் கூடாது.

முடிந்தவரை  நல்ல  பழக்கங்கள்  உள்ளவர்களையே  நண்பர்களாய் கொள்ளல்  நன்று.   சிநிகிதம்  ஆனபின் , நண்பனை   எல்லா சமயத்திலும் மதித்தல் வேண்டும்.  அவனிடத்தில்   அயோக்கியமான நடவடிக்கை உண்டானால், அவனுக்கு  உணர்த்தி  அவனை பொறுத்தல்  வேண்டும்.  அது  முடியாமற் போனால்,  நட்பை விட்டாலும்  விடலாமே தவிர, எக்காரணம்   கொண்டும்  –  நட்பையோ,  நண்பனையோ   பழித்தல் கூடாது.  

நமது  எல்லா  தவறுகள்,   ஏமாற்றங்கள்,   தோல்விகள்,   குணநலன்கள்   ஆகிய எல்லாவற்றுக்கும்  – மற்றவர்களையும் வேறு  ஏதாவது   காரணங்களையுமே   தேடும்  மானிடவருக்கு, இந்த  பாடல்  நல்ல அறிவுரையை  வழங்குகிறது.

அன்புடன்  – ஸ்ரீ  சம்பத்குமார்


3 comments: